தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
உலகில் உள்ள அதிக உயரம் கொண்ட மலை எது?
ஹவாய் தீவுகளில் உள்ள அதிக உயரமான இடமான மவுனா கியா என்னும் எரிமலைதான் உலகிலேயே அதிக உயரம் கொண்ட மலையாகும்.
செயல்படாமல் இருக்கும் இந்த எரிமலை கடல் மட்டத்துக்கு மேல் 4,206 மீட்டர் (13,779 அடி) உயரம் கொண்டது இது. ஆனால் கடல் மட்டத்திலிருந்து அதன் உச்சி வரை அளக்கும்போது, அது 10,200 மீட்டர் (33,465 அடி) உயரம் இருக்கிறது. எவரெஸ்ட் மலையை விட இது முக்கால் மைல் அதிகமாகும்.
மலைகளைப் பொறுத்தவரை, தற்போது நடைமுறையில் உள்ள பழக்கம் மலையின் அடிப்பகுதியில் இருந்து உச்சி வரை அளக்கப்படுவதை உயரமான மலை என்றும், கடல் மட்டத்தில் இருந்து உச்சி வரை அளக்கப்படுவது அதிக உயரம் கொண்ட மலை என்றும் அழைப்பதுதான்.
இதன்படி, 8,848 மீட்டர் (29,029 அடி) உயரம் கொண்ட எவரெஸ்ட் மலை உலகிலேயே உயரமான மலையே அன்றி, அதிக உயரம் கொண்ட மலை அல்ல.
மலைகளை அளப்பது என்பது பார்ப்பதற்குத் தோன்றுவது போல் அவ்வளவு எளிதானதல்ல; மிகுந்த சிக்கல் நிறைந்தது. மலையின் உச்சி எங்கே இருக்கிறது என்பதைப் பார்ப்பது எளிதாகவே இருக்கும். ஆனால் மலையின் அடிப்பகுதி எங்கிருக்கிறது என்பதை எப்படி பார்ப்பது?
தான்சானியாவில் உள்ள 5,895 மீட்டர் (19,340 அடி) உயரம் கொண்ட கிளிமாஞ்சரோ மலை ஆப்பிரிக்க சமவெளியில் இருந்து நேரடியாக உயர்வதால், எவரெஸ்ட் மலையை விட அதுவே அதிக உயரமான மலை என்றும் சிலர் வாதிடுவர்.
ஆனால் எவரெஸ்ட் என்பது, மாபெரும் அடிப்பகுதியைக் கொண்ட ஹிமாலய மலைத் தொடரின் பல மலைகளில் ஒன்றாகும்; உலகின் அடுத்த 13 உயரமான மலைகளை உள்ளடக்கியது இந்த மலைத் தொடர்.ஒரு மலையின் உயரம் நியாயமாக அளக்கப்படவேண்டு மானால், அந்த மலையின் உச்சியில் இருந்து பூமியின் மய்யம் வரையிலும் அளக்கப்படுவதுதான் என்று மற்றவர்கள் கூறுகின்றனர்.

(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்
‘The Book of General Ignorance’
பொதுவான அறியாமைகள்
தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
No comments:
Post a Comment