Thursday, November 26, 2015

அறிவுக்கு சுதந்திரம் கொடுக்கும் இயக்கம் திராவிட இயக்கம் உசிலம்பட்டி வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் எழுச்சியுரை



அறிவுக்கு சுதந்திரம் கொடுக்கும் இயக்கம் திராவிட இயக்கம்
உசிலம்பட்டி வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் எழுச்சியுரை
உசிலம்பட்டி, நவ. 26- உசிலம்பட்டி பேரையூர் சாலையில் 25.11.2015 அன்று மாலை 4 மணி முதல் உசிலம்பட்டி கழக மாவட்டக் கழகத்தின் சார்பில் தெருமுனை பகுத்தறிவுப் பரப்புரை பயண நிறைவு விழா, திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
அனைவரையும் வரவேற்று பேசினார் மாவட்ட ப.க. தலைவர் அ.மன்னர்மன்னன், மாவட்டச் செயலாளர் ரோ.கணேசன், மாவட்ட அமைப்பாளர் சு.தனபாலன், மாவட்ட துணைத் தலைவர் அழ.சிங்கராசன், மாவட்ட துணை செயலாளர் ப.முத்துக்கருப்பன், ஒன்றியச் செயலாளர் கா.பெரியசாமி ஆகியோர் முன்னிலை ஏற்றார்கள்.
நிகழ்ச்சி தொடக்கத்தில் உரையாற்றியவர் மாவட்டத் தலைவர் கா.சிவா, கழக சொற்பொழிவாளர் அ.வேங்கைமாறன் தொடர்ந்து திண்டுக்கல் ஈட்டி கணேசன் மந்திரமா! தந்திரமா! பகுத்தறிவு நிகழ்ச்சி நடத்தி காட்டினார்.
அதனைத் தொடர்ந்து தலைமை கழக சொற்பொழிவாளர் முனைவர் அதிரடி க.அன் பழகன், கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, மதுரை மண்டலச் செயலாளர் மா.பவுன்ராசா உரைக்கு பின்பு மாநாடு எழுச்சியுரையாற்றினார் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அவர் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:
தமிழர் தலைவர் சிறப்புரை
நடைபெறக்கூடிய 369ஆவது வட்டார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கே மண்டல செயலாளர் பவுன்ராசா பேசும்போது சொன்னார் இந்த உசிலம்பட்டி நகருக்கு நான் வருவது 9ஆவது முறை என்று.
எங்களின்  நோக்கம் மக்கள்  மத்தியில் பகுத்தறிவு கருத்துகளை பரப்பும் நோக்கோடு நூல்களை விற்றும் வருகிறோம் என்றால் ஏதோ வியாபார நோக்கோடு அல்ல.நாங்கள் சொல்வதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.
இந்த இயக்கம் அறிவுக்கு சுதந்திரம் கொடுக்கும் இயக்கம். இனிப்பை விட கசப்பை தருகிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஜாதீய,மூடநம்பிக்கை  சிந்தனைகளும் புரையோடிப் போயிருக்கும் சமூகத் திற்கு இதுதான் மாமருந்தாகும். அந்த கருத்துகள் அறி வுக்கு முட்டுக்கட்டை போடுகின்றன.
இங்கே பவுன்ராசா பேசும்போது மிகவும் வேதனை யுடன் சொன்னார். இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பி.ஜே.பி.யில் இருக்கலாமா என்று? குற்றப்பரம்பரை என்று நம்மை தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வைத்த நிலை இருந்ததை யாரும் மறுக்க முடியுமா?அவர்கள் மீது எங்களுக்கு தனிப்பட்ட முறையில் கோபம் எதுவும் இல்லை . வருத்தமிருக் கிறது.
சுயமரியாதை இயக்கம், நீதி கட்சி, திராவிட இயக்கம் இவைகளெல்லாம் இல்லையென்றால் நமது மக்கள் தோளில் துண்டு அணிய,முழங்காலுக்கு கீழே வேட்டி  கட்ட முடிந்திருக்குமா?
1917 ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் முன்னோடி டாக்டர் டி.எம்.நாயர் ஸ்பர்டாங் சாலையில் பேசிய உரையில் மிகத் தெளிவாக அசல் மனுதருமத்தில் உள்ள ஆதாரங்களைக் காட்டி நமது மக்கள் எவ்வாறெல்லாம் இழிவு படுத்தப்பட்டனர் என்று பேசியிருக்கிறார்.
இன்றைக்கு  சுயமரியாதை என்ற சொல் இருக்கிறதே தமிழகத்தை  கடந்து பீகாருக்கு சென்றுள்ளது. அங்கே வெற்றி பெற்றுள்ள லாலு, நிதீஷ், சோனியா காந்தி போன்றவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா? இது சுயமரியாதை கூட்டணி, வெற்றி பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்கள் என்றால் தந்தை பெரியார் உருவாக்கிய அந்த சொல் உசிலம்பட்டியில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பரவக்கூடிய நிலை தான் உள்ளது.
