பெரியார் எனும் மாபெரும் சக்தியால் பார்ப்பன ஆதிக்கம் வீழ்ச்சி!
வடநாட்டிலும் பார்ப்பனர் ஆதிக்கம் வீழ்ச்சி பெற திராவிடர் இயக்கம் தேவை!
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா படப்பிடிப்பு
புதுடில்லி, மார்ச் 21- பெரியார் எனும் மாபெரும் சக்தியால் தென்னகத்தில் பார்ப்பன ஆதிக்கம் வீழ்ச்சி பெற்றது. வடநாட்டிலும் அந்நிலை உருவாகிட திராவிடர் இயக்கம் தேவை என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு ஆய்வின் அடிப்படையில் படம் பிடித்துள்ளது.
1917-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் காங்கிரஸ் மாகாண மாநாடு என்ற பெயரில் பிரபல ஆங்கில தினசரி ஒன்றில் விளம்பரம் வந்தது. அதில் மதராஸ் மாகாணத்தில் இருந்து கலந்துகொள்ளவந்த பார்ப் பன பிரதிநிதிகளின் கண் களில் கலக்கம் காணப்பட் டது. கொல்கத்தாவில் உள்ள தமிழ் பார்ப்பனர் நடத்தும் தஞ்சாவூர் மீல்ஸ் ஹவுஸ் என்ற உணவு விடுதியில் தமிழகத்தில் இருந்து வந்த பார்ப்பன பிரதிநிதிகள் சி.எஸ். நர சிம்மாச்சாரி தலைமையில் தமிழகத்தில் பார்ப்பனர் களின் ஆதிக்கம் வலுவி ழந்து வருவதையும் தெற்கே பார்ப்பனர் அல்லாத மாற்று சக்தி பலம் வாய்ந்ததாக மாறிக்கொண்டு வருவது பற்றி கவலையுடன் விவா தித்தனர். இந்தியாவில் முதல் முறையாக பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்ற இரண்டு பிரிவு அரசி யல் உருவாகிக்கொண்டு இருந்தது, கொல்கத்தா காங் கிரஸ் மாநாட்டில் இதன் தாக்கம் வெளிப்படத் துவங்கியது.
1892 முதல் 1909 வரை..
1892 முதல் 1909 வரை காங்கிரசில் பார்ப்பனர்கள் ஆதிக்கமே 50விழுக்காடு அதிகமாக இருந்தது; இது 1920 களில் 19 விழுக்காடு குறைய ஆரம்பித்தது. சுதந் திரம் அடைய சிலவருடம் இருக்கும் வரை வடக்கு மாநிலங்களில் 9 விழுக்காடு இருந்த பார்ப்பனர்கள் அரசியலில் பெரும் பங்கு வகித்தனர். இந்த காலகட் டத்தில் மராட்டியத்தில் அம்பேத்கர் மற்றும் பிகார் மாநிலத்தில் ஜகஜீவன் ராம் போன்றோர் தங்களது சமு தாய மக்களிடையே பெரும் அரசியல் விழிப்புணர்ச்சி யைக் கொண்டு வந்தார் கள். இந்த நிலையில் இஸ் லாமியர்களும் அரசியல் விழிப்புணர்ச்சி பெற ஆரம்பித்தார்கள். பாபு ஜெகஜீவன்ராமின் பார்ப்பனர் அல்லாத இயக் கம் வலுப்பெற முடியாத நிலையில் உயர்சாதியினர் அந்த இடைவெளியை பிடித்துக்கொண்டனர்.
பார்ப்பனர்களின் ஆதிக்கம் காங்கிரசில் மாத்திரமல் லாது மாற்றுக் கட்சியாக உருவெடுத்த பொதுவு டமைக் கட்சிகளிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் பெருகத் துவங்கியது. பிறகு பொதுவுடமைக் கட்சி களில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் சுதந்திரத்திற்குப் பிறகு குறையத்துவங் கியது. இன்றைய நிலையில் பொதுவுடமை கட்சிகளின் 4 முக்கிய பொறுப்புகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இருப்பதை அரசியல் விமர் சகர்கள் சுட்டிக்காட்டியுள் ளனர். பெரியார் எனும் மாபெரும் சக்தி
ஆனால் தெற்கே பார்ப் பனர் அல்லாத மாற்று அணி பெரியார் என்னும் மாபெரும் சக்தி மூலம் வளர்ந்துகொண்டு இருந் தது. இந்தத் தாக்கம் தற் போதைய ஆந்திரா கேரளா மற்றும் கர்நாடக மாநி லத்தில் பார்ப்பனர் அல் லாத இயக்கம் பிறகு திரா விட இயக்கமாக மாறி, காங் கிரஸ் மற்றும் பார்ப் பனர்களின் எந்த ஒரு இயக்கத்திற்கு பெருத்த தடையாக உருவெடுத்தது.
