மோடியைப் பிரதமருக்கான வேட் பாளராக முன்னிறுத்துவோர் யார்?
பார்ப்பன பனியா கூட்டம்தான் இதன் பின்னணியில் இருக்கிறது.
பார்ப்பனர் கூட்டம் பின்புலத்தில் ஏன்
இருக்கிறது? இந்துத்துவா கொடியைப் பறக்க விட மோடியால் தான் முடியும் -
இந்துத்துவா கொடி ஏறினால்தான் மனுதர்ம சாம்ராஜ்யம் உருவாகும்.
மனு தர்மம் வந்தால்தான் பிரம்மாவின்
நெற்றியில் பிறந்ததாகக் கூறி வந்தார்களே, அப்படி பிறந்த
பிராமணர்களுக்காகத்தான் இந்தப் பூலோகமே படைக்கப்பட்டது என்று நம்பப்பட்டதே,
அந்தப் பொற்காலம் பூக்க வேண்டும் என்பதிலே பூதேவர் களான பார்ப்பனர்கள்
மிதந்து கொண்டிருக்கிறார்கள்!
நரேந்திரமோடி பார்ப்பனர் அல்லவே; - அப்படி இருக்கும் பொழுது அவரை ஏன் ஆரியம் தூக்கிப் பிடிக்கிறது என்ற கேள்வி எழுலாம்.
இந்த இடத்தில்தான் ஆரியத்தின் தந்திரப் பொறி வஞ்சகமாக ஒளிந் திருக்கிறது.
பார்ப்பனராக இருந்து ஒருவர் அதனைச் செய்யும்போது அது எளிதில் அம்பலப்படுத்தபட்டு விடும்.
பார்பார், பார்ப்பனப் புத்தியை! பார்ப்பன
உணர்வோடு செயல்படும் சூழ்ச்சிகளைப் பாரீர் பாரீர்! என்ற எளி தாக பொது
மக்களை பார்ப்பனர் களுக்கு எதிராகக் கிளப்பிவிட முடியும்.
அதே வேலையை மோடியைப் போன்ற பார்ப்பனர்
அல்லாதார் செய் யும்போது அப்படி ஒரு குற்றச்சாற்றை எளிதில் வைக்க
முடியாதல்லவா! உணர வைப்பது எளிதல்லவே!
அப்படியே குற்றம் சொன்னாலும் அந்த இடத்தில் பார்ப்பனர் இருக்கும் பொழுது வைக்கப்படும் குற்றச்சாட்டு அளவுக்கு வலிமை பெறாது!
இந்த தந்திரம் தான் மோடியை முன்னிறுத்துவதில் இருக்கக் கூடியதாகும்.
தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்களே நிஜப்
புலியைவிட வேஷம் போட்ட புலி அதிகமாக குதிக்கும் என்று; தான் உண்மையான
புலியல்ல என்று வேஷம் போட்ட புலிக்குத் தெரியும். ஆகையால், நம்மை
சந்தேகப்படுவார்களே என்ற எண்ணத்தால் அதிகமாகக் குதிக்கும்.
மோடியும் அப்படிதான் நடந்து கொண்டு
வருகிறார்; பிராமணர் நம் சமூகத்துக்கு எவ்வளவோ சாதித்துக்
கொடுத்திருக்கிறார்கள் என்றுகூட சொன்னதுண்டு.
பிரதமர் நாற்காலியில் அமரும் ஆசை மோடிக்கு
அதிகமாகவே இருக்கிற காரணத்தாலும், பார்ப்பனர்கள் பனியாக்கள் கைகளில் தான்
ஊடகங்களும், பண பலமும் இருக்கிற காரணத்தாலும் இவர்களைச் சிக்கெனப்
பிடித்துக் கொள்ளும் யுக்தியும் மோடிக்கு உண்டு.
ஆக ஒருவர் இன்னொருவரால் பயன் அடையும்போது, அதற்கான திட்டங்களும் செயல் முறைகளும் உருவாகத்தானே செய்யும்.