இங்கே சிலர் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிறார் களே! டாஸ்மாக்கால் வீழ்ந்திருப்பானே ஒழிய திராவிடத்தால் எழுந்தோம் என்பதுதான் உண்மை! ஒரு செய்தியை சொன்னால் தெரியும், உச்சநீதிமன்றத் தின் நீதிபதியாக பணியாற்றிய ஜஸ்டிஸ் ரத்தினவேல் பாண்டியன் 9 நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வு ஒரு முறை கூடிய போது உடன் இருந்த சக நீதிபதிகளிடம் சொன்னாராம்!
எங்களை குற்றப்பரம்பரை என்று ஒதுக்கி வைத்தது ஒரு காலம், இன்று நான் நீதிபதியாக அமர்ந்து கையெழுத்து போட்டு தீர்ப்பு சொல்லும் காலம் வந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் திராவிட இயக்கம் என்று சொன்னாராம்.
எப்படி இந்த மாறுதல் வந்தது? சரஸ்வதி பூஜை, கொண்டாடுவதாலா? கார்த்திகை தீபம் ஏற்றுவதாலா? அறியாமை எனும் இருள் அகற்றி வெளிச்சத்தை உண்டாக்கிய இயக்கம் திராவிட இயக்கம் - உண்டாக் கிய தலைவர் தந்தை  பெரியார்.
எங்களுடைய பணி என்பது பெண்ணடிமை, ஜாதி, மூடநம்பிக்கைகள் இவற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவதுதான். இவ்வளவு நாகரிகம் வளர்ந்த பின்னும் நரபலிகள் நடக்கலாமா? இந்த செய்தி வெளிவருவது மதுரை மாவட்டத்திற்கு அழகா? சமூகத்தில் பெரிய அளவிற்கு மாற்றம் வந்துள்ளது, உடல் உறுப்பு தானம், இரத்ததானம் என்று!
விபத்து ஒன்றில் அடிபட்ட அய்யங்கார் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது ஆதி திராவிடர் ஒருவரின் இரத்தம் தான் இருக்கிறது அவர்களை பார்த்தால் தீட்டு என்று சொல்வீர்களே ஏற்றலாமா என்று கேட்டால் வேண்டாம் என்று சொல்லிவிடுவாரா?
அட நீங்க ஒண்ணுங்க நான் பெரியார் கட்சியில் சேர்ந்து பல வருசமாச்சுங்க என்று சொல்வாரு! அங்கே ஜாதி ஒழிக்கப்படுகிறது.மனிதம் போற்றப்படுகிறது. இது போன்ற கருத்துகள்தானே சிந்தனைகள் வளர்த்தெடுக்கத்தான் நாடு முழுவது இந்த பகுத்தறிவு பரப்புரையை நாங்கள் செய்து வருகிறோம். இவ்வாறு பேசினார்.
பாராட்டு
தமிழர் தலைவர் அவர்களுக்கு சால்வை மற்றும் கழக ஏடுகளுக்கு சந்தா வழங்கியவர்கள் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க. ஆசையன், தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் அன்புமாறன், தி.மு.க. நகரச் செயலாளர் தங்கமலை பாண்டியன், தி.மு.க. ஒன்றியச் செயலாளர் சுதந்திரம் உள்ளிட்டவர்கள்.
பங்கேற்றோர்:
கழகப் பொதுச் செயலாளர் இரா.செயக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன் ராசா, அமைப்புச் செயலாளர் வே.செல்வம், மதுரை மண்டலத் தலைவர் எஸ்.முனியசாமி, நீதிபதி (பணி நிறைவு) பொ.நடராசன், மதுரை பழக்கடை அ.முருகானந்தம், மாநகர் மாவட்டச் செயலாளர் மீ.அழகர்சாமி, மேலூர் கழக மாவட்டத் தலைவர் எரிமலை, செயலாளர் மோதிலால், மாவட்ட இளைஞரணி தலைவர் பிரபாகரன், ச.செயப்பிரகாஷ், பு.கணேசன் மாவட்ட மகளிரணி பாக்கியலெட்சுமி, வழக்குரைஞர்கள் தமிழ்மணி, தியாகராஜன், து.சந்திரன், ஆசிரியர் சுந்தரராசன்,
தனராசு, விருதுநகர் மாவட்டத் தலைவர் ஆதவன், நெல்லை மண்டல இளைஞரணி வெற்றிவேந்தன், திண்டுக்கல் மண்டல தலைவர் இரா.வீரபாண்டி, செயலாளர் ச.இரகுநாகநாதன், மதுரை மாநகர், உசிலம்பட்டி, மேலூர் கழக மாவட்டங் கள், தேனி திண்டுக்கல், விருதுநகர் மற்றும் பல்வேறு மாவட்டங்கள் கார், வேன்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கழக தோழர்கள் பங்கேற்றனர். உசிலம்பட்டி ஒன்றிய தலைவர் காசி மாயன் நன்றி கூறினார்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

