Tuesday, July 8, 2014

அச்சம் விடுங்கள்; அறிவுபெற்றெடுங்கள்

றிவோடு வாழ வேண்டுமென்றால் பொருட்காட்சி சாலைக்குச் செல்லுங்கள். வெளியூர் சென்று ஆங்காங்குள்ள தொழிற் சாலைகளைக் காணுங்கள். மற்ற மதக்காரர்கள் நடப்பதைப் பாருங்கள். ஆங்காங்குள்ள மக்களோடு பழகி ஒற்றுமை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வரும் விஞ்ஞான உண்மைகளை அறிந்து கொள்வதில் ஆசை கொள்ளுங்கள். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது எப்படி வீண் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கிறதோ, அது போல் கும்பிட்ட குழவிக் கல்லையே கும்பிட்டுக் கொண்டிருப்பதும் வீண் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சூத்திரப்பட்டம்  நீங்க வேண்டும் என்பதை முக்கியமாகக் கொள்ளுங்கள்.

நீங்கள்  எவ்வளவுதான் உயர்ந்த பதவியிலிருந்தாலும், எவ்வளவுதான் பணம் படைத்திருந்தாலும் உங்கள் சூத்திரப் பட்டம் நீங்காதவரை, நீங்களும், உங்கள் மனைவி மக்களும் சமுதாயத்தில் உயர்வான யோக்கியதை அற்றவர்களாகவே, பார்ப்பனர்களுக்குத் தாழ்ந்தவர்களாகவே கருதப்படுவீர்கள் என்பதை உணர்ந்து இந்த இழிவுப் பட்டம் ஒழிய எங்களோடு சேர்ந்து உழையுங்கள். பத்திரிகை வாயிலாகவும், சித்திரங்களின் வாயிலாகவும், சட்டம் வாயிலாகவும், படக்காட்சிகளின் வாயிலாகவும், நாடகங்கள் வாயிலாகவும் மேடைப் பிரசங்கங்கள் வாயிலாகவும் கதாகலாட்சேபங்கள் வாயிலாகவும் உங்களை என்றென்றும் பார்ப்பனரின் அடிமை மக்களாக வைத்திருக்க இன்று பலமான சூழ்ச்சி செய்யப்பட்டு வருகிறது என்பதை உணர்ந்து உறுதியோடு பணியாற்ற முன்வாருங்கள்.
******
ங்களுக்காகவே இல்லாவிட்டாலும், உங்களின் பிற்கால சந்ததிகளின் முன்னேற்றத்திற்காகவேணும் நீங்கள் மூட நம்பிக்கையை ஒழிக்க முன்வாருங்கள். கல் சாமிக்கு கை தூக்கித் தண்டனிடாதீர்கள். நெற்றியில் மதக்குறி தீட்டிக் கொள்ளாதீர்கள்.

என்ன மதத்தினர் என்று கேட்டால் வள்ளுவர் மதம் என்று சொல்லுங்கள் உங்கள் நெறியென்னவென்றால் குறள் நெறி என்று சொல்லுங்கள். குறள் நெறி என்று சொல்வீராயின் உங்கள் முன் எந்த பிற்போக்குவாதியும், எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரனும் முன் நிற்கக் கூசி ஓடிவிடுவான்.

குறளை எவனாலும் மறுத்துக் கூற முடியாது. அவ்வளவு இயற்கைக்கும், அறிவுக்கும் இயைந்ததாக இருக்கிறது அது. எனவே, குறளைப் படியுங்கள். அதன் வழிப்படி நடவுங்கள். அதையே எங்கும் பிரசாரம் செய்யுங்கள். உங்களுக்கு மனத் தூய்மை ஏற்படும். முன்னேற்ற அறிவில் ஆசையும், நம்பிக்கையும் ஏற்படும்.

ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து, சரியான மறுப்பு திருக்குறள்தான். இதை நான் மட்டுமே கூறவில்லை. திருவள்ளுவ மாலையிலேயே பல புலவர்கள் கூறியுள்ளார்கள், ஆரியப் புரட்டை வெளியாக்கி, மடமையைப் போக்கும் நூலே திருக்குறள் என்று. எனவே, குறள் வழிபட்டு நீங்கள் புத்தறிவு பெற்ற புது மனிதராகுங்கள். அதில் ஆரியப் போக்கு காணப்படலாம். அதைச் சரிவர உணரும்வரை தள்ளி வைத்து விடுங்கள்.

