Monday, April 7, 2014

மோடிமஸ்தான் பராக்! பராக்!!


மோடியைப் பிரதமருக்கான வேட் பாளராக முன்னிறுத்துவோர் யார்?
பார்ப்பன பனியா கூட்டம்தான் இதன் பின்னணியில் இருக்கிறது.

பார்ப்பனர் கூட்டம் பின்புலத்தில் ஏன் இருக்கிறது? இந்துத்துவா கொடியைப் பறக்க விட மோடியால் தான் முடியும் - இந்துத்துவா கொடி ஏறினால்தான் மனுதர்ம சாம்ராஜ்யம் உருவாகும்.

மனு தர்மம் வந்தால்தான் பிரம்மாவின் நெற்றியில் பிறந்ததாகக் கூறி வந்தார்களே, அப்படி பிறந்த பிராமணர்களுக்காகத்தான் இந்தப் பூலோகமே படைக்கப்பட்டது என்று நம்பப்பட்டதே, அந்தப் பொற்காலம் பூக்க வேண்டும் என்பதிலே பூதேவர் களான பார்ப்பனர்கள் மிதந்து கொண்டிருக்கிறார்கள்!
நரேந்திரமோடி பார்ப்பனர் அல்லவே; - அப்படி இருக்கும் பொழுது அவரை ஏன் ஆரியம் தூக்கிப் பிடிக்கிறது என்ற கேள்வி எழுலாம்.

இந்த இடத்தில்தான் ஆரியத்தின் தந்திரப் பொறி வஞ்சகமாக ஒளிந் திருக்கிறது.

பார்ப்பனராக இருந்து ஒருவர் அதனைச் செய்யும்போது அது எளிதில் அம்பலப்படுத்தபட்டு விடும்.

பார்பார், பார்ப்பனப் புத்தியை! பார்ப்பன உணர்வோடு செயல்படும் சூழ்ச்சிகளைப் பாரீர் பாரீர்! என்ற எளி தாக பொது மக்களை பார்ப்பனர் களுக்கு எதிராகக் கிளப்பிவிட முடியும்.

அதே வேலையை மோடியைப் போன்ற பார்ப்பனர் அல்லாதார் செய் யும்போது அப்படி ஒரு குற்றச்சாற்றை எளிதில் வைக்க முடியாதல்லவா! உணர வைப்பது எளிதல்லவே!

அப்படியே குற்றம் சொன்னாலும் அந்த இடத்தில் பார்ப்பனர் இருக்கும் பொழுது வைக்கப்படும் குற்றச்சாட்டு அளவுக்கு வலிமை பெறாது!

இந்த தந்திரம் தான் மோடியை முன்னிறுத்துவதில் இருக்கக் கூடியதாகும்.

தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்களே நிஜப் புலியைவிட வேஷம் போட்ட புலி அதிகமாக குதிக்கும் என்று; தான் உண்மையான புலியல்ல என்று வேஷம் போட்ட புலிக்குத் தெரியும். ஆகையால், நம்மை சந்தேகப்படுவார்களே என்ற எண்ணத்தால் அதிகமாகக் குதிக்கும்.

மோடியும் அப்படிதான் நடந்து கொண்டு வருகிறார்; பிராமணர் நம் சமூகத்துக்கு எவ்வளவோ சாதித்துக் கொடுத்திருக்கிறார்கள் என்றுகூட சொன்னதுண்டு.

பிரதமர் நாற்காலியில் அமரும் ஆசை மோடிக்கு அதிகமாகவே இருக்கிற காரணத்தாலும், பார்ப்பனர்கள் பனியாக்கள் கைகளில் தான் ஊடகங்களும், பண பலமும் இருக்கிற காரணத்தாலும் இவர்களைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ளும் யுக்தியும் மோடிக்கு உண்டு.

ஆக ஒருவர் இன்னொருவரால் பயன் அடையும்போது,  அதற்கான திட்டங்களும் செயல் முறைகளும் உருவாகத்தானே செய்யும்.

அதுவும் மோடி இருக்கிறாரே மோசடியான திட்டங்களை உருவாக்குவதில் மிகவும் கில்லாடி! செயற்கையாக, தன் பிம்பத்தை உயர்த்திக் காட்டும் வேலைகளைச் செய்வதில் கை தேர்ந்தவர். குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி சமூக இணைய தளங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அவரது டிவிட்டர் என்ற சமூக வலைதளத்தில் பத்து லட்சம்  பேர்  இணைந்திருக் கிறார்கள், அதுவும் அவர் கணக்கு துவங்கி குறுகிய காலத்தில் இது நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து மோடி கூறுகையில், இது வெறும் எண்ணிக்கை அல்ல மாறாக உங்களது அன்பு என்று பதிவு செய்திருந்தார். ஆனால் அவரது கணக்கில் 50 சதவீதம் போலி கணக்கு என்பது தற்போது தெரியவந்துள்ளது. லண்டனில், ஸ்டேட்டஸ் பீப்பிள்ஸ் என்ற இணையதள பொறியாளர்கள் குழு ஒன்று இது குறித்து ஆய்வு  செய்ததில் மோடியின் டிவிட்டர் கணக்கில் 50 சதவீதம் போலிப் பயனா ளர்கள் இருப்பதாக கூறியுள்ளார்கள்.