நீதிக்கட்சி முதலாளிகளுக்கானதா?



நீதிக்கட்சியா - அது மிட்டா மிராசுதார், ஜமீன்தார்கள், முதலாளிகளின் கட்சி, உயர்ஜாதிக் கட்சி என்று சகட்டு மேனிக்குக் குற்றப் பத்திரிகை படிப்போர் உண்டு.
பார்ப்பனர்களின் ஏகபோகத்தில் இருந்து வந்த கல்வி, வேலை வாய்ப்புகளில் கை வைத்ததாலும், குறிப்பாகக் கல்வியில் தாழ்த்தப்பட்டோருக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புக் கொடுத்ததாலும், தீண்டாமை அடிப்படையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பார்ப்பனீய வருணதரும அமைப்பின் வேரில் திராவகத்தை ஊற்றியதாலும், பொதுக் கிணறு, பொதுக் குளம், பொது வீதிகளில் தாழ்த்தப்பட்டோர் புழங்க இருந்த தடை நீக்கப்பட்டதாலும், தடை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்று நீதிக்கட்சி சட்ட ரீதியாகப் பல ஏற்பாடுகளைச் செய்ததாலும் நீதிக்கட்சியின்மீது எதையாவது தூக்கிப் போட்டு பழி சுமத்தவேண்டும் என்ற வெறியில் கிளப்பி விடப்பட்ட உண்மைக்கு மாறான அழிபழி இது என்பதுதான் உண்மை.
நீதிக்கட்சியில்  நிலச் சுவன்தாரர்கள், மிட்டா மிராசுதாரர்கள் இருந்தார்கள் என்பதெல்லாம் உண்மைதான்; ஆனால், அவர்கள் யாருக்காகப் பாடுபட்டார்கள்? அவர்கள் நடத்திய மாநாட்டின் தீர்மானங்கள் என்ன? ஆட்சியில் நிறைவேற்றிய சட்டங்கள் என்ன? திட்டங்கள் என்ன? என்பதை அறிவு நாணயத்தோடு திறந்த கண்களோடு எடை போட்டுப் பார்க்கவேண்டாமா?
நீதிக்கட்சித் தலைவர்கள் பொதுவாழ்வில் தங்கள் சொத்துக்களை இழந்தவர்கள் ஆயிற்றே!
அவர்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இனாம்தாரர் ஒழிப்புச் சட்டம், லேவாதேவி சட்டம், கோவில் சொத்துக்களை தேவஸ்தான நிதிகளை பொதுநலப் பணிகளுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்கிற சட்டங்கள் எவற்றை அடிப் படையாகக் கொண்டவை? தொழிலாளர்கள் நலன்களுக் காகவே நான்கு சட்டங்கள் இயற்றப்பட்டன. தொழிலாளிகளின் வேலை நேரம், அவர்களுக்கு ஓய்வு, பெண் தொழிலாளர்களின் குழந்தைகளைக் கவனிப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டனவே! பணியின்போது ஊனமடைந்த தொழிலாளர்களுக்கு உதவி நிதி தருவதுபற்றி 1923 ஆம் ஆண்டில் ஆணை பிறப்பிக்கப்பட்டது. தொழிலாளர்களுக் கான தொழிற்சங்கம் அமைப்பதற்கான சட்டம் 1926 இல் நீதிக்கட்சி ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டது.
நிலமற்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. நீதிக்கட்சியின் முதலமைச்சரவை (1920-1923)யின் சாதனைப் பட்டியல் ஒரு தனி ஆணையின் (எண்.116) வாயிலாகவே வெளிப்படுத்தப்பட்டது.
பொதுத் துறையில் தாழ்த்தப்பட்டோர் உள்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள். தாழ்த்தப்பட்ட பிரிவினருக்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள், தாழ்த்தப்பட் டோருக்கு வீட்டுமனைக் குடியிருப்புகளும் அமைத்துத் தரப்பட்டன. அவர்களின் குழந்தைகளுக்குக் கல்விக் கூடங்கள், தாழ்த்தப்பட்டவர் முன்னேற்ற வளர்ச்சிக்கும், அவை செயல்பாட்டுக்கும் தனி அலுவலர் நியமிக்கப்பட்டார். பின்னர் தனி அலுவலர் என்பது லேபர் கமிஷனர் என்று மாற்றி அழைக்கப்பட்டார்.
தாழ்த்தப்பட்டவர் என்ற அமைப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன என்று தொகுக்கும் பணி மேற்கொள்ளப் பட்டது; குறவர்களை எல்லா வகைகளிலும் சீர்திருத்த நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மீனவர் நலனுக்காகவும் கமிஷனர்கள் அமைக்கப்பட்டனர். வாடகைதாரர் குடியிருப் புச் சட்டமும் கொண்டுவரப்பட்டது. பி அண்ட் சி மில் வேலை நிறுத்தத்தின் காரணமாக தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. தஞ்சை கள்ளர் மகாசங்கத்தின் வேண்டுகோளை ஏற்று அய்ந்து பள்ளிகள் தஞ்சை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டன.
அதைவிட முக்கியமானது நீதிக்கட்சிக்குத் தந்தை பெரியார் அனுப்பி வைத்த திட்டங்களை ஏற்றுக்கொண்டதாகும்.
ஈரோடு வேலைத் திட்டம் என்பது புகழ்பெற்ற ஒன்றாகும். தந்தை பெரியார் சோவியத்து ருசியா சென்று வந்த பிறகு ஈரோட்டில் தந்தை பெரியார், சிந்தனைச் சிற்பி ம.சிங்கார வேலர், சுயமரியாதை இயக்கத் தோழர்களால் (1932 டிசம்பர் 28, 29) கூடி விவாதித்து உருவாக்கப்பட்ட திட்டம் அது.
அத்திட்டத்தை காங்கிரசுக்கும், நீதிக்கட்சிக்கும் தந்தை பெரியார் அனுப்பி வைத்தார். காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வில்லை. அதேநேரத்தில் நீதிக்கட்சி ஏற்றுக்கொண்டது.
14.11.1935 அன்று சென்னை தியாகராயர் மண்டபத்தில் கூடிய நீதிக்கட்சியின் நிர்வாகக் குழு ஈரோடு வேலைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. பொப்பிலி ராஜாவே அதனை முன்மொழிந்தார். அவற்றில் சில:
1. பொதுஜன தேவைக்கும், சவுகரியத்துக்கும், நன்மைக்கும் அவசியமென்று உற்பத்தி செய்யப்படும் சாமான்களின் தொழிற்சாலைகள், இயந்திர சாலைகள், போக்குவரவு சாத னங்கள் முதலியவை அரசாங்கத்தாராலேயே நடைபெறும்படி செய்யவேண்டும்.
2. ஆகார சாமான்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக் கும், அவற்றை வாங்கி உபயோகிக்கும் பொது ஜனங்களுக்கும் மத்தியில் தரகர்கள், லேவாதேவிக்காரர்கள் இல்லாதபடி கூட்டுறவு ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி அதன்மூலம் விவசாயி களின் கஷ்டத்தையும், சாமான் வாங்குபவர்களின் நஷ்டத்தையும் ஒழிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
3. மதங்கள் என்பவைகள் எல்லாம் அவரவர்களுடைய தனி எண்ணமாகவும், தனி ஸ்தாபனங்களாகவுமே இருக்கும் படி செய்வதுடன் அரசியலில் - அரசியல் நிர்வாகத்தில் அவை எவ்வித சம்பந்தமும், குறிப்பும் பெறாமல் இருக்கவேண்டும். ஜாதிக்கென்றோ மதத்திற்கென்றோ எவ்வித சலுகையோ, உயர்வு தாழ்வு அந்தஸ்தோ, அவற்றிற்காக அரசாங்கத்திலி ருந்து தனிப்பட்ட முறைகளைக் கையாளுவதோ, ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகியவை கண்டிப்பாய் இருக்கக்கூடாது.
4. மேலே கண்ட இந்தக் காரியங்கள் நடைபெறச் செய்வதில் நாமே சட்டங்கள் செய்து அச்சட்டங்களினால் அமுலில் கொண்டுவரக் கூடியவைகளை சட்ட சபைகள் மூலமும், அந்தப்படி சட்டங்கள் செய்துகொள்ள அதிகாரங்கள் இல்லாதவைகளை கிளர்ச்சி செய்து அதிகாரங்கள் பெறவும் ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
(பகுத்தறிவு, 23.9.1934)
பொதுவுடைமை மணம் வீசும் மேற்கண்ட திட்டங்களை நீதிக்கட்சி ஏற்றுக்கொண்டதே! தொழிலாளர்கள், தாழ்த்தப் பட்டவர்கள்மீது அக்கறை செலுத்தி - செயல்பட்டதே - செயல்படுத்தியதே - இதற்குப் பின்பும் நீதிக்கட்சி ஜமீன்தாரர் கள், உயர்ஜாதியினருக்கான கட்சி என்று எவரேனும் சொன் னால், அவர்களின் கருத்தில் ஊனம் என்று கருதவேண்டும் அல்லது பார்ப்பனர்களின் எடுபிடிகள் என்றும் கூறவேண்டும்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

