Wednesday, August 24, 2011

சித்திரை முதல் நாள் மீண்டும் தமிழ்ப் புத்தாண்டா?

இது பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பே!
தமிழர் தலைவர் கண்டனம்!
நாகப்பட்டினம் ஆக. 23- தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்க நாள் என்று தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை மாற்றி, சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று புதுச் சட்டம் கொண்டு வந்துள்ள அ.தி.மு.க. ஆட்சிக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று, நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஏற்கெனவே தி.மு.க. ஆட்சியில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றப்பட்டு இரண்டாண்டு காலமாகிவிட்டது. நடைமுறையிலும் உள்ளது. மறைமலை அடிகள், கா.சு.பிள்ளை, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களால் ஏற்கப்பட்டு வலியுறுத்தப்பட்டதுதான் தை முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டுத் தொடக்கம் என்பதாகும்.
சித்திரை ஒன்று தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு என்பது ஆரிய ஆபாசக் கதையை அடிப்படையாகக் கொண்டது. (நாரதர் என்ற ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்ததாம்!) அதனை மீண்டும் கொண்டுவர சட்டம் இயற்றுவது தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பாகும். இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும்.
- இவ்வாறு செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.

3 comments:

thathachariyar said...

CLICK AND READ

>>> ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா? நாரதருக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்? படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள். <<<


.

Inbachudar Muthuchandran said...

ஜெயலலிதா அம்மையாரின் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத ஒரு புராண வரலாறு.ஜெயலலிதா உண்மையான தமிழச்சியல்ல பார்பனச்சி.ஆகையால் தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு எதிராகவும் பார்பனியத்துக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றார்.இவரது முடநம்பிக்கை புகுத்தலை தட்டிக் கேட்க தமிழக சட்ட சபையில் ஒரு சரியான ஆண்பிள்ளை கிடைக்கவில்லையா?

Inbachudar Muthuchandran said...

ஜெயலலிதா அம்மையாரின் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத ஒரு புராண வரலாறு.ஜெயலலிதா உண்மையான தமிழச்சியல்ல பார்பனச்சி.ஆகையால் தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு எதிராகவும் பார்பனியத்துக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றார்.இவரது முடநம்பிக்கை புகுத்தலை தட்டிக் கேட்க தமிழக சட்ட சபையில் ஒரு சரியான ஆண்பிள்ளை கிடைக்கவில்லையா?

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...