Wednesday, October 12, 2011

எப்படி வந்தது இந்தத் தைரியம் தினமணிக்கு?


ஆயுத பூஜைக்கு கலைஞர் வாழ்த்துத் தெரிவிக்கவில்லை என்பதை முதன்மைப்படுத்தி, தினமணி பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை.

பித்தலாட்டம்,

வக்கிரபுத்தி

என்கிற சொற்களைக் கையாண்டுள்ளது. இந்தத் தைரியம் - திமிர் எப்படி வந்தது என்று தெரியவில்லை.

விமர்சனங்கள் வரட்டும் - வேண்டாம் என்று சொல்லவில்லை - 88 ஆண்டுகள் காணும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரை - அய்ந்து முறை முதலமைச்சராக இருந்த ஒரு தலைவரை இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி சீண்டுவது - திராவிட இனவுணர்வைத் தூண்டுவதாகத்தான் பொருள்.

எது பித்தலாட்டம்? ஆரியர் - திராவிடர் என்று சொல்லுவது பித்தலாட்டமா? அப்படி என்றால் திருஞான சம்பந்தனை திராவிட சிசு என்று சொன்ன ஆதிசங்கரரை அந்தப் பித்தலாட்டத்தின் பட்டியலில் சேர்க்கவேண்டுமே, சேர்ப்பார்களா?

நாம் ஆரியர்கள், அதாவது அறிவுத்திறம் மிக்கவர்கள் என்று அழைக்கப்பட்டோம்; நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள் என்று எழுதிய ஆர்.எஸ்.எஸ்ஸின் குருநாதர் கோல்வாக்கரும் பித்தலாட்டக்காரர் ஆகமாட்டாரா?

ஆரியர் - திராவிடர் என்று உண்டாக்கியது திராவிடர் இயக்கமா? சிந்துச்  சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமா? ஆரியர் நாகரிகமா? என்ற சர்ச்சையைக் கிளப்பியது யார்?

எருதை, குதிரையாகக் கணினிமூலம் மாற்றி அங்கு இருந்தது ஆரியர் நாகரிகம் என்று - தினமணி தூக்கிக் கொஞ்சும் பி.ஜே.பி. ஆட்சியில் நடைபெற்றதே அது இரண்டு மடங்கு பித்தலாட்டம்தானே?

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரைத் தலையில் வைத்து, தி.மு.க தலைவர் கலைஞர் அவர்களை இந்தப் பிரச்சினையில் சாடும் தினமணியைக் கேட்கிறோம்:

அந்தக் கட்சியின் பெயரிலே அண்ணா இருக்கிறாரே - அவரின் கொள்கை இந்தப் பிரச்சினையில் என்ன? ஏன் அதைப்பற்றி எழுதத் தயங்குகிறது?

ஆரிய மாயை எழுதிய தலைவராயிற்றே அறிஞர் அண்ணா!

அவ்வளவுதூரம் கூடப் போகவேண்டாம் - அ.தி.மு.க.வின் பெயரிலேயே திராவிட இருக்கிறதே - அதற்கு என்ன பதில்? அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் திராவிடத்துக்கு வேறு பொருள் என்று சமாளிக்கப் போகிறார்களா?

அண்ணா தி.மு.க.வைத் தனிமைப்படுத்தி, கலைஞரைத் தாக்கும் பார்ப்பனீயத்தின் பிரித்தாளும் புத்தியை இந்த இடத்தில் கவனிக்கத் தவறக்கூடாது!

அரசியலில் அத்தனைப் பார்ப்பனர்களும் கலைஞரைக் குறி வைக்கும் நோக்கம் என்ன?

திருச்சி தேர்தல் பொதுக்கூட்டத்தில் மானமிகு கலைஞர் அவர்கள் அதற்கான பதிலைக் கூறிவிட்டார்.

உம் இனத்தவர் யார்? இனம் அல்லாதவர் யார்? என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்று சுவையான கருத்தாழச் சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.

நண்பன் யார்? எதிரி யார்? என்று தெரியாவிட்டால் அதன் நிலை என்னவாகும்?

தொல்காப்பியத்திலும், பதிற்றுப்பத்திலும் ஆயுத பூஜைபற்றி வருவதாகவே விவாதத்துக்காக ஏற்றுக் கொள்வோம்; அதற்காக அந்த மூட நம்பிக்கையை ஏற்றதல்ல திராவிட இயக்கம்.

பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதிச் சாத்தனார் இருந்தார் என்பதற்காக யாகங்களை ஏற்றுக்கொள்ள முடியுமா?

சிலப்பதிகாரத்தில் தமிழன் வீட்டுத் திருமணத்தில் மாமுது பார்ப்பான் வந்தான் என்பதற்காக சுயமரியாதைத் திருமணம் ஏன் என்றுகூட கேட்பார்களோ!

அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்புத் தண்ணீரைக் குடிக்கவேண்டுமா?
மூட நம்பிக்கை என்ற பெயரில் குதிரை சவாரி செய்தாலும், அதனை எதிர்ப்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை. அதனைப் பின்பற்றுவதுதான் இரட்டைக் குழல் துப்பாக்கியான தி.மு.க.வின் நிலைப்பாடாகவும் இருக்க முடியும்.

தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் கலைஞரிடமிருந்து பிரித்து கலைஞர் அவர்களைத் தனிமைப்படுத்தித் தாக்க முயலும் பார்ப்பனப் புத்தியைப் புரிந்துகொள்ளாதவர்கள் அல்லர் நாம்.

தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னனான செங்கமலதாசன் வேதியர் வெங்கண்ணாவின் சூழ்ச்சியால் எப்படி வீழ்ந்தான்?

ஆயுத பூஜை சமயத்தில், பீஜப்பூர் சுல்தானைப் படை எடுக்கச் சொல்லவில்லையா? பீஜப்பூர் சுல்தான் படையோடு வந்தபோது, ஆயுத பூஜைக்காக வைக்கப்பட்டு இருந்த போர் ஆயுதங்களை எடுக்கக் கூடாது என்று சொல்லப்பட்டதால், தஞ்சை வீழ்ந்ததே - ஆயுத பூஜையின் யோக்கியதை இதுதானே? இதற்கு என்ன பதில் தினமணியாரே?

செங்கமலதாசனைக் காட்டிக் கொடுத்து அந்நிய அரசனிடம் சன்மானம் பெற்ற வெங்கண்ணா பரம்பரைதானே தினமணி? அதன் கொடுக்கு புத்தி இப்படித்தான் இருக்கும்?

திராவிட இயக்கத் தலைவர்களைக் கேவலமான முறையில் விமர்சனம் செய்ய நினைத்தால்... பதிலடி பத்து மடங்கு கிடைக்கும் எச்சரிக்கை!


விடுதலை 12-10-2011


செப்டம்பர் 01-15-2012

3 comments:

விச்சு said...

பழுத்த மரம்தான் கல்லடி படும் என்பார்களே!! அதுதான்..அனுபவசாலிகளுக்கு மட்டும்தான் எல்லா விமர்சனமும்..

வெட்டி பசங்க நாங்க said...

கலைஞர் tv 2 நாளைக்கு special program போட்டு சம்பாரிப்பிங்க.அந்த பணம் மட்டும் இனிக்கும். நல்லவன இருந்த தீபாவளி special program போடமா இருங்க பார்க்கலாம்.

Anonymous said...

நாங்கள் தீபாவளி நிகழ்ச்சி போடமாட்டோம். விடுமுறை தின நிகழ்ச்சி போடுவோம். போதைல பேசாத சசி

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...