உலகத்தில் எங்கேனும் கேட்டதுண்டா?



- குடந்தை கருணா
தலைவர் தொண்டர்களைப் பார்த்து சொல்கிறார்: நான் சிறைப்படுத்தப்பட்டு விட்டேன் என்பதாலேயோ, அல்லது பொதுமக்கள் என்கிற எண்ணத்தால் அதைத் தடுக்க அரசாங்கத்தார் ஏராள மான மக்களைக் கைதுசெய்து விட்டார் கள் என்ற எண்ணத்தாலேயோ, புதிய சட்டத்தின்படி நீண்ட நாள் தண்டிக்க நேரிடும் என்ற அச்சத்தினாலேயோ  யாரும் அதாவது கொளுத்தவேண்டி யது அவசியம்தான் என்று கருதுகிறவர் கள், எந்தவிதமான தயக்கமும் இல்லா மல், அரசமைப்புச் சட்டத்திலிருந்து பொறுக்கி எடுத்துப் போட்டிருக்கிற, நமக்குக் கேடான நாலைந்து பிரிவு களைக்கொண்ட பிரசுரத் தொகுப்பைக் கொளுத்தியே தீர வேண்டியது முக் கியமான காரியம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே, இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறை வேற்ற பெயர் கொடுங்கள், என்கிறார்.
சட்டத்தை எரித்தால் மூன்றாண்டு கடுங்காவல் என தெரிந்தும் பத்தாயிரத் திற்கும் மேல் பெயர் கொடுக்கிறார்கள். சட்டத்தை எரித்து, மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கடும் சிறைவாசம் மூன்றாண்டுவரை அனுபவிக்கிறார்கள்.
யார் அந்த தலைவர்? அவர்தான் சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார்.
அவரின் பேச்சை, கட்டளையாக ஏற்று, பெரியார் இயக்கத்தினர் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கைதாகி தங் களை கடும் கஷ்டத்திற்கு ஆட்படுத்திக் கொள்கிறார்கள்.
சரி. எதற்காக இந்தப் போராட்டம்? சுதந்திர இந்தியாவின் அரசியல் அமைப் புச் சட்டம் 26.1.1950 இல் நடைமுறைக்கு வருகிறது. இந்த சட்டத்தை பலரும் புகழ்பாடிக் கொண்டிருக்கையில், ஒரே ஒரு குரல் அதற்கு எதிர்ப்பு தெரிவிக் கிறது.
அரசமைப்புச் சட்டத்தை உருவாக் கிய ஆறு பேர்களில் நான்கு பேர் பார்ப்பனர்கள். இதை நிறைவேற்றிய அரசியல் நிர்ணயசபை என்பது வயது வந்தோரின் வாக்குரிமை பெறாதவர் களைக் கொண்டதாகும்.
இந்த சட்டத்தில் ஹிந்து மதத்திற்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது; ஹிந்து மதத்தில் ஜாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது; ஜாதியைக் காப்பாற்றத்தான் இடமிருக்கிறது. இதை எளிதில் திருத்தி யமைப்பதற்கும் ஜாதி ஒழிப்புக்காரருக்கு வசதியில்லை; வாய்ப்பும் இல்லை.
ஆதலால், ஜாதியை ஒழிக்க விரும்பு கிறவர்கள், இதை எரிப்பதன் மூலம் நம் எதிர்ப்பைக் காட்டிக்கொள்வதைத் தவிர, வேறு வழி என்ன? என பொட்டில் அடித்தாற்போல் மக்களைப் பார்த்துக் கேட்டார் பெரியார். பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் இந்தப் பிரிவுகளை அரசு நீக்க வேண்டும் என பதினைந்து நாள் கெடுவும் கொடுத்தார் பெரியார்.
விளைவு. ஆயிரக்கணக்கில் மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியை வலியுறுத்தும் பிரிவை நீக்க வேண்டும் எனக் கூறி எரித்தனர்.
இந்தியாவில் எங்கேயும் நடைபெற் றிராத இத்தகைய போராட்டத்தை எந்த ஆண்டு, எந்த தேதியில் பெரியார் நடத்தினார். அவர் தேர்ந்தெடுத்த தேதி 1957 இல் நவம்பர் 26.
அது என்ன? நவம்பர் 26. ஆம். அன்று தான், அதாவது 26.11.1949 அன்று தான்,  பாபா சாகிப் அம்பேத்கர் தலை மையில் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக் கொண்டது. பின்னர் 26.1.1950 முதல் நாட்டில் நடைமுறைப்படுத்தப் பட்டது.
ஆக, எந்த நாளில் அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதோ, அதே நாளை தேர்ந்தெடுத்து, அந்த நாளில் மக்களை இழிவுபடுத்தும் பிரிவை மக்களைக் கொண்டு கொளுத் தும் நிலையை உருவாக்கினார்.
இன்று மறியல் செய்யும் கட்சியினர், அன்று மதியமோ அல்லது அதிகபட்சம் மாலையோ உறுதியாக விடுதலை கிடைத்துவிடும் என்ற ஒரே நம்பிக் கையில் கலந்து கொள்ளும் நிலையில், பெரியார் விடுத்த வேண்டுகோளை ஏற்று மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உச்சபட்சமாக மூன்றாண்டு கடும் தண்டனை விதிக்கப்பட்டனர். ஒருவர் கூட பிணையில் வரவில்லையே.
மாறாக, தண்டனையை நீதிமன்றம் கூறும் வேளையில், இவர்கள் கூற வேண்டியது என்ன தெரியுமா?
நான் ஜாதி ஒழிப்புக்காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை; அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை. ஆதலால், என் எதிர்ப்பைக் காட்டிக்கொள்ளும் அறிகுறியாக இச் சட்டத்தை கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமை உண்டு. இதனால் எந்த உயிருக்கும், எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால், நான் குற்றவாளி அல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கைகளில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால், அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சி யுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
இப்படி ஓர் அறிக்கையை தண்ட னைப் பெற்ற அனைவரும் நீதிமன்றத் தில் கூறினர். தண்டனை பெற்றனர். சிலர் சிறையில் இறந்தனர்.
ஜாதி ஒழிப்புக்காக இந்திய வரலாற் றில் பெரியாரும் அவர்தம் இயக்கமும் நடத்திய போராட்டத்தைப் போல் எவரும் நடத்திடவும் இல்லை; இத்த கைய எண்ணிக்கையில் சிறைத் தண் டனை பெற்றதும் இல்லை; நீதிமன்றத் தில் துணிவுடன் அறிக்கை கொடுத்ததும் இல்லை.
இந்த பெருமை பெரியார் இயக்கத் திற்கு மட்டும்தான் உண்டு, தோழர்களே.
இதைப் படித்த சிலர் நினைக்கலாம். பாபாசாகிப் அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தை பெரியார் எதிர்த்தாரே என்று. அவர்களுக்கு ஓர் நற்செய்தி. ஆந்திர மாநில மசோதா பற்றிய விவாதம் மாநி லங்களவையில் நடைபெறுகிறது. 3.9.1953 அன்று அந்த விவாதத்தின் போது டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார்: சிலர் நான்தான் இந்த சட்டத்தை ஏற்படுத்தினேன் என்று சொல்கிறார்கள். நான்தான் அதை நெருப்பிலிட்டுப் பொசுக்குவதற்கும் முதன்மையானவனாக இருப்பேன்.  நான் அதை முற்றிலும் வெறுக்கிறேன், என்று கூறியவர் அம்பேத்கர்.
அம்பேத்கர் கூறியதை, நடை முறைப்படுத்தியவர் பெரியார்.
ஜாதி ஒழிப்புக்காக நடைபெற்ற போராட்டமும், அதில் தண்டனைப் பெற்றவர்களும் வரலாறாக இன்று இருக்கிறார்கள். அவர்களின் போராட் டத்திற்கான காரணம் இன்றும் உள்ளது. ஜாதி ஒழிப்புக்கான சட்ட மாற்றத்தை வென்றெடுக்க நாம் இந்த நவம்பர் 26 இல் சூளுரைப்போம். ஜாதி இழிவுதான் என்பதை உரக்கச் சொல்லுவோம்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

