Thursday, October 13, 2011

மத்திய அரசு எஜமானனாக இருந்துகொண்டு


மத்திய அரசு எஜமானனாக இருந்துகொண்டு மாநில அரசுகளை அன்றிலிருந்து இன்றுவரை அடிமையாக நடத்தி வருகிறது சென்னையில் தமிழர் தலைவர் ஆதாரத்துடன் விளக்கவுரை


சென்னை, அக். 12-மத்திய அரசு தங்களை எஜமானனாகவும், மாநில  அரசுகளை அடிமை யாகவும் அன்றிலிருந்து இன்றுவரை நினைத்து நடத்தி வருகிறது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலில் கொண்டு வரக்கோரும் மாநாடு கருத்தரங்கம் திராவிடர் கழகத்தின் சார்பில் 25.9.2011 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
ஒருவர் பேசிய கருத்து
இன்னொருவரிடம் திரும்பி வராமல் நாம் இங்கே நல்ல மனநிறைவோடும், தெளி வோடும் அமர்ந்திருக்கின்றோம். துவக்கம் முதலே எந்தெந்த கோணத்தில் இருந்து ஒருவர் பேசிய கருத்து இன்னொருவரிடம் திருப்பி வராமல், அதே நேரத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்திலே யாராலும் மறுக்க முடியாத ஆதாரங்களோடு மிகச் சிறப்பாக செய்திருக்கிற அறிஞர் பெருமக்களே உங்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில், தமிழர்கள் சார்பில் மாநில சுயாட்சியை விரும்புகிற வர்கள் சார்பில் மீண்டும் கல்வி மாநிலப்பட்டிய லுக்கு வரவேண்டும் என்று சொல்லுகிறவர்கள் சார்பில் தமிழ்கூறும் நல்லுலகம் மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த குரல் ஒலிக்கும். பல மாநில முதல்வர்களுக்கு இதை எடுத்துச்சென்றால் அவர்களும் நம்மோடு இணைவார்கள் என்பது உறுதி என்ற அளவிலே நல்ல சிறப்பைத் துவக்கி வைத்திருக்கிற உங்கள் அனைவருக்கும் எங்க ளுடைய தலைதாழ்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்ளுகிறோம்.
விசித்திர வழக்கு-விசித்திர தீர்ப்பு
அந்த அடிப்படையிலே மிக அற்புதமான விளக்கங்களை சொல்லியிருக்கிறார்கள். அய்யா ராமசாமி அவர்கள் சொன்னதைப் போல விசித்திர வழக்கு-விசித்திர தீர்ப்பு என்று சொல்லுவது மாதிரி முன்னாடியே தீர்ப்புகள் சொல்லி அதற்கு வேண்டிய நியாயங்கள் எவ்வளவு இருக்கின்றன என்ற அளவிலே பெரியார் கருத்துகள் மக்களைப் பக்குவப் படுத்தியிருக்கின்றன.
ஆயத்தப்படுத்தியிருக்கிறது. அடுத்ததொரு கருத்துப்போருக்கும், உரிமைப்போருக்கும் மக்களை தயார்ப் படுத்தக்கூடிய ஒரு முன்னெச்சரிக் கையான ஒரு முன் மணி அடிக்கப்படுகிறது என்று சொல்லக்கூடிய சிறப்பான இந்த நிலையிலே இங்கே வடிக்கப்பட்ட தீர்மானத்தை இந்த அறிவார்ந்த அவையினர் முன்னாலே நிறைவேற்றுவதற்காக முதலில் முன்மொழிந்து படித்துவிட்டு உங்களை வழிமொழியும் படியாக கேட்டுக்கொண்டு பிறகு ஒரு சில ஆதாரங்களை மட்டும் எடுத்துரைக்க விரும்புகின்றேன்.
அந்த படத்தைக் கலைக்க விரும்பவில்லை!
ஏனென்றால் ரொம்பத் தெளிவான படம் வரையப்பட்டிருக்கிறது. அந்த படம் கலைக்கப் படக்கூடாது. கலையக் கூடாது. அந்த சிந்தனை யோடு நாம் வெளியேற வேண்டும். அதன் மூலம் இந்த கருத்துகளை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற உணர்வு இருக்கிறது.
ஆகவே இந்தத் தீர்மானத்தை அனைவர் சார்பாக இந்த அவையின் சார்பாக இந்த மாநாட்டின் சார்பாக கருத்தரங்கத்தின் சார்பாக முன் மொழிகின்றேன். உங்கள் அனுமதியோடு (கைதட்டல்). இப்பொழுது தீர்மானத்தைப் படிக்கிறேன்.
