Saturday, February 1, 2020

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கு : உயர்நீதிமன்ற நீதிபதி கள் கேள்வி

மதுரை நரசிங் கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் லூயிஸ்,  மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன் மை செயலாளர் கடந்த செப்டம்பர் மாதம் அரசாணை பிறப்பித்துள் ளார். பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களில் அடுத்த 2 மாதத்தில் மறுதேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும். சின்னஞ்சிறு வயதில் மாணவ, மாணவிகளை மறு தேர்வு எழுத கட்டாயப்படுத்துவது மன உளைச்சலுக்கு ஆளாக்கும். இதனால் பாதியிலேயே மாண வர்கள் பள்ளிப்படிப்பை கைவிடு வது அதிகரிக்கும். தரமான கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ள நாடுகளில்கூட 5, 8-ஆம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு கிடையாது.
இருந்தபோதும் தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வை அமல்படுத்துவதில் கல்வித்துறை தீவிரமாக உள்ளது.
எனவே தமிழகத்தில் நடப் பாண்டில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையை அமல் படுத்த தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் செய்யப்பட் டுள்ள திருத்தம், அரசிதழ் வெளியீடு மற்றும் அரசாணையை செயல் படுத்த இடைக்கால தடை விதித் தும், அவற்றை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந் தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் லஜபதி ராய், “5 மற்றும் 8ஆ-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது என மத்திய அரசின் கட்டாயக்கல்வி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட் டுள்ளது. ஆனால் தொடக்கக் கல்வியில் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்கக்கூடாது என அதே சட்டத்தின் மற்றொரு பிரிவு தெரிவிக்கிறது. இந்த விதிகளுக்கு எதிராக பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். கல்வியைக்கண்டு அச்சம் ஏற்படும். ஏராளமான மாணவர்கள் தங்களின் படிப்பை பாதியிலேயே விட்டுவிட வாய்ப்புகள் அதிகம். சி.பி.எஸ்.இ. படிப்பில் கூட இந்த நடைமுறை கிடையாது. 5, 8ஆ-ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது தமிழகத்தில் மட்டுமே அமல்படுத்தப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இந்த நடை முறை இதுவரை அமல்படுத்தப்பட வில்லை. எனவே இந்த அரசா ணையை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்“ என வாதாடினார்.
பின்னர் ஆஜரான அரசு வழக்குரைஞர், “மாணவர்களுக்கு தரமான அடிப்படைக்கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் 5, 8ஆ-ம் வகுப்புகளில் பொதுத் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டுள் ளது. அவர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் மறுதேர்வு நடத்தப்படும். பாதியி லேயே படிப்பை கைவிட வாய்ப் பில்லை“ என தெரிவித்தார்.
நீதிபதிகள் கேள்வி: அதற்கு நீதிபதிகள், “மறுதேர்விலும் தேர்ச்சி பெறவில்லை எனில், அந்த குழந்தை யின் நிலை என்ன? கட்டாயக்கல்வி சட்டத்தில் தொடக்கக் கல்வியில் தேர்ச்சி என்பது கட்டாயம் கிடை யாது என்றும், குறிப்பிட்ட வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு என்பதும் முரண்பாடாக உள்ளதே?” என கேள்வி எழுப்பினர்.
மேலும் “இந்த வகுப்புகளில் பொதுத்தேர்வு விடைத்தாள்கள் அந்தந்த பள்ளிகளிலேயே திருத்தப் படுமா? அல்லது வேறு பள்ளிகளுக்கு அனுப்பி திருத்தப்படுமா?” என்றும் கேள்வி எழுப்பினர். பின்னர் இது தொடர்பாக மாநில அரசிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என்று அரசு வழக்குரைஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு குறித்து மத்திய- மாநில அரசுகள் பதில் அளிக்க தாக்கீது அனுப்பும் படியும் நீதிபதிகள் உத்தரவு பிறப் பித்தனர். பின்னர் விசாரணையை வருகிற 19-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுக்குச் சலுகை உள்நாட்டு நிறுவனங்களுக்கோ தடங்கல்!

