Saturday, October 8, 2011

ஆச்சாரியாரின் ஆரிய தர்பார்


1. ஆச்சாரியார் பதவிக்கு வந்த வுடன், ஸ்தல ஸ்தாபனத் துறை முழுவ திலும் அப்போது அமுலில் இருந்த கம்யூனல் ஜி.ஓ.வைக் கொலை செய்யும் வகையில் தன் இனத்தாருக்கே எல்லாப் பதவிகளையும் தந்தார்.

2. சென்னை சர்க்கார் நியமித்த 25 மிருக வைத்தியர்களில் 19 பேரைப் பார்ப்பனர்களாகவே பொறுக்கி எடுத்துப் போட்டார்.

3. சென்னை கார்ப்பரேஷன் கல்வி அதிகாரியாக வருவதற்கு எல்லாத் தகுதிகளையும் பெற்ற திரு சிவசைலம் பிள்ளை என்ற ஒரே தமிழர் இருந்தும் கூட திரு ரகுநாத அய்யர் என்ற பார்ப்பனரையே நியமித்தார்.

4. கார்ப்பரேஷன் உயர்நிலைப் பள்ளிகளில் காலியான 10 தலைமை யாசிரியர்கள் உத்தியோகங்களுக்குப் பார்ப்பனர்களையே போட்டர்ர்.

5. சப்-ரிஜிஸ்தரார் பதவியிலிருந்து ஜில்லா ரிஜிஸ்தரார் பதவிக்கு உயர்த்தும் வேலைகள் 15 காலிகளுக்கு 11 பார்ப்பனர்களுக்கே வேலையளித்தார்.

6. திரு கே.எஸ்.கிருஷ்ணசாமி அய் யங்கார் என்ற பார்ப்பனரைக் காலியான இடத்தில் நிரப்ப, அய்க்கோர்ட் ஜட்ஜாக நியமிக்க ஏற்பாடு செய்தார். ஒரு பார்ப்பனர் அல்லாத நீதிபதி ரிட்டை யர்டு ஆன இடம் அது.

7. பப்ளிக் பிராசிக்கியூட்டர்களை வக்கீல்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார். வக்கீல்கள் 100-க்கு 97 பேர் பார்ப்பனர்களாகவே இருப்பதால், அவர்களால் தேர்ந்தெடுக் கப்படுகின்ற முறையில் பார்ப்பனர் களைத் தவிர, மற்றவர்கள் பப்ளிக் பிராசிக்கியூட்டர்களாக வர முடியாது என்பதைத் தெரிந்துதான் திரு. ஆச் சாரியார் இந்த உத்தரவைப் போட்டார். திருநெல்வேலியில் 4 பப்ளிக் பிராசிக் கியூட்டர்கள் தேவைப்பட்டது. அந்த ஊர் பார்ப்பன வக்கீல்கள் ஒன்று சேர்ந்து கொண்டு, 4 பார்ப்பனர்களைப் பப்ளிக்பிராசிக்கியூட்டர்களாக சிபார்சு செய்தார்கள். இப்படி நடக்கப் போவதை, அறிந்த பார்ப்பனர் அல்லாத வக்கீல்கள் மேற்படிக் கூட்டத்தைப் பகிஷ்கரித் தார்கள்.

8. பிராசிக்கியூஷன் இன்ஸ்பெக்டர் கள், மாஜிஸ்திரேட்டுகள் - அவர்களை யும்கூட வக்கீல்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என உத்தரவு போட்டதன் மூலம் பார்ப்பனர்களேஅப்பதவிகளுக்கு வருவதற்கு வசதியாக வழிவகைகளைச் செய்தார்.

9. 1937_இல் பப்ளிக் பிராசிக்கியூட் டர்கள் மொத்தம் 7 பேர் நியமிக்கப் பட்டதில் 3 பேர் பார்ப்பனர்களுக்குத் தந்ததோடுஅல்லாமல், அடிஷனல் பப்ளிக் பிராசிகியூட்டர்கள் நியமிக்கப் பட்டதில் 3 பார்ப்பனர்களுக்கே தந்தார்.

10. சர்வீஸ் கமிஷன் ஒரு முஸ்லி முக்கு எஞ்சினீயர் வேலை கொடுத்தது. அதைத் திரு. ஆச்சாரியார் அப்போது தேவையில்லை என்று சொல்லிவிட்டார். ஆனால், அதற்கப்புறம் அந்த வேலை ஒரு பார்ப்பானுக்குக் கொடுப்பதற்காகத் தேவைப்பட்டு பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அதுவும், ஒரு பார்ப் பனர், சட்டப்படி தகுதி இல்லாதவருக்குக் கொடுக்கப்பட்டது!

11. வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறைக் காகக் காயம் செய்யாமல் ஆக்டிங்காய் வைத்திருந்த 80, 90 ஸ்தானங்களை, அந்த வேலை பார்ப்பவர்கள் பெரிதும் பார்ப்பனர் என்பதற்காகவே காயமாக்கினார். இந்தச் சூழ்ச்சிகள் எல்லாம் வகுப்புவாரி முறையை ஒழிப்பதற்குச் செய்யப் பட்டதாகும்.89 பேருக்கு 11 பேர் தான் வகுப்புவாரி முறைப்படி வரமுடியும். ஆனால், மேற்படி 89 பேர்களில் 80 பேர் பார்ப்பனர்களாகவே இருந்ததால்தான் ஆச்சாரியாரின் இந்தக் கெட்டிக்கார ஏற்பாடு.

12. முஸ்லிம் மந்திரி திரு. யாகூப் ஹாசன் மந்திரியானதும் தனக்கொரு முஸ்லிமைப் பர்சனல் கிளார்க்காக ஏற் படுத்திக் கொண்டார். அந்தக் கிளார்க்கும் இரண்டு மூன்று நாள் வேலை பார்த்தார். திரு.ஆச்சாரியார் இந்த விஷயம் அறிந்தவுடன், ஒரு பார்ப்பனரைக் குமாஸ்தாவாக நியமித்து, அனுப்பி அவரை ஏற்றுக் கொள்ளும்படிச் செய்தார்.

13. சென்னை ஷெரீப் வேலை, பார்ப்பனர் அல்லாதாருக்கு அதாவது, ஒரு அய்ரோப்பியருக்குக் கிடைக்க வேண்டியது முறையாகும். ஆனால் திரு.ஆச்சாரியார் ஒரு பார்ப்பனரையே நியமித்தார். (ஜி.ஏ.நடேச அய்யர்).

14. திரு. ஆச்சாரியார் காலத்தில் செய் யப்பட்ட பதவி நியமனங்கள் எல்லாம் - ஜில்லா கலெக்டர்கள், ஜில்லா போலீஸ் அதிகாரிகள் போன்ற நியமனங்கள் - எல்லாம் பார்ப்பனர்களுக்கே தரப்பட்டன.

15. பார்ப்பனர் அல்லாத பெரும் பாலோர்களாக இருந்த உத்தியோகங் களின் சம்பளங்களை எல்லாம் குறைத்தார்.

16. சென்னை அய்க்கோர்ட்டில் காலி யான அபிஷியல் அசைனி  (Official Assignee) என்ற ஒரு பதவிக்கு தமிழருக் குத் தரப்படாமல் திரு.வி.தியாகராஜ அய்யர் என்ற பார்ப்பனருக்கே அளிக்கப் பட்டது.

1937-39 ஆச்சாரியார் ஆட்சியில் உத்தியோகங்கள்

1939-ஆம் ஆண்டின் நிர்வாக அறிக்கையில் உள்ள உத்தியோகப் பட்டியலில் குறிப்பிட்ட புள்ளி விவரம்:

1. கெஜடட் ஆபீசர் என்னும் சற்றேறக் குறைய மாதம்  ரூ 300-க்கு மேற்பட்டு 500 ரூபாய் வரை சம்பளமுள்ள நிர்வாக இலாகா பெரிய உத்தியோகங்களில்
பார்ப்பனரல்லாதார்        398
பார்ப்பனர்            609

2. மாதம் 100 ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளம் உள்ள  உத்தியோகங்களில்
பார்ப்பனரல்லாதார்        2,492
பார்ப்பனர்            3,667

3. மாதம் 35 ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளம் உள்ள குமாஸ்தா முதலிய உத்தியோகங்களில்
பார்ப்பனரல்லாதார்        8,042
பார்ப்பனர்            9,183

4. மாதம் 35 ரூபாய்க்குக் கீழ்ப்பட்ட சம்பளம் உள்ள கீழ்ப்பட்ட பியூன் பங்கா இழுத்தல், எடுபிடி வேலை ஆகிய உத்தியோகங்களில் மாத்திரம்
பார்ப்பனரல்லாதார்     33,662
பார்ப்பனர்  1,513

இந்தப் புள்ளி விவரத்திலிருந்து திரு.ஆச்சாரியார் நடத்திய இரண்டாண்டு கால ஆட்சியில் உத்தியோக மண்டலத்தையே சர்வமும் பூணூல் மயம் ஜகத் என ஆக்கியுள்ளார்.

பியூன்கள் எண்ணிக்கையில்தான்  பார்ப்பனர் அல்லாதார் அதிகம் என்றால், எவ்வளவு கொடுமை இது?

