Thursday, January 23, 2020

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உச்சநீதிமன்றம் கேள்வி

 பேரறிவாளன் விடு தலை விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆளுநர் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.
முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி படுகொலையில், சிபிஅய் சிறப்பு விசாரணைக்குழு நடத்திய விசாரணையில், குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட பேரறிவா ளன் உட்பட 7 பேர் தற்போது தண்டனை அனுபவித்து வருகின்ற னர். இந்த படுகொலைக்குப் பின் னால் உள்ள சதித்திட்டம் குறித்து விரிவாக விசா ரிப்பதற்காக ஜெயின் கமிஷன் அமைக் கப்பட்டது. இந்த படுகொலையில், வெளிநாட்டுச் சதி இருப்பதை மறுக்க முடியாது என்று கூறிய ஜெயின் கமிஷன், இது குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்று தனது இறுதி அறிக்கையில் அரசுக்கு பரிந்துரை செய்தது.
ஜெயின் கமிஷனின் அறிக்கை யின் அடிப்படையில், ராஜூவ் படு கொலையில் இன்றளவும் மர்மமாக உள்ள விஷயங்கள் குறித்து விசா ரிப்பதற்காக 1999ஆம் ஆண்டு, சிபிஅய் தலைமை யில் எம்டிஎம்ஏ என்ற விசாரணை அமைப்பு உரு வாக்கப்பட்டது. இந்தப் படு கொலையில் பயன்படுத்தப் பட்ட வெடி குண்டை யார் உருவாக் கியது? அது எங்கிருந்து வந்தது? என் பது உட்பட, மிக முக்கியமான விஷயங்கள் குறித்து 20 ஆண்டு களுக்கு மேலாக எம்டிஎம்ஏ விசா ரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், எம்எடிஎம்ஏவின் விசாரணையை உச்சநீதிமன்றம் கண் காணிக்க வேண்டும் என பேரறிவாளன் கடந்த 2016ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பெல்ட் வெடி குண்டுக்கு பேட்டரி வாங்கித் தந்த தாக தன் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ள நிலையில், பெல்ட் வெடி குண்டு எங்கிருந்து வந்தது என் பதே இதுவரை கண்டுபிடிக்கப்படா ததை அவர் சுட்டிக்காட்டியிருந் தார். எனவே, எம்டிஎம்ஏ விசா ரணை முடியும் வரை தனக்கு வழங்கப்பட்ட தண்டணையை நிறுத்தி வைக்கும்படி மனுவில் பேரறிவாளன் கோரியிருந் தார்.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, சிபிஅய் தரப்பில் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாததை சுட் டிக் காட்டிய நீதிபதிகள் அதற்கு கடும் கண்டனமும் தெரிவித்தனர்.
ஆகவே, முழுமையான விசா ரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்த னர். வழக்கு நேற்று மீண்டும் விசார ணைக்கு வந்தபோது, சிபிஅய் தரப் பில் மற்றொரு விசாரணை அறிக் கைத் தாக்கல் செய்யப்பட்டது.  அதை படித்துப் பார்த்த நீதிபதி நாகேஷ்வ ரராவ் தலைமையிலான அமர்வு, இந்த அறிக்கையில் புதிதாக ஒன் றும் இல்லை என்றும் தொடர்ச்சி யாக ஒரே மாதிரியான அறிக்கையை சிபி அய்  தாக்கல் செய்து வருவதா கவும் கண்டனம் தெரிவித்தது.இதைத் தொடர்ந்து பேரறிவாளன் தரப்பு வழக்குரைஞரிடம், உங்க ளுக்கு என்ன நிவாரணம் வேண்டும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப் பினர்.
பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச் சரவை முடிவெடுத்து, அது தமிழக ஆளுநரிடம் அனுப்பப்பட்டதை பேரறிவாளன் வழக்குரைஞர் சுட் டிக்காட்டினார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆளுநர் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய பேரறிவாளனின் வழக் குரைஞர், அந்த பரிந்துரைமீது ஆளு நர் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றார்.  அப் போது குறுக்கிட்ட சிபிஅய் தரப்பு வழக்குரைஞர், ஆளுநருக்கு நீதிமன் றம் உத்தரவிட முடியாது என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என் னென்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.  இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப் பட்டது.