கோவா பி.ஜே.பி. ஆட்சியில் தீவிரவாதிகளைப்போல் நாங்கள் நடத்தப்பட்டோம்: மாணவர்கள் மனக்குமுறல்




பனாஜி, நவ.26_ கோவா மாநிலத்தில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்கச் சென்ற பூனா திரைப்படக் கல்லூரியின் மேனாள் மாணவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கோவா படத் தொடக்க விழாவில் இடையூறு செய்ய முயன்றதாகக் கூறி அவர்களைக் கைது செய்துள்ளனர்.
மாணவர்கள் கைது
கிஷ்லே திவாரி மற் றும் ஷுபம்வர்தன் ஆகிய இருவரும் 20.11.2015 அன்று நடைபெற்ற கோவா படத் தொடக்கவிழாவில் திடீரென கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை உயர்த்தினர். அந்த அட் டைகளில் திரைப்படக் கல்லூரிக்கு கஜேந்திர சவ்கான் தலைமைப் பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. 
அத னால் அவர்கள் இரு வரையும் காவல்துறையி னர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவ் விருவரும் அடுத்த நாள்  (21.11.2015) நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, சில நிபந் தனைகளின்பேரில் பிணை யில் விடுவிக்கப்பட்டனர். அடிப்படை ஆதாரங் களற்ற குற்றச்சாற்று களைக் கூறி அவ்விருவ ரையும் காவல்துறையினர் சரமாரியாகத் தாக்கியுள் ளனர். 
இதுகுறித்து அவர்கள்  கூறுகையில், எங்கிருந்து மின்னஞ் சல் வருகிறது? யாரெல் லாம் உங்களுடன் இணைந் துள்ளார்கள்? என் றெல்லாம் கேட்டு தீவிர வாத அமைப்பைச் சேர்ந் தவர்களை விசாரணை செய்வதைப்போல விசா ரணை செய்தார்கள். எவ் விதத்திலும் ஆதாரங் களில்லாத அடிப்படை யற்ற குற்றச்சாற்றுகளை எங்கள்மீது கூறி, சரமாரி யாகத் தொடர்ந்து தாக் கினார்கள் என்று மிகுந்த ஆவேசத்துடன் கூறினார்.
பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப் பைச் சேர்ந்தவரும், தொலைக்காட்சியில் நடித்த சாதாரண நடிகரு மான கஜேந்திர சவுகான் என்பவரை பூனா திரைப் படக் கல்வி நிறுவனத் துக்கு தலைமைப் பொறுப் பில் மத்தியஅரசு நியமித் தது. நியமன அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தொடர்ந்து அந்த நியம னத்தை ஏற்காமல் மாண வர்கள் போராட்டத்தில் குதித்தனர். திரைப்படத் துறையினர் பலரும் வெளிப் படையாகவே அவர்களின் கோரிக்கை ஆதரித்தனர். நூறு நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் பல்வேறு வகையிலான போராட்டங்களை  நடத் தினார்கள். ஆனாலும், கடைசிவரையிலும் ஆளும் மத்திய பாஜக அரசு கொஞ்சம்கூட மாணவர் களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவே இல்லை.
எதேச்சதிகார, பாசிசப் போக்கு
கோவா மாநிலத்தில் நடைபெறுகின்ற பன் னாட்டு திரைப்பட விழா வில் பங்கேற்கச் சென்ற மாணவர்களை பல வழி களிலும் சோதனை செய்து விழாவில் பங் கேற்பதற்கு அனுமதியை மறுத்துவிட்டதுடன், மேனாள் மாணவர்களை யும் கைது செய்து சித்ர வதை செய்துள்ளது பாஜகவின் எதேச்சதிகார, பாசிசப் போக்கை வெளிப் படுத்தியுள்ளது. இச்சம்பவம் மாண வர்களிடையே மேலும் மனக்குமுறலை ஏற்படுத்தி உள்ளது.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

பி.ஜே.பி. ஆட்சியில் மதச் சகிப்பின்மை: சிக்கலில் சிக்கித் திணறுகிறது மத்திய ஆட்சி



பெங்களூரு, நவ.26_ மதச் சகிப்பின்மையால் மத்தியில் ஆளும் நரேந் திர மோடி தலைமையி லான பி.ஜே.பி. ஆட்சி சிக்கலில் சிக்கித் திணறு கிறது.
இதன் விவரம் வரு மாறு:
ராகுல் காந்தி
நரேந்திர மோடி தலை மையிலான மத்திய அரசு, இந்துத்வா கொள்கையை பரப்பும் நோக்கத்தில் பிற வகுப்பினருக்கு மறைமுக மாக அச்சுறுத்தல் ஏற் படுத்தி வருகிறது என்று காங்கிரஸ் துணை தலை வர் ராகுல் காந்தி குற் றஞ்சாட்டியுள்ளார். பெங் களூருவில் மவுண்ட்கார் மல் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடி னார். அப்போது அவர் பேசியதாவது:
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜ அரசு, இந்துத்துவா கொள்கைக்கு முக்கியத்து வம் கொடுத்து வகுப்பு கல வரத்துக்கு ஆதரவளிக் கிறது. சிறுபான்மையின ருக்கு எதிராக செயல்படு கிறது. இது ஜனநாயகத் துக்கு ஏற்புடையதல்ல. பாஜ அரசு சகிப்புதன் மையை இழந்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் நாட்டின் அமைதி சீர் கெடும். மாணவர்கள் அறிவு, திறமையை நாட் டுக்கு அர்ப்பணித்து இந் தியாவை  வல்லரசாக உரு வாக்க ஓரணியில் திரள வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பும் அவசியமாக உள்ளது.  அவர்கள் வாழ்க் கையில் முன்னேற்றம டைய பல வாய்ப்புகள் உள்ளன. அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். என் கருத்தில் நான் உறுதி: அமீர்கான்