சுதந்திரத்திற்குப் பிறகு வடக்கில் சரியான அளவில் பார்ப்பனர் எதிர்ப்பு இயக் கம் வலுப்பெறாத நிலை யில் உயர்சாதிக்காரர்களின் ஆதிக்கம் மீண்டும் வளர்ச் சியடையத் துவங்கியது. இன்று பீகார், உத்திரப் பிரதேசம் போன்ற மாநி லங்களில் எல்லாக்கட்சியி லும் பார்ப்பனர் மற்றும் அவர்களுக்கு ஆதவராக செயல்படும் உயர்சாதிக் கட்சியினரின் ஆதிக்கம் உள்ளது. இன்று மெல்ல மெல்ல மாநில முதல்வர் கள் பார்ப்பனர்களின் கைப்பாவைகளாக மாறிக் கொண்டு இருக்கின்றனர். தற்போதைய பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநி லங்களில் பார்ப்பனர்கள் குறைந்த அளவில் இருந் தாலும் பார்ப்பனர்களின் ஆளுமை இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றனர். மேலும் தமிழகத்தில் ஜெயலலிதா, மேற்கு வங்கத்தில் மமதாபானர்ஜி, போன்ற நேரடி பார்ப்பன முதல்வர்கள் போல் இந் தியா முழுவதும் பல மாநி லத்தில் உள்ளனர்,
அதே போல் நரேந்திரமோடி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராராஜே போன் றோர் பார்ப்பனர்களின் கைப்பாவையாக மாறியுள் ளனர். இந்தியா அரசியல் களத்தில் அவ்வப்போது பெருத்த மாற்றம் ஏற்பட்டு பார்ப்பனர்களின் ஆதிக்கம் சரிவடையப்போகும் நேரத்தில் எல்லாம் பார்ப் பனர்கள் தங்களின் ஆதிக் கத்தை நிலை நிறுத்த எந்த விதத்திலாவது முயன்று கொண்டு இருப்பார்கள், சத்தீஸ்கர் மாநிலத்தில் விஜய்பகுகுணா ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது அந்த இடத்தில் பார்ப்பனர் ஒருவரை முதல்வராக வர தலைமைக்கு அழுத்தம் கொடுக்கும் வேலையில் மூத்த பார்ப்பன பெண் அரசியல்வாதி பிரபலப் பத்திரிக்கையாளர் மூலம் இறங்கினார்.
மாற்றம் பெற்று வரும் அரசியல் களத்தில் பார்ப் பனர் அல்லாத அரசியல் சக்திகள் முன்னேற்றம் பெற்று வந்தாலும், பார்ப் பனர்கள் தங்களின் ஆதிக் கத்தை இழக்கத் தயாராக இல்லை, சமூகநீதிக்களத் தில் எந்தவிதத்திலும் முன் னேற்றம் கண்டுவிடக் கூடாது என்று முனைப் போடு அரசியல் களத்தில் பார்ப்பனர்கள் உறுதியாக உள்ளனர். பார்ப்பனர் களின் ஆதிக்கம் குறைந்து வரும் இதுபோன்ற சூழ லில் திராவிட இயக்கம் போன்று வலுவான இயக் கம் இந்தியாவெங்கும் உரு வாகும் சூழலில் இந்தி யாவில் சமூகநீதி மலர்ந்து சமத்துவம் ஏற்படுவது உறுதி.
நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 21.3.2014 பக்.11)
- மோடிக்கு முட்டுக் கொடுப்பவர்களைக் கேட்கிறோம்!
- கழகத்தின் பொறுப்பை ஏற்று இன்றோடு 36 ஆண்டுகள்: மலை போன்ற சோதனைகளைப் பனி போல் விரட்டினோம்!
- போலி என்கவுண்டரில் சிக்குகிறார் மோடியின் நண்பர் அமித்ஷா சி.பி.அய். அழைப்பாணை!
- நடக்கவிருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தல் - ஓர் அலசல்! தமிழர் தலைவர் தரும் எண் வகைக் கருத்தாக்கங்கள்
- மதச்சார்பற்ற கொள்கையை உடைய ஜனநாயக முற்போக்கு கூட்டணியை ஆதரித்து வெற்றி பெறச் செய்வீர்!
No comments:
Post a Comment