மத்திய அரசுக்கு முடிவெடுக்கும் திறன் இல்லை மத்திய அமைச்சரே ஒப்புதல்

மத்திய அரசிடம் வளர்ச்சித் திட்டங்களுக்கான போதிய நிதி இருந்தாலும், முடிவுகள் எடுக்கும் திறன் அதற்கு போதாது என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசிய தாவது: நான் கடந்த அய்ந்து ஆண்டுகளில் ரூ.17 லட்சம் கோடிக்கான வேலைகளுக்கு உத்தரவு வழங்கியுள்ளேன். இந்த ஆண்டில் ரூ.5 லட்சம் கோடிக்கான வேலைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். மத்திய அரசிடம் பணத்துக்கு பற்றாக்குறை கிடையாது. ஆனால் முடிவு களை எடுக்கும் திறன்தான் குறைவாக இருக்கிறது. அதனால் திட்டங் களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.

டாஸ்மாக் கடைகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகள் முடிவெடுக்க சட்டம் கொண்டு வரப்படுமா?: உயர்நீதிமன்றம் கேள்வி

டாஸ்மாக் கடைகளுக்கான இடம் தேர்வு செய்வது குறித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால், அதை செயல்படுத்த ஏன் சட்ட திருத்தம் கொண்டுவரக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டாஸ்மாக் கடை இடமாற்றம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத் திற்கு மாற்றப்பட்டது.  இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் கார்த்திகேயன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய முழு அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு:
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் கடைகளுக்கான இடம் தேர்வு மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு இந்த விவகாரத்தில் அதிகாரம் வழங்குவது குறித்து எந்த துறை ரீதியான கலந்தாலோச னையும் நடத்தப்படவில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மதுக்கடைகளுக்கான இடம் தேர்வு, அவற்றை நிராகரிப்பது குறித்து பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் முடிவெடுக்கும் வகையில் ஏதாவது சட்டம் கொண்டுவரப்படுமா?
பெரிய அளவில் மக்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய மதுக் கடைகள் திறக்கும் அரசு, மதுக்கடைகளால் மக்களின் மதிப்புள்ள வாழ்வு சீரழிகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழக அரசு மதுவிற்பனையை ஒரு பணியாக செய்து வருகிறது. மக்கள் நலன்சார்ந்த ஒரு மாதிரி அரசாக இருக்க வேண்டும். மக்களின் சுகாதாரம், சமூக நலன் ஆகியவற்றில் மாநில அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். இதில் உள்ளாட்சிகளின் நிலையை முக்கியமாக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
எந்த இடத்தில் மதுக்கடைகளை திறப்பது, தனி மனிதர்கள் எந்த இடங்களில் மது அருந்த அனுமதிப்பது என்பது குறித்து அரசு ஆழ்ந்து எச்சரிக்கையுடன் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும். எங்கெல் லாம் மதுக்கடைகளை திறக்க வேண்டும், எங்கெல்லாம் மது அருந்த அனுமதி அளிக்க வேண்டும் என்பது குறித்து அரசு உரிய வழிகாட்டு தல்களை கொண்டு வரவேண்டும். இந்த வழக்கு பிப்ரவரி 20ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அதற்கு முன்பு தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து சரியான முடிவை எடுப்பார் என்று இந்த நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது.
முன்னதாக வழக்கு விசாரணையின்போது, மது விவகாரம் மிகவும் முக்கியமான பிரச்சினை. இது தமிழகத்திற்கு மட்டுமான பிரச்சினையல்ல, ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சினை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட வழக்குரைஞர் கே.பாலு, ‘‘ஏற்கெனவே தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கடைகளை குறைப்பதாக தெரிவித்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்ப தில்லை. குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் இலக்கு வைத்து விற்பனை செய்கின்றனர்’’ என்றார்.  இதைக்கேட்ட நீதிபதிகள், டாஸ்மாக் கடை தங்கள் பகுதிக்கு வேண்டாம் என்று கிராம பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றினால் அதை செயல்படுத்துவது தொடர்பாக சட்டம் கொண்டு வருவது பற்றியும், அதேபோல் பொது இடங்களில் மது குடிப்பதை தடுப்பது தொடர்பாக சட்டம் கொண்டு வருவது பற்றியும் அரசு முடிவு எடுத்து அதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

