கேலிச் சித்திரத்தை கேலிச் சித்திரமாகப் பார்க்க வேண்டும்; கோலிக் குண்டை கோலிக் குண்டாகப் பார்க்க வேண்டும்! என்றெல்லாம் கருத்துச் சுதந்திர வியாக் யானம் பேசுகிறார்கள் சோ கும்பலும் அறிவு ஜீவிகளும்!
அம்பேத்கரை இழிவுபடுத்தியும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை இழிவுபடுத்தியும் வெளிவந்த கார்ட்டூன்களுக்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியிருக்கும் சூழலில் தான் இவர்களுக்கு கருத்துச் சுதந்திரமும், சகிப்புத் தன்மையும் நினைவுக்கு வரும்!
கேலிச் சித்திரத்துக்கெல்லாம் கொந்தளித்திருந்தால் துக்ளக், தினமலர் உள்ளிட்ட உள்ளூர் ஏடுகள் முதல் இந்திய தேசிய ஏடுகள் வரை இவற்றின் அலுவலகங்கள் எல்லாம் செங்கல் செங்கலாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போதைய பிரச்சினை கேலிச் சித்திரம் பற்றியதல்ல! அதைப் பாடப் புத்தகங்களில் சேர்ப்பது பற்றித்தான்.
எவ்வித வாய்ப்பும் இன்றி வரலாற்றை வரலாறாகத் தர வேண்டிய பாட நூல்களில் பார்ப்பனிய விஷம் குழந்தைகளுக்கு ஊட்டப்படுவதைக் கண்டித்துத் தான் இன்று நாடு முழுக்கக் குரல் எழுகிறது. நாமும் வேண்டுமானால் நமது தமிழ்நாட்டுப் பாட நூலில் கேலிச் சித்திரங்களை இடம் பெறச் செய்வோம்.
இதோ மணவை திருமலைச்சாமி நடத்திய நகர தூதனில் 1937 டிசம்பரில் வெளிவந்த கேலிச் சித்திரம்; இதை தமிழ்நாட்டு வரலாற்றுப் பாடத்தில் வெளியிட்டால் பூணூலை இறுக்கிக் கட்டிக் கொண்டிருப்பாரா சோ? குல்லுகப்பட்டருக்காக குதிகால் தரையில் படாமல் அல்லவா குதிப்பார்! வெளியிட்டுப் பார்ப்போமா?
- ஈரோட்டுக் கண்ணாடி
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- நினைவு நாள்: 18.07.1919 திராவிட இயக்க இலெனின் டி.எம். நாயர்
- கொழுப்பின் நன்மை!
- பெண்ணினம் பெருமை பெறப் பிறந்தவரே, பெரியார்
- ஒராங்குட்டான்
- சைல்டு Child ஸ்பெஷலிஸ்ட்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- கேப்டனிடம்ஒருகேள்வி!
- கண்ணாடி பிம்ப எழுத்துக்களால் 5 செமீ உயர திருக்குறள் புத்தகம்
- பெண்கள் விடுதலை
- மகாராஷ்டிர தலைமை செயலகத்தில் தீ விபத்து
- இலங்கை அமைச்சரின் பேச்சு: டெசோ மாநாட்டில் அறிவிப்பு கலைஞர் பேட்டி
<< முன்புஅடுத்து >>
அறிவுக்குப் பொருந்தா செயல்தான் செய்தே...
இதனைச் செய்தால் நீங்களும் கொடையாளர்தான்
இந்தியாவில்....
உங்களுக்குத் தெரியுமா?
எண்ணம்
எதில் வேண்டும் தூய்மை?
ஒரு மனசாட்சியின் வாக்குமூலம்
கடவுள் இருக்கிறாரா? சோதிப்போம் வாங்க... - 4
குழம்பிக் கிடக்கும் இந்துத்துவக் குட்டை
சிங்கள மயமாக்கத்தில் சிக்கிய புத்தர்
சிந்தனைக் (கவி)த்துளி
செய்திக் கீற்று
சோ அவர்களே! சோடி போட்டுக்குவோமா சோடி?
தமிழ்மொழியின் தனித்தன்மையும் 'தனிமை'த்தன்மையும்
நாட்டின் நான்காவது தூண்...? இன்றைய ஊடகத்துறை இப்படி.
நாத்திகமே இறுதியில் வெல்லும்!
நாத்திகர் வாக்கு பலித்தது !
நிகழ்ந்தவை
நுழைவுத் தேர்வு கூடாது!
பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் 6 பக்தி ரசமா? காம ரசமா?
புதிய சரஸ்வதி
புதிய சவால்களை எதிர்கொள்ள விடுதலையே ஆயுதம்!
புதுப்பாக்கள்
பெரியாரை அறிவோமா?
பெரியார் இல்லாமல் முன்னேற்றம் இல்லை
மருத்துவம் 200/200ல் 16க்கு 10
முகநூல் பேசுகிறது
முற்றம்
விரலும் விழியும் எழுப்பும் வினாக்கள்
No comments:
Post a Comment