அரசியல் நிர்ணய சபையில்.... அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப்பட்ட மத்திய அதிகாரக் குழுவின் தலைவர் என்ற முறையில் ஜவஹர் லால் நேரு அவர்கள் 1947 ஜூலை 5 அன்று அரசமைப்புச் சட்ட மன்றத்தின் தலை வருக்கு கீழ்க் கண்டவாறு கடிதம் எழுதினார்.
பலமற்ற ஒரு மத்திய அரசு அமைவது நாட்டு நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்ற ஒருமித்த கருத்தை நாங்கள் கொண்டுள்ளோம். அதே நேரத்தில்,  அதிகாரமானது உறுப்புகளான மாநில அரசுகளிடமே  இருக்க வேண்டிய பல விவகாரங்கள் உள்ளதென்பதில் நாங்கள் மிகுந்த மனத் தெளிவுடன் இருக்கிறோம். ஒற்றை ஆட்சி (ருவையசல ளுவயவந)  அடிப்படையில் அரசமைப்பு சட்டம் இயற்றப் படுவது, அரசியல் ரீதியாகவும், நிருவாக ரீதியாகவும்  ஒரு பிற்போக்கான செயலாகும்.
மூன்று முழுமையான பட்டியல்கள்
அதன் பிறகு, இணைக்கப்பட்டுள்ளவாறு, மூன்று முழுமையான பட்டியல்கள் உருவாக்கப் பட்டன. எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்பட்ட போதும்,  அது போன்ற தொரு அதிகாரம், அரசமைப்புச் சட்டத்தை இயற்றியவர்களின் கருத்துக்கும் எட்டாத ஒன்றாகவே இருக்கும்.  அந்தப் பட்டியலில்,  கல்வி மாநிலப் பட்டியலில்  16 ஆம் எண்ணிட்ட பதிவில் சேர்க்கப்பட்டி ருந்தது. அதன்படி, (காசி இந்து பல்கலைக் கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் நீங்கலாக), கல்வித் துறை மாநிலங்களுக்கே முழுமையாக ஒதுக்கப்பட்ட தாகும். இறுதியாக, அரசமைப்புச் சட்டம் 1950 இல் நடைமுறைப் படுத்தப்பட்ட போது, மாநிலங்கள் பட்டியல் என்னும் இரண்டாம் பட்டியலில் கல்வி, 63 வரையிலான 65 பதிவுகளுக்கு உட்பட்டு,  11 வரிசை எண் பதிவில் சேர்க்கப்பட்டிருந்தது. 63 முதல் 65 வரையிலான பதிவுகள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு டையவை.  66 பதிவில் மட்டுமே, உயர் கல்வியில் ஒத்துழைப்பும், தரமும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வாறு, மாநில அரசுகள் கல்வித் துறை மீது கொண்டிருக்கும் முழுமையான, தனிப்பட்ட சட்டமியற்றும் அதிகாரம் உறுதி செய்யப்பட்டிருந்தது.
மாநில சட்டமன்றங்களுக்கு இல்லை
ஆனால், 1975- 77 ஆண்டுகளுக்கிடையே,  பேச்சுச் சுதந்திரம் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டி ருந்த,  பல மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்ட -தேசிய நெருக்கடி நிலையின் போது, 42 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, மாநிலப் பட்டியலில் இருந்து பதிவு 11 நீக்கப்பட்டது. அதற்குப் பதிலாக  கல்வி மூன்றாவது பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டு மாற்றி அமைக்கப் பட்டது. இப்போது, கல்வி பற்றி சட்டங்கள் இயற்று வதற்கான அதிகாரங்கள் எதுவும் (அனைத்து நடைமுறை நோக்கங்களிலும்) மாநில சட்ட மன்றங்களுக்கு இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. அரசமைப்புப் சட்ட 254 (2) பிரிவுடன் சேர்த்துப் படிக்கும்போது, அனைத்து நடைமுறை நோக்கங்களிலும் பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரம் மத்திய அரசின் பட்டியலில் உள்ள அதி காரங்களின் விளைவுக்கு ஒப்பானவை. உறுப்புகளான மாநில அரசுகள் இப்போது மத்திய அரசின் கருணையில்  இருக்க வேண்டிய வைகளாக ஆக்கப்பட்டு விட்டன. இந்த நிலை ஜவஹர்லால் நேரு அவர்கள் அளித்திருந்த உறுதி களுக்கும், அரசமைப்புச் சட்ட உணர்வுக்கும்  எதிரானது. எனவே, கல்வி தொடர்பான சட்ட மியற்றும் அதிகாரப் பதிவு 42 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு முன்னர் இருந்தபடி, (ளுவயவரள ணுரய ஹவேந) இரண்டாம் மாநிலப் பட்டியலில் 11 ஆம் பதிவுக்குத் திரும்பக் கொண்டு வரப்படவேண்டும்.
