சீனாவின்
வடமேற்கு பகுதியில் உள்ள சிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள பள்ளி, அரசு
அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் ரமலான் புனித மாதம் என்று நோன்பு
மேற்கோள்வதைத் தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
தடை
உத்தரவு வலைத்தளத்தின்மூலம் பள்ளிகளுக்கும், அரசு நிறுவனங்களுக்கும்
அனுப்பப்பட்டு உள்ளது. மக்களுக்கான நிர்வாகப் பணியாளர்கள், மாணவர்கள்
நோன்பு இருக்கவோ, மதரீதியிலான செயல்களில் ஈடுபடவோ முடியாது என்று டர்ஃபன்
நகர் வணிகவியல் விவகாரத் துறை அதன் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக
சிங்ஜியாங் அரசு தன்னுடைய அரசுப் பணியாளர்களை நோன்பு இருப்பதால் அவர்களின்
உடல் நலத்துக்குக் கெடுதல் ஏற்படும் என்று கூறியுள்ளது.
ரமலான்
நோன்பு இருப்பதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்று அனைவருக்கும்
நினைவூட்டி வருகிறோம் என்று அரசின் சார்பில் இயங்கும் போஷவ் வானொலி மற்றும்
பல்கலைக்கழகத்தின் தொலைக்காட்சியின் வலைத்தளத்தில் கூறியுள்ளது. கட்சி
உறுப்பினர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும்
ரமலான் நோன்பு மேற்கொள்வதற்கானத் தடையை கட்டாயமாக நடைமுறைப்படுத்துவோம்
என்றும் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின்
கம்யூனிஸ்ட் கட்சி, சிங்ஜியாங் அரசு பெரும் அளவில் கூடுவது ,
பிரார்த்தனைக்கூட்டங்கள் நடத்துவது ஆகியவற்றை பிரிவினைவாத அச்சத்தால்
தடுத்து வருகிறது.
உலக உய்குர்
காங்கிரஸ் பேச்சாளர் தில்க்சாட் ரக்சிட் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறும்போது, சீனா இதுபோன்ற அதிகார, அளவீடுகள்மூலம் ஊழியர்களின்
நம்பிக்கையை முடக்குகிறது. மத சுதந்திரத்தை உறுதிப் படுத்துமாறும்,
ரமலான்மீது அரசியல் அழுத்தங்களை நிறுத்துமாறும் சீனாவைக்
கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
-டைம்ஸ் ஆப் இந்தியா, 3-.7.-2014
No comments:
Post a Comment