Monday, October 10, 2011

ஒழியாதா ஜாதிப்பேய்?


ஒழியாதா ஜாதிப்பேய்?


பொள்ளாச்சிக்கடுத்த வடசித்தூர் கிராமத் தில் 18.5.46இல், காங்கிரஸ் தியாகியும், சத்தியாக் கிரகியுமான பெருமாள் முதலியார் நடத்தி வரும் சிறீ முருகன் லஞ்சஹோமில் மேற்படி ஊரில் ஆசிரியராயுள்ள தோழர் கே.ராயப்பன் என்ற ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்தவர் காப்பி சாப்பிடலாமா? என்று கேட்க, மானேஜர் மறுக்க வந்த வழியே பள்ளிக்குச் சென்று விட்டார். செய்தி இவ்வளவுதான்! இதையறிந்த ஜாதி இந்துக்கள் சாத்திரம் அழிக்கப்படுவதா? சண்டாளன் நம்முடன் உண்ண வருவதா? இது அடுக்குமா? இனி நம்மிடம் பெண்கூட கேட்க வருவான் என்று ஆவேசத்துக்கு அஸ்திவாரம் செய்து கொண்டு அந்த ஆசிரியரின் உயிரையும் போக்கத் துணிந்து ஆயுதந்தாங்கி ஆதிதிரா விடச் சேரியைச் சூழ்ந்தனர். பயந்த பாமரர்கள் பதுங்கியதோடு பறிதவிக்கலாயினர்! இதையறிந்த ஒரு முஸ்லிம் பெரியார் இடத்துக்கு வந்து நிலைமையைச் சாந்தமாக்கி யாவரையும் இட்டுச் சென்றார். செய்திபெற்ற கிணற்றுக்கடவு போலிஸ் இன்ஸ்பெக்டர் வந்து இரவு 8 மணிக்கு கூட்டத்தைக் கலைத்தார்.

ஆசிரியர் கே.ராயப்பன் இனி அவ்வூரில் இருப்பது இயலாதென எண்ணி சப்-இன்ஸ் பெக்டர் உதவியால் தன் ஊர் வந்தார். இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இச்செய்தி யறிய நெஞ்சு பொறுக்குதில்லையே! நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்! என்று பரிதவிக்கத்தான் தூண்டுகிறது! (ஒரு நிருபர்)

- குடிஅரசு, 01.06.1946

1 comment:

Anonymous said...

ethanai varudamanalum enna...

padippenpathu pathavi vakipatharke

etharkku vittu kodukkanum

jaathi maruppu so called uyarkulathilirunthu vanthaloliya...
maaraathu...

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...