அதாவது அவரது கணக்கில் 46 சதவீதம் போலி கணக்கும், 41 சதவீதம் பேர் பயன்படுத்தப்படாத கணக்கா ளர்கள் எனவும் கூறியுள்ளனர். மீதமுள்ள 13 சதவீதம்  பேர் மட்டுமே உண்மையாக பின் தொடர்பவர்கள் என்பது தெரிகிறது.
மோடியின் டிவிட்டர் கணக்கு 2010 ஆம்  ஆண்டு வரை ஒரு லட்சம் பேர் இணைந்திருந்தனர். 2011 ஆம் ஆண்டு முடிவில் நான்கு இலட்சம் பேர் இணைந்திருந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களில் மட்டுமே அதிகமானவர்கள்  இணைந்திருப்ப தாக காணப்பட்டது. இப்போது அது போலித்தனமாக காட்டப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்று சொல்லுவது போல பா.ஜ.க. முன்னணி தலைவராக திகழும் மோடியின் மோசடி ஒட்டு மொத்த பா.ஜ.க.வுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்!

மகா மகா யோக்கியர் - நாணயமான வர் திருவாளர் பரிசுத்தம் என்பது போன்ற ஒரு தோற்றத்தையும் உரு வாக்க பல திட்டங்களைக் கையில் வைத்துள்ளார்.
இவரது புகழ் உலகெங்கும் பரவி யிருப்பது போல பிரச்சாரம் செய் கின்றனர்.

அதுவும் சமீபத்தில் சாயம் வெளுத்துப் போய்விட்டது.

அமெரிக்காவின் சிகாகோவிலி ருந்து தொழில் அதிபர்கள் சிலரும் எம்.பி.க்கள் சிலரும் மோடியைச் சந்திக்க வந்தனர் - அழைப்புக் கொடுத் தனர் என்று ஒரு கதையைக் கட்டி விட்டனர்.

உண்மை என்னவென்றால் மோடியைச் சந்திக்க வந்தவர்கள் அல்லர் அவர்கள். சுற்றுலாப் பயணி களாக வந்தவர்கள் அதற்காக அவர்களிடமிருந்து பணமும் வசூலிக் கப்பட்டது. இந்த விவரங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன.

அமெரிக்கா தொடர்ந்து மோடிக்கு விசா அளிக்க மறுத்து வருகிறது, பிரிட்டனும் அந்த நிலையில் தான் இருக்கிறது.

உள்ளூரிலேயே டெல்லி பல்கலைக் கழகத்தில் பேசச் சென்றபோது மாண வர்கள் எதிர்த்துக் குரல் கொடுத்தனர். கொல்கத்தாவில் தொழில் அதிபர் கூட் டத்தில் கலந்து கொள்ள செல்கிறார். குஜராத் முதல் அமைச்சர் மோடி என்று முதல் நாள் செய்தி வருகிறது.

அந்த இடத்தில் தொழில் அதிபர் கள் கூட்டத்தை நடத்திட மம்தா அரசு அனுமதி மறுத்தது என்ற செய்தி வருகிறது.

உள்ளூரிலேயே விலை போகாத ஒன்றாக ஆகி விட்டார்.

இதுதான் உண்மையான நிலை ஊழலை ஒழிப்பதில் உத்தமர் என்று சொல்லுகிறார்களே அவர்களை நோக்கி ஒரே ஒரு கேள்வி மாநிலத்தில் ஊழலை ஒழிப்பதற்காக அமைக்கப்படும் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கு ஏன் மோடி தயங்க வேண்டும்?

அதற்குரிய நீதிபதியை நியமிப்பதில் ஏன் கால தாமதம் செய்ய வேண்டும்?.

நீதிபதியை நியமிக்க மோடி முன்வராத நிலையில் ஆளுநரே அதற்கான நீதிபதியை நியமித்தபோது அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்ற வர்தானே இந்த யோக்கிய சிகா மணியான குஜராத் முதல் அமைச்சர் மோடி! அதிலும் தோல்வியை வாங்கிக் கட்டிக் கொண்டார் என்பதுதான் பரிதாபம்!

இப்பொழுது தனக்குத்தானே ஒரு லோக் அயுக்தாவை ஏற்படுத்திக் கொண்டார்.

குஜராத்
 
குஜராத் சட்டசபையில், ஊழல் களை கண்காணிக்கும் அமைப்பான, புதிய லோக் ஆயுக்தா மசோதா, காங் கிரஸ் கட்சியின் பலத்த எதிர்ப்புக் கிடையே நிறைவேறியது.

குஜராத்தில், முதல்வர் தலைமை யிலான தேர்வுக் குழுவுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான லோக் ஆயுக்தா சட்ட திருத்த மசோதா, ஆளுநர் கமலா பெனிவாலின் பரிந் துரைக்காக, மாநில அரசு, கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன், அனுப்பியது. ஆனால், இதனை நிராகரித்த ஆளு நர், லோக் ஆயுக்தாவின் தலைவராக, நீதிபதி மேத்தாவை நியமித்தார்.

இதனை, குஜராத் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவையும் உறுதிபடுத்தின. லோக் ஆயுக்தா நீதிபதி தீர்ப்பே இறுதியானது என, உச்சநீதிமன்றமும் கூறியது. இந் நிலையில், மாநில முதல்வர் தலைமையிலான தேர்வுக் குழுவிற்கு அதிகாரமளிக்கும், சர்ச்சைக்குரிய புதிய லோக் ஆயுக்தா மசோதா, குஜராத் சட்டசபையில்,  பலத்த எதிர்ப்புக் கிடையே நிறைவேறியது.

தற்போதுள்ள லோக் ஆயுக்தா சட்டம் 1986இன் படி, மாநில ஆளுநர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோரது அதிகாரங்களைக் குறைத்து, நிறை வேற்றப்பட்டுள்ள இந்த மசோதா வலுவற்ற ஒரு அமைப்பாகும் என, சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரி வித்துள்ளனர்.

