Saturday, September 3, 2011

யார் புளுகுவது, தினமணியா? விடுதலையா?


நீடாமங்கலத்தில் நடந்த கொடுமை! யார் புளுகுவது, தினமணியா? விடுதலையா?





இம்மாதம் 18ஆம் தேதி வெளிவந்த தினமணியில் சுயமரி யாதைக்காரர்கள் புளுகு, தென்தஞ்சை மகாநாட்டைப் பற்றிப் புரளி, ஹரி ஜனங்களின் மறுப்பு என்ற தலைப் புகள் கொடுத்து ஒரு செய்தியும், அச் செய்திக்கு மேலே தேவசகாயம், சூஸை, ஆறுமுகம் ஆகிய மூவர்களுடைய படமும் வெளிவந்திருப்ப தைத் தென்னாட்டார் பலர் பார்த்திருப் பார்கள்.

அப்படத்தில் இடதுபக்கம் முதலில் நிற்பவரான தோழர் தேவ சகாயம் சென்னை விவசாய மந்திரி கனம் முனிசாமி பிள்ளைக்கும், மேயர் தோழர் சே. சிவசண்முகம் பிள்ளைக் கும், அனுப்பிய மகஜரின் நகல் ஒன்று நமக்குக் கிடைத்திருக்கிறது. அதில் தோழர் தேவசகாயத்தின் இடது கைப் பெருவிரல் ரேகையும் இருக்கிறது.

கனம் விவசாய மந்திரிக்கும் மேயருக்கும் அனுப்பிய மகஜரில் தோழர் தேவசகாயம் குறிப்பிட்டிருப்ப தாவது:-

தபஸ்ராயன் என்கின்ற தேவசகாயம் நான்தான். தென் தஞ்சை ஜில்லா நீடாமங்கலம் டி. கே. பி. சந்தான ராமஸ்வாமி உடையார் பங்களாவில் 28.12.1937இல் நடந்த 3ஆவது அரசியல் மகாநாட்டிற்குச் சென்றிருந்தேன். மத்தியானம் சுமார் பன்னிரண்டு மணிக்கு எல்லா ஜாதியாரும் சாப்பிடலாம் என்று சொன் னதின் பேரில் நானும் பள்ளப்பரியாரி கதிர்வேல் மகன் ஆறுமுகம், பழைய நீடாமங்கலம் காமாட்சி மகன் ரெத்தினம் நாங்கள் மூவரும் சமபந்தி போஜனத்தில் சாப்பிட்டோம்.

சாப்பிட்டு முடியுமுன் எங்களை எழுந்து வரச்சொல்லி சந்தானராமஸ்வாமி உடையார் ஏஜண்ட் சபாபதி உடையார் பக்கத்தில் கிடந்த சவுக்குக் கட்டையை எடுத்துக் கொண்டு எங்கள் மூவரையும் அடித்தார். எங்களால் அடி பொறுக்க முடியாமல் கத்தினோம். அப்பொழுது போலீஸ்காரர்கள் வந்து எங்களை அடிக்காமல் தடுத்தார்கள். எங்களில் ரெத்தினம் என்பவன் அடி தாங்க மாட்டாமல் வெண்ணாற்றில் விழுந்து அக்கரை ஏறி ஒடினான். மறுநாள் காலையில் வயலில் அறுவடை அறுத்துக் கொண்டு இருந்தோம்.

அனுமந்தபுரம் பண்ணை ஏஜண்டு கிருஷ்ணமூர்த்தி அய்யர் வயல் கரையில் வந்து நின்றுகொண்டு, நேற்றைய தினம் காங்கிரஸ் மகா நாட்டில் நடந்த சமபந்தி போஜனத்தில் சாப்பிட்ட பயல்களைக் கொண்டுவா என்று சொன்னார். உடனே தலையாரி மாணிக்கம் என்பவர் எங்களைக் கூப்பிட்டு சாப்பாட்டுக்கா போனீர்கள் என்று தடிக்கம்பால் அடித்து விளா மரத்துக்குப் போங்கடா என்று தள்ளினார்.

நாங்கள் விளாமரத்துக்குப் போனவுடன் என்னுடைய வேஷ் டியை எடுத்துப்போட்டு என்னை விளா மரத்தோடு கட்டி தடிக்கம்பால் அடித்து நாட்டாமைக்கார அடைக்கலம், சின்ன நாட்டாமை ராமன் இருவரையும் கூப்பிட்டு இந்தப் பயல்களை அவிழ்த் துக் கொண்டு போய் முழுதும் மொட்டை யடித்து வா என்று கிருஷ்ணமூர்த்தி அய்யர் (ஏஜண்ட்) சொல்ல பள்ளப் பரியாரி கதிர்வேல் மகன் ஆறுமுகம் தான் எனக்கு மொட்டை அடித்தான். பிறகு தலையாரி சாணிப்பால் ஊற்றினார்.

