- முனைவர் தமிழ்மொழி -
பெரியாரின் பார்வையில் பெண்ணியம் என்ற தலைப்பின் கீழ் என் வாதத்தை தூதாக அனுப்பு கிறேன். அது தோதாக நுழைவதற்கு உங்களின் செவிக்கதவுகள் சிந்தனை இல்லங்கள் வந்தனை கூறி வரவேற்கும் என உளமார நம்புகிறேன்.
இதோ! ஓர் ஆணாதிக்க சமுதாயத்தின் குரல்:
பெண்களே!
உங்களுக்கு நாம்
ஒன்றுமே தரவில்லையென்று
சொன்னவர் யார்?
உங்களுக்கென்றே நாம்
உரிமையாய் தந்தது
ஒன்றா? இரண்டா?
கற்பை உங்களுக்கென்றே நாம்
உரிமையாக்கவில்லை
என்றேனும் அதில்
பங்கு நாம் கேட்டதுண்டா?
பத்தினி
பதிவிரதை என்ற
பட்டங்களெல்லாம்
உங்களுக்காக தானே
ஒதுக்கி வைத்தோம்
அதற்காக நாங்கள்
போட்டிக்கு வந்ததுண்டா?
தாலியை அணியும்
தகுதி உங்களுக்கு மட்டும்தானே
உண்டு
எங்களுக்கேது!
பூவும் பொட்டும்
உங்களுக்கு மட்டும்தான்
எங்களுக்கில்லை.
இப்படியாக பல்வேறு உரிமைகளை வாரி வழங் கியிருக்கும் ஆணாதிக்க சமுதாயத்தின் கோரப் பிடியிலே சிக்கி, ஆமைகளாய், ஊமைகளாய் அடிமைப்பட்டுக் கிடந்த பெண்ணடிமை விலங் கின் மீது ஆணித்தரமாக வீழ்ந்த முதல் சம்மட்டி அடி தந்தை பெரியாரின் பார்வைதான்.
இடியாக பெரியார்
இறங்காதிருந்திருந்தால்
அடியோடு ஒழிந்திருப்போம்
எங்கள்
அடிச்சுவடும் அழிந்திருக்கும்
தந்தை பெரியாரின் பார்வை என்பது Targetted achievement தன்மையுடையது. அண்ணா அவர்கள் குறிப்பிடுவதுபோல தந்தை பெரியார் சிந்தனை யிலிருந்து விடுபட்ட அம்பு இருக்கிறதே - அது போய் சேரவேண்டிய இடம் வரை சென்று சேர வேண்டிய இடத்தை அடைந்தே தீரும்.
நமது ஆசிரியர் அய்யா குறிப்பிடுவது போல putting centuries in the capsule என்பதான நூற்றாண்டு கால விசயங்களை தன்னுள் அடங்கியது தந்தை பெரியாரின் தொலைநோக்கு பார்வை. எனவே தான் அவரின் கருத்துகள் ஒரு அணுகுண்டை போல் சக்தி வாய்ந்து பிரச்சினையை வேரோடும், வேரடி மண்ணோடும் அசைத்துப் பார்க்கிறது என்பது இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
தந்தை பெரியாரின் பார்வை எத்தகையதெனில் வருணாசிரதர்மம் என்ற விஷக்காய்ச்சலானது பல்கி படர்ந்து இந்த சமுதாயத்தின் சமூகநீதியை சீர்குலைத்த காலகட்டத்திலே எத்தனையோ மனிதர்கள் அதை அழிக்க நினைத்தனர். வருணா சிரம தர்மத்திற்கு முட்டுக் கொடுத்த நமது மகாத்மா அவர்கள் கூட என்று ‘‘This is not the freedom I have like it.’’ நான் விரும்பிய சுதந்திரம் இதுவல்ல என்று சொன்னாரே, அதைத்தொடர்ந்து சில நாட்களிலே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மத சீர்த்திருத்த வாதி இராமலிங்கர் அவர்கள் ஜோதியோடு சங்கமமாக்கப்பட்டார் என்பது வரலாறு.
ஆனால், அந்த விஷக்காய்ச்சலுக்கு சரியான மருந்தாக மனுதர்ம எதிர்ப்பு, கடவுள் மறுப்பு என்கிற ஆன்டிபயாடிக் மருந்தை எதிர் உயிரியை செலுத்தி அதை வேரோடு பிடுங்க பார்த்தவர் நம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
தந்தை பெரியாரின் பெண்ணிய பார்வையானது ஒரு பாசமிகு தகப்பன் தன் அன்பு மகளுக்கு என்னென்ன உரிமைகளை எதிர்பார்க்கிறாரோ அதைவிட பன்மடங்கு எதிர்பார்ப்பை உள்ளடங் கியது.
எந்த மதத்தைச் சேர்ந்தவரும் பெண்கள் விடுதலைக்கு வெளியில் வருபவர்கள் பெண் சம்பந்தமான இந்து மத தர்மத்தையும், சாத் திரத்தையும் புராணத்தையும் ஒதுக்கி வைத்து விட்டுத்தான் வரவேண்டும். அப்படியில்லாமல் மேற்கண்ட அழுக்கு மூட்டைகளை சுமந்து கொண்டு யார் எங்கு போய் பெண்கள் சுதந்திரம் பேசினாலும் அது கட்டுப்பாடு உள்ள அடிமை பிரசாரமாகத்தான் முடியுமே தவிர, சிறிதும் விடுதலையை உண்டாக்காது.
எந்தவொரு இந்து மதத்தைச் சார்ந்தவரும் தன் மனைவியோ, மகளோ அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்று ஒப்புக்கொள்ள முடியுமா?