குஜராத் மாநில எதிர்க்கட்சித் தலைவர் சங்கர் சிங் வகேலா கூறுகை யில், ""மாநில அரசின் ஊழல்களை, நீதிபதி மேத்தா அம்பலப்படுத்தி விடுவார் என்று நரேந்திர மோடி தலைமையிலான அரசு பயப்படுகிறது,'' என்றார். இந்தியாவுக்குப் பிரதமராகத் துடிக்கும் பேர் வழியின் முகவிலாசம் இதுதான்.

இப்பொழுது சி.ஏ.ஜி. ஒரு புதுக்கரடியை அவிழ்த்து விட்டுள்ளது. மோடி ஆட்சியில் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்பதுதான் அந்தக் கரடி!

அந்தோ பாவம் நரேந்திர மோடி!

Thursday, April 3, 2014

மோடியை பெரியாருடன் ஒப்பிடுவதா? நிதானமாகத்தான் பேசுகிறாரா விஜயகாந்த்?



தமிழகத்தில் வெண்தாடி வேந்தர் பெரியார் என்றால், அது தந்தை பெரியார். குஜராத்தில் வெண்தாடி வேந்தர் மோடிதான்!

- இப்படிப் பேசி இருக்கிறார் சினிமா நடிகர் விஜயகாந்த்.

அரசியலிலே நிதானமின்றி அவர் எப்படி யாவது உளறித் தொலைக்கட்டும்!

சமுதாயப் புரட்சி வீரரான ஒரு சகாப்த தலை வர்பற்றி வாய்க்கு வந்தவாறு விமர்சிக்கலாமா?

பாலும், நஞ்சும் ஒன்று என்று பேசலாமா?

கோட்சேயும், காந்தியும் ஒன்றே என்று கூறலாமா?

எலியும், பூனையும் இணையற்ற நண்பர்கள் என்று உளறலாமா?

பெரியார் யார்?

பேதங்கள் எந்த வடிவில் இருந்தாலும், அவற் றைப் பூண்டற்றுப் போகச் செய்யவேண்டும் என்று வெடித்துக் கிளம்பிய புரட்சியாளர் அல்லவா!

மனிதநேயத்தை வளர்த்த மாமனிதர் அல்லவா!

யானைக்கு மதம் பிடித்தாலும் சரி, மனிதனுக்கு மதம் பிடித்தாலும் சரி, இரண்டும் ஆபத்தே என்று அறிவுறுத்திய அறிவுலக ஆசான் அல்லவா பெரியார்!

அவரைப் போய் நரவேட்டை மனிதன் நரேந்திர மோடியுடன் ஒப்பிடலாமா?

மதவெறியர் மோடி! மனித நேயர் பெரியார்!

மனநோயாளிகளைத் தவிர இவ்விருவரையும் வேறு யாரால் இப்படி ஒப்பிட முடியும்?

இரண்டாயிரம் இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்படுவதற்குக் காரணமாகவிருந்த ஹிட்லர் அல்லவா இந்த மோடிமஸ்தான்!

மதவெறிக் கலவரத்தில் மருண்டு உயிருக்குப் பயந்து முகாம்களில் பதுங்கிக் கிடந்த முஸ்லிம் களைப் பார்த்து குழந்தை உற்பத்தி வேலையில் இறங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று ஈவிரக்க மற்ற முறையில் விமர்சித்த விஷமத்தின் ஊற்றுக் கண்ணல்லவா மோடி!

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, இந்துக் கள்  அலிகள் அல்ல - ஆண்மை மிக்கவர்கள் என்று நிரூபித்துக் காட்டி விட்டார்கள் என்று காட்டுமிராண்டிக் கருத்தை உதிர்த்த மோடி எங்கே?

சமூகநீதியின் தந்தை பெரியார் எங்கே?

சமூகநீதிக்காக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு தந்த பிரதமர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த பி.ஜே.பி.யின் பிரதிநிதி யல்லவா மோடி எங்கே?

உலக மக்களை எல்லாம் சகோதரத்துவம், சமத்துவம் என்ற பார்வையில் பார்த்து மனித நேயத்தையும், பகுத்தறிவையும் போதித்த புத்தரின் மறுவடிவமாம் தந்தை பெரியாரை விளையாட் டுக்குக்கூட இப்படி ஒப்பிட்டுப் பேசலாமா?

நிதானம் இழந்து பேசும் விஷம விளையாட்டு வேலைகளையெல்லாம் அரசியலோடு நிறுத்திக் கொள்ளட்டும்! கருஞ்சட்டைப் படையினரிடம் வைத்துக்கொள்ள வேண்டாம்.
 
ஏன்?  தந்தை பெரியார்பற்றி பொறுப்பற்றுப் பேசுவதை தமிழ்நாட்டு மக்களே பொறுத்துக் கொள்ளமாட்டார் கள். பெரியார் இந்த மண்ணை மணந்த மணாளர்; ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் மூச்சு! அடக்கப்பட்ட மக்களுக்காக பொங்கி எழுந்த அரிமா!