வேலையின்மை என்னும் எரிமலை

2018 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளிலும் சராசரியாக வேலையில்லாத 35 பேர் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் 36 பேர் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது, இரண்டு பிரிவிலும் சேர்ந்து 2018ஆம் ஆண்டில் 26,085 தற்கொலை மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
நாட்டில் வேலையின்மை பெரும் பிரச்சினையாக உள்ளது. அத்துடன் சரியான தொழில் செய்து முன்னேறுவதற்கான வாய்ப்புகளும் குறைந்து கொண்டே வருகின்றன. இதனால் கடன் ஏற்பட்டோ அல்லது விரக்தி அடைந்தோ பலர் தற்கொலையை நாடுகிறார்கள். இவை அண்மைக்காலமாக மிகவும் அதிகமாகி வருகின்றன. தேசிய குற்ற ஆவண காப்பகம் நாடு முழுவதுக் குமான தற்கொலை தொடர்பான 2018ஆம் ஆண்டுக்கான தரவுகளை வெளியிட்டுள்ளது.  2018ஆம் ஆண்டில் வேலை யில்லாதவர்கள் 12,936 பேர் தற்கொலை செய்திருக் கிறார்கள். சுயதொழில் செய்பவர்கள் 13,149 பேர் தற்கொலை செய் திருக்கிறார்கள். இது வேலையில்லாதவர்களைவிட கொஞ்சம் அதிகம் ஆகும். அதே நேரத்தில் இரு பிரிவுகளிலும் விவசாயத் துறையில் பணிபுரிபவர்களின் தற்கொலை புள்ளிவிவரங்கள் 10,349 ஆக உள்ளது.  ஒட்டு மொத்தமாக, 2018 ஆம் ஆண்டில் நாட்டில் 1,34,516 தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
இது 2017 உடன் ஒப்பிடும்போது 3.6 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்கொலைகளின் விகித அதிகரிப்பால் 2017 அய் விட 2018 ஆம் ஆண்டில் 0.3 சதவீதம் மரணங்கள் அதிகரித்துள்ளன என்றும் தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறியுள்ளது.  என்சிஆர்பி வெளியிட்ட அறிக்கையில், தற்கொலை செய்து கொண்ட பெண்களில் 54.1 சதவீதம் பேர் இல்லத்தரசிகள் (42,391 பேரில் 22,937) ஆவர். 2018 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களில் கிட்டத்தட்ட 17.1 சதவீதம் பேர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொண்டவர்களில் 1.3 சதவீதம் (1,707) அரசு ஊழியர்கள், தனியார் துறை நிறுவனங்களிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் 6.1 சதவீதம் (8,246). பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களில் தற்கொலை செய்தவர்கள் மொத்தம் 1.5 சதவீதம் (2,022) பேர். அதேசமயம், மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற பாதிக்கப்பட்டவர்கள் மொத்த தற்கொலைகள் முறையே  7.6 சதவீதம் (10,159) மற்றும் 9.6 சதவீதம் (12,936) என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறியுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர்களில் 9.8 சதவிகிதத்தினர் (13,149) சுயதொழில் செய்யும் பிரிவினர் என்று அது மேலும் கூறியுள்ளது. என்.சி.ஆர்.பி.யின் கூற்றுப்படி, விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள 10,349 பேர் (5,763 விவசாயிகள் மற்றும் 4,586 விவசாயத் தொழிலாளர்கள்)  2018 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டனர். மொத்த தற்கொலை செய்தவர்களில் 7.7 சதவீதம் பேர் ஆவர். 2018 ஆம் ஆண்டில் 5,763 விவசாயிகளின் தற்கொலைகளில் 5,457 ஆண்கள் மற்றும் 306 பெண்கள். 2018 ஆம் ஆண்டில் விவசாயத் தொழிலாளர்கள் செய்த 4,586 தற்கொலைகளில் 4,071 ஆண்கள் மற்றும் 515 பெண்கள் என அறிக்கை தெரிவிக்கிறது.
ஒட்டு மொத்தமாக, மகாராட்டிராவில் 17,972 தற்கொலைகள் பதிவாகியுள்ளன, அதன்பின்னர் தமிழகத்தில் 13,896, மேற்கு வங்கத்தில் 13,255, மத்தியப் பிரதேசத்தில் 11,775 மற்றும் கருநாடகாவில் 11,561 தற்கொலைகள் பதிவாகியுள்ளன, இந்த அய்ந்து மாநிலங்களும் சேர்ந்து நாட்டில் பதிவான மொத்த தற்கொலைகளில் இது 50.9 சதவீதம் ஆகும்.  பொருளாதார ஆலோசகர்களின் எச்சரிக்கையையும் மீறி மத்திய அரசு தான்தோன்றித்தனமாக பண மதிப்பிழப்பைக் கொண்டு வந்தது, அந்த பாதிப்பில் இருந்து மீளும் முன்பே ஜிஎஸ்டி அமல்படுத்தியது, அதன் பிறகு பெரும் நிறுவனங்களின் கடன் தொகையைத் தள்ளுபடி செய்தது என்று மனம்போன போக்கில் செயல்பட்டுக் கொண்டு இருந்தனர். இதனால் மோடியின் தலைமையில் இரண்டாம் முறை ஆட்சி அமைந்த பிறகு ஒட்டுமொத்த பொருளாதார நகர்வும் பின்னோக்கி வேகமாக சரியத் தொடங்கியுள்ளது. இதில் வேலை இழப்பு அதிகம் ஏற்பட்டு தற்கொலை தொடர்கிறது, முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், உலக வர்த்தக அமைப்புகள் அனைத்தும் எச்சரிக்கை விடுத்தும் பொருளாதர முன்னேற்றம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இந்தியாவில் பொருளாதார காரணத்தினால் ஏற்படும் தற்கொலைகள் அதிகம் நிகழ்கின்றன. இந்தியாவில் பொருளாதாரம் தொடர்பான தற்கொலைகள் என்பது தனிப்பட்ட சில இழப்புகளால் ஏற்படுவதுதான், ஆனால் நாடு முழுவதும் ஒட்டுமொத்த பொருளாதார தற்கொலைகள் ஏற்படுவது சுதந்திரத்திற்குப் பிறகு இப்போதுதான் ஏற்படுகிறது.
ஆண்டுக்கு இரு கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பை வாரி வழங்குவதாக வாய்ச் சவடால் பேசுபவர்கள் இதற்கு நாணயமாகப் பதில் சொல்ல வேண்டும்.
வானொலி 'மன்கிபாத்' பேச்சுகள் எல்லாம் அசல் ஏமாற்று வேலையே! மக்கள் உரிமை என்னும் எரிமலை வெடிக்காது என்று யாரும் கனவு காண வேண்டாம்.

