Thursday, June 28, 2012

மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீட்டின் சாதனையைப் பாரீர்! 742 இடங்களில் 678 பேர் ஒடுக்கப்பட்டோர்!


2012 மருத்துவப்  பட்டப் படிப்பு - திராவிட மாணவர்களின் கல்வி முன்னேற்றம்- ஒரு பகுத்தாய்வு:  தமிழக சுகாதாரத் துறை மருத்துவப் பட்டப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. கல்வி வள்ளல் காமராஜர் 1954 ஆம் ஆண்டு  கல்விக்கான அடித்தளம் இட்டு கலைஞர் நுழைவுத் தேர்வை விலக்கியதிலிருந்து திராவிட மாணவர்கள் தொழிற்  கல்வியில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்து வருகின்றனர். திராவிட இயக்கம் கல்விக்காக பெரு முயற்சி எடுத்ததின் பயனை இன்றைய தலைமுறை மாணவர்கள் அனுபவித்து  வருகின்றனர். முத்தையா முதலியார், பனகல் அரசர், பிட்டி தியாகராயர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றோரின் பங்களிப்பு அளப்பரியது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பங்களிப்பு மகத்தானது அல்லவா! திராவிடர் கழகத்தின் போராட்டங்கள் அளப்பரியன அல்லவா!
இந்த ஆண்டின் தரவரிசைப் பட்டியலை ஒரு ஆவணமாகக் கொண்டு இந்த பகுத்தாய்வு மேற்க் கொள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 27877
மருத்துவப் படிப்பு இடங்கள்            2395
இட ஒதுக்கீட்டு இடங்கள் 69 சதவீதம்        1653
பொது இடங்கள்                        742
200 க்கு 200 பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 16 முதல் மாணவர் பிற்படுத்தப் பட்டப் பிரிவை சேர்ந்த கௌதம் என்பவர்
இந்த பதினாறு மாணவர்களில்
பிற்படுத்தபட்டோர்    10
தாழ்த்தப்பட்டோர்     2
பொது     2
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்     1
தாழ்த்தபட்டோர்,  அருந்ததியினர்    1
பொது இடங்களான 742 -இல் 678 இடங்களையும் திராவிட மாணவர்களே அடைந்துள்ளனர்.இதனால் மேலும்  678 திராவிட  மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும். இந்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று, பொது இடங்களில் சேர்ந்த திராவிட மாணவர்களைப் பாராட்ட வேண்டும். மேலும் திராவிட இயக்கங்களுக்கும் நன்றி கூற வேண்டும்.
நுழைவுத் தேர்வு விலக்கப் பட்டதால் பெரும்பான்மை யான தாழ்த்தப் பட்ட மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மன வலிமையைப் பெற்றுள்ளனர். நுழைவுத் தேர்வானது  வசதி படைத்தவர்களுக்கும் நகர்ப் புற மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்தது.
ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை ஒழித்து, பச்சைத் தமிழர் காமராசரை ஆட்சியில் அமர வைத்ததன் பலன் வீண் போகவில்லை. 1954 ஆம் ஆண்டில் காம ராஜர் விதைத்த கல்விக் கனவு நனவாகி வருகின்றது. அதற்கு வளம் சேர்க்கும் வகையில் திராவிட இயக்கங்கள் பணியாற்றி வருகின்றன. இதனை பெற்றோர்களும் தமிழக மக்களும் உணர்ந்தால் நன்று.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