சுண்ணாம்புக்கும், வெண்ணெய்க்கும் வித்தி யாசம் தெரியாத வெண்ணெய் வெட்டி வீரர் கள் விபரீதத்தை ஏற்படுத்தும் வார்த்தை களைக் கொட்டவேண்டாம் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

பெல் ஒப்பந்தத் தொழிலாளர்: வரவேற்கவேண்டிய தீர்ப்பு

திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணி யாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வயிற்றில் பால் வார்த்த ஒரு தீர்ப்பை மதுரைக் கிளை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வழங்கியுள்ளார். 1978 ஆம் ஆண்டு முதல் பெல் நிறுவனத்தில் ஒப் பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றத் தொடங்கினர்.

அவர்களிலே பட்டதாரிகள் உண்டு, பட்டயப் படிப்புப் படித்தவர்கள் உண்டு. எத்தனை ஆண்டுகாலம் பணியாற்றி னாலும் அவர்கள் தினக் கூலிகள் போலத்தான் - பணி நிரந்தரப்படுத்தப்படுவதில்லை; 58 வயது  முடிந்தவுடன், எந்தவிதமான பலன்களுமின்றி வெறும் கையோடு வெளியே போகவேண்டியதுதான்.

துப்புரவுப் பணியிலிருந்து அந்த நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்யாத வேலையில்லை; தொழில் நுட்பம் தொடர்பான பணிகளாக இருந்தாலும் அவை அவர்களுக்கு அத்துப்படியே!

வேலையை வாங்கிக்கொள்வார்கள் - ஆனால், வேலைக்குரிய அங்கீகாரம் மட்டும் அளிப்பதில்லை. காரணம், அவர்களில் எவரும் உயர்ஜாதிக்காரர்கள் கிடையாதே!

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்தான் நூற் றுக்கு நூறு சதவிகிதமாகும். அதனால் பெல் நிறுவனத்தின் உயர்ஜாதி ஆளுமை அவர்களை அலட்சியப்படுத்தி வந்தது.

திராவிடர் கழகம் - அதன் பெல் தொழிலாளர் கழகம் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் தொடர்ந்து இந்த ஒடுக்கப் பட்ட நாதியற்ற மக்களின் அடிப்படை உரிமை களுக்காகக் குரல் கொடுத்தே வந்திருக்கிறது; தேவைப்படும்பொழு தெல்லாம் போராட்டங்களையும் நடத்தியிருக் கிறது.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையிலும்கூட ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதுண்டு.

இதில் என்ன கொடுமையென்றால், அரித்துவாரில் இயங்கிவரும் இதே பெல் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 557 பேர் நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

பெல் நிறுவனம் இந்தியாவின் பல்வேறு மாநிலங் களிலும் இயங்கி வருகிறது. ஒரே அமைப்பின்கீழ் இயங்கும் நிறுவனம், இடத்திற்கு ஏற்ப விதிகளை மாற்றிக் கொள்ள முடியுமா? அப்படி மாற்றிக் கொண்டு செயல்பட்டு இருக் கிறது என்றால், அது ஒரு வகையான ஒழுங்குக் குறைவான நிர்வாகச் சீர்கேடு என்றே கருதப்படவேண்டும்.

ரயில்வேயில் ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலா ளர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டும் உள்ளனர். நீண்ட போராட் டத்திற்கும், வேலை நிறுத்தத்திற்கும் பிறகு நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றி வந்த 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவையெல்லாம் நடந்தாலும் திருவெறும்பூர் பெல் நிறுவனம் மட்டும் சற்றும் அசைந்து கொடுக்காமல் இடித்த புளிபோலவே இருக்கும்.

இதற்கு முடிவுகட்டும் வகையில் சட்ட ரீதியாகச் செயல் படுவது என்று திராவிடர் கழகத் தலைவர் அவர்களால் தீர்மானிக்கப்பட்டு, திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் இயங்கிவரும் பெல் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், அதன் பொதுச்செயலாளர் தோழர் மு.சேகர் மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கினைத் தொடர்ந் தார். திராவிடர் கழக சட்டத் துறைத் தலைவர் வழக்குரை ஞர் த.வீரசேகரன் சங்கத்தின் சார்பில் வாதாடினார்.

நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் அவர்கள் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திலும், அரித்துவார் பெல் நிறுவனத் திலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டுள் ளதைச் சுட்டிக்காட்டி, திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்தவேண்டும் என்று சிறப்பான தீர்ப்பினை அளித்தார் (28.2.2014). தீர்ப்புக் கிடைத்த எட்டு வாரங்களுக்குள் ஆணை நிறைவேற்றப்படவேண்டும் என்றும் நீதிபதி, தம் தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளார்.

பெல் நிறுவனம் இந்தத் தீர்ப்பை செயல்படுத்தியே தீர வேண்டும். பொதுவாக தொழிலாளர்கள் - பணியாளர் களுக்குச் சாதகமாக தீர்ப்பு வரும்பொழுதெல்லாம் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்து, காலம் கடத்துவதை வழமையாகக் கொண்டது திருவெறும்பூர் பெல் நிறுவனம். அவர்கள் செலவு செய்வது சொந்தப் பணம் அல்லவே - நிறுனத்தின் பணம்தானே! தொழிலாளர்கள், பணியாளர்கள் நீதிமன்றம் செல்லவேண்டுமானால், அவர்கள் சொந்தப் பணத்தையல்லவா செலவழித்துத் தீரவேண்டும்.

