இந்துத்துவா பிஜேபி ஆட்சியில் நான்கு மாதங்களில்
330 வகுப்புவாத வன்முறைகள்
அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!
330 வகுப்புவாத வன்முறைகள்
அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!
புதுடில்லி, நவ.25_ பிஜேபி ஆட்சியில் 2015 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் வரை 330 மதவாத வன்முறை நிகழ்வுகள் நடந்துள்ளன என்கிற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயக கூட்டணி 2014 ஆம் ஆண் டில் ஆட்சிப் பொறுப் பேற்றபிறகு நாடு முழு வதும் இந்துத்துவாவின் வகுப்புவாத வன்முறை வெறியாட்டங்கள் அதி கரித்தவண்ணம் உள்ளன.
தி இந்து ஆங்கில நாளேட்டிற்கு மத்திய அரசின் உள்துறை அமைச் சகம் சார்பில் வெளியிட்ட விவரங்களின்படி, கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 300 வன்முறைச் சம்பவங்கள்குறித்து வழக்குகள் பதிவாகி உள் ளன. நாடுமுழுவதும் வகுப்புவாதங்களால் மாதத்துக்கு 75 வன் முறைச் சம்பவங்கள் என்று நடந்து அச்சம்ப வங்களில் 35 பேர் கொல் லப்பட்ட கொடுமை நடந் துள்ளது. கடந்த அக்டோ பர் மாதம் வரை இந்த ஆண்டு முழுவதும் 630 வன்முறைச்சம்பவங்கள் வகுப்புவாதங்களால் நிகழ்ந்துள்ளன. அச்சம் பவங்களால் 86 பேர் உயி ரிழந்துள்ளனர். காங்கிரசு தலைமையிலான அய்க் கிய முற்போக்குக் கூட் டணி ஆட்சிக்காலமான 2013ஆம் ஆண்டில் இது போன்று வகுப்புவாத வன் முறைச் சம்பவங்களாக 823 பதிவாகி உள்ளன. 2014ஆம் ஆண்டில் 644 ஆக இருந்துள்ளது.
2015 ஜூன் வரை 330 வன்முறைகள்
இந்த ஆண்டில் 2015 ஜுன் மாதம்வரை மட்டும் 330 வன்முறைச்சம்பவங் கள் பதிவாகி உள்ளன. அச்சம்பவங்களில் 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1,899 பேர்வரை படுகா யங்கள் அடைந்தனர்.
2015 ஆம் ஆண்டுக் கான அறிக்கையில் உள்ள படி, பெரிய அளவில் வகுப்புவாத வன்முகைள் நடைபெறவில்லை என் றும், ஆனால், இரண்டு முக்கியமான வகுப்புவாத வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது. ஒன்று அரியானா மாநிலத்தில் ஃபரிதாபாத்தில் அதாலி என்கிற இடத்தில் வழி பாட்டுக்கான கட்டுமா னம் தொடர்பாக இடம் பெற்ற வன்முறை, மற் றொன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாத்ரியை அடுத்த பிசாரா கிராமத் தில் 50 வயது முதியவர் மொகம்மத் அக்லக் என் பவர் மாட்டிறைச்சி தொடர் பான புரளியால் கொல்லப் பட்ட சம்பவமும் ஆகும்.