முன்பு இருந்தது போலவே
கல்வி பற்றி இரண்டாவது மாநிலப் பட்டியலில் 11 ஆம் பதிவில் இருந்த சட்டமியற்றும் அதிகாரம் நீக்கப்பட்டு, மூன்றாவது  பொதுப் பட்டியலில்  கல்வி பற்றிய பதிவு சேர்க்கப்பட்டது, அரசமைப்புச் சட்ட மன்றத்தாலும், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களாலும் மாநிலங்களுக்கு  ஒட்டு மொத்தமாக அளிக்கப்பட்ட புனிதமான உறுதி மொழியை மீறிய செயலாகும். அதனால், கல்வி பற்றி சட்டமியற்றும் அதிகாரம் தொடர்பான பதிவை அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்ட வணையின்  மாநிலப் பட்டியல் என்னும் இரண் டாம் பட்டியலில் முன்பு இருந்தது போலவே மீண்டும் கொண்டுவரத் தேவையான பயனுள்ள அனைத்து நடவடிக்கைகளையும்  உடனே மேற் கொள்ள வேண்டுமென  நாடாளுமன்றத்தையும், அனைத்து மாநில சட்ட மன்றங்களையும், அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொள்வதென இந்த மாநாடு ஒரு மனதாக தீர்மானிக்கிறது.
எழுந்துநின்று கரவொலி
இதற்கு நீங்கள் அத்துணைபேரும் எழுந்து நின்று வரவேற்று கைதட்டல் மூலமாக வழிமொழிய வேண்டும் என்று அன்போடு-உரிமையோடு அனை வரையும் கேட்டுக்கொள்கின்றோம். (நீண்ட பலத்த கரவொலி).
நண்பர்களே! இரண்டொரு செய்திகளை மட்டும் நான் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இங்கே பேசியவர்கள் பல கோணங்களில் அற்புதமாக விளக்கியிருக் கிறார்கள்.
பொத்தாம் பொதுவில்-போகிற போக்கில்
முதலாவதாக கல்வியை விவாதம் செய்து மாநில பட்டியலிலே வைத்திருந்தார்கள் என்று சொல்லும்பொழுது கூட திடீரென்று ஏதோ பொத்தாம் பொதுவில் போகிற போக்கில் அவர்கள் கல்வியை வைக்கவில்லை.
அதற்கு ஆதாரங்கள் சிலவற்றை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அரசியல் சட்டத்தில் ஏழாவது அட்டவணை (7வா ளஉநனரடந) இருக்கிறது. முதலில் விவாதம் நடைபெறுகிறது.
இந்த செய்தி அறிவார்ந்த அவையினர் என்ப தால் விளங்கி, தெரிந்துகொள்ளக் கூடிய முக்கிய மான செய்தியாகும். இவைகள் பதிவு செய்யப்பட வேண்டிய கருத்துகளாகும். இது ஒரு குறிப்பிட்ட திட்டவட்டமான விவாதத்தை மய்யப்படுத்தி வரவில்லை.
அதிகாரப் பங்களிப்பு மத்திய அரசாங்கத்தைப் பற்றிச் சொன்னார்கள் அல்லவா? எல்லாம் எங் களிடத்திலே இருக்க வேண்டும் என்ற ஒரு எஜ மானத் தோரணை.
அரசியல் சட்டத்தில் எழுத்து பூர்வமாக இருப்பது வேறு-ஆனால் நடைமுறையில் மத்திய அரசு என்ன நினைக்கிறது?
மாநில அரசுகள் எல்லாம் அடிமைகள்
மாநில அரசுகள் எல்லாம் தங்கள் அடிமைகள், ஏவலாட்கள், தாங்கள் எஜமானர்கள் என்பதைப் போல நினைக்கிறார்கள். இருவருக்கும் சமமான உணர்வு உண்டு என்று கூட நினைப்பது கிடையாது.
பேராசிரியர் அ.இராமசாமி அவர்கள் முதல் இரவு உதாரணத்தைச் சொன்னார்கள். நீதியரசர் முதலாவது சட்டத்திருத்தத்தை சொன்னார்கள்.
முதலிவுரக்கு சம்பந்தப்பட்டவர்கள் இரண்டு பேருமே பட்டியல் கொடுத்தால் அது சமம். ஆனால் இங்கே அப்படி இல்லை. எஜமானன் அடிமை என்று நினைக்கிறார்கள்.
முதலில் காங்கிரஸ் பார்ட்டியில் விவாதம் நடந்திருக்கிறது. விவாதம் நடந்து முடிந்து விடுகிறது. அடுத்த படியாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்திருக்கிறது. இதைப் பற்றி சில செய்திகள் வெளியே வந்திருக்கின்றன.
