Wednesday, October 12, 2011

அண்ணா பல்கலைக் கழகத்தில் பூஜை


பூஜையா?


அண்ணா பல்கலைக் கழகத்தில் பூஜை
அறிஞர் அண்ணா முத லமைச்சர் ஆனவுடன் அரசு அலுவலகங்கள் மதச் சார்பின்மை என்னும் தத் துவத்தின் அணிகலன்களாக இருக்கவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தின் அடிப்படையில் அரசு அலு வலகங்களில் எந்த மத சம்பந்தமான வழிபாட்டுப் படங்கள், கடவுள்கள் இடம் பெறக்கூடாது என்று ஆணையிட்டார் (தமிழ்நாடு அரசு பொது (ஜெனரல்-எம்) இலாகா நினைவுக் குறிப்பு எண் 7553/66-2 நாள்: 29 ஏப்ரல் 1968).
இதனைத் தொடர்ந்து இந்தத் திசையில் மத்திய அரசின் சுற்றறிக்கைகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் வரிசையாக வந்ததுண்டு.
ஆனால், நிலைமை என்ன? அரசு அலுவலகங் களே (தலைமைச் செயலகம் உள்பட) அரசின் ஆணையை மீறி வருகின்றன; அரசு ஆணையை அரசு அலுவ லர்களே குப்பைத் தொட்டி யில் வீசி எறிகின்றனர்.
இத்தகு மனப்பான்மை குடிமக்களை அரசு ஆணை - சட்டங்கள் இவற்றை மீறுவதற்கான ஆர்வத்தை யும், துணிவையும் ஏற் படுத்தவில்லையா?
அண்ணா பல்கலைக் கழகம் என்று பெயர். இந்தப் பல்கலைக் கழகத்தில் படித் தவர்களுக்கு உலகெங்கும் மதிப்புண்டு.
அண்ணா பெயரில் உள்ள இந்தப் பல்கலைக் கழகம் அண்ணாவின் ஆணையைத் துச்சசமாக மதிக்கிறதே, என்னே கொடுமை!
அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள நூலகத் தில் ஆயுத பூஜை அமர்க் களமாகக் கொண்டாடப்பட் டுள்ளது. இது அப்பட்ட மான சட்டமீறல் அல்லவா! அண்ணா அவர்களை அவ மதிக்கும் செயல் அல்லவா!
அண்ணாவின் பெய ரால் திராவிடத்தின் பெய ரால் கட்சியை வைத்துள்ள வர்கள் - ஆட்சியில் அமர்ந் துள்ளவர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏட்டிலேயே ராசிபலன் வெளியிடுகி றார்கள். இது ஒரு பக்கம் அண்ணா அவர்களை அவ மதிக்கும் செயல்தான்.
இன்னொரு பக்கத்தில் பல்கலைக் கழகங்கள்,அரசு அலுவலகங்களில் சட்ட மீறல்கள்.
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர்மீதோ, அதுபோல அரசு அலுவல கங்களில் படையல் போட்டு தடபுடலாக ஆயுத பூஜை நடத்தும் அதிகாரிகள் மீதோ வழக்குத் தொடுத் தால் அவர்கள் குற்றக் கூண்டில் நிற்கவேண்டிய அவசியம் ஏற்படாதா?
காவல் நிலையங்களில் கேட்கவே வேண்டாம்! வாழை மரம் கட்டி ஒலி பெருக்கி வைத்துப் பூஜை போடும் கூத்தும் நடப் பதுண்டு.
காவல் நிலையங்களில் இது தொடர்பாக ஏலங் கள் நடப்பதும் உண்டு; கொள்ளை வசூலுக்கும் குறைச்சல் இல்லை.
மதச் சார்பின்மை என் னும் அரசமைப்புச் சட்டத் துக்கு விரோதமாக நடந்து கொள்வதன்மூலம் கடு மையான தண்டனையை எதிர்நோக்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.
-மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...