இந்த நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கி செயல் பட்டுக் கொண்டிருக்கிறது பெல் நிர்வாகம். இந்தப் பிரச் சினையிலும் அவ்வாறு நடந்துகொள்ளாது என்று எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவில் உள்ள நவரத்தினங்களுள் ஒன்று பெல் நிறுவனம். இலாபத்தைத் திரட்டிக் கொடுக்கிறது; அந்த இலாபத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கடுமையான உழைப்பின் பங்கு இருக்கிறது என்பதை மனிதாபிமானத் துடன் ஒப்புக்கொண்டு, நீதிமன்றம் பிறப்பித்த கட்டளை யைச் செயல்படுத்தி, சுமூகமான ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் திராவிடர் தொழி லாளர் கழகமும், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கமும் வெறும் கூலி தொடர்பான சமாச்சாரங்களுக்காக மட்டும் குரல் கொடுக்கும் அமைப்புகளாக இல்லாமல், தொழிலாளர்கள் மத்தியில் சமூகப் பொறுப்பையும், பகுத்தறிவு உணர்வையும் வளர்த்தெடுக்க அயராது பாடுபட்டுக் கொண்டுவரும் அமைப்புகளாகும்.

மதவாத சக்திகள் வாய் பிளந்து, அதற்குத் தொழிலா ளர்கள் பலியாகி விடக் கூடாது என்பதற்காக எப்பொழு துமே விழிப்போடு பணியாற்றும் அமைப்பாகும்.

அந்த வகையில் கழகத்தின் இந்த அமைப்புகளையும், அவற்றை வழிநடத்தும் நிர்வாகிகளையும் பாராட்டுகி றோம். சங்கத்தை மேலும் வளர்த்து, செழுமைப்படுத்தி, தொழிலாளர்கள் ஒற்றுமையைக் கட்டிக் காத்து, அவர்கள் மேலும் பெறவேண்டிய உரிமைகளுக்காகத் தொடர்ந்து பாடுபடும் என்பதை இந்த அமைப்பில் இல்லாத தொழி லாளர்த் தோழர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Thursday, March 27, 2014

சொத்துக் குவிப்பு

ஊழலை ஒழிப்பேன் என புறப் பட்டுள்ள ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு பற்றி, பெங்களூரு நீதிமன் றத்தில் அரசு வழக்குரைஞர் பவானி சிங் ஆதாரப்பூர்வ வாதம்.

ஜெயலலிதா சுமார் ரூ.4000 கோடி அளவிற்கு சொத்து வைத்துள்ளார்.

1. அதிகாரிகளைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த விலையில்  நிலங் களை வாங்கியுள்ளார்.

2. அவருடைய பொருளாதார நிலைக்கும், வாங்கிய    நிலங்களுக் கும் சம்பந்தம் இல்லை.

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப் புப்பற்றி, அரசு வழக்குரைஞர் பவானி சிங் வெளியிட்ட பட்டியல் வருமாறு:

1. வாலாஜாபாத் அருகே 600 ஏக்கர் நிலம்.

2. கொட நாடு - 800 ஏக்கர் நிலம் மற்றும் பங்களா

3. சிறுதாவூர் 25 ஏக்கர் அளவில் பங்களா

4. நீலாங்கரையில் 2 ஏக்கர் நிலம்

5. கன்னியாகுமரி அருகே, மீனங் குளம், சிவரங்குளம்,    வெள்ளங் குளம், அருகே 1190 ஏக்கர் நிலம்

6. காஞ்சிபுரம் அருகே  200 ஏக்கர் நிலம்

7. தூத்துக்குடி அருகே வைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர் நிலம்

8. ரெவரோ அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர் நிலம்.

9. ஜெயலலிதாவுக்கு 30 கார்கள், டிரக்கர்கள் உள்ளன.

10. அய்தராபாத்தில் திராட்சைத் தோட்டம்.

25.3.2014 அன்று அரசு வழக்கு ரைஞர் பவானி சிங் வெளியிட்ட இந்த ஆதாரங்களை, இன்றைக்கு எந்த செய்தித்தாளும் வெளியிட வில்லையே.

அரசுக்கு நட்டம் என தணிக்கையாளர் சொன்னதை வைத்து, ரூ. 1,7,6000 கோடி ஊழல் என நாள் தோறும் ஊளையிடும் ஊடகங்கள், ரூ.4000 கோடி அளவில் சொத்துக் குவிப்பை ஜெயலலிதா சேர்த்துள்ளார் என ஆதாரப்பூர்வமாகத் தெரிவித்ததை ஏன் ஊடகங்கள் மறைக் கின்றன?

சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணும் பார்ப்பனனுக்கு ஒரு நீதி. இதுதான் ஊடக தர்மமா?

- - குடந்தை கருணா

Saturday, March 22, 2014

பெரியார் எனும் மாபெரும் சக்தியால் பார்ப்பன ஆதிக்கம் வீழ்ச்சி!




பெரியார் எனும் மாபெரும் சக்தியால் பார்ப்பன ஆதிக்கம் வீழ்ச்சி!

வடநாட்டிலும் பார்ப்பனர் ஆதிக்கம் வீழ்ச்சி பெற திராவிடர் இயக்கம் தேவை!

தி டைம்ஸ்  ஆஃப் இந்தியா படப்பிடிப்பு


புதுடில்லி, மார்ச் 21- பெரியார் எனும் மாபெரும் சக்தியால் தென்னகத்தில் பார்ப்பன ஆதிக்கம் வீழ்ச்சி பெற்றது. வடநாட்டிலும் அந்நிலை உருவாகிட திராவிடர் இயக்கம் தேவை என்று  தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு ஆய்வின் அடிப்படையில் படம் பிடித்துள்ளது.

