Monday, October 10, 2011

தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:


தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:


தண்ணீரின் நிறம் என்ன?
வழக்கமாக இந்தக் கேள்விக்கு, தண்ணீருக்கு நிறம் இல்லை என்றும் அது தெளிவாக, ஒளி ஊடுருவுவதாக இருக்கும், வானின் நிறத்தை எதிரொளிப்பதால்தான் கடல் நீலமாகத் தோன்றுகிறது  என்ற விடைதான் கிடைக்கும். ஆனால் அது தவறு. தண்ணீர் உண்மையிலேயே நீல நிறம் கொண்டதுதான்.  அந்த நிறம் நம்பமுடியாத அளவுக்கு மெல்லிய  நிறச்சாயல் கொண்டது தண்ணீர். ஆனால் அது நீலநிறம்தான். பனியில் ஆழ்ந்த துளை ஒன்றையோ, அல்லது உறைந்துபோன நீர்வீழ்ச்சியின் தடித்த பனிக்கட்டியின் மூலமாகவோ நீங்கள் காணும்போது, இயற்கையான இந்த நீல நிறத்தை காணலாம். ஒரு பெரிய ஆழமான நீர்நிலையை தண்ணீர் கொண்டு நிரப்பி அதன் மூலம் அதன் அடித்தளத்தைப் பார்த்தால், தண்ணீர் நீலநிறமாகத் தெரியும்.
நாம் தண்ணீரைப் பார்க்கும்போது அல்லாமல், தண்ணீரின் மூலம் பார்க்கும்போது மட்டுமே  தண்ணீர் சில நேரங்களில் ஏன் நீல நிறமாகத் தோன்றுகிறது என்பதை இந்த மெல்லிய நீல நிறச்சாயல் விளக்குவதில்லை. இதில்  வானத்திலிருந்து எதிரொளிக்கும் நிறம் ஒரு முக்கியமான பகுதியாக செயலாற்றுகிறது. வானம் மப்பும் மந்தாரமுமாக மூடிக் கொண்டிருக்கும் நேரத்தில் கடல் நீல நிறமாகத் தோன்றுவதில்லை.
ஆனால் நாம் காணும் ஒளி அனைத்தும் தண்ணீரின் மேற்பரப்பால் எதிரொளிக்கப்படுவதில்லை.  அவற்றில் சில தண்ணீரின் அடிப்பகுதியில் இருந்து வருகின்றன.  எவ்வளவுக்கெவ்வளவு தண்ணீர் தூய்மையற்றதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது நிறத்தை அதிகமாக எதிரொளிப்பதாக இருக்கும்.
கடல்கள், ஏரிகள் போன்ற பெரிய நீர்நிலைகளில் உள்ள தண்ணீரில் நுண்ணிய தாவரங்களும், பாசியும் நிறைந்திருக்கும். ஆறுகளிலும், குளங்களிலும் உள்ள தண்ணீரில் அதிக அளவில் மண்ணும் இதர திடப் பொருள்களும் படிந்திருக்கும். இந்தப் பொருள்கள் அனைத்தும் நீரின் மேற்பரப்புக்கு வரும்போது ஒளியை எதிரொளித்துச் சிதறடித்து, நாம் காணும் நிறங்களில் பெரும் வேறுபாடுகளை உருவாக்கிக் காட்டும். ஒரு பிரகாசமான நீலநிற வானின் கீழ் உள்ள மத்திய தரைக்கடல் ஒரு பிரகாசமான பச்சை நிறமாக சில நேரங்களில் தோன்றுவதன் காரணத்தை இது விளக்கும்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...