தோழர்களே, பட்டிக்காட்டானை விட இந்தச் சென்னைப் பட்டினத்துக்காரர்களே பெரிதும் மூட நம்பிக்கைக்காரர்களாக இருக்கிறார்கள். இங்குதான் சாமியாட்டம் மிக அதிகமாயிருக்கிறது. நமது பெண்கள் சாமியாடுவதைப் பார்த்தால் சாமி என்று ஒன்று இருக்குமானால், அதுகூட ரொம்ப வெட்கப்படும். கண்ட பயல்கள் இன்று சாமியாட்டம் ஆடி அல்லது பிறரை ஆட்டி வைத்து காசு பிடுங்கித் தின்ன ஆரம்பித்து விட்டிருக்கின்றனர். அந்தச் சந்தர்ப்பத்திலெல்லாம் நல்ல பிரம்பால் நாலு சூடான அடி கொடுத்துப் பார்க்க வேண்டும். அப்போது காணலாம் எவ்வளவு சீக்கிரமாக அந்தச் சாமி மலையேறி விடுகிறது என்பதை. கிராமங்களி-லெல்லாம் இப்போது சாமி ஆடினால் நல்ல உதை கிடைக்கிறது. அதனால்தான் சாமியாட்டம் அங்கு குறைந்துவிட்டது.

தஞ்சை சப்ஜெயிலில் ஒரு வேடிக்கை நடந்தது. என்னோடு ஜெயில் சூப்பரின்டெண்-டென்ட், அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது 14 வயது பையன் ஒருவன் ஜெயிலில் ரிமாண்டாக அனுமதிக்கப்பட அழைத்து வரப் பட்டான். ஜெயில் சூப்பரின்டெண்டென்ட் இதோ பார் உன் சிஷ்யன் வந்து விட்டான் என்று கூறினார். என்ன சங்கதி என்றேன். புரோகிதன் எவனோ திவசம் செய்வித்து விட்டு அரிசி, பருப்பு வாங்கிக் கொண்டு போனானாம். அவனை மடக்கி இவன் அடித் தானாம். அதனால் ரிமாண்டு செய்யப் பெற்று வந்திருக்கிறான் என்று கூறினார். தஞ்சை சப் ஜெயில் சூப்பரின்டெண்டென்ட் ஜெயில் வாரண்டைக் காட்டிக் கூறினார். நான் அந்தப் பையனுக்குக் கூறினேன். இது தவறு. அந்தப் பார்ப்பானுக்கு இதைக் கொடுத்தவனைப் போய் ஏண்டா முட்டாள் பயலே அரிசி, பருப்பு அவனுக்கு அழுதே. பாட்டாளி பட்டினி கிடப்பது உன் கண்ணுக்குத் தெரிய வில்லையா? என்று கேட்டு, அவன் கோபம் கொண்டு அடித்தால், நீ அந்த அடியை வாங்கிக் கொண்டு அவனுக்கும் விளக்கம் சொல்வதை விட்டு, நீ இப்படி அவனால் கொடுக்கப்பட்டு வாங்கி வந்த பார்ப்பானை அடிக்கலாமா என்று கேட்டேன்.

அதெல்லாம் சொல்லாதீங்க. இந்தப் பார்ப்பானுங்களே இப்படித்தானுங்க என்று ஏதோ சொல்லவே, அவனை அவர் வைது (திட்டி) அனுப்பி விட்டார். இப்படியாக நாம்தான் முட்டாள் தனமாக பார்ப்பானுக்கு அழுது வருகிறோமே ஒழிய, நாம்தான் நம் மனைவியை இழுத்துக் கொண்டு மொட்டை அடித்துக் கொண்டு, கோவிந்தா போட்டுத் தெருவில் வெட்க-மில்லாமல் நடந்து கொண்டு, காவடி தூக்கிக் கொண்டு, குரங்கு போல் குதித்துக் கொண்டு, பார்ப்பானுக்கு அழுது, அவன் வயிற்றை வீங்க வைத்து, முட்டாளாகிக் கொண்டு வருகிறோமே ஒழிய, அவனொன்றும் அப்படிப்பட்ட காரியங்களைச் செய்வதில்லை.

எனவே, நீங்கள் அறிவு பெற்று முட்டாள்-தனத்தைக் கைவிடுவீர்களேயானால் அவனொன்றும் உங்களை அசைத்து விடவோ, அழித்து விடவோ முடியாது.

நான் எனது 17-ஆவது வயதிலேயே இந்தக் கடவுளர்களையும், இந்தப் பார்ப்பனர்களின் பித்தலாட்டங்களையும் எதிர்க்க ஆரம்பித்து விட்டேன்.

அதிலிருந்து இன்று வரைக்கும் அதாவது சுமார் 53 ஆண்டுகளாக நானும்தான் இதே பகுத்தறிவுப் பிரசாரம் செய்து வருகிறேன். இதனால் நானென்ன சீக்கிரத்தில் செத்துப் போய் விட்டேனா? அல்லது என் சொத்தெல்லாம் அழிந்து போய் விட்டதா? அல்லது எனக்கு இழிவு ஏற்பட்டு விட்டதா? இல்லையே. பின் ஏன் நீங்கள் பகுத்தறிவு வழி நடக்க அஞ்சுகிறீர்கள். அச்சம் விடுங்கள்; அறிவு பெற்றெழுங்கள்.

(26.12.1948 அன்று சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரை - விடுதலை 31.12.1948)



ஆவியோ - ஆவி!