அல்லது?
நளாயினியை போன்று குஷ்டரோகி புருஷனை கூடையில் அமர்த்தி தாசி வீட்டிற்குத் தூக்கி போக முடியுமா?
தந்தை பெரியார் இந்து கொடுமையை எதிர்த்து கூறுகின்றார். எனது மகளாக நளாயினி இருந்தால் அவளை விஷம் வைத்துக் கொள்வேனே தவிர, கூடையைத் தூக்க அனுமதிக்கமாட்டேன். அந்தள வுக்கு பெண் அடிமையை எதிர்த்தவர் தந்தை பெரியார்.
பெண்களுக்கு உரிமை கொடுக்கலாமா? என்ற கேள்வி வரும்போது தந்தை பெரியார் குறிப் பிடுகிறார். இதைப்பற்றி பேச நமக்கு யோக்கி யதையோ உரிமையோ உண்டா? பெண் அடிமை யல்ல. அவளுக்கு நாம் எஜமானனல்ல என்று எண்ணிக் கொள்ள வேண்டும் என்று ஆணாதிக்க சிந்தனைக்கு மரண அடி கொடுக்கிறார்.
பெண்களுக்கு கல்வி வேண்டும்
குடித்தனம் பேணுதற்கு
பெண்களுக்கு கல்வி வேண்டும்
மக்களை பேணுதற்கே!
கல்வியில்லா பெண்கள் களர்நிலம்
அங்கே புல் விளைந்திடலாம்
நல்ல புதல்வர்கள் விளைவதில்லை
என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கருத்துக் கேற்ப பெண் கல்வி என்பதே பெண்ணடிமைக்கு தீர்வு என்ற பெரியார் அதைக் கொழுந்துவிடச் செய்யவே பலதரப்பட்ட கல்வி நிறுவனங்களை ஊக்குவித்தார்.
இன்றைக்கு ஆல மர விழுதுகளைப் போல கிளை பரப்பும் நமது கல்வி நிறுவனங்கள், அங்கே பட்டதாரிகளை மட்டும் உருவாக்கவில்லை; தன்மானமிக்க பட்டத்து ராணிகளையும் உருவாக்குகிறது.
இன்றைக்கு நானறிந்த மருந்தியல் துறையில் தமிழ்நாட்டில் உள்ள 38 கல்லூரிகளில் மொத்தம் 7 பெண் முதல்வர்கள்தான், அதிலே 6 பேர் நமது பெரியார் மருந்தியல் கல்லூரியை சேர்ந்தவர்கள் என்பதே! தந்தை பெரியாரின் பெண்ணியல் பார்வைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
இது நானறிந்த என் துறை புள்ளி விவரம். இதுபோல 20-க்கும் மேற்பட்ட படிப்புகள் நமது கல்வி நிறுவனத்திலே உள்ளன.
பெண்களுக்கு தலைமைப் பண்பும், தன்மான மும், கம்பீரமும் தந்தை பெரியாரின் தூண்டு கோலால்தான் தூண்டப்படும், துளிர்க்கும் ஓங்கி வளர்ந்து பல்கிப் பெருகும்.
இன்றைக்கு ஜாதி, மத, ஏழை, பணக்காரன் என்ற பேதமற்ற ஒரே விசயம் பெண்ணடிமைத்தனம் தான்.
இன்றைக்குப் பொருளாதார சுதந்திரம் இருப்ப தால்தான் பெண்ணுக்கு ஓரளவுவேணும் மரியாதை கிடைக்கிறது.
இதை தந்தை பெரியார் அவர்கள் அன்றே தீர்க்கதரிசியாக குறிப்பிட்டார்.
தந்தை பெரியார் மிகப்பெரிய நூலகங்களுக்குச் சென்று படித்தவரல்லர்; மக்களை நேரடியாக படித்த இயற்கை மேதை.
விதவைகளுக்கு மறுமணம் என்ற காரியத்தை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் தந்தை பெரியார்.
1929லேயே செங்கல்பட்டு மாநாட்டிலே இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால் பின் மணத்தால் தீதோ
பாடாதா தேனீக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்ததுண்டா?
என்ற புரட்சிக் கவிஞரின் வரிகளுக்கிணங்க, தந்தை பெரியார் அவர்கள் அவரின் சகோதரி மகள் அம்மாயி என்ற 10 வயது சிறுமி தன் பால்ய கணவனை இழந்த போது மிகுந்த எதிர்ப்புகளுக் கிடையே நடத்தி வைத்தார்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் பெண்களின் நகை பித்து ஒழிக்கப்பட வேண்டும் என்று கருதியே பெண்கள் என்ன நகை மாட்டும் ஸ்டேண்டா? என்ற கருத்தை பதிவு செய்தார்.
இறுதியாக என் கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். இன்றைக்கும் நமக்கு முழுமையான பெண் விடுதலை கிட்டவில்லை. நமது முழுமை யான போராட்டங்கள் வீட்டிலும், வெளியேயும் ஒழுக்கமான முறையிலே தொடரவேண்டும். அப்போதுதான் நாம் அந்த வெற்றிக்கனியை சுவைக்க முடியும்.
குட்டையாக தேங்கிவிடக் கூடாது. ஆறு உருவெடுத்து, ஓடையாக சலசலத்து, அருவியாக பரிணமிக்க வேண்டும் என்று கூறி என்னுடைய உரையை முடிக்கின்றேன். வாழ்க தந்தை பெரியார்! வளர்க அவர்தம் கொள்கை!!

(17.9.2011 அன்று சென்னை - பெரியார் திடலில் ஆற்றிய கருத்தரங்க உரை)
No comments:
Post a Comment