Tuesday, January 21, 2020

தொழிலாளர்கள் வேலையில்லாமல் அவதி

கஜா புயலால் சேதமான அரசு கூட்டுறவு

கயிறு தொழிற்சாலை மூடிக்கிடக்கும் அவலம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, அரசு கூட்டுறவு கயிறு தொழிற் சாலை கடந்த ஓராண்டுக்கும் மேல் மூடிக் கிடக்கிறது. இதனால் நூற் றுக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். இதனை உடனடி யாக சீரமைத்து மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி அருகே உள்ளகுருவிக் கரம்பை கிராமத்தில், அரசுக்கு சொந்தமான கயிறு மற்றும் கயிறு உற்பத்தி கூட்டுறவு சங்கம் உள்ளது. இதில் கயிறு மற்றும் அதனைச் சார்ந்த உபதொழில்களில் நேரடி யாக 50 பேரும், மறைமுகமாக 50 பேரும் வேலை செய்து வந்தனர்.  கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி வீசிய கஜா புயலில் குருவிக்கரம்பை கயிறு உற் பத்தி கூட்டுறவு சங்கத்தின், மேற் கூரை மற்றும் கட்டடம் சேதம டைந்தது. மின் இணைப்பும் பாதிக் கப்பட்டது. அதன் பிறகு கடந்த 14 மாத காலமாக செயல்படாமல் உள்ளது.
மேற்கூரை சேதமடைந்த நிலை யில் ரூ.30 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், தளவாடப் பொருட் கள் மழையிலும், வெயிலிலும், கிடந்து வீணாகிவருகிறது. மேலும் தொழிற்சாலை கதவுகள் உடைந்து கிடப்பதால் இயந்திரங்கள், தள வாடப் பொருட்களுக்கு பாது காப்பு இல்லாத நிலை உள்ளது.
கூட்டுறவு சங்கத்தின் தலைவர், முன்னாள் மாநில கயிறு வாரியத் தலைவர் நாடாகாடு எஸ்.நீலகண் டன் கூறியதாவது:
“இதுகுறித்து மாவட்ட தொழில் மய்யத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரி கள் வந்து பார்வையிட்டு, ரூ.5 லட்சம் செலவாகும் என திட்ட அறிக்கை தயார் செய்து சென்று உள்ளனர். ஊரக தொழிற்துறை அலுவலர்களுக்கும் தகவல் அளித் துள்ளோம். விரைவில் பணிகள் தொடங்கும் என காத்திருக்கிறோம். தொழிலாளர்கள் வேலை இல்லா மல் உள்ளது கவலையளிக்கிறது” என்றார்.
இதுகுறித்து மாவட்ட ஆட் சியர், உடனடியாக நடவடிக்கை எடுத்து கூட்டுறவு கயிறு தொழிற் சாலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