விழுப்புரம் ரயில்வே காவலதுறையினர் இப்பொழுது ரயில் நிலையத்திற்குள் தங்குவதில்லையாம்; படபடத்துப் போயிருக் கிறார்களாம். பயத்தால் ரத்தம் உறைந்து போய்க் கிடக்கிறார்களாம்.

அப்படி என்ன நடந்து விட்டதாம்? ரயில்வே போலீசார் புத்தக வியாபாரி ஜெயவேல் என்பவர் மரணம் தொடர்பாக  போலீசார் விசாரணையை மேற்கொண் டனர். இரவு நேரத்தில் ஜெயவேலுவின் ஆவி மிரட்டுவதாகச் சிலர் பீதியைக் கிளப்பி விட்ட னராம். இதன் காரணமாக போலீசார் யாரும் காவல் நிலையத்துக்குள் தங்கு வதில்லையாம்.

இதற்கு ஏதாவது பரிகாரம் வேண்டாமா?   இப்படியெல்லாம் சொல் லுவதற்கென்றே சில ஆசாமிகள் இருப்பார்கள் அல்லவா! ஆவியை விரட்ட  சில சடங்கு களைச் செய்ய வேண் டும்; சுத்திகரிக்க வேண் டும் என்று சொல்லவே, அச்சத்தின் பிடியில் கிடந்த போலீசார் அதற் கான ஆட்களை அழைத்து கணபதி பூஜை நடத்தப் பட்டு, பூஜை புனஷ் காரங்களும் சாங்கோ பாங்கமாக நடத்தப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டதாம்!

சரி. இந்த முட்டாள் தனத்தோடாவது ஆவி பயம் தொலைந்திருக்க வேண்டும் அல்லவா!

அதுதான் இல்லை மறைந்த ஜெயவேலின் ஆவிக்குப் பயந்து இன் னும் காவல் நிலையத்திற் குள் தங்கிட அஞ்சி, வெளியில் காற்றாட இரவுப் பணியாளர்கள் படுத்து கிடக்கிறார்களாம்.

எப்படி இருக்கிறது? காவல்துறையினருக்கு உடல் பயிற்சிகள் எல்லாம் அவ்வப்போது கொடுக்கப்பட்டுதான் வருகின்றன. உடல் பலமாக இருந்து என்ன பயன்?

மனபலம்,  அறிவுப் பலம் இல்லையே! ஆவி என்றால் என்ன? மனிதன் இறந்து விட்டான் அதற்கு மேல் என்ன இருக்கிறது? ஆவி என்றோ, உயிர் என்றோ தனியாக இருக் கிறதா! மனிதர் சத்துப் போய் செத்துப் போய் விட்டான் என்றால் அவ்வளவுதான்!

ஆத்மா, மோட்சம், நரகம்,  பிதுர்லோகம், மறுபிறப்பு ஆகியவற் றைக் கற்பித்தவன் அயோக் கியன் நம்புகிறவன் மூடன்; இவற்றால் பலன்  அனுபவிப்பவன் மகா மகா அயோக்கியன் என்று தந்தை பெரியார் சொன்னது எத்தகைய  உண்மை என்பது இதன் மூலம் தெற்றென விளங்க வில்லையா?

உண்மையான ஆவி யிலிருந்து இட்லியாவது  சுடலாம். இதுபோன்ற முட்டாள்தனமான ஆவி யிலிருந்து மனிதனின் அறிவைச் சுட்டுப் பொசுக்கலாம்.

வெறும் உடற்பயிற் சியைவிட, பகுத்தறிவுப் பயிற்சி தான் அவசியம் என்பது இப்பொழுது விளங்கவில்லையா?

காவல்துறைக்குப் பெரியார் நூல்களைக் கொடுத்துப் படிக்க வைத்து அதில் தேர்ச்சி பெறுகிறவர்களை மட்டும் வேலையில் அமர்த்துக! 

 - மயிலாடன்

புரிந்து கொள்ளுங்கள் சூத்திர அறிவு ஜீவிகளே!

 

மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திரர், விழுப்புரத்திலிருந்த பழைய திருவாளர் சாமிநாதய்யர் அவர்கள் ஆவார்! திண்டிவனம் கிறித்துவப் பள்ளியான ஆல்காட் மிஷன் பள்ளியில் படித்தவர். பிறகு சங்கராச்சாரியாராக அவர் சென்றபோது சந்திரசேகரேந்திர சாமிகள் ஆனார்!

கல்கி வார ஏடு தனது இன உணர்வை மறக்காமல் பார்ப்பன குலத் தலைவரான அச்சங்கராச்சாரியின் அறிவுரை என்ற பெயரால் ஒரு பக்கத்தை வாரா வாரம் தவறாமல், தலையங்கத்திற்கு முன்பே போட்டு பய பக்தியோடு, ஹிந்து மத (ஆர்.எஸ்.எஸ்.) பிரச்சாரத்தை சற்று சர்க்கரைப் பூச்சுப் பூசி தருகின்ற அரும்பணியை (திருகுதாள) செய்து வருகிறது. (நன்றி கெட்ட தமிழர் ஏடுகள் பெரியார்பற்றி அவர் பிறந்த நாளில்கூட செய்தி வெளியிடுவது கிடையாது)

இவ்வாரம் வந்த கல்கி  (6.7.2014) இதழில் தவறான நாகரிகப் பிரிவினை என்ற தலைப்பில் சந்திரசேகரேந் திரரின் கருத்துக்களை எடுத்துப் போட்டுள்ளார்கள்.