பள்ளப்பரியாரி கதிர்வேல் மகன் ஆறுமுகத்துக்கு நாராயணசாமி அய்யர் கார்வாரி கதிர்வேலைக் கூப்பிட்டு, உன் மகன் ஆறுமுகத்திற்கு உச்சியில் கொஞ்சம் மயிர் வைத்து மொட்டை அடி, ஏனென்றால் அவன் கலியாணம் செய்துகொள்ளப் போகும் மாப்பிள்ளை என்று சொன்னார். உடனே கதிர்வேல் தன் மகனுக்கு மொட்டையடித்தான்.

பழைய நீடாமங்கலம் காமாட்சி மகன் ரெத்திரனத்தை வெட்டியானை விட்டுக் கொண்டுவரச் சொன்னார். வெட்டியான் பழைய நீடாமங்கலம் போய் பொன்னுசாமி வீரமுண்டார்  உதவியைக் கொண்டு காமாட்சி மகன் ரெத்தனத்தை அனுமந்தபுரம் கொண்டு வந்தார்கள். அய்யர் அவனுக்கும் மொட்டையடித்து சாணிப் பால் ஊற்றச் சொன்னார். அவர் களையும் அதேபோல் செய்தார்கள்.

15.1.1938இல் 12 மணிக்கெல்லாம் என்னையும் பரியாரி ஆறுமுகத் தையும், சூசையையும், பெரிய நாட்டாமை அடைக்கலம், சின்ன நாட்டாமை ராமன் என் தகப்பன் முக்கட்டை வேளாங்கண்ணி, ஏஜண்ட் கிருஷ்ணமூர்த்தி அய்யர் இவர்கள் நால்வரும் எங்கள் மூவரையும் நீடா மங்கலம் உடையார் பங்களாவுக்குக் கூப்பிட்டுக் கொண்டுவந்து மாட்டுக் கொட்டகையில் சுத்தியிலும் நாட்டா மைக்காரர்கள் உட்கார்ந்துகொண்டு, எங்களையும் உடகார்ந்துகொண்டு இருக்கும்படிச் சொன்னார்கள்.

மாலை சுமார் 5 மணிக்கு பக்கத்தில் இருந்த வாழைக்கொல்லையில் வைத்து எங்களை போட்டோ படம் பிடித்தார்கள். ஏதோ மூன்று கடுதாசி யில் கையெழுத்து வாங்கிக்கொண் டார்கள். பிறகு எங்களுக்கு ரூபாய் 0-14-0 ஏஜண்ட் கிருஷ்ணமூர்த்தி அய்யர் கொடுத்தார். பிறகு மற்றொரு மனுவில் கையெழுத்து வாங்கிக்கொண்டு சந்தானராமஸ்வாமி உடையார் ரூபாய் 1-0-0 கொடுத்தார். யார் கூப்பிட்டாலும் போகவேண்டாம். வீட்டுக்கு நேரே போய்விடுங்கள் என்று சொன்னார்கள்.

நான் கையெழுத்துப் போட மாட்டேன் என்று ஏதாவது சொல்லியிருந்தால் என்னை அடித்துக் கொன்று விடுவார்களோ என்று பயந்து கையெழுத்துப் போட்டேன். எங் களைத் தினந்தோறும் ஏஜண்ட் அய்யர் கூப்பிட்டு பயமுறுத்துகிறார். தான் சொன்னபடி செய்யாவிட்டால் நான் பயிர் செய்து இருக்கும் நிலத்தை அவரே பண்ணையில் அறுத்துவிடு வார்கள் போல் தெரிகிறது.

அவர் தினந்தோறும் சொல்லிக் கொடுப்பது, சமபந்தி போஜனத்தில் சாப்பிட்டது நிஜம், அங்கு ஒருவரும் அடிக்கவுமில்லை, இம்சை செய்யவு மில்லை. பண்ணையிலும் ஒருவித மான இம்சையும் செய்யவுமில்லை என்றுச் சொல்லச் சொல்லிப் பயமுறுத்து கிறார். மேல்கண்ட சமாசாரத்தைத் தங் களுக்குத் தெரிவித்துக் கொண்டேன்.
-குடிஅரசு. 30,1.193

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...