வங்கி ஊழியர்கள் 5 நாள் வேலை நிறுத்தப் போராட்டம்


பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி, யு.எப்.பி.யு., எனப்படும் வங்கி யூனியன்களின் கூட்டமைப்பு, வரும் ஜனவரி 31 மற் றும் பிப்., 1ஆம் தேதிகளில் வேலை நிறுத்தத் தில் ஈடுபட உள்ளது. அதைத் தொடர்ந்து, மார்ச், 11 முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தமும் அறி விக்கப்பட்டுள்ளது.
இமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில்,அமைப்பாளர் சஞ்சிவ் குமார் பண்ட்லிஷ் கூறியதாவது:'
ஊதிய விகிதத்தை திருத்தி அமைக்க வேண்டும். அடிப்படை ஊதியத்துடன், சிறப்பு படிகளை இணைக்க வேண்டும்.'புதிய ஓய்வூ திய திட்டத்தை ரத்து செய்ய வேண் டும்' என, பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மூன்று கட்டமாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். முதல் கட்டமாக, வரும் ஜனவரி 31 மற்றும் பிப்., 1ஆம் தேதிகளில், வேலை நிறுத்த போராட்டம் நடக்கும்.
இதன்பின், மார்ச், 11ஆம் தேதி முதல், தொடர்ந்து மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.இதன் பிறகும் எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், ஏப்ரல் 1ஆம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வும், முடிவு செய்துள்ளோம்.
இதுபற்றி, இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவர், நிதிசேவைகள் துறை செயலர், மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின், தொழிலாளர் நல தலைமை ஆணையர் ஆகியோ ருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இந்த கூட்டமைப்பில், ஒன்பது வங்கி யூனியன்கள் இணைந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

மகாராட்டிராவில் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாயம்: உத்தவ் தாக்கரே அரசு முடிவு


மகாராட்டிராவில் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழியை கட்டாயமாக்க உத்தவ் தாக்கரே அரசு முடிவு செய்திருக்கி றது.
மகாராட்டிராவில் பதவியில் அமர்ந்த நாள் முதல் பல முக்கிய மான திட்டங்களை அறிவித்து வருகிறார் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே. தற்போது மேலும் முக் கிய நடவடிக்கையை தொடங்கி இருக்கிறார்.
மகாராட்டிராவில் அனைத்து பள்ளிகளிலும், மராத்தியை கட் டாயம் ஆக்குவதற்கான சட் டத்தை கொண்டுவர உள்ளார். சிபிஎஸ்இ மற்றும் அய்சிஎஸ்இ போன்ற மாநில சாரா வாரியங் களில் மராத்தியை கட்டாய மொழியாக மாற்றும் திட்டத்தை முன்வைக்குமாறு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
இதுபற்றி அதிகாரிகள் கூறி இருப்பதாவது: மராத்தியை கட்டாய மொழியாக மாற்றும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் பல பள்ளிகள் இந்த உத்தரவை பின்பற்றவில்லை.
ஆனால் மராத்தி மொழியை கட்டாய பாடமாக மாற்ற எந்த விதியும் நடைமுறையில் இல்லை. மத்திய வாரியங்களின் கீழ் உள்ள பள்ளிகள் எங்கள் வழிகாட்டுதல் களைப் பின்பற்றாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இணை அமைச் சர் விஸ்வஜித் கடம் கூறியிருப்ப தாவது: அனைத்து வாரியங்களி லும் மராத்தியை கட்டாயமாக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
நீங்கள் மகாராட்டிராவில் தங்கியிருந்தால், நீங்கள் மராத்தி பேச வேண்டும், எழுத வேண்டும். அனைத்து பள்ளிகளும் மாநில உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என்பதை நாங்கள் உறுதி செய் வோம். அவர்கள் அவ்வாறு செய்ய தவறினால், அத்தகைய பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை போன்று, மகாராட்டிரா அரசும் ஆரம்ப பள்ளிகளில் மராத்தியை கட்டாயமாக்கும் ஆக்குவதற்கான சட்டத்தை நிறைவேற்ற விரும்பு கிறது. உத்தவ் தாக்கரே அரசு இந்த நடவடிக்கையை எடுத்தால், மராத் தியர்களின் வாக்கு வங்கியை அதி கரிக்க முடியும் என்று நம்புகிறது.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...