புதுடில்லியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச் சியில் நடிகர் அமீர்கான் பேசியபோது, "இந்தியா வில் கடந்த சில மாதங் களாகவே இந்த அசா தாரண நிலை நிலவி வரு கிறது. பாதுகாப்பில்லாத சூழ்நிலையை, மக்கள் அவ்வப்போது உணர்ந்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன் னர் கூட என் மனைவி கிரண் என்னிடம் வந்து, நாம் வேண்டுமென்றால் வேறு நாட்டிற்கு சென்று விடுவோமா? குழந்தை களின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று கூறி னார். கிரண் பயப்படுவதி லும் உண்மை இல்லாமல் இல்லை" என்று கூறியிருந் தார். அவரது இந்த கருத் திற்கு பல்வேறு தரப்பு களிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.
இந்நிலையில் இன்று அமீர்கான் வெளியிட் டுள்ள அறிக்கையில், நானும் என் மனைவியும் இந்தியாவை விட்டு வெளி யேற வேண்டும் என ஒருபோதும் நினைத்தது இல்லை. எனக்கு எதிராக பேசுபவர்கள் ஒன்று எனது பேட்டியை பார்த் திருக்கமாட்டார்கள் அல் லது வேண்டும் என்றே தவறாக பேசுகிறார்கள். கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி எனக்கும், என் மனைவிக்கும் இந்தி யாவை விட்டு வெளியே றும் எண்ணமும் இல்லை. என்னை தேச விரோதி யாக அழைக்கும் அனை வருக்கும் நான் இந்திய னாக இருப்பதில் பெரு மைப்படுகிறேன் என்ப தைச் சொல்லிக் கொள் கிறேன். இதை சொல்வ தற்கு யாரின் ஒப்புதலும் தேவையில்லை. நான் இந்தியாவை நேசிக்கி றேன். நான் மனம் திறந்து பேசியதற்காக, என்னை நோக்கி சரமாரியாக கூச் சலிட்டவர்கள் அனை வருமே நான் குறிப்பிட்ட அந்தக் கருத்தை மட்டும் தான் நிரூபித்திருக்கிறார் கள் என்பது என்னை வருத்தமடையவைக்கிறது. ஆனால் நான் ஏற்கெ னவே கூறிய கருத்துகளில் உறுதியாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தனக்கு ஆதரவாக இருந் தவர்களுக்கு நன்றி கூறி யுள்ள அமீர் கான், இந்த அழகான நாட்டின் ஒரு மைப்பாடு, பன்முகத் தன்மை, மொழிகள், கலாச்சாரங்கள், வரலாறு, சகிப்புத்தன்மை ஆகிய வற்றை பாதுகாக்கவேண் டும் எனவும் தெரிவித் துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
நாட்டில் நிலவி வரும் சகிப்பின்மைக்கு எதிராக நடந்துவரும் போராட் டங்கள் வன்முறையில்லா மல் கவித்துவமாக இருப் பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நேற்று ரகுமான் அளித்துள்ள பேட்டியில் அனைத்து எதிர்ப்புகளும் வன்முறையற்றதாக இருக்க வேண்டும், எந்த ஒரு எதிர்ப்பும் வன்முறை யற்றதாக இருப்பதே சிறந் தது. ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளாமல் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் அணுகு முறை கவித்துவமாக உள்ளது.
காந்தியார் பிறந்த மண்ணிலிருந்து வந் துள்ள நாம் உலகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும். புரட்சியை அகிம்சை மூலம் கொண்டு வர முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தவர் காந்தியார் என்று ரஹ் மான் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் விவாதம்!
அண்மைக்காலமாக நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது. தாத்ரி சம்பவம், கன்னட எழுத்தாளர் கல் புர்கி படுகொலை, மும் பையில் பாகிஸ்தான் முன் னாள் அமைச்சரின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்திய குல்கர்னிமீது கருப்பு மை பூச்சு ஆகிய சம்பவங்களை இதற்கு உதாரணமாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் கூறி வருகின்றன. இதனால் இப்பிரச்சினை நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சகிப் பின்மை பிரச்சினை குறித்து தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீசை டில்லி மாநிலங்களவைத் தலைவர் அமீது அன்சாரி யிடம் மார்க்சிஸ்டு பொதுச்செயலாளர் சீதா ராம் யெச்சூரி அளித்தார். டில்லியில் நேற்று நடந்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் இதை அவர் தெரிவித் தார்.
சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
டில்லி மாநிலங்கள வைத் தலைவரிடம் சகிப் பின்மை அதிகரித்து வரு வது பற்றிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதற்கான நோட்டீசு அளிக்கப்பட் டது. அதை அவையின் தலைவர் அமீது அன்சாரியும் ஏற்றுக்கொண் டார். எனவே இதன்மீது விவாதம் நடக்கும்.
அதே நேரம் சகிப் பின்மை அதிகரிப்பு குறித்து அனைத்து கட்சி களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தீர்மா னம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வருவதற்கு விருப்பம் தெரிவித்து இருக்கிறது. இதுபோன்ற ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அவைத் தலை வருக்கு அளித்த நோட் டீசை திரும்ப பெறு வேன். _இவ்வாறு அவர் கூறினார்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Wednesday, November 25, 2015

