கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எலந்தம் பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இரண்டு பெண்கள் போட்டியிடுகின்றனர்.
2 மர்ம ஆசாமிகள் ஒரு பெண் வேட்பாளர் வீட் டுக்கு எதிரே பில்லி சூனியம் வைத்து விட்டனராம். வாழை இலை போட்டு, அதில் மாவினால் செய்யப்பட்ட ஆண் - பெண் உருவம் கொண்ட கொழுக்கட்டைகள், எலுமிச்சம்பழம், அவல், பொரி, வாழைப்பழம், முறுக்கு மற்றும் திருஷ்டி பூசணிக்காயை இரண்டாக அறுத்து குங்குமத்தைப் பூசி, கற்பூரம் ஏற்றிவிட்டார்களாம்.
மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு வக்கில் லாதவர்கள் மூட நம்பிக்கை மண் குதிரைமீது ஏறி தேர்தல் ஆற்றில் இறங்கும் கேவலத்தை என்ன சொல்ல!
இப்படித்தான் கருநாடக மாநில முதலமைச்சராக இருந்த எடியூரப்பா மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்து கடைசியில் பதவியை இழந்ததுதான் மிச்சம்! சோதிடர்களை நம்பிய தேவகவுடாவின் முடிவு என்ன ஆனது?
பாமர மக்களாக இருந்தாலும் சரி, படித்தவர்களாக இருந்தாலும் சரி - மூட நம்பிக்கை என்னும் விலங்குப் பிடியில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்குகின்றனரே!
மூட நம்பிக்கை ஒழிப்புப் பணி என்பது எத்தகைய மகத்தானது என்பதையும் இதன்மூலம் தெரிந்து கொள்ளலாமே!
******
தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆட்கள் கிடைக்க வில்லையாம். ஏராளமான சுயேச்சைகளும் தேர்தலில் நிற்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாம். இவ்வளவுக் கும் ஒவ்வொருவருக்கும் மூன்று வேளை சாப்பாடாம்; 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை வழங்கப்படுகிறதாம் - இருந்தும் ஆள் கிடைக்கவில்லையாம்!
சில கெட்டிக்காரர்கள் ஒரே தொகுதியில் காலை யில் ஒரு வேட்பாளருக்கும், மாலையில் இன்னொரு வேட்பாளருக்கும் தேர்தல் வேலை செய்கிறார்களாம்.
மக்களின் அறிவு நாணயம் எந்த டிகிரியில் இருக்கிறது பார்த்தீர்களா?
வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட அடிக்கடி தேர்தல் வரவேண்டுமோ!
No comments:
Post a Comment