Thursday, October 6, 2011

மதச் சார்பற்ற அரசு அலுவலகங்களில், மத விழாக்கள், பூஜைகள் கொண்டாடக் கூடாது!


மதச் சார்பற்ற அரசு அலுவலகங்களில், மத விழாக்கள், பூஜைகள் கொண்டாடக் கூடாது!

மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு; கழக வழக்கறிஞர் பி.கே. ராசேந்திரன் வாதாடினார்; தீர்ப்புக்காகக் காத்திருப்பு
மதுரை, அக். 6- அரசு அலுவலகங்களில் மத விழாக்கள், பூஜைகள் கொண்டாடக் கூடாது என்று கோரும் வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கழகப் பொதுக் குழு உறுப்பினரும் கழக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்தவருமான பி.கே. இராசேந்திரன் வாதாடினார். தீர்ப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு அலுவலக வளாகங்களில் அதி காரிகள் மதவிழாக்கள் கொண்டாடுவது மதச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மதுரை கிளை  உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதவிழாக்களை, குறிப்பாக சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை போன்ற இந்து விழாக் களை, அரசு அலுவலக வளாகங்களுக்குள் கொண்டாடுவது அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று தனது மனுவில் திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.பி.முத்துராமன் கூறியுள்ளார்.

அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரை யின்படி, இந்திய குடியரசு ஒரு மதச்சார்பற்ற நாடு என்று கூறப்பட்டு உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர் மதங்கள் தொடர்புடைய விவகாரங்களில் அரசுக்குச்  சம்பந்தமில்லை - விலகியிருப்பது என்பதே அதன் பொருள். எந்த ஒரு குறிப்பிட்ட மதத்துடனும் அரசு தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளக் கூடாது.

மதத்தின் அடிப்படையில் எந்த வித பாகுபாட்டையும் மதச்சார்பற்ற ஓர் அரசு காட்டக்கூடாது என்று கூறியுள்ள அவர், பல அரசு அலுவலகங்களில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுவது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

அரசு மதச் சார்பற்ற அரசு இல்லை என்ற எண்ணத்தை அது தோற்று விப்பதுடன், இந்துக்கள் மற்றும் இந்து மதத்தை அது ஆதரிக்கிறது என்ற எண் ணத்தை அளிக்கிறது.  இந்துக்கள் அல்லாத மக்களின்நம்பிக்கைக்கு எதிரான செயலாகும் இது.

நீதியரசர் ஆர்.சுதாகர் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசின் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் 2-2-2010 அன்று அரசுக்கு கடிதம் ஒன்று அளித்ததாக, மனுதாரரின் வழக் குரைஞர் பி.கே. ராஜேந்திரன் கூறினார்.  அதனைத் தொடர்ந்து மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு ஒன்று தாக்கல் செய்தார்.

1993 டிசம்பர் 13 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப் பிட்ட உத்தரவுகளை நடைமுறைப்படுத் தவும், எந்த பகுதியிலிருந்தும் எந்தவிதத் தகராறும் ஏற்படஇடம் அளிக்காதமுறை யில் அரசு அலுவலகங்களில் மத நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கவும் தேவை யான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மதுரை கிளை உயர்நீதி மன்றம் 2010 மார்ச 17 அன்று உத்தர விட்டுள்ளது.

பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத் தத் துறையின் அந்த அரசாணையில்  அலு வலக வளாகத்திற்குள் மதவழிபாட்டுத் தலங்கள் எதுவும் புதிதாகக் கட்டப்படக் கூடாது என்பதையும், அந்த நோக்கங்களுக் காக  அனுமதிக்கப்பட்டு தற்போது உள்ள அத்தகைய கட்டடங்கள் எவற்றையும் விரிவுபடுத்தவோ அல்லது மாற்றியமைக் கவோ கூடாது என்பதையும் துறைத் தலை வர்களும், மாவட்ட ஆட்சியர்களும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இது பற்றி மாவட்ட ஆட்சியர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்று, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத் துறை ஏற்கனவே 2010 மே மாதத்தில் மனுதாரருக்கு ஒரு பதிலை அனுப்பியுள்ளது என்று மனுதாரரின் வழக்குரைஞர் கூறினார்.

மேலும் அதனை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மனுதாரர் மறுபடியும் செப்டம்பர் மாதத்தில் ஒரு கடிதத்தை அரசின் தலைமைச் செய லாளருக்கு அனுப்பியிருந்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதனால் தற்போது இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

வழக்குரைஞரின் வாதங்களைக் கேட்ட நீதியரசர் மனுவின் மீதான தனது ஆணை பின்னர் பிறப்பிக்கப் படும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

1 comment:

SURYAJEEVA said...

பட்டய கிளப்புங்க

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...