1917-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் காங்கிரஸ் மாகாண மாநாடு என்ற பெயரில் பிரபல ஆங்கில தினசரி ஒன்றில் விளம்பரம் வந்தது. அதில் மதராஸ் மாகாணத்தில் இருந்து கலந்துகொள்ளவந்த பார்ப் பன பிரதிநிதிகளின் கண் களில் கலக்கம் காணப்பட் டது. கொல்கத்தாவில் உள்ள தமிழ் பார்ப்பனர் நடத்தும் தஞ்சாவூர் மீல்ஸ் ஹவுஸ் என்ற உணவு விடுதியில் தமிழகத்தில் இருந்து வந்த பார்ப்பன பிரதிநிதிகள் சி.எஸ். நர சிம்மாச்சாரி தலைமையில் தமிழகத்தில் பார்ப்பனர் களின் ஆதிக்கம் வலுவி ழந்து வருவதையும் தெற்கே பார்ப்பனர் அல்லாத மாற்று சக்தி பலம் வாய்ந்ததாக மாறிக்கொண்டு வருவது பற்றி கவலையுடன் விவா தித்தனர். இந்தியாவில் முதல் முறையாக பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்ற இரண்டு பிரிவு அரசி யல் உருவாகிக்கொண்டு இருந்தது, கொல்கத்தா காங் கிரஸ் மாநாட்டில் இதன் தாக்கம் வெளிப்படத் துவங்கியது.

1892 முதல் 1909 வரை..

1892 முதல் 1909 வரை காங்கிரசில் பார்ப்பனர்கள் ஆதிக்கமே 50விழுக்காடு அதிகமாக இருந்தது; இது 1920 களில் 19 விழுக்காடு குறைய ஆரம்பித்தது. சுதந் திரம் அடைய சிலவருடம் இருக்கும் வரை வடக்கு மாநிலங்களில் 9 விழுக்காடு இருந்த பார்ப்பனர்கள் அரசியலில் பெரும் பங்கு வகித்தனர். இந்த காலகட் டத்தில் மராட்டியத்தில் அம்பேத்கர் மற்றும் பிகார் மாநிலத்தில் ஜகஜீவன் ராம் போன்றோர் தங்களது சமு தாய மக்களிடையே பெரும் அரசியல் விழிப்புணர்ச்சி யைக் கொண்டு வந்தார் கள். இந்த நிலையில் இஸ் லாமியர்களும் அரசியல் விழிப்புணர்ச்சி பெற ஆரம்பித்தார்கள்.  பாபு ஜெகஜீவன்ராமின் பார்ப்பனர் அல்லாத இயக் கம் வலுப்பெற முடியாத நிலையில் உயர்சாதியினர் அந்த இடைவெளியை பிடித்துக்கொண்டனர்.

பார்ப்பனர்களின் ஆதிக்கம் காங்கிரசில் மாத்திரமல் லாது மாற்றுக் கட்சியாக உருவெடுத்த பொதுவு டமைக் கட்சிகளிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் பெருகத் துவங்கியது. பிறகு  பொதுவுடமைக் கட்சி களில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் சுதந்திரத்திற்குப் பிறகு குறையத்துவங் கியது. இன்றைய நிலையில் பொதுவுடமை கட்சிகளின் 4 முக்கிய பொறுப்புகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இருப்பதை அரசியல் விமர் சகர்கள் சுட்டிக்காட்டியுள் ளனர்.    பெரியார் எனும் மாபெரும் சக்தி
ஆனால் தெற்கே பார்ப் பனர் அல்லாத மாற்று அணி பெரியார் என்னும் மாபெரும் சக்தி மூலம் வளர்ந்துகொண்டு இருந் தது. இந்தத் தாக்கம் தற் போதைய ஆந்திரா கேரளா மற்றும் கர்நாடக மாநி லத்தில் பார்ப்பனர் அல் லாத இயக்கம் பிறகு திரா விட இயக்கமாக மாறி, காங் கிரஸ் மற்றும் பார்ப் பனர்களின் எந்த ஒரு இயக்கத்திற்கு பெருத்த தடையாக உருவெடுத்தது.

சுதந்திரத்திற்குப் பிறகு வடக்கில் சரியான அளவில் பார்ப்பனர் எதிர்ப்பு இயக் கம் வலுப்பெறாத நிலை யில் உயர்சாதிக்காரர்களின் ஆதிக்கம் மீண்டும் வளர்ச் சியடையத் துவங்கியது. இன்று பீகார், உத்திரப் பிரதேசம் போன்ற மாநி லங்களில் எல்லாக்கட்சியி லும் பார்ப்பனர் மற்றும் அவர்களுக்கு ஆதவராக செயல்படும் உயர்சாதிக் கட்சியினரின் ஆதிக்கம் உள்ளது. இன்று மெல்ல மெல்ல மாநில முதல்வர் கள் பார்ப்பனர்களின் கைப்பாவைகளாக மாறிக் கொண்டு இருக்கின்றனர். தற்போதைய பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநி லங்களில் பார்ப்பனர்கள் குறைந்த அளவில் இருந் தாலும் பார்ப்பனர்களின் ஆளுமை இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றனர்.  மேலும் தமிழகத்தில் ஜெயலலிதா, மேற்கு வங்கத்தில் மமதாபானர்ஜி, போன்ற நேரடி பார்ப்பன முதல்வர்கள் போல் இந் தியா முழுவதும் பல மாநி லத்தில் உள்ளனர்,

அதே போல் நரேந்திரமோடி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராராஜே போன் றோர் பார்ப்பனர்களின் கைப்பாவையாக மாறியுள் ளனர்.   இந்தியா அரசியல் களத்தில் அவ்வப்போது பெருத்த மாற்றம் ஏற்பட்டு பார்ப்பனர்களின் ஆதிக்கம் சரிவடையப்போகும் நேரத்தில் எல்லாம் பார்ப் பனர்கள் தங்களின் ஆதிக் கத்தை நிலை நிறுத்த எந்த விதத்திலாவது முயன்று கொண்டு இருப்பார்கள், சத்தீஸ்கர் மாநிலத்தில் விஜய்பகுகுணா ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது அந்த இடத்தில் பார்ப்பனர் ஒருவரை முதல்வராக வர தலைமைக்கு அழுத்தம் கொடுக்கும் வேலையில் மூத்த பார்ப்பன பெண் அரசியல்வாதி பிரபலப் பத்திரிக்கையாளர் மூலம் இறங்கினார்.

