இந்துக்களின் ஆக்ரோஷ கடவுளான காளியை அமெரிக்கா வில் ஒரு நிறுவனம் எதற்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது தெரியுமா? காளியின் பெயரால் பீர் அறிமுக மாகியுள்ளது. (இதில் கோபப்பட என்ன உள் ளது? இந்துக் கடவுள்கள், அவதாரங்கள் குடிக்க வில்லையா?)
லட்சுமியின் படம் அமெரிக்காவின் கழிப் பறையில் ஓவியமாக வரையப்பட்டதுண்டு. விநாயகரின் படம் பெண் களின் உள்ளாடைகளில் இடம் பெற்றது.
செருப்புகளில் விநாயகர் குடியிருந்தார். சிவபுரத்து நடராசன் சிலை கடத்தப்பட்டு, நாட்ரன்துரையிடம் அமெரிக்காவில் சரண் அடைந்தது. நடராசர் நடனமாடுவது போல இருந்த காட்சி அவர் களை ரசிக்கச் செய்தது. அவர் கையில் இருந்த தட்டை சிகரேட் தூளைப் படியவைக்கும் (ஹளா கூசயல) கிண்ணமாகப் பயன் படுத்திக் கொண்டார்.
இந்துக்களின் மனம் மிகவும் புண்படுத்தப்பட் டது என்று குரல் கொடுத்தனர். நாடாளு மன்றத்தில் பி.ஜே.பி. உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் அனல் கக்கி னார். அமெரிக்கத் தூதரை அழைத்து நடந்த காரியங்களுக்காக மன்னிப்புக் கேட்கச் செய்ய வேண்டும் என்று ஆர்ப்பரித்தார் - ஒன்றும் நடந்துவிடவில்லை.
மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுக்கலாம். பைரவருக்கு நாய் வாகனமாக இருக்கலாம், காங்கேய முனிவன் கழுதைக்குப் பிறக்கலாம். மாண்டவ்ய முனிவர் தவளைக்குப் பிறக்கலாம். சவுனக முனி நாய்க்கும் பிறக்கலாம்; ஜாம்பவந்தர் கரடிக்குப் பிறக்கலாம்.
மகாவிஷ்ணுவின் மார்பின் கறுப்பு மயிரில் கிருஷ்ணன் பிறக்கலாம் வெள்ளை மயிரில் அவன் அண்ணன் பிறக்கலாம்!
இப்படியாக சாத்திரம் புராணங்கள் எழுதி வைத்துக் கொண்டு இருப்பவர்கள் அமெரிக் கக்காரன் இந்துக் கடவுள் களைக் கேலி செய்து விட்டான் என்று குதிப் பதில் பொருளுண்டோ!
அவன் செய்ததாவது கேலி, நீ செய்ததோ, அசிங்கம் - ஆபாசமா யிற்றே!
அதுசரி உங்கள் கணேசனும், லட்சுமியும், காளியும் அந்த அமெரிக் கர்களை ஒன்றும் செய்யவில்லையே! உம் கடவுள் சக்தி பூஜ்ஜியம் தானோ!
அதுவும் காளி சிவ மூர்த்தியின் கோபாக் னியாயிற்றே - பத்ர காளியாயிற்றே. அந்த அமெரிக்கனைச் சுட் டெரிக்காதது ஏனோ? குடலைக் கிழிக்காதது ஏனோ! எல்லாம் உல்டாப் தானோ! - மயிலாடன்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment