ஜெர்மனியில் போர் துவக்கி நடத்தி வெகுவேகமாக முன்னேறிய ஜெர்மனி சர்வாதிகாரி அடால்ஃப் இட்லர், தான் ஜெர்மானியன் என்பதைவிட ஆரிய இனத்தின் பெருமைமிக்க பிரதிநிதி என்று பிரகடனப்படுத்தியதோடு, ஆரிய இனத்தின் மேன்மைக்குப் பாடுபட்ட அவர்களை உலகின் முதல் நம்பர் குடிமக்களாக்குவதே தமது நாடு பிடிக்கும் நோக்கம் என்று ஆணவத்துடன் பிரகடனப்படுத்தினார். ஜெர்மனியில் சமஸ்கிருதத்தினை கட்டாயப் பாடமாக்கி அரசு ஆணைகள் பிறப்பித்தார் இட்லர். நாசிசத்தின் உயிர்நிலையே அதில்தான் உள்ளதாகப் பிரகடனம் செய்தார் இட்லர்! ஆரிய இனம் கலப்பின்றி பாதுகாக்கப்பட்டாக வேண்டும். ஆகவே, வேறு இனக் கலப்புள்ள திருமணங்கள் நடைபெறவே கூடாது என்ற அவைகளுக்குத் தடை விதித்தார். (அவரது சுவஸ்திக் சின்னம்தான் இன்றைய இனவெறி ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் சின்னம் ஆரிய வர்த்தம், சமஸ்கிருத கலாச்சாரம் இவைதான் ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி இவைகளுடைய லட்சியமும்கூட)
பிரிட்டிஷ் அரசு கல்வி மற்றும் ஜாதி ஒழிந்த பல சீர்த்திருத்தங்கள், சதி என்ற உடன்கட்டை ஏறுதலை ஒழித்தல் போன்றவைகளைச் செய்து ஆரிய (மனு) தத்துவங்களுக்கு விரோதமான வகையில் செயல்பட்டதால், பார்ப்பனர்கள் தேச பக்தி என்ற பெயரால் மனுபக்தி, பார்ப்பன மேலாண்மையை பாதுகாக்கச் செய்தனர்!
ஜப்பான்காரன் பர்மாவைப் பிடித்து கல்கத்தா வரையில் வந்தபோது, சென்னை மயிலாப்பூர், மாம்பலத்தில் உள்ள பார்ப்பனர்கள் அந்த இரண்டு மொழிகளையும் படிக்கவே ஆரம்பித்தனர் என்பது யாருக்குத்தான் தெரியாது? விடுதலை ஆசிரியர் குத்தூசி குருசாமி அவர்களே அரசு ஏடாக அது தொடர்ந்தபோதும் ஆசிரியராகத் தொடர்ந்தார். நமது பட்டுக்கோட்டை சுயமரியாதைத் தளபதி அண்ணன் அழகிரி அவர்கள் எல்லாம் போர்ப் பிரச்சாரகர்களாக (War Propagandists) நியமனம் பெற்றே பணி புரிந்தார்கள்.
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய இட்லர் வெற்றி பெற்று இருந்திருப்பாரே யானால், இந்தியாவுக்கு சுதந்திரம் என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதை நடுநிலை வரலாற்று ஆசிரியர்களேகூட இப்போதும் ஒப்புக் கொள்கிறார்கள்.
தனது கொள்கையான ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து திராவிட சமுதாயத்தை நாட்டைக் காப்பாற்ற இது சிறந்த வழி என்பதை, எதையும் முன்னோடியாக சிந்திக்கும் தந்தை பெரியார் அவர்கள் இப்படிச் சிந்தித்துச் செயல்பட்டார்கள்.
பாமர மக்கள் வழியிலே சென்று சிந்திப்பதைவிட அவர்களுக்கு நல்லது எது? கெட்டது எது? என்று அறிவுறுத்தும் வகையிலேயே அவரது அணுகுமுறைகள் எப்போதும் அமையும் என்பதற்கு இரண்டாம் உலகப் போரில் அவர் பிரிட்டிஷ் அரசுக்கு ஒத்துழைத்ததே சிறந்த எடுத்துக்காட்டாகும். அதுதான் உண்மையான நாட்டு நலத்தில், மக்கள் நலத்தில் அக்கறையுள்ள ஒரு செயல்! விடுதலை ஏன் அரசு ஏடாக ஒரு கால கட்டத்தில் வெளிவந்தது என்பதற்கான மூலகாரணம் இப்போது விளங்குகிறதா?
(திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய விடுதலை போர்ப் பிரச்சார ஏடு ஆனது ஏன்?
- விடுதலை பவள விழா மலர் பக்கம் 84-86)
No comments:
Post a Comment