Thursday, October 13, 2011

அதிர்ச்சியூட்டும் தகவல்!


சங்கரராமன் கொலைவழக்கில் என்னை பிறழ் சாட்சி சொல்ல காவல்துறை அச்சுறுத்துகிறது!
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சங்கரராமன் மனைவி கடிதம்!
சென்னை, அக். 12- 2004 இல் காஞ்சிபுரம் வரத ராஜபெருமாள் கோவில் வளாகத்தினுள்ளேயே காட்டுவிலங்காண்டித்தனமாக வெட்டிக் கொல்லப் பட்ட அக்கோயில் மேலாளர் சங்கரராமனின் மனைவி, இந்தக் கொலை வழக்கில் தவறான சாட்சியம் அளிக்கும்படி தானும், தன் குடும்பத் தினரும் மிரட்டப்படுவதாக சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதம் பேரதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
2004 செப்டம்பர் 3 ஆம் தேதி கோயில் வளாகத் துக்குள் வெட்டிக் கொல்லப்பட்ட சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதியும், விஜயேந்திர சரஸ்வதியும் முக்கிய குற்றவாளிகளாக உள்ளனர்.
சங்கரராமனின் மனைவி பத்மா 29.9.2011 அன்று சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், விசாரணைக்காக என்னை சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர் அழைத்துச் சென்றபோது, நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே பிறழ் சாட்சியம் அளிக்கும் படி என்னை மிரட்டினர். உன் மகனையும், மகளை யும் கொண்டு போய் ஆசிட் டாங்கில் போட்டுவிடு வோம்; அவர்களின் உடல்கள் கூட கிடைக்காது. பெரும்பாலான சாட்சியங்கள் பிறழ்சாட்சியம் அளிக்க, அச்சுறுத்தல் மூலமோ, கையூட்டு மூல மாகவோ  சரிக்கட்டப்பட்டுவிட்டனர். இச் செயல லில் காவல்துறையும், பிராசிக்யூஷன் தரப்பில் கைகோர்த்துக் கொண்டு ஈடுபட்டுள்ளனர். சாட்சி யங்களை விலைக்கு வாங்க அனுமதிக்கப்பட்டுள் ளது என்று கூறி என்னை மிரட்டினர் என்று தலைமை நீதி பதிக்குக் கடிதம் எழு தியுள்ளார் கொலை செய்யப் பட்ட சங்கர ராமனின் மனைவி பத்மா.
அதிக அளவு முக்கியத்துவத்தை யும், பொது மக்க ளின் ஆர்வத்தை யும் பெற்றிருக்கும் இந்த வழக்கில் ஏற்கனவே பல வியப்படையச் செய்யும் திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. முதலில் இந்த வழக்கை தமிழ்நாட்டில் இருந்து உச்சநீதி மன்றம் புதுச்சேரி நீதிமன்றத்திற்கு மாற்றியது. பின்னர் புதுச்சேரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தபோது, பல முக்கிய சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறி, முன்னம் தாங்கள் அளித்த சாட்சியத்தையே மறுத்தனர். இதன் விளைவாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலையாகும் நிலையை நோக்கி வழக்கின் விசாரணை சென்று கொண்டிருந்தது.
2011 ஏப்ரல் மாதத்தில் ஜெயேந்திரசரஸ்வதி விசாரணை நீதிமன்ற நீதிபதியுடன் தொலைப் பேசியில் பேசியது பேச்சு பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட விவகாரம் எழுந்ததையடுத்து,  உயர்நீதிமன்றத்தின் விஜிலன்ஸ் செல்லுக்கு புகார் அளிக்கப்பட்டு, ஒரு ரிட் மனுவும் உயர்நீதிமன் றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நான்காவதாக இந்த வழக்கில் முதன்மை விசாரணை காவல் அதிகாரியே, வழக்கின் டைரியைப் பார்க்க நான் அனுமதிக்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றத் தில் புகார் தெரிவித்தார். தன்னையும் ஒரு பிறழ் சாட்சியாக மாறும்படி அச்சுறுத்தும், ஆசைகாட்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இறுதியாக, ஜெயேந்திர சரஸ்வதி விசாரணை நீதிபதியுடன் தொலைபேசியில் பேசிய செய்தி வெளிவந்த பிறகு தாக்கல் செய்யப்பட்ட ஒரு ரிட் மனுவின் மீது விசாரணை நடத்துவதற்கு ஆகஸ்ட் 25 அன்று உயர்நீதிமன்ற ஒரு நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதித்தது.
செல்வாக்கு மிக்கவர்களிடமிருந்து தங் களுக்கு வரும் அச்சுறுத்தல்களைக் குறிப்பிட்டு, இப்போது தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கோரி கொலைசெய்யப்பட்ட சங்கர ராமனின் மனைவி பத்மா சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள் ளார். இந்த வழக்கில் ஒரு முக்கிய சாட்சியான எனது மருமகனை அச்சுறுத்திய காவல்துறையி னர், நீதிமன்றத்தில் உண்மையைக் கூறக்கூடாது என்று அவரிடம் கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுத்தபோது, அவரை அச்சுறுத்திப் பணிய வைக்கும் தந்திரமாக, இரண்டு வேறு வழக்குகளில் சிக்கவைத்துள்ளனர் என்று பத்மா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி உரை யாடல்கள் மற்றும் விசாரணை அதிகாரிகளான காவல் துறையினரும், வழக்கை நடத்தும் பிராசி கியூஷன் தரப்பினரும் சேர்ந்து இந்த வழக்கை தோற்றுப் போகச் செய்ய சதி செய்கின்றனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று கூறும் பத்மா, இந்த வழக்கு விஷயத்தில் விரைவில் தலையிட்டு, நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியைத் தடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...