அதன் துவக்கம் இது.

இந்தக் காலத்தில் தமிழ்ப் பண்பாடு வேறே, வைதிக நாகரீகம் வேறே என்று தப்பாக அபிப்ராயப்பட்டுக் கொண்டு முடிந்த மட்டில் தமிழ் தேசத்தில், முன் காலத்தில் உசந்ததாக எந்த விஷயம் இருந்தாலும், அல்லது எந்த விஷயங்கள் இருந்தாலும், அந்த விஷயம் அல்லது மநுஷ்யம் வைதிக நாகரிகத்தில் வராமல், தமிழினம் என்று ஏதோ ஒன்றை இவர்கள் பிரித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அதில் வந்ததாகவே ஜோடனை பண்ணிக் காட்டுவதாக ஏற்பட்டிருக்கிறது.

நல்ல அறிவும் ஆராய்ச்சித் திறமையும் உள்ளவர்கள், நாவல் எழுதுகிறவர்கள் எல்லோருமே இப்படித்தான் தமிழ் நாகரிகமென்று ஏதோ ஒன்று தனியாக இந்தத் திராவிட தேசத்தில் வைதிகத்துக்கு வித்யாஸமாக, அதை அமுக்கிக் கொண்டு, பிரகாசமாக இருந்ததாக ஜோடித்து எழுதுகிறார்கள். ஆனால் அந்த அந்தக் காலத்துக் கல்வெட்டுகளைப் பார்த்தாலும் சரி, கவிகளும் புலவர்களும் பாடி விட்டுப் போயிருக்கும் தமிழ் நூல் களைப் பார்த்தாலும் சரி, இந்தப் புது அபிப்பிராயத்துக்கு ஒரு ஆதாரமும் இல்லை.

இதிலே ஒரு பக்கம் வேடிக்கையாகவும் இருக்கிறது. (வேடிக்கைக் கஷ்டம்).
(கல்கி 6.7.2014)

முழுப் பூசணியை சோற்றில் மறைப்பது என்பதைவிட மிக மோசமான புரட்டு - வாதம் அல்லவா இது?

தமிழ்ப் பண்பாடும், வைதிக நெறியும் எண்ணெயும் நீரும்போல ஒன்றுக்கு ஒன்று வேறானது. வெண்ணெயும் சுண்ணாம்பும் போல எதிரும் புதிருமானது நேர் மறையும் எதிர்மறையும் போன்ற வேறுபட்டவைகள்.

எடுத்துக்காட்டாக, தமிழ்ப் பண்பாடு என்று கூப்பாடு போடுகிறார்களே, அப்படி ஒரு பண்பாடு உண்டா என்று ஆசிரியர் வீரமணி அவர்களிடம் குமுதம்  மூலம் பால்யூ ஏற்பாடு செய்த பேட்டியில் எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் கேள்வி கேட்டார்.

பெற்ற தாயையும் மகளையும், தங்கை, தமக்கையையும் வாடி, போடி என்று கேவலமாக அழைக்கத் தெரியாத பண்பாட்டுக்குப் பெயர்தான் தமிழ்ப் பண்பாடு என்று பதில் சொன்னவுடன் அவர் வேறு கேள்விக்குச் சென்று விட்டார்!

சங்கராச்சாரி முதல் சிவசங்கரி, கல்கி வரை ஓர் நேர்கோட்டுச் சிந்தனை எப்படி என்பது நம்மண்டூகங் களுக்குப் புரிந்தால் நல்லது.

இரண்டும் இரு துருவங்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ ஆதாரங்களை இலக்கியம், புராணம், வரலாறு என்ற மும்முனைகளிலும் எடுத்துக்காட் டலாமே!

1) யாதும் ஊரே, யாவரும் கேளிர் இது தமிழ்ப் பண்பாடு,
நாடோடிகளாக வந்து குடியேறிய ஆரியர், வர்ணதர்மத்தையும், ஜாதி படிக்கட்டு பேதத்தையும் (Graded Inequality) உருவாக்கி நிலை நாட்டி யது வைதிக நாகரிகம்!

2) சந்தியாவந்தனம், ஜபதம் செய்துவிட்ட பிறகு நீச்சபாஷை  தமிழில் பேச மாட்டார் இதே சங்கராச்சாரியார். சங்கராச்சாரியாரின் ஆப்த நண்பர், வித்துவான் சீடர் பலராமய்யரிடம்கூட காரைக்குடியில் உரையாட சங்கராச் சாரியார் தயாராகயில்லாததால் சந்திக்காமல் வெளி யேறியதை வித்துவான் பலராமன் அவர்களின் மகன் வரலாற்றுப் பேராசிரியர் ந. சுப்பிரமணியம் (மதுரைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறை முன்னாள் பேராசிரியர்) தன் வரலாறு எனும் நூலில் எழுதியுள்ளாரே! தமிழ்ப் பண்பாடு சமஸ்கிருதத்தை சகித்து மந்திர மொழி, கல்யாணம், கருமாதி,  பிரார்த்தனை, அர்ச்சனை என் றெல்லாம் ஏற்றதே - அதுபோல ஏன் வைதிகம் தமிழை ஏற்கவில்லை? வேறு வேறு என்பது தானே!

3) வேளாண்மைக்கு முன்னுரிமை, முதலிடம் தருவது தமிழ்ப்பண்பாடு.
உழுவோர் உலகத்தோர்க்கு அச்சாணி..

ஆனால், விவசாயம் பாபகரமான தொழில் ஏர் பிடிப்பது மகாபாவம் என்று கூறுவது வேத வைதீக நாகரிகம் அல்லவா?

மறுக்க முடியுமா?

4) பிராயச்சித்தம் வேத நாகரீகம் குற்றத்திற்கு தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்பது தமிழ்ப் பண்பு.

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று               குறள் (655)

5. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் இது தமிழ்ப் பண்பு தாயைப் புணர்ந்து, தட்டிக் கேட்ட தந்தையாரைக் கொன்ற பார்ப்பனப் பிள்ளைக்கும் பாவ மன்னிப்பு வழங்குவது வைதிக நெறி (திருவிளையாடற் புராணம் மாபாதகம் தீர்த்த படலம்) இப்படி உள்ளதை விதி விலக்காத சில பார்ப்பனர்கள் - தமிழ் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றாளர்கள் ஆனபடியோர் கூறுவதைக் கண்டு அப்போதே வெகுண்டெழுந்தார் இந்த சங்கராச்சாரியார்.

(இவை நல்லவை என்று கூறிடும் நம்மவர்களும் உள்ள பரிதாபத்தை என் செய்வது கீழே படியுங்கள்).

என்னவென்றால், வைதிகம் வேறே, த்ராவிடம் வேறே என்ற தப்பான அபிப்ராயம் பொது ஜனங்கள் மனஸில் அசைக்க முடியா மல் வேரோடி விட்டதாக நினைத்துக் கொண்டு, அவர்களுடைய ஆதர வைத் தாங்கள் ஸம்பாதிக்க வேண்டுமென்று பிராம்மணர்களி டையே அறிவாளிகளாக இருக்கப் பட்ட சில பேர் இந்த பேதத்துக்கு பலம் கொடுத்து எழுதியும் பேசியும் வருகிறார்கள்.

தமிழ் தேசத்தில் பூர்வத்தில் ஆட்சி  செலுத்தி வந்த மூவேந்தர்களும் ஸரி, பல்லவர்களும் ஸரி, வேத வித்யைகளுக்கும் வேத கர்மாக்களுக்கும் வேத ப்ராம்மணர்களுக்கும் பண்ணியிருக்கும் பெரிய தொண்டுகளை அடியோடு மறைத்துவிட்டு, அவர்கள் தமிழ் நாகரிகம் என்ற ஏதோ தனியாக இருந்த ஒன்றைப் போதித்த மாதிரியே எழுதுகிறார்கள். பேசுகிறார்கள்.

வரலாற்று ஆய்வாளர்களாக உண்மைகளைக் கூறும் பார்ப்பனர்கள் (விதி விலக்காகக்) கூறினாலும் எவ்வளவு ஆத்திரப்படுகிறார் பார்த்தீர்களா?

இந்த சங்கரமடம் ஏன்? எதற்காக? சங்கராச்சாரிகளின் பணி ஆன்மீகம் பரப்புவதா?

திராவிட இனவுணர்வை, அழிப்பதற்காகவா?

தமிழ்ப் பண்பாட்டைபற்றி உண்மைகளைக் கூறினால் அதைத் தடுப்பதுதான் எங்கள் வேலை என்பதுதானே!

கல்கியார் திரு(குதாள)ப்பணி இன்றும் தொடரு கிறதே ஏன்?

 புரிந்து கொள்ளுங்கள் சூத்திர அறிவு  ஜீவிகளே!

- ஊசி மிளகாய்

Saturday, July 5, 2014

நோன்புக்குத் தடை இங்கல்ல, சீனாவில்



சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள பள்ளி, அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் ரமலான் புனித மாதம் என்று நோன்பு மேற்கோள்வதைத் தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

தடை உத்தரவு வலைத்தளத்தின்மூலம்  பள்ளிகளுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. மக்களுக்கான நிர்வாகப் பணியாளர்கள், மாணவர்கள் நோன்பு இருக்கவோ, மதரீதியிலான செயல்களில் ஈடுபடவோ முடியாது என்று டர்ஃபன் நகர் வணிகவியல் விவகாரத் துறை அதன் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக சிங்ஜியாங் அரசு தன்னுடைய அரசுப் பணியாளர்களை நோன்பு இருப்பதால் அவர்களின் உடல் நலத்துக்குக் கெடுதல் ஏற்படும் என்று கூறியுள்ளது.