மாற்றம் பெற்று வரும் அரசியல் களத்தில் பார்ப் பனர் அல்லாத அரசியல் சக்திகள் முன்னேற்றம் பெற்று வந்தாலும், பார்ப் பனர்கள் தங்களின் ஆதிக் கத்தை இழக்கத் தயாராக இல்லை,   சமூகநீதிக்களத் தில் எந்தவிதத்திலும் முன் னேற்றம் கண்டுவிடக் கூடாது என்று முனைப் போடு அரசியல் களத்தில் பார்ப்பனர்கள் உறுதியாக உள்ளனர்.  பார்ப்பனர் களின் ஆதிக்கம் குறைந்து வரும் இதுபோன்ற சூழ லில் திராவிட இயக்கம் போன்று வலுவான இயக் கம்  இந்தியாவெங்கும் உரு வாகும் சூழலில் இந்தி யாவில் சமூகநீதி மலர்ந்து சமத்துவம் ஏற்படுவது உறுதி.

நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 21.3.2014 பக்.11)



Thursday, March 20, 2014

ஹிந்து ராஷ்டிரம் வந்தால்...

ஹிந்து ராஜ்ஜியத்தை அமைக்கப் போகிறோம் - அமைக்கப் போகிறோம் என்று சொல்லி வருகிறார்கள் அல்லவா - அந்த ராஜ்ஜியத்தில் மக்கள் தொகையில் கிட்டதட்ட சரி பகுதியாக இருக்கக் கூடிய பெண்களின் நிலை என்ன?

ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருக்கக் கூடிய மோகன் பகவத் சொன்னதை எடுத்துக் காட்டினாலே போதுமானது. அசாமின் சில்சா நகரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்ற அதன் தலைவர் மோகன் பகவத் கூறியதை தினமலர் ஏடு வெளியிட்டிருந்தது.

மேலை நாட்டு நாகரிகத்தில் மயங்கி, இந்துமத பண்பாடு, கலாச்சார பெருமைகளைப் புறந்தள்ளி, கண்டபடி வாழ்பவர்கள் மத்தியில்தான் கற்பழிப்புகளும், பாலியல் வன்முறைகளும் நடக்கின்றன. இந்தியா முன் பாரதமாக இருந்தபோது, இது போன்ற வன்முறை சம்பவங்கள் கிடையாது.

மேலை நாகரிகத்தைப் பின்பற்றி பாரதம் இந்தியா என மாறிய பிறகுதான் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து விட்டன. நகர்ப்புறங்களில் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடக்கின்றன. கிராமப்புறங்களிலோ, பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளிலோ அத்தகைய குற்றங்கள் அறவே நடப்பதில்லை என்ற கூறியபோது பெரும் சர்ச்சைகள் வெடித்தன. இதற்கு விளக்கம் கூறுவதாக நினைத்துக் கொண்டு மத்தியப் பிரதேசம் இந்தூரில் (16.1.2013) மோகன் பகவத் தெரிவித்த கருத்து பெருமாள் போய் பெத்த பெருமாள் என்ற கதையாகி விட்டது. என்ன கூறினார் பகவத்?

திருமணம் என்பது கணவன் மனைவிக்கு இடையேயான ஒப்பந்தம்; திருமணத்தின்போது, நீ வீட்டை நன்றாகக் கவனித்துக் கொண்டால்  உன் தேவைகளை நான் கவனித்துக் கொள்வேன். உன்னையும் பாதுகாப்பேன் என கணவன் ஒப்பந்தம் செய்கிறான். அந்த ஒப்பந்தத்தை மனைவி மீறும்போது வேறு வழியின்றி மனைவியைக் கணவன் கைவிடுகிறான் என்று பேசினாரே பார்க்கலாம் (தினமலர் 7.1.2013 பக்.12).

குடும்ப வாழ்க்கையில் மனைவி செய்யும் தவறுத லால் தான் கணவன் மனைவியைக் கை விடுகிறான் என் கிறார் அப்படியானால் கணவன் தவறே செய்யாதவனா? இன்னொன்றையும் நுட்பமாகக் கவனிக்க வேண்டும்  இந்தியா பாரதமாக இருந்தபோதெல்லாம் சரியாக இருந்ததாம். இதன் பொருள் என்ன? பாரதம் என்பதற்கு இவர்கள் என்ன பொருளை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்?
அது புராண மூலத்தைக் கொண்டது என்பதால் அந்த வகையில் திசை திருப்பப் பார்க்கின்றனர்; இவர்கள் கூற்றுப்படியே பார்த்தாலும்  இந்துக்களின் மகா காவியமான பாரதம்கூட பெண்ணை இழிவுபடுத்து வதாகத் தானே உள்ளது! பெண்ணை வைத்துச் சூதாடியது எந்தவகை ஒழுக்கத்தைச் சேர்ந்ததாம்? அந்தப் பெண்கூட அய்ந்து கணவன் போதாது என்று ஆறாவதான கர்ணன்மீது காதல் கொண்டது எந்த வகை ஒழுக்கத்தைச் சேர்ந்ததாம்?