காளி


இந்துக்களின் ஆக்ரோஷ கடவுளான காளியை அமெரிக்கா வில்  ஒரு நிறுவனம் எதற்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது தெரியுமா? காளியின் பெயரால் பீர் அறிமுக மாகியுள்ளது. (இதில் கோபப்பட என்ன உள் ளது? இந்துக் கடவுள்கள், அவதாரங்கள் குடிக்க வில்லையா?)
லட்சுமியின் படம் அமெரிக்காவின் கழிப் பறையில் ஓவியமாக வரையப்பட்டதுண்டு. விநாயகரின் படம் பெண் களின் உள்ளாடைகளில் இடம் பெற்றது.
செருப்புகளில் விநாயகர் குடியிருந்தார். சிவபுரத்து நடராசன் சிலை கடத்தப்பட்டு, நாட்ரன்துரையிடம் அமெரிக்காவில் சரண் அடைந்தது. நடராசர் நடனமாடுவது போல இருந்த காட்சி அவர் களை ரசிக்கச் செய்தது. அவர் கையில் இருந்த தட்டை சிகரேட் தூளைப் படியவைக்கும் (ஹளா கூசயல) கிண்ணமாகப் பயன் படுத்திக் கொண்டார்.
இந்துக்களின் மனம் மிகவும் புண்படுத்தப்பட் டது என்று குரல் கொடுத்தனர். நாடாளு மன்றத்தில் பி.ஜே.பி. உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் அனல் கக்கி னார். அமெரிக்கத் தூதரை அழைத்து நடந்த காரியங்களுக்காக மன்னிப்புக் கேட்கச் செய்ய வேண்டும் என்று ஆர்ப்பரித்தார் - ஒன்றும் நடந்துவிடவில்லை.
மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுக்கலாம். பைரவருக்கு நாய் வாகனமாக இருக்கலாம், காங்கேய முனிவன் கழுதைக்குப் பிறக்கலாம். மாண்டவ்ய முனிவர் தவளைக்குப் பிறக்கலாம். சவுனக முனி நாய்க்கும் பிறக்கலாம்; ஜாம்பவந்தர் கரடிக்குப் பிறக்கலாம்.
மகாவிஷ்ணுவின்  மார்பின் கறுப்பு மயிரில் கிருஷ்ணன் பிறக்கலாம் வெள்ளை மயிரில் அவன் அண்ணன் பிறக்கலாம்!
இப்படியாக சாத்திரம் புராணங்கள் எழுதி வைத்துக் கொண்டு இருப்பவர்கள் அமெரிக் கக்காரன் இந்துக் கடவுள் களைக் கேலி செய்து விட்டான் என்று குதிப் பதில் பொருளுண்டோ!
அவன் செய்ததாவது கேலி, நீ செய்ததோ, அசிங்கம் -  ஆபாசமா யிற்றே!
அதுசரி உங்கள் கணேசனும், லட்சுமியும், காளியும் அந்த அமெரிக் கர்களை ஒன்றும் செய்யவில்லையே! உம் கடவுள் சக்தி பூஜ்ஜியம் தானோ!
அதுவும் காளி சிவ மூர்த்தியின் கோபாக் னியாயிற்றே - பத்ர காளியாயிற்றே. அந்த அமெரிக்கனைச் சுட் டெரிக்காதது ஏனோ?  குடலைக் கிழிக்காதது ஏனோ! எல்லாம் உல்டாப் தானோ! - மயிலாடன்

சோ அவர்களே! சோடி போட்டுக்குவோமா சோடி?


கேலிச் சித்திரத்தை கேலிச் சித்திரமாகப் பார்க்க வேண்டும்; கோலிக் குண்டை கோலிக் குண்டாகப் பார்க்க வேண்டும்! என்றெல்லாம் கருத்துச் சுதந்திர வியாக் யானம் பேசுகிறார்கள் சோ கும்பலும் அறிவு ஜீவிகளும்!
அம்பேத்கரை இழிவுபடுத்தியும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை இழிவுபடுத்தியும் வெளிவந்த கார்ட்டூன்களுக்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியிருக்கும் சூழலில் தான் இவர்களுக்கு கருத்துச் சுதந்திரமும், சகிப்புத் தன்மையும் நினைவுக்கு வரும்!
கேலிச் சித்திரத்துக்கெல்லாம் கொந்தளித்திருந்தால் துக்ளக், தினமலர் உள்ளிட்ட உள்ளூர் ஏடுகள் முதல் இந்திய தேசிய ஏடுகள் வரை இவற்றின் அலுவலகங்கள் எல்லாம் செங்கல் செங்கலாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போதைய பிரச்சினை கேலிச் சித்திரம் பற்றியதல்ல! அதைப் பாடப் புத்தகங்களில் சேர்ப்பது பற்றித்தான்.
எவ்வித வாய்ப்பும் இன்றி வரலாற்றை வரலாறாகத் தர வேண்டிய பாட நூல்களில் பார்ப்பனிய விஷம் குழந்தைகளுக்கு ஊட்டப்படுவதைக் கண்டித்துத் தான் இன்று நாடு முழுக்கக் குரல் எழுகிறது. நாமும் வேண்டுமானால் நமது தமிழ்நாட்டுப் பாட நூலில் கேலிச் சித்திரங்களை இடம் பெறச் செய்வோம்.
இதோ மணவை திருமலைச்சாமி நடத்திய நகர தூதனில் 1937 டிசம்பரில் வெளிவந்த கேலிச் சித்திரம்; இதை தமிழ்நாட்டு வரலாற்றுப் பாடத்தில் வெளியிட்டால் பூணூலை இறுக்கிக் கட்டிக் கொண்டிருப்பாரா சோ?  குல்லுகப்பட்டருக்காக குதிகால் தரையில் படாமல் அல்லவா குதிப்பார்! வெளியிட்டுப் பார்ப்போமா?              
- ஈரோட்டுக் கண்ணாடி


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
<< முன்புஅடுத்து >>


கேப்டனிடம்ஒருகேள்வி!