பெண்கள் தங்கள் சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் விட்டுச் செல்ல முடியும்! உச்சநீதிமன்றம்



புதுடில்லி, நவ.25_- ஒரு பெண் தன் னுடைய பராமரிப்பில் உள்ள சொத்துக்களை விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் விட்டுச் செல்ல முடியும் என்றும் அவள் இறந்த பிறகு அவளுடைய சொத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சொத்து இல்லையென்றாலும்கூட தன்னுடைய மனைவியை பராமரிக்க வேண்டியது ஒரு கணவனின் கடமை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால் மற்றும் சி.நாகப்பன் ஆகியோர் கொண்ட அமர்வு கூறி யுள்ளது. பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப் படும். சீதனமாக நகைகளோ, பாத் திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப் பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக் கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.
இருப்பினும் இந்து மதச்சட்டப்படி பெண்கள் இறந்த பிறகு அவளது சொத்துக்கு உரிமை கோருவதை தடுக்கவில்லை. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் ஒரு பெண் தன்னுடைய பராமரிப்பில் உள்ள சொத்துக்களை விருப்பப்படி யாருக்கு வேண்டுமானா லும் விட்டுச் செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், மனைவியையோ, விதவை பெண்ணையோ கவனித்து கொள்வது வெறும் பெயருக்கு என்று அல்லாமல், ஒரு சலுகையாக செய்ய வேண்டும். இருப்பினும் இந்துமதச் சட்டப்படி அவளது உரிமைகள் மறுக்க முடியாது. என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