அதுவும் மோடி இருக்கிறாரே மோசடியான
திட்டங்களை உருவாக்குவதில் மிகவும் கில்லாடி! செயற்கையாக, தன் பிம்பத்தை
உயர்த்திக் காட்டும் வேலைகளைச் செய்வதில் கை தேர்ந்தவர். குஜராத்
முதலமைச்சர் நரேந்திரமோடி சமூக இணைய தளங்களில் அதிக கவனம் செலுத்தி
வந்தார். அவரது டிவிட்டர் என்ற சமூக வலைதளத்தில் பத்து லட்சம் பேர்
இணைந்திருக் கிறார்கள், அதுவும் அவர் கணக்கு துவங்கி குறுகிய காலத்தில் இது
நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து மோடி கூறுகையில், இது வெறும்
எண்ணிக்கை அல்ல மாறாக உங்களது அன்பு என்று பதிவு செய்திருந்தார். ஆனால்
அவரது கணக்கில் 50 சதவீதம் போலி கணக்கு என்பது தற்போது தெரியவந்துள்ளது.
லண்டனில், ஸ்டேட்டஸ் பீப்பிள்ஸ் என்ற இணையதள பொறியாளர்கள் குழு ஒன்று இது
குறித்து ஆய்வு செய்ததில் மோடியின் டிவிட்டர் கணக்கில் 50 சதவீதம் போலிப்
பயனா ளர்கள் இருப்பதாக கூறியுள்ளார்கள்.
அதாவது அவரது கணக்கில் 46 சதவீதம் போலி
கணக்கும், 41 சதவீதம் பேர் பயன்படுத்தப்படாத கணக்கா ளர்கள் எனவும்
கூறியுள்ளனர். மீதமுள்ள 13 சதவீதம் பேர் மட்டுமே உண்மையாக பின்
தொடர்பவர்கள் என்பது தெரிகிறது.
மோடியின் டிவிட்டர் கணக்கு 2010 ஆம்
ஆண்டு வரை ஒரு லட்சம் பேர் இணைந்திருந்தனர். 2011 ஆம் ஆண்டு முடிவில்
நான்கு இலட்சம் பேர் இணைந்திருந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களில் மட்டுமே
அதிகமானவர்கள் இணைந்திருப்ப தாக காணப்பட்டது. இப்போது அது போலித்தனமாக
காட்டப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது ஒரு பானைக்கு ஒரு சோறு
பதம் என்று சொல்லுவது போல பா.ஜ.க. முன்னணி தலைவராக திகழும் மோடியின் மோசடி
ஒட்டு மொத்த பா.ஜ.க.வுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்!
மகா மகா யோக்கியர் - நாணயமான வர்
திருவாளர் பரிசுத்தம் என்பது போன்ற ஒரு தோற்றத்தையும் உரு வாக்க பல
திட்டங்களைக் கையில் வைத்துள்ளார்.
இவரது புகழ் உலகெங்கும் பரவி யிருப்பது போல பிரச்சாரம் செய் கின்றனர்.
அதுவும் சமீபத்தில் சாயம் வெளுத்துப் போய்விட்டது.
அமெரிக்காவின் சிகாகோவிலி ருந்து தொழில்
அதிபர்கள் சிலரும் எம்.பி.க்கள் சிலரும் மோடியைச் சந்திக்க வந்தனர் -
அழைப்புக் கொடுத் தனர் என்று ஒரு கதையைக் கட்டி விட்டனர்.
உண்மை என்னவென்றால் மோடியைச் சந்திக்க
வந்தவர்கள் அல்லர் அவர்கள். சுற்றுலாப் பயணி களாக வந்தவர்கள் அதற்காக
அவர்களிடமிருந்து பணமும் வசூலிக் கப்பட்டது. இந்த விவரங்கள் எல்லாம்
வெளிச்சத்துக்கு வந்துவிட்டன.
அமெரிக்கா தொடர்ந்து மோடிக்கு விசா அளிக்க மறுத்து வருகிறது, பிரிட்டனும் அந்த நிலையில் தான் இருக்கிறது.
உள்ளூரிலேயே டெல்லி பல்கலைக் கழகத்தில்
பேசச் சென்றபோது மாண வர்கள் எதிர்த்துக் குரல் கொடுத்தனர். கொல்கத்தாவில்
தொழில் அதிபர் கூட் டத்தில் கலந்து கொள்ள செல்கிறார். குஜராத் முதல்
அமைச்சர் மோடி என்று முதல் நாள் செய்தி வருகிறது.