சட்டசபைக்கு  விஜய்காந்தை வரச்சொல் என்கிறார்கள். நான் வந்தால் பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டணத்தைக் குறைத்துவிடப் போகிறார்களா? மேலே இருக்கிற ஆண்டவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான் இப்படிச் சொன்னவர் கவுண்டமணியோ, செந்திலோ, விவேக்கோ, வடிவேலோ அல்ல.
வெள்ளித் திரையில் கொடிய வர்களைப் புரட்டி எடுக்கும் ஹீரோ கேப்டன் விஜய்காந்த்தான்! 18-.5.-2012 தினமலர் மதுரை பதிப்பு நாளிதழ் கட் டம் கட்டி செய்தியை வெளியிட் டிருக்கிறது.
கானல் வெளியை நீர் என நம்பிக் காலம் தள்ளும் பேதமை, ஒரு கட்சியின் தலைவரைப் பற்றிக் கொண்டு பாடாய்ப் படுத்துவதை பகுத்தறிவாளர் களால் எத்தனை நாளைக்குத்தான் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? சகித்துக் கொள்ள முடியும்?
முதன் முதலில் தேர்தல் களத்தில் இவர் குதித்தபோது எனக்கும் கடவுளுக்கும்தான் கூட்டு என்று சொல்லி நகைச்சுவை விருந்தளித்தார்.
எந்தெந்த தொகுதிகளை இவரும் கடவுளும் பங்கிட்டுக் கொண்டார்கள் என்ற விவரம் அறிவிக்கப்படாமலே அந்தத் தேர்தல் நடந்து முடிந்தது. விருத்தாசலம் தொகுதியில் இவர் மட்டுமே வெற்றி என்ற செய்தி வந்தது. கடவுளின் கூட்டணி அன்றோடு கரைந்து போனது.
இன்று நாள்தோறும், எல்லா மாவட்டங்களிலும் காய்ச்சலால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் செத்துக் கொண்டிருக்கும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. டெங்கு, டைபாய்டு, மலேரியா, பறவை, பன்றி என காய்ச்சலில்தான் எத்தனை வகை! இவற்றை அழித்து ஒழிக்க அறிவியலும், மருத்துவமும்தான் போராடிக் கொண்டிருக்கின்றன.
மேலே இருப்பவனால் வேடிக்கை பார்க்கத்தான் முடியும் போலும்! கடவுள் நம்பிக் கையில், ஜோதிட நம்பிக்கையில் விஜயகாந்துக்குச் சற்றும் சளைத்தவர் அல்ல மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா! நேரில் வந்து உதவத்தான் யோக்கியதை இல்லை. முதல்வரின் கனவில் தோன்றியாவது கட்டணங் களை உயர்த்தக் கூடாது என்று சொல்லி தடுத்து நிறுத்தியிருக்கலாமே கடவுள். ஏன் செய்யவில்லை?
கேப்டன் அவர்களே, உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்டேயாக வேண்டும். உங்கள் பார்வையில் அடல்ஸ்ஒன்லி கேள்வியாகக் கூட அது இருக்கலாம். மன்னித்துவிடுங்கள். இதோ கேள்வி:
மேலே இருந்து இங்கே நடப் பதையெல்லாம் ஒருவன் பார்த்துக் கொண்டிருக்க நாம் அனுமதிக்கலாமா? அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்? இதனால் நம்முடைய சுதந்திரமும் ஆளுமையும், உரிமையும் கேள்விக் குறி ஆகாதா? பட்டப் பகலில் பகிரங்கமாக நடப்பவைகளை மட்டும்தான் பகவானால் பார்க்க முடியுமா?
அர்த்த ராத்திரியில் அடைக்கப்பட்ட நம் வீடுகளில், தாழிடப்பட்ட படுக்கை அறைகளில் நிகழும் அந்தரங்கங் களையும் கண்டுகளிக்க அவனால் முடியுமா? விளக்குகள் அணைக்கப் படுகிறதே முன் எச்சரிக்கையினாலா? இறைவனது பார்வைக்குப் பயந்துதான் இப்படி நடக்கிறதா? இருட்டறையில் உள்ள உலகத்தைப் பார்க்க அவனால் முடியாது என்றால் எல்லாம் வல்லவன் என்பது வடிகட்டிய பொய்தானே?
உண்மையில் நீங்கள் ஓர் மனித நேயர் என்றால் தந்தை பெரியார் காட்டிய வழிக்குத்தான் வந்திருப்பீர்கள். மனிதனை முழுமனதோடு நினைக்க, நேசிக்க வேண்டுமானால், கடவுளை நீக்கியாக வேண்டும்.
அதைத்தான் கடவுளை மற; மனிதனை நினை என்று நமக்குக் கற்றுத் தந்தார் பகுத்தறிவுப் பகலவன் நம் பெரியார்.
- சிவகாசி மணியம்

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
<< முன்புஅடுத்து >>



JULY 01-15

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...