வைத்திய உதவிக்கும் ஆபத்து

சர்க்கார் ஆஸ்பத்திரிகளுக்கு டாக்டர் கள் நியமிப்பதில் சம்பளமில்லாமல் வேலை செய்யும்படி டாக்டர் ராஜன் (அய்யங்கார்) சுகாதார மந்திரி ஏற்பாடு செய்ய முயற்சித்தார். இதற்கு முக்கிய காரணம் மதுவிலக்கு ஏற்படுத்தியதால் சர்க்காருக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 80 லட்சம் வரையில் வரும்படி குறைந்துவிட்டதால், அந்த நஷ்டத்தைச் சரிகட்ட வேண்டுமானால், வைத்திய இலாகாவிலுள்ள சம்பள டாக்டர்கள் பலரை எடுத்து விட்டு, படித்துவிட்டு வரும்படியில்லாமல் திரியும் பல டாக்டர்களை கவுரவ டாக்டர்களாக நியமித்துவிடுவதன் மூலமும், கல்வி, சுகாதார இலாகாவில் சில சிக்கனங்களைச் செய்துவிடுவதன் மூலமும் சரிப்படுத்தி ஆக வேண்டும் என்பதாகும்.

காயலாவில் சாகப்போகும் ஒரு மனிதனைப் பிழைக்க வைக்க, எப்படி வைத்திய இலாகா உதவக் கூடுமோ, அது போலவே, காயலாவிலிருந்து பிழைக்கப் போகும் ஒரு மனிதனை சாகடிக்கவும் பயன்படலாம். இப்படிப்பட்ட ஒரு முக்கியமான இலாகாவில் கவுரவ வைத்தியர்களை - சம்பளமில்லாத ஆட்களை வைத்தால் மக்கள் எப்படிக் காப்பாற்றப்படக்கூடும். இத்திட்டத்துக்கு உள்நோக்கம் எல்லாம் பல பார்ப்பனர் டாக்டர் பரீட்சையில் பாஸ் செய்துவிட்டு, வேலையில்லாமல் இருப்பதை மாற்றுவ தற்காகவே என்பதை 9-1-1938 குடிஅரசு இதழில் தெளிவாக விளக்கிக் காட்டி யிருக்கிறது.

பொதுமக்களின் இரு கண்கள் போன்ற கல்வி, சுகாதாரம் ஆகிய இரண்டிலும் கைவைக்க திரு.ஆச்சாரியார் தவறவில்லை.

ஆச்சாரியார்  ஆட்சியின் கொடுமையைப் பற்றி சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்

தமிழ்நாடு தமிழருக்கே என்று பெரியார் சொல்லுகிறார் என்பது பற்றி காலஞ்சென்ற சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் 1939 இல் விளக்கி இருக் கின்றதை அருள் கூர்ந்து கவனியுங்கள்.
. . .
திரு. பனகல் அரசர் காலத்தில் தான் மருத்துவ இலாக்காவை வெள்ளையர்களிடமிருந்து பிடுங்கித் தமிழர் கையில் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அதன் பயன் என்ன ஆயிற்று என்றால், டாக்டர் ராஜன் (அய்யங்கார்) என்ற ஒரு பார்ப்பனர் வைத்திய இலாகா  மந்திரியாக வந்தவுடன், கவுரவ டாக்டர்களை நியமிக்கிறேன் என்கின்ற பெயரால் ஒரு சில மாதங்களுக்குள் 225 பேர்களை கவுரவ டாக்டர்களாக நியமித்தார். இந்த 225 பதவிகளில் 125பதவிகளைப் பார்ப்பனர்களுக்குக் கொடுத்துவிட்டு,85 பதவிகளை மாத்திரம் தமிழருக்குக் கொடுத்துவிட்டு,15 பதவிகளை மாத்திரம் இந்துக்கள் அல்லாதவர்கள் என்பவர்களுக்குக் கொடுத்துவிட்டார்.

100க்கு 3 பேர் விகிதம் உள்ள பர்ப்பனர்களுக்கு 125 உத்தியோகங்களைக் கொடுத்திருக் கின்றார். இதில் ஒரு பெரிய அக்கிரமம் என்னவென்றால், ஜெனரல் ஆஸ்பத்திரி யில் பிரபல டாக்டராக இருந்த டாக்டர் சடகோபனை வெளியாக்கிவிட்டு,  அவருக்குப் பதிலாக 3 பார்ப்பனர்களைத் திணித்து இருக்கின்றார். எப்படி இருக்கின்றது ஆட்சி? இவ்வித ஆட்சியை இனி நடத்த விடமாட்டோம் என்பதன் அறிகுறிதான் பெரியார் அவர்கள் கூறும் தமிழ்நாடு தமிழருக்கே என்பதாகும்.

நான் இப்படிச் சொல்வதை ஆச்சாரியார் (முதன் மந்திரி) பொடுமை என்கிறார். ஆனால், தமிழர்களை இப்படி நடத்துவது எங்களுக்குக் கொடுமையாக இல்லையா?

குறிப்பு: மேற்கண்ட விஷயங்கள் 1939_ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதியில் திரு. ஆச்சாரியார் ஆட்சி பெரியாரை 3 ஆண்டு சிறைப் படுத்தியதற்காக சென்னை எழும்பூர் ஏரியில், கூட்டப்பட்ட பல்லாயிரக்கணக் கான பொதுமக்களைக் கொண்ட கண்டனப் பொதுக் கூட்டத்தில் சர்.ஏ.டி .பன்னீர்செல்வம் அவர்கள் பேசிய பேச்சாகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...