ரமலான் நோன்பு இருப்பதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்று அனைவருக்கும் நினைவூட்டி வருகிறோம் என்று அரசின் சார்பில் இயங்கும் போஷவ் வானொலி மற்றும் பல்கலைக்கழகத்தின் தொலைக்காட்சியின் வலைத்தளத்தில் கூறியுள்ளது. கட்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ரமலான் நோன்பு மேற்கொள்வதற்கானத் தடையை கட்டாயமாக நடைமுறைப்படுத்துவோம் என்றும் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி, சிங்ஜியாங் அரசு பெரும் அளவில் கூடுவது , பிரார்த்தனைக்கூட்டங்கள் நடத்துவது ஆகியவற்றை பிரிவினைவாத அச்சத்தால் தடுத்து வருகிறது.

உலக உய்குர் காங்கிரஸ் பேச்சாளர் தில்க்சாட் ரக்சிட் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறும்போது,   சீனா இதுபோன்ற அதிகார, அளவீடுகள்மூலம்  ஊழியர்களின் நம்பிக்கையை முடக்குகிறது. மத சுதந்திரத்தை உறுதிப் படுத்துமாறும், ரமலான்மீது அரசியல் அழுத்தங்களை நிறுத்துமாறும் சீனாவைக் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார். 

-டைம்ஸ் ஆப் இந்தியா, 3-.7.-2014

பழகிய யானையாகவே இருங்கள்!

ஒரு கொள்கையை பரப்புதற்கோ அல்லது நமது கருத்துக்கு மாறானவர்களை, அவர்கள் வழி தவறானது என்று உணர்த்தி, சரியான வழிக்குக் கொணரு தல்மூலம் வெற்றியடைய வேண்டுமாயின் என்ன செய்யவேண்டும் என்ற விவாதம் கடந்த சூழியம் கலந்துரையாடலில் (30.6.2014) எழுந்தபோது, பேராசிரியரும் பெரும் பகுத்தறிவுப் புலவருமான டாக்டர் மா.நன்னன் அவர்கள் பழகியவர்களை வைத்து, பழகாதவர்களையும் பழக மறுப்பவர்களையும், நம் வயப்படுத்திட முயலவேண்டும் என்ற சிறந்த கருத்துரையைச் சொன்னார்கள்.

யானைகளைப் பிடித்தல், பழக்குதலில் கும்கி யானையை வைத்து மற்ற யானைகளைப் பிடிப்பது போலவா என்று ஒருவர் கேட்க,

உடனே பேராசிரியர் மா.நன்னன் அவர்கள், இதற்கேற்ப, இதே கருத்தை வலியுறுத்தும் திருக்குறளை உடனடியாக, கணினியைத் தட்டியதும் கிடைக்கும் விடை போல எடுத்துரைத்தார்கள்!

எத்தனையோ ஆண்டு வகுப்பு களைச் சுவையுடன் எடுத்த இலக்கியப் பேராசிரியர் அல்லவா அவர்; எனவே, இது அருவிபோல் வந்து விழுந்ததில் வியப்பே இல்லை அல்லவா?

இணைந்த செயலையும், இணைத்துக் கொண்டால் விளையும் பயனும் அதிகம் என்பதே இக்குறள்!

வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று  (குறள் 678)

இதன் பொருள்: ஒரு வினையைச் செய்யும்போதே, அதனோடு ஒத்து வரக்கூடிய மற்றொரு வினையையும் சேர்த்து செய்து முடித்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு செய்வது வெறிநீர் ஒழுகக்கூடிய கன்னத்தையுடைய ஒரு யானையை, மற்றொரு யானையைக் கொண்டு பிடிப்பது போன்றதாகும்!
இதன் அடிப்படைத் தத்துவம் பழகியவர்களைக் கொண்டு பழகாதவர் களைப் பக்குவப்படுத்துங்கள்.

முரட்டுத்தனமோ, வன்முறை வழியோ தீர்வினைத் தராது என்பதும்,

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதும்கூட இதில் தொக்கி நிற்கிறது என்பது நமது கருத்து.

எப்படியெனில், வினையால் வினை ஆக்கிக் கோடல், ஒரு செயலே மற் றொரு செயலுக்கு முன்னோடி - அச் சாரம் என்பதும் சிந்தித்தால் புலப்படும்.
பல நேரங்களில் நல்ல பயன் விளை யக்கூடிய செயல்கள்கூட, செய்யக் கூடாத முறையில் செய்யத் துவங்கு வதால், வெற்றியைத் தர முடியாம லேயே, தோல்வியில் முடிந்துவிடுவது உண்டு அல்லவா?