மோகன் பகவத் இந்தூரில் தெரிவித்த கருத்துக்கு சி.பி.எம். பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தாகாரத் நறுக்கென்று இந்துத்துவாவின் மூக்கை வெட்டும் கருத்தினைத் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சு எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. அவர்கள் இந்துகள், இந்துத்துவா, மனுதர்ம சாஸ்திரத்தின்படி நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என விரும்பியவர்கள் ஆகவே அவர்களின் கொள்கையை மோகன் பகவத் பிரதிபலித்துள்ளார் என்று அதே தினமலரில்தான் (7.1.2013) வெளியிட்டு இருந்தது.

திருவாளர் சோ ராமசாமி ஒவ்வொரு துக்ளக் இதழிலும் பெண்களை மட்டம் தட்டி எழுதும் போக்கை வழமையாகத்தான் கொண்டுள்ளார்.

கேள்வி: மகளிர் தினத்தன்று யாருக்கு வாழ்த்துச் சொன்னீர்கள்?

பதில்: அடடா? மகளிர் தினம் என்று ஒன்று உண்டா? அது இப்போது வந்து போய் விட்டதா? தெரியாமல் போய் விட்டதே! தெரிந்திருந்தால் உங்களுக்கு வாழ்த்தும் சொல்லியிருப்பேனே! சரி கொஞ்சம் லேட்டாக இப்போது உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் (துக்ளக் 26.3.2014 பக்21).

ஹிந்துத்துவாவில் ஊறிய பாழும் நெஞ்சங்கள் எல்லாம் இந்தவரிசையில்தான் பெண்களைக் காலில் போட்டு மிதிக்கும் நஞ்சினைத்தான் கக்குவார்கள்.

ஹிந்துத்துவா வந்தால் இந்தக் கெதிதான்.

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதி உள்ள பெண் களுக்கு ஆண்களைவிடக் கூடுதல் பொறுப்பும் கவலையும், கடமையும் உண்டு. அதுதான் பிஜே.பி. என்ற அணி எந்தகாரணத்தை முன்னிட்டும் அதிகா ரத்தைக் கைப்பற்றி விடக் கூடாது  அதே போல கொள்கையளவில் பிஜேபியுடன் மறைமுகக் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கும் அ.இ.அ.தி.மு.க.வுக்கும் தேர்தலில் நல்ல பாடத்தைக் கற்பிக்க வேண்டும்.

மோடிக்கு முட்டுக் கொடுப்பவர்களைக் கேட்கிறோம்!


27.2.2002 புதன் அன்று  காலை 7.20 மணிக்கு அயோத்தியிலிருந்து வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றது. அதில் பயணம் செய்த கரசேவகர்கள் ரயில் நிலையத்தில் கலாட்டா செய்ததால் அவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி பொது மக்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

அந்தப் பெட்டியில் பயணம் செய்த 26 பெண்கள், 15 குழந்தைகள் உட்பட 58 பேர் எரிந்து சாம்பலாகி விட்டனர்.

இதனைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரத்தில் ஒரு சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்!

முதல் அமைச்சர் மோடி அந்தக் கலவரத்தை இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் மிகவும் ஆணவமாக - பேசினார்.

நியூட்டன் விதிகளின்படி ஒவ்வொரு விளைவிற்கும் எதிர் விளைவு உண்டு என்று இனப்படுகொலைக்கு அறிவியல் விளக்கம் கொடுத்தார் முதல் அமைச்சர் நரேந்திர மோடி!

கலவரத்தையொட்டி சிறுபான்மை மக்களுக்கு அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களைக்கூட குழந்தைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என்று வக்கிரப் புத்தியோடு வர்ணித்தார்!

12 ஆண்டுகளுக்குப் பிறகு (2014இல்) பிரதமர் வேட்பாளராக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நிறுத்தப்பட்டுள்ள நரேந்திர மோடியை நோக்கி  முன்பு குஜராத்தில் (2002-இல்) நடைபெற்ற திட்டமிட்ட இன ஒழிப்பு படுகொலைபற்றி இப்போது நீங்கள் இதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?  வருத்தம் தெரிவிப்பீர்களா? என்ற கேள்விக்கு,

ஒரு நல்ல சிமெண்ட் சாலையில் வேகமாகக் கார் செல்லும்போது, ஒரு நாய்க்குட்டி அடிபட்டு விட்டது என்றால், பின் சீட்டில் உட்கார்ந்திருக்கிற எனக்கு சிறிது வருத்தம் ஏற்படத்தானே செய் யும்? என்று கூறிய பதில் - மனிதா பிமானமோ, செத்தவர்களுக்காக வருந் தும் நிலையோ கூட ஏற்படாத  - இரக்கமற்ற ஆணவத் தின் குரல் அல்லவா?

இந்த குஜராத் இந்தியா முழுவதும் பரவுவதுதான் ஆரோக்கியமான ஜனநாயகமா?

இவரை உயர்த்திப் பிடிக்க தமிழ்நாட்டுத் தமிழர் இன உணர்வாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் கட்சிகள் ஓடலாமா? கூட்டணி என்ன கொள்கைக் கூட்டணியா? அல்லது வெறும் சீட்டணியா?
சிந்தியுங்கள் வாக்காளர்களே!

- சர்ச்லைட்

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...