சுகாதாரமும் மத்திய அரசிடம்
சுகாதாரத்துறையும் மத்திய அரசிடம் தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். முன்ஷி, நேரு, இந்த கருத்துக்கு ஆதரவாக இருந்திருக் கிறார்கள். இது நடந்தது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். மாநில உரிமைகளில் மத்திய அரசு கை வைப்பதைப் பார்த்து காங்கி ரஸ்காரர்களே அந்த காலத்தில் கொதித்து எழுந்திருக்கிறார்கள்.
இந்த செய்தி மிக முக்கிமானது. உள்துறை அமைச்சர் கோவிந்த் வல்லப பந்த் எதிர்த்தார். அப்பொழுது ருவைநன யீசடிஎஉந பிரிமியர் என்றுதான் சொல்லுவார்கள். ராஜகோபாலச்சாரியாரையும் சரி, மற்றவர்களையும் சரி இப்படித்தான்  மாநிலத்தை ஆள்பவர்களை  அப்பொழுது அழைப்பார்கள். அவர் எதிர்த்தார் இந்த மாதிரி கூடாது என்று. மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு குவித்து வைத்திருக்கிறது என்று வாதம் செய்தார். மிகப்பெரிய அளவுக்கு அதிகாரத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு போனால் எங்களுக்கு என்ன வேலை? மாநில அரசுகளின் பொறுப்புணர்ச்சியைத் தட்டிக் கழிக்கக் கூடிய அளவுக்கு இருக்கிறதே என்று வாதம் செய்தார்.
பாம்பே பி.ஜி.கர்
அது மட்டுமல்ல. பாம்பேகாரரான பி.ஜி.கர் அவரும் எதிர்த்தார். இவர்கள் எல்லாம் நேருவுக்கு சமமாக உட்கார்ந்து பேசக்கூடியவர்கள். இந்த எண்ணங்கள் பறந்தால் ஸ்டேட் லிஸ்ட் என்று ஒன்றே இருக்காது என்று சொல்லிவிட்டார்.
இந்த அரசியல் சட்டம் இவ்வளவு பெரியது. உலகத்தில் பெரிய அரசியல் சட்டம் என்று சொன்னார்கள். அரசியல் சட்டம் தொடங்கும் பொழுதே முரண்பாடுகளின் மொத்த உருவமாக உருவாகியிருக்கிறது என்பதை அரசியல் சட்ட ரீதியாகப் பேசுகிறோம். நாம் உணர்ச்சி பூர்வமாகப் பேசவில்லை. அறிவு பூர்வமான விவாதம் இங்கே நடந்து கொண்டி ருக்கிறது. இந்திய அரசியல் சட்ட முதல் விதி எப்படி ஆரம்பிக்கிறது?
ஐனேயை வாயவ ளை யசயவா.பாரத் என்பதற்கே விவாதங்கள் எல்லாம் கூட நிறைய வந்தன. ஐனேயை ளை யசயவா ளாயடட நெ ய ரடி டிக ளவயவநள .
அமெரிக்கா போல் இருக்க வேண்டும்
நியாயமாகப் பார்த்தால் எப்படியிருக்க வேண்டும்? ருவைநன ளவயவநள டிக ஹஅநசஉய என்பது போல  ருவைநன ளவயவநள டிக ஐனேயை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இருந்தால் அது அதிகாரபூர்வமானது சரியானது. ஆனால் ஒரு பக்கம் ருடி டிக ளுவயவநள என்பதை சொல்லிவிட்டு இன்னொரு பக்கம் அரசியல் சட்ட பீடிகையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
றுந வாந யீநடியீடந டிக னேயை. நம் மக்கள் எல்லாம் சேர்ந்து உருவானது தான் இந்தியா. இதில் மிகப்பெரிய ஃபிராட் என்று சொன்னார். பாருங்கள். அந்த ஃபிராட் இதிலிருந்தே ஆரம்பிக்கிறது. வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை முதல் தேர்தல் 1952. அரசியல் சட்டத்தை எரித்த பொழுது தந்தை பெரியார் சுட்டிக்காட்டினார். அரசியல் சட்டம் வந்தது முதலில்.
குழந்தை பெற்றது முன்னாலே திருமணம் பின்னாலே
தேர்தல் நடந்தது 1952இல். திருமணம் பின் னாலே குழந்தை பெற்றது. முன்னாலே. அந்த குழந் தைக்கு சட்ட ரீதியான வலிமை உண்டா? இப்படித் தான் அரசியல் சட்ட ரீதியாக இந்த சூழல் வந்திருக்கிறது.
- (தொடரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...