எப்போது நிறுவனங்களிலோ, வாழ் விணையரிடமோ அல்லது தலைவர் களிடமோ அல்லது மேலாண்மையாளர் களிடமோ அவர்கள் கருத்துக்களைக் கூறும்போது, எடுத்த எடுப்பிலேயே அதனை, பட்டென்று ((Blunt ஆக) முடியாதுங்க, எப்படி முடியுங்க என்பது போன்று எடுத்தேன், கவிழ்த் தேன் பதில்களை விட்டெறியாமல், இணக்கமாக அவர்கள் வழியிலே சிறிது நேரம் உரையாடி, பிறகு மெல்ல மெல்ல அதனுள் உள்ள தொல்லைகள், அதனால் ஏற்படக்கூடிய துன்பங்கள், துயரங்கள்பற்றியெல்லாம் மென்மையான வகையில் - அதேநேரத்தில் கருத்தில் சமரசமின்றி செய்தால், வெற்றி நிச்சயம்!

எடுத்தவுடன் மறுப்போர்கூட, சிறிது நேரத்தில், நாம் சொன்ன முறையினால் ஈர்க்கப்பட்டு, சிந்தித்து, கொண்ட கருத்தை மாற்றிக் கொள்ள முயலுவார்கள் என்பது திண்ணம். பழகிய யானையாக இருப்பது நல்லது - பக்குவமான அணுகுமுறையும் அவசியம் ஆகும்.

- கி.வீரமணி

குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சி பட்டறை கொள்கைப் பயிர்களை உருவாக்கிய விதைப் பண்ணை

குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சி பட்டறை
கொள்கைப் பயிர்களை உருவாக்கிய விதைப் பண்ணை

தமிழர் தலைவர் சூட்டும் புகழாரம்

தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க உரிமை இல்லையாம்!

கடந்த மாதம் ஜூன் 26 முதல் 29 முடிய குற்றாலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப் பெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் சிறப்பு குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  கடந்த ஜூன் 26,27,28,29 ஆகிய நான்கு நாள்களிலும் குற்றாலத்தில் வீசிய கொள்கைச் சாரலும், அருவி போல் கொட்டிய தந்தை பெரியார் தம் தத்துவக் கோட்பாடுகள் பற்றிய விளக்கங்களும் மிகச் சிறப்பானதாகவும், இதமானதாகவும். இணையற்ற முறையிலும் அமைந்திருந்தது.

கொள்கைப் பயிரை உருவாக்கும் விதைப் பண்ணை

38ஆம் ஆண்டு தொடர்ந்து (ஆண்டு தோறும் பெரியாரியல் பயிற்சி முகாம்) நடைபெறும் இக்கொள்கைப் பயிற்சிப் பட்டறை இளைய தலைமுறையிடம் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியதாகும். பலரும் தேர்ந்த பேச்சாளர்களாகவும், கருத்தாளர்களாகவும் ஆகி, புகழ் மலர்களைப் பெற்று மகிழ்கின்றனர்.

நல்லொழுக்கம் - கட்டுப்பாடு - பகுத்தறிவுச் சிந்தனை என்ற பயனுறு வாழ்வியல் கூறுகளை அங்கே கூடும் இளைஞர்கள்  குறுகிய காலத்தில் கற்றுத் துறைபோக ஆயத்தமாகி விடுகின்றனர்!

கொள்கைப் பயிர்களை உருவாக்கும் விதைப் பண்ணையாகவும், நாற்றங்கால் ஆகவும் இப்பயிற்சிப் பட்டறை அமைகிறது என்பதைத் தொடர்ந்து கவனித்து வருபவர் களுக்குப் புரியும்.

அடுத்த பட்டறை புதுச்சேரியில்..

தமிழ்நாட்டில் மட்டுமல்ல; புதுச்சேரி மாநிலத் திலும்கூட இத்தகைய பயிற்சிப் பட்டறைகள் மூலம் பெரியார் இயல் பிரச்சாரத்தினை நடத்திட புதுவை மாநிலத் தோழர்களும் தலைமைக் கழகத்தினைத் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்!

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வள்ளல் வீகேயென் கண்ணப்பன்

முன்பெல்லாம் இடந்தேடி அலையும் நிலையும், அலைக்கழிக்கப்படும் அவலமும் இருந்தது. ஆனால், ஒப்பாரும் மிக்காருமில்லாத நம் உறவான வள்ளல் வீகேயென் கண்ணப் பனார் அவர்கள்; ஒரு பெரும் மாளிகையை அமைத்து, ஆண்டுதோறும் அவர்களே விருந்தோம்பல் நடத்துவதில் - நாம் எவ்வளவு அவர்களுக்குத் தொல்லை - செலவு இருக்கக் கூடாது என்பதற்காக குறைந்தபட்சம் சமையலை யாவது நாங்களே செய்து கொள்கிறோம் என்று  மன்றாடியும்கூட, அவர்கள் பிடிவாதமாக, இல்லை நான்தான் உபசரிப்பாளராக இருப்பேன்; அதில் யாம் பெறும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையேது என்று உறுதிபட மறுத்துவிட்டார்.

அவரின் வற்றாத பெரு உள்ள அன்பின் ஊற்றுதான் என்னே!

பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களோ - எவ்வாண்டும் இல்லாத அளவு 51 பட்டதாரிகள் - மொத்தம் புடைத்து சலித்து எடுத்து அனுமதிக்கப்பட்டவர்கள், எண்பது இருபால் இளைஞர்கள்.

பொறியாளர்கள், மேற்பட்டப் படிப்பாளிகள், பட்டதாரிகள் முதல் பலரும் உண்டு. ஈர்ப்புடனே பெரியார் இயலைச் சுவாசித்தினர்.

அவர்களுக்கு 4 நாள்களும் தங்கி வகுப் பெடுத்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, தலைமைக் கழக பொதுச் செயலாளர் வீ. அன்பு ராஜ், பிரச்சாரப் பொறுப்புப் பொதுச் செயலாளர் டாக்டர்  துரை. சந்திரசேகரன்,  டாக்டர் கவுத மன், பேராசிரியர் காளிமுத்து, கோ. கருணாநிதி, டாக்டர் அன்பழகன் ஆகியோர் பாராட்டுக் குரியோர் ஆவர். நாள்தோறும் காலையில் யோகா பயிற்சி தஞ்சை யோகராசா என்னும் இராசமாணிக்கம் அவர்களால் அளிக்கப்பட்டது.

இளைஞரணி பொறுப்பாளர் பொதுச் செயலாளர் ஜெயக்குமார், மாணவரணி செயலாளர் பிரின்சு  என்னாரெசு பெரியார், இளைஞரணி மாநிலச் செயலாளர் இராசபாளையம் திருப்பதி ஆகியோர் ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக மேற்பார்வையிட்டு நடத்திய தென் மாவட்ட அமைப்புச் செயலாளர் மதுரை வே. செல்வம், நெல்லை மண்டலச் செயலாளர் பால். இராசேந்திரம், நெல்லை மண்டலத் தலைவர் பொறியாளர் மனோகரன், மாவட்டத் தலைவர் டேவிட் செல்லதுரை அனைவரது ஒத்துழைப்பும், வீகேயென் ஊழியத் தோழர்கள் திரு. பாண்டியன் தலைமையில் பம்பரமாய் சுழன்ற பாங்கு மறக்கற்பாலதோ!

நான்கு நாட்களும் பார்வையாளராக இருந்து பயிற்சி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகை யில் ரூ.5000 மதிப்புள்ள இயக்க நூல்களைப் பரிசாக அளித்த ஈரோடு தோழர் சம்பத்குமார் அவர்களின் செயல் ஓர் எடுத்துக்காட்டானது.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை  
 
3.7.2014

Thursday, July 3, 2014

கச்சத்தீவு வழக்கு மத்திய அரசு கொடுத்த தகவல் தவறானது மீனவர் சங்க நிர்வாகி கண்டனம்



ராமேசுவரம், ஜூலை 3_ கச்சத்தீவில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மீனவர் பாதுகாப்பு பேரவை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை. வலைகளை உலர்த்திக் கொள்ளவும், ஓய்வெடுக்கவும் மட்டுமே அனுமதி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது.

இதுகுறித்து இந்திய _இலங்கை மீனவர் பேச்சு வார்த்தையின்போது தமிழகம் சார்பில் பங்கேற்ற தேவதாஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

கச்சத்தீவு பிரச்சினையில் நரேந்திரமோடி அரசு, முந்தைய காங்கிரஸ் அரசு பின்பற்றிய கொள்கையை தான் பின்பற்றுகிறது. ஜனவரி மாதம் பாம்பனில் நடைபெற்ற போராட்டத் தில் பங்கேற்ற பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக் கும் உரிமையை பெற்றுத் தருவதாக கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்ளேயே பா.ஜ.க. அரசு அதற்கு மாறான நிலைபாட்டை எடுத்துள்ளது.

மத்திய அரசு உயர்நீதி மன்றத்தில் கூறிய தகவல் தவறானது. வலைகளை உலர்த்திக் கொள்ளவும், ஓய்வெடுக்கவும் உரிமை உள்ளபோது மீன்பிடிக்க உரிமை இல்லை என்று கூறுவது ஏற்க முடியாது.

மீன்பிடிக்க உரிமை இல்லையெனில், அங்கு வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் என்ன தேவை இருக்கிறது. கச்சத் தீவை இலங்கைக்கு இந்தியா கொடுத்த ஒப்பந் தத்தில் மீன்பிடிக்க முழு உரிமை உண்டு என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை ஒரு போதும் விட்டுக்கொடுக்க முடியாது.

தேவைபட்டால் எங்களது உரிமையை நிலை நாட்டு வதற்கு மீனவர்கள் அனை வரும் படகுகளில் சென்று கச்சத்தீவை முற்றுகை யிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...