அந்த இடத்தில் தொழில் அதிபர் கள் கூட்டத்தை நடத்திட மம்தா அரசு அனுமதி மறுத்தது என்ற செய்தி வருகிறது.
உள்ளூரிலேயே விலை போகாத ஒன்றாக ஆகி விட்டார்.
இதுதான் உண்மையான நிலை ஊழலை ஒழிப்பதில்
உத்தமர் என்று சொல்லுகிறார்களே அவர்களை நோக்கி ஒரே ஒரு கேள்வி மாநிலத்தில்
ஊழலை ஒழிப்பதற்காக அமைக்கப்படும் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கு ஏன்
மோடி தயங்க வேண்டும்?
அதற்குரிய நீதிபதியை நியமிப்பதில் ஏன் கால தாமதம் செய்ய வேண்டும்?.
நீதிபதியை நியமிக்க மோடி முன்வராத
நிலையில் ஆளுநரே அதற்கான நீதிபதியை நியமித்தபோது அதனை எதிர்த்து நீதிமன்றம்
சென்ற வர்தானே இந்த யோக்கிய சிகா மணியான குஜராத் முதல் அமைச்சர் மோடி!
அதிலும் தோல்வியை வாங்கிக் கட்டிக் கொண்டார் என்பதுதான் பரிதாபம்!
இப்பொழுது தனக்குத்தானே ஒரு லோக் அயுக்தாவை ஏற்படுத்திக் கொண்டார்.
குஜராத்
குஜராத் சட்டசபையில், ஊழல் களை
கண்காணிக்கும் அமைப்பான, புதிய லோக் ஆயுக்தா மசோதா, காங் கிரஸ் கட்சியின்
பலத்த எதிர்ப்புக் கிடையே நிறைவேறியது.
குஜராத்தில், முதல்வர் தலைமை யிலான
தேர்வுக் குழுவுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான லோக் ஆயுக்தா சட்ட
திருத்த மசோதா, ஆளுநர் கமலா பெனிவாலின் பரிந் துரைக்காக, மாநில அரசு,
கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன், அனுப்பியது. ஆனால், இதனை நிராகரித்த ஆளு நர்,
லோக் ஆயுக்தாவின் தலைவராக, நீதிபதி மேத்தாவை நியமித்தார்.
இதனை, குஜராத் உயர்நீதிமன்றம் மற்றும்
உச்சநீதிமன்றம் ஆகியவையும் உறுதிபடுத்தின. லோக் ஆயுக்தா நீதிபதி தீர்ப்பே
இறுதியானது என, உச்சநீதிமன்றமும் கூறியது. இந் நிலையில், மாநில முதல்வர்
தலைமையிலான தேர்வுக் குழுவிற்கு அதிகாரமளிக்கும், சர்ச்சைக்குரிய புதிய
லோக் ஆயுக்தா மசோதா, குஜராத் சட்டசபையில், பலத்த எதிர்ப்புக் கிடையே
நிறைவேறியது.
தற்போதுள்ள லோக் ஆயுக்தா சட்டம் 1986இன்
படி, மாநில ஆளுநர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோரது அதிகாரங்களைக் குறைத்து,
நிறை வேற்றப்பட்டுள்ள இந்த மசோதா வலுவற்ற ஒரு அமைப்பாகும் என, சட்ட
நிபுணர்கள் கருத்துத் தெரி வித்துள்ளனர்.
குஜராத் மாநில எதிர்க்கட்சித் தலைவர்
சங்கர் சிங் வகேலா கூறுகை யில், ""மாநில அரசின் ஊழல்களை, நீதிபதி மேத்தா
அம்பலப்படுத்தி விடுவார் என்று நரேந்திர மோடி தலைமையிலான அரசு
பயப்படுகிறது,'' என்றார். இந்தியாவுக்குப் பிரதமராகத் துடிக்கும் பேர்
வழியின் முகவிலாசம் இதுதான்.
இப்பொழுது சி.ஏ.ஜி. ஒரு புதுக்கரடியை
அவிழ்த்து விட்டுள்ளது. மோடி ஆட்சியில் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு
ஊழல் நடந்துள்ளது என்பதுதான் அந்தக் கரடி!
அந்தோ பாவம் நரேந்திர மோடி!
No comments:
Post a Comment