இந்துத்துவா பிஜேபி ஆட்சியில் நான்கு மாதங்களில் 330 வகுப்புவாத வன்முறைகள்

இந்துத்துவா பிஜேபி ஆட்சியில் நான்கு மாதங்களில்
330 வகுப்புவாத வன்முறைகள்

அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!
புதுடில்லி, நவ.25_ பிஜேபி ஆட்சியில் 2015 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் வரை 330 மதவாத வன்முறை நிகழ்வுகள் நடந்துள்ளன என்கிற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக  தலைமையி லான தேசிய ஜனநாயக கூட்டணி 2014 ஆம் ஆண் டில் ஆட்சிப் பொறுப் பேற்றபிறகு நாடு முழு வதும் இந்துத்துவாவின் வகுப்புவாத வன்முறை வெறியாட்டங்கள் அதி கரித்தவண்ணம் உள்ளன.
தி இந்து ஆங்கில நாளேட்டிற்கு மத்திய அரசின் உள்துறை அமைச் சகம் சார்பில் வெளியிட்ட விவரங்களின்படி, கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 300 வன்முறைச் சம்பவங்கள்குறித்து வழக்குகள் பதிவாகி உள் ளன. நாடுமுழுவதும் வகுப்புவாதங்களால் மாதத்துக்கு 75 வன் முறைச் சம்பவங்கள் என்று நடந்து அச்சம்ப வங்களில் 35 பேர் கொல் லப்பட்ட கொடுமை நடந் துள்ளது. கடந்த அக்டோ பர் மாதம் வரை இந்த ஆண்டு முழுவதும் 630 வன்முறைச்சம்பவங்கள் வகுப்புவாதங்களால் நிகழ்ந்துள்ளன. அச்சம் பவங்களால் 86 பேர் உயி ரிழந்துள்ளனர். காங்கிரசு தலைமையிலான அய்க் கிய முற்போக்குக் கூட் டணி ஆட்சிக்காலமான 2013ஆம் ஆண்டில் இது போன்று வகுப்புவாத வன் முறைச் சம்பவங்களாக 823 பதிவாகி உள்ளன. 2014ஆம் ஆண்டில் 644 ஆக இருந்துள்ளது.
2015 ஜூன் வரை 330 வன்முறைகள்
இந்த ஆண்டில் 2015 ஜுன் மாதம்வரை மட்டும் 330 வன்முறைச்சம்பவங் கள் பதிவாகி உள்ளன. அச்சம்பவங்களில் 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1,899 பேர்வரை படுகா யங்கள் அடைந்தனர்.
2015 ஆம் ஆண்டுக் கான அறிக்கையில் உள்ள படி, பெரிய அளவில் வகுப்புவாத வன்முகைள் நடைபெறவில்லை என் றும், ஆனால், இரண்டு முக்கியமான வகுப்புவாத வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது. ஒன்று அரியானா மாநிலத்தில் ஃபரிதாபாத்தில் அதாலி என்கிற இடத்தில் வழி பாட்டுக்கான கட்டுமா னம் தொடர்பாக  இடம் பெற்ற வன்முறை, மற் றொன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாத்ரியை அடுத்த பிசாரா கிராமத் தில் 50 வயது முதியவர் மொகம்மத் அக்லக் என் பவர் மாட்டிறைச்சி தொடர் பான புரளியால் கொல்லப் பட்ட சம்பவமும் ஆகும்.
அறிக்கையில் குறிப் பிடும்போது, மத ரீதியி லான பிரச்சினைகள் என் பவை ஊர்வலங்கள், சமூக வலைத்தளங்களில் ஆட் சேபனைக்குரிய வகையில் மதத்தின் அல்லது மத ரீதியிலான படங்களை சித்தரித்து வெளியிடுவது, பாலியல் தொடர்பான பிரச்சினைகள், நிலம் மற்றும் சொத்துப் பிரச் சினைகள், அரசியல் போட் டிகள் மற்றும் இதர தெருச்சண்டைகள், தனிப் பட்ட விரோதங்கள், பணப் பிரச்சினைகள் ஆகி யனவும் மதரீதியிலான வகுப்புவாத அணுகு முறைகளுடன் இணைந்து ஏற்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்துறை செயலாளர்மீது டி.ராஜா சாடல்
உள்துறைச் செயலா ளர் ராஜிவ் மெஹ்ரிஷி என்பவரால் அளிக்கப் படவேண்டிய நிலையில், நாடாளுமன்றத்தின் நிலைக்குழு உறுப்பினர் கூட்டத்தில் இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா கூறுகையில், வகுப் புவாத வன்முறைகளை முக்கியத்துவம் உள்ள வையாகப் பார்க்காமல் மத்திய உள்துறை செய லாளர் அதுகுறித்த பிரச் சினைகளை அவர் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் முன்பாக எடுத்துரைக்க முன்வரவில்லை. நாடாளு மன்றத்தின் நிலைக்குழு வின் கூட்டம் நடக்கிறது. ஆனால், கூட்டத்துக்கு மத்திய உள்துறை செயலா ளர் வருகைதராமல் இருப் பது நாடாளுமன்ற உறுப் பினர்கள் மத்தியில் பெரி தும் வருத்தத்தை ஏற் படுத்தியுள்ளது. 2015ஆம் ஆண்டில் பெரிதான சம் பவங்கள் நிகழ்ந்திட வில்லை என்று உள்துறை அமைச்சக அறிக்கை மட்டும் கூட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளது என்றார். உள்துறை அமைச்சகத்தின் மூத்த அலுவலர் ஒருவர் கூறும் போது, உள்துறைச் செய லாளர் மெஹ்ரிஷி நிலைக் குழுக்கூட்டத்தில் பங் கேற்க முடியாமல் போன தற்கு காரணம் அவர் அமைச்சரவைக் கூட்டத் தில் பங்கேற்கவிருந்தது தான் என்றார்.
மாநில அரசுகளே பொறுப்பு
காங்கிரசு நாடாளு மன்ற உறுப்பினர் பி.பட் டாச்சார்யாவைத் தலை வராகக்கொண்டு 10 மாநி லங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள், 21 மக்க ளவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோ ரைக் கொண்டுள்ளது  நாடாளுமன்றத்தின் நிலைக்குழு.
உள்துறை அமைச் சகத்தின் சார்பில் வெளி யிடப்பட்டுள்ள அறிக்கை யில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பதற்கான பொறுப்புகளில் இது போன்ற சம்பவங்களுக் கான பொறுப்பு மாநில அரசுகளையே சார்ந்தது என்று குறிப்பிடப்பட் டுள்ளது.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...