விழுப்புரம் ரயில்வே காவலதுறையினர்
இப்பொழுது ரயில் நிலையத்திற்குள் தங்குவதில்லையாம்; படபடத்துப் போயிருக்
கிறார்களாம். பயத்தால் ரத்தம் உறைந்து போய்க் கிடக்கிறார்களாம்.
அப்படி என்ன நடந்து விட்டதாம்? ரயில்வே
போலீசார் புத்தக வியாபாரி ஜெயவேல் என்பவர் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண் டனர். இரவு நேரத்தில் ஜெயவேலுவின் ஆவி மிரட்டுவதாகச் சிலர்
பீதியைக் கிளப்பி விட்ட னராம். இதன் காரணமாக போலீசார் யாரும் காவல்
நிலையத்துக்குள் தங்கு வதில்லையாம்.
இதற்கு ஏதாவது பரிகாரம் வேண்டாமா?
இப்படியெல்லாம் சொல் லுவதற்கென்றே சில ஆசாமிகள் இருப்பார்கள் அல்லவா! ஆவியை
விரட்ட சில சடங்கு களைச் செய்ய வேண் டும்; சுத்திகரிக்க வேண் டும் என்று
சொல்லவே, அச்சத்தின் பிடியில் கிடந்த போலீசார் அதற் கான ஆட்களை அழைத்து
கணபதி பூஜை நடத்தப் பட்டு, பூஜை புனஷ் காரங்களும் சாங்கோ பாங்கமாக
நடத்தப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டதாம்!
சரி. இந்த முட்டாள் தனத்தோடாவது ஆவி பயம் தொலைந்திருக்க வேண்டும் அல்லவா!
அதுதான் இல்லை மறைந்த ஜெயவேலின் ஆவிக்குப்
பயந்து இன் னும் காவல் நிலையத்திற் குள் தங்கிட அஞ்சி, வெளியில் காற்றாட
இரவுப் பணியாளர்கள் படுத்து கிடக்கிறார்களாம்.
எப்படி இருக்கிறது? காவல்துறையினருக்கு
உடல் பயிற்சிகள் எல்லாம் அவ்வப்போது கொடுக்கப்பட்டுதான் வருகின்றன. உடல்
பலமாக இருந்து என்ன பயன்?
மனபலம், அறிவுப் பலம் இல்லையே! ஆவி
என்றால் என்ன? மனிதன் இறந்து விட்டான் அதற்கு மேல் என்ன இருக்கிறது? ஆவி
என்றோ, உயிர் என்றோ தனியாக இருக் கிறதா! மனிதர் சத்துப் போய் செத்துப் போய்
விட்டான் என்றால் அவ்வளவுதான்!
ஆத்மா, மோட்சம், நரகம், பிதுர்லோகம்,
மறுபிறப்பு ஆகியவற் றைக் கற்பித்தவன் அயோக் கியன் நம்புகிறவன் மூடன்;
இவற்றால் பலன் அனுபவிப்பவன் மகா மகா அயோக்கியன் என்று தந்தை பெரியார்
சொன்னது எத்தகைய உண்மை என்பது இதன் மூலம் தெற்றென விளங்க வில்லையா?
உண்மையான ஆவி யிலிருந்து இட்லியாவது சுடலாம். இதுபோன்ற முட்டாள்தனமான ஆவி யிலிருந்து மனிதனின் அறிவைச் சுட்டுப் பொசுக்கலாம்.
வெறும் உடற்பயிற் சியைவிட, பகுத்தறிவுப் பயிற்சி தான் அவசியம் என்பது இப்பொழுது விளங்கவில்லையா?
காவல்துறைக்குப் பெரியார் நூல்களைக் கொடுத்துப் படிக்க வைத்து அதில் தேர்ச்சி பெறுகிறவர்களை மட்டும் வேலையில் அமர்த்துக!
- மயிலாடன்
No comments:
Post a Comment