அறிக்கையில் குறிப் பிடும்போது, மத ரீதியி லான பிரச்சினைகள் என் பவை ஊர்வலங்கள், சமூக வலைத்தளங்களில் ஆட் சேபனைக்குரிய வகையில் மதத்தின் அல்லது மத ரீதியிலான படங்களை சித்தரித்து வெளியிடுவது, பாலியல் தொடர்பான பிரச்சினைகள், நிலம் மற்றும் சொத்துப் பிரச் சினைகள், அரசியல் போட் டிகள் மற்றும் இதர தெருச்சண்டைகள், தனிப் பட்ட விரோதங்கள், பணப் பிரச்சினைகள் ஆகி யனவும் மதரீதியிலான வகுப்புவாத அணுகு முறைகளுடன் இணைந்து ஏற்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் குறிப் பிடும்போது, மத ரீதியி லான பிரச்சினைகள் என் பவை ஊர்வலங்கள், சமூக வலைத்தளங்களில் ஆட் சேபனைக்குரிய வகையில் மதத்தின் அல்லது மத ரீதியிலான படங்களை சித்தரித்து வெளியிடுவது, பாலியல் தொடர்பான பிரச்சினைகள், நிலம் மற்றும் சொத்துப் பிரச் சினைகள், அரசியல் போட் டிகள் மற்றும் இதர தெருச்சண்டைகள், தனிப் பட்ட விரோதங்கள், பணப் பிரச்சினைகள் ஆகி யனவும் மதரீதியிலான வகுப்புவாத அணுகு முறைகளுடன் இணைந்து ஏற்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்துறை செயலாளர்மீது டி.ராஜா சாடல்
உள்துறைச் செயலா ளர் ராஜிவ் மெஹ்ரிஷி என்பவரால் அளிக்கப் படவேண்டிய நிலையில், நாடாளுமன்றத்தின் நிலைக்குழு உறுப்பினர் கூட்டத்தில் இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா கூறுகையில், வகுப் புவாத வன்முறைகளை முக்கியத்துவம் உள்ள வையாகப் பார்க்காமல் மத்திய உள்துறை செய லாளர் அதுகுறித்த பிரச் சினைகளை அவர் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் முன்பாக எடுத்துரைக்க முன்வரவில்லை. நாடாளு மன்றத்தின் நிலைக்குழு வின் கூட்டம் நடக்கிறது. ஆனால், கூட்டத்துக்கு மத்திய உள்துறை செயலா ளர் வருகைதராமல் இருப் பது நாடாளுமன்ற உறுப் பினர்கள் மத்தியில் பெரி தும் வருத்தத்தை ஏற் படுத்தியுள்ளது. 2015ஆம் ஆண்டில் பெரிதான சம் பவங்கள் நிகழ்ந்திட வில்லை என்று உள்துறை அமைச்சக அறிக்கை மட்டும் கூட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளது என்றார். உள்துறை அமைச்சகத்தின் மூத்த அலுவலர் ஒருவர் கூறும் போது, உள்துறைச் செய லாளர் மெஹ்ரிஷி நிலைக் குழுக்கூட்டத்தில் பங் கேற்க முடியாமல் போன தற்கு காரணம் அவர் அமைச்சரவைக் கூட்டத் தில் பங்கேற்கவிருந்தது தான் என்றார்.
மாநில அரசுகளே பொறுப்பு
காங்கிரசு நாடாளு மன்ற உறுப்பினர் பி.பட் டாச்சார்யாவைத் தலை வராகக்கொண்டு 10 மாநி லங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள், 21 மக்க ளவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோ ரைக் கொண்டுள்ளது நாடாளுமன்றத்தின் நிலைக்குழு.
உள்துறை அமைச் சகத்தின் சார்பில் வெளி யிடப்பட்டுள்ள அறிக்கை யில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பதற்கான பொறுப்புகளில் இது போன்ற சம்பவங்களுக் கான பொறுப்பு மாநில அரசுகளையே சார்ந்தது என்று குறிப்பிடப்பட் டுள்ளது.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- தி.மு.க. அளிக்க முன்வந்த துயர்துடைப்பு நிதியைப் பெற்றுக் கொள்வதிலும் தாமதித்தது ஏன்?
- சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சியின் பணிகளுக்கு இனிமேல்தான் அதிகம் வேலை - தொடர்ந்து செயல்படுவோம்!
- மாறாயினும் வேறாயினும் அல்ல! யாராயினும் தமிழரே! திராவிடரே! இந்துத்துவா நோய்க்கு அருமருந்து பெரியாரே!
- தேவை ராம் ராஜ்ஜியம் அல்ல - பீம் (அம்பேத்கர்) ராஜ்ஜியமே! - பேராசிரியர் கே. எஸ். பகவான்
- சுயமரியாதை இயக்கம் 90, நீதிக்கட்சி நூற்றாண்டு விழா தொடங்கியது
No comments:
Post a Comment