பனாஜி, நவ.26_ கோவா மாநிலத்தில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்கச் சென்ற பூனா திரைப்படக் கல்லூரியின் மேனாள் மாணவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கோவா படத் தொடக்க விழாவில் இடையூறு செய்ய முயன்றதாகக் கூறி அவர்களைக் கைது செய்துள்ளனர்.
மாணவர்கள் கைது
கிஷ்லே திவாரி மற் றும் ஷுபம்வர்தன் ஆகிய இருவரும் 20.11.2015 அன்று நடைபெற்ற கோவா படத் தொடக்கவிழாவில் திடீரென கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை உயர்த்தினர். அந்த அட் டைகளில் திரைப்படக் கல்லூரிக்கு கஜேந்திர சவ்கான் தலைமைப் பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
அத னால் அவர்கள் இரு வரையும் காவல்துறையி னர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவ் விருவரும் அடுத்த நாள் (21.11.2015) நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, சில நிபந் தனைகளின்பேரில் பிணை யில் விடுவிக்கப்பட்டனர். அடிப்படை ஆதாரங் களற்ற குற்றச்சாற்று களைக் கூறி அவ்விருவ ரையும் காவல்துறையினர் சரமாரியாகத் தாக்கியுள் ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்கிருந்து மின்னஞ் சல் வருகிறது? யாரெல் லாம் உங்களுடன் இணைந் துள்ளார்கள்? என் றெல்லாம் கேட்டு தீவிர வாத அமைப்பைச் சேர்ந் தவர்களை விசாரணை செய்வதைப்போல விசா ரணை செய்தார்கள். எவ் விதத்திலும் ஆதாரங் களில்லாத அடிப்படை யற்ற குற்றச்சாற்றுகளை எங்கள்மீது கூறி, சரமாரி யாகத் தொடர்ந்து தாக் கினார்கள் என்று மிகுந்த ஆவேசத்துடன் கூறினார்.
பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப் பைச் சேர்ந்தவரும், தொலைக்காட்சியில் நடித்த சாதாரண நடிகரு மான கஜேந்திர சவுகான் என்பவரை பூனா திரைப் படக் கல்வி நிறுவனத் துக்கு தலைமைப் பொறுப் பில் மத்தியஅரசு நியமித் தது. நியமன அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தொடர்ந்து அந்த நியம னத்தை ஏற்காமல் மாண வர்கள் போராட்டத்தில் குதித்தனர். திரைப்படத் துறையினர் பலரும் வெளிப் படையாகவே அவர்களின் கோரிக்கை ஆதரித்தனர். நூறு நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் பல்வேறு வகையிலான போராட்டங்களை நடத் தினார்கள். ஆனாலும், கடைசிவரையிலும் ஆளும் மத்திய பாஜக அரசு கொஞ்சம்கூட மாணவர் களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவே இல்லை.
எதேச்சதிகார, பாசிசப் போக்கு
கோவா மாநிலத்தில் நடைபெறுகின்ற பன் னாட்டு திரைப்பட விழா வில் பங்கேற்கச் சென்ற மாணவர்களை பல வழி களிலும் சோதனை செய்து விழாவில் பங் கேற்பதற்கு அனுமதியை மறுத்துவிட்டதுடன், மேனாள் மாணவர்களை யும் கைது செய்து சித்ர வதை செய்துள்ளது பாஜகவின் எதேச்சதிகார, பாசிசப் போக்கை வெளிப் படுத்தியுள்ளது. இச்சம்பவம் மாண வர்களிடையே மேலும் மனக்குமுறலை ஏற்படுத்தி உள்ளது.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- பெண்கள் தங்கள் சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் விட்டுச் செல்ல முடியும்! உச்சநீதிமன்றம்
- மதவாத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடும் மூத்த பெண் வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங்கிற்கு மோடி அரசு தாக்கீது
- வங்கதேசத்தில் இரு அரசியல் தலைவர்களின் தூக்கு தண்டனை நிறைவேற்றம்
- இப்பொழுதாவது புத்தி வந்தால் சரி பா.ஜ.க.வை வீழ்த்த பீகாரை போன்றே உ.பி.யிலும் மெகா கூட்டணி அகிலேஷ் அதிரடி
- பீகார் சட்டசபை குழு தலைவராக நிதீஷ்குமார் தேர்வு: 20ஆம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்
No comments:
Post a Comment