Wednesday, October 12, 2011

தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:


உலகின் உயிர்க்காற்றை அதிக அளவில் தயாரிப்பது எது?

கடற்பாசி

ஒளிச்சேர்க்கையின்போது உருவா கும் தேவையற்ற, ஒரு வீணான தயாரிப் பாக உயிர்க்காற்றை அவை வெளிவிடு கின்றன. அனைத்து மரங்களும், நிலத்தில் உள்ள மற்ற அனைத்துத் தாரவங்களும் சேர்ந்து வெளிவிடும் மொத்த உயிர்க்காற்றை விட அதிக அளவில் கடற்பாசி வெளியிடுகிறது.

எண்ணெய் மற்றும் எரிவாயுவின் முக்கியமான கலவையாக பண்டைய கால கடற்பாசி இருந்துள்ளது.

நீலப்பச்சை கடற்பாசி அல்லது சியா னோபாக்டீரியா (கரும்பச்சை நீலம் பொருள் கொண்ட கியானோஸ் என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது) என்பதுதான் பூமியில் , 3.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்,   தோன்றிய முதல் உயிரினமாகும் என்பது அதன் படிமங் களில் இருந்து தெரியவருகிறது.

யூகாரியோட் இனத்துத் தாவரங் களின் வகைப்பாட்டுடன் சில கடற்பாசி கள் சேர்க்கப்பட்டபோது,  (உண்மையான மய்யக்கரு கொண்ட உயிரணுக்களைப் பெற்றிருப்பதால் அவற்றிற்கு இப்பெயர் வந்தது) இந்த சியானோ பாக்டீரியா , அவற்றின் சொந்த இனத்தைக் கொண்ட வையாக, பாக்டீரிய சாம்ராஜ்யத்தில் உறுதியாகத் தங்களை நிலை நிறுத்திக் கொண்டன.

ஸ்புருலினா என்னும் ஒரு வகையான சியானோ பாக்டீரியா சோயாபீன்சைப் போல் ஒரு ஏக்கரில் 20 மடங்கு அதிக மான புரதத்தை அளிக்கிறது.  70 விழுக் காடு புரதச் சத்தும் (மாட்டிறைச்சியில் 22 விழுக்காடு புரதம்தான் உள்ளது), 5 விழுக்காடு கொழுப்பும் கொண்ட இதில் கெடுதல் செய்யும் கொழுப்புச் சத்தே இல்லை; ஆனால், வியக்கவைக்கும் அளவில் வைட்டமின் சத்துக்களும், கனிமச் சத்துக்களும் இதில் உள்ளன. அதனால் ஸ்புருலினாவின் புகழ் பரவிப் பெருகி வருகிறது.

உடலின் நோயெதிர்ப்புச் சக்தியையும் அது அதிகரிக்கச் செய்கிறது. குறிப்பாக புரோட்டின் இன்டர்பெரான்ஸ் உற்பத்தி யைப் பெருக்கி, நோய்க் கிருமிகள், புற்றுநோய் உயிரணுக்களுக்கு எதிரான உடலின் முன்வரிசை பாதுகாவலர்களை அதிகரிக்கச் செய்கிறது.

ஸ்புருலினாவின் சத்துணைவு மற்றும் உடல்நலப் பயன்களை பல நூற்றாண்டு களுக்கு முன்பே ஆஜ்டெக்குகள், சஹாரா  பாலைவன ஆப்பிரிக்கர்கள், பிளமிங்கோ மக்கள் அறிந்து அதைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

வளம் ஏதுமற்ற நிலத்திலும், கருப்பாக உள்ள அழுக்கு நீரையே மீண்டும், மீண் டும் பயன்படுத்தி,  இந்த கடற்பாசியை வளர்க்க முடியும் என்பதுதான் எதிர் காலத்தில் முக்கியத்துவம் பெறும் செய்தி யாகும்.

மண் அழற்சியை ஏற்படுத்தாத ஒரு பயிர் இது. இதற்கு எந்த உரங்களோ, பூச்சிக்கொல்லி மருந்துகளோ தேவை இல்லை. பூமியில் வளரும் வேறு எந்த தாவரத்தையும் விட சுற்றுச்சூழலை புத் துணர்வு கொண்டதாக இது ஆக்கி வைத்துக் கொள்ளுகிறது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் 
‘The Book of General Ignorance’பொதுவான அறியாமைகள்
தமிழில் : த.க. பாலகிருட்டிணன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...