இந்திய உற்பத்தி நிறுவனங்கள் தொழில் துவங்க ஆயிரக்கணக் கான விதிமுறைகள் விதிக்கும் மோடி அரசு, வெளிநாட்டு நிறுவ னங்களுக்கு பல  சலுகைகளை வழங்கி அவர்கள் இந்தியாவில் தொழில் துவங்குவதை எளிமைப் படுத்தியுள்ளது
இந்தியாவில் கடும் பொரு ளாதார சரிவு ஏற்பட்டு வருவதாகப் பொருளாதார ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.  பல உற்பத்தி தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.   இதனால் பல நிறுவனங்கள் நட் டத்தைச் சந்தித்து வருகின்றன. பலர் வேலை இழந்து வருகின்றனர்.   நிறுவனங்கள் பொருள் விரயம் கார ணமாக மூடப்படலாம் என்னும் அச்சம் எழுந்துள்ளது.
அதே வேளையில் இந்த உற்பத்தி நிறுவனங்கள் தொழிலைத் தொடங்க  சட்டப்படி மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பல துறைகளிலும் இருந்து 1984 அனுமதிகள் பெற வேண்டி உள்ளது.  இந்த அனும திகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நிறுவனங்கள் மனு அளித்துள்ளன.  இது குறித்து வரும் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு விடுமாறு அமைச்சரிடம் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தற்போது இந்த நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்க உரிமம் பெற நிறுவன சட்டங்களின் கீழ் 287 அனுமதி, செபி விதியின் கீழ் 125 அனுமதி,  தொழிற்சாலை விதிகளின் கீழ் 112 அனுமதி, சுற்றுச் சூழல் விதி களின் கீழ் 91 சலுகைகள், வருமான வரியின் கீழ் 91 அனுமதி,, மற்றும் வெளிநாட்டு வர்த்தக விதிகளின் கீழ் 59 அனுமதி, ஆகியவை தேவை யாக உள்ளன..
இது குறித்து ஹிந்த்வேர் குளிய லறை சாதனங்கள் தயாரிப்பாளர் சந்தீப் சோமானி, ஒவ்வொரு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கும் பல விதிகளின் கீழ் அனுமதி பெற வேண்டி உள்ளது. குறிப்பாக எங்கள் பொருட்களுக்காக நாங்கள் சுற்றுச் சூழலில் தொடங்கி அனைத்து துறைகளுக்கும் தனித்தனியே விண் ணப்பித்து அனுமதிகள் பெற வேண்டி உள்ளது,  இதைக் குறைக்க ஆவன செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகள் அனைத்து உற் பத்தி நிறுவனங்களுக்கும் இந்த அனுமதிகள் தேவைப் படாது எனத் தெரிவித்துள்ளனர்.   உதாரணமாக பொறியியல் துறையில் கீழ் உள்ள உற்பத்தி நிறுவனம் அனைத்துக்கும் கொதிகலன் அனுமதி மற்றும் உணவு பாதுகாப்பு அனுமதி தேவைப்படாது என கூறி உள்ள அவர்கள் இத்தனை ஆண்டு கால கட்டத்தில் தொழிற்சாலைகள் இவற்றுக்கான உட்கட்டமைப்பை ஏற்படுத்தி இருந்தால் தற்போது கோரிக்கை விடுக்க தேவை இருந் திருக்காது எனத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் தொழில்
தொடங்க விருப்பம் இருந்தாலும் அரசின் விதிமுறைகள் காரணமாக தொழில் தொடங்கமுடியாமல் காத்திருக்கும் அதே வேளையில் அயல்நாட்டில் இருந்து தொழில் துவங்கவரும் தொழில் நிறுவ னங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கி வருகிறது, இதன் காரணமாக இந்திய சிறு குறு தொழில் நிறுவ னத்தை துவங்க நினைப்பவர்களும் அயல்நாட்டு நிறுவனத்தின் வருகை யால் கடுமையாக பாதிக்கப்படு கின்றனர்.

என்ஆர்சிக்கு பதிலாக வேலையில்லாதோர் பட்டியலை தயாரியுங்கள்! : திக்விஜய் சிங் புத்திமதி


மத்திய பாஜக அரசு தேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் தயாரிப்பதற்கு பதிலாக,வேலையில்லாமல் இருப்ப வர்களின் பட்டியலைத் தயாரிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் யோசனை தெரிவித்து உள்ளார்.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் நிலையில், மத்தியஅரசு அமல்படுத்தி யுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் பிரவு கடந்த 23ஆம் தேதி அன்று  தேசிய வேலையற்றோர் பதிவு (National Register of Unemployed – NRU) திட்டத்துக்கு ஆதரவு கோரி மிஸ்டு கால் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில்,  காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக் விஜய்சிங்கும்,  தேசிய வேலையற்றோர் பதிவு  (National Register of Unemployed – NRU)  திட்டத்தை செயல்படுத்துங்கள் என்று மத்திய பாஜக அரசுக்கு ஆலோசனை தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில்,   பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் எனது நேர்மறையான யோசனையை அளிக்கிறேன். மத்திய அரசு முடிவு செய்திருக்கும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு அறிக்கையை தயாரிப்பதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை ஏற்பட்டிருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக, தேசிய அளவில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இந்தியக் குடிமக்களின் பதிவேட்டைத் தயாரிக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசே, அசாமைப் பார்! அசாமி படித்தால்தான் அரசு வேலை

அசாமிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அசாமி மொழிப் பாடம் கட்டாயமாக்கப்படும் என்றும், 10ஆம் வகுப்பு வரை அசாமி படித்தால் மட்டுமே அரசு வேலைக்கான தகுதி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் அம்மாநில நிதியமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா.
அவர் கூறியுள்ளதாவது, மாநிலத்தில் கல்வி உள்கட்டமைப்பை சீரமைக்க ரூ. 3,000 கோடி செலவிடப்படும். சுமார் 15,000 தொடக்க கல்வி ஆசிரியர்கள் மற்றும் 8000 இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் அடுத்த 6 மாதங்களுக்குள் நிரப்பப்படும். உயர்கல்வித் துறையில், சர்வ சிக்சா அபியான் திட்டத்தின் கீழ் சுமார் 42,000 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அனைத்துப் பள்ளிகளிலும் அசாமி மொழியைக் கட்டாயப் பாடமாக மாற்ற மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன் பெருட்டு, வரும் நாட்களில் சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப் படும். மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் அசாமி மொழிப்பாடம் கட்டாயமாக்கப்படும். 10ஆம் வகுப்பு வரையில் அசாமி  படித்தால் மட்டுமே அரசு வேலைக்கு தகுதி பெறுவார்கள்'' என்றார்.

32,000 பேர்

இன்று (31-1-2020) ஒரே நாளில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 32,000 பேர் விருப்ப ஓய்வு பெறுகிறார்கள். பொதுத் துறை நிறுவனம், இவ்வளவு மனித வளத்தை ஒரே நாளில் இழப்பது இந்த பிஜேபி ஆட்சியில்தான்.

இந்தியாவிலிருந்து 50 லட்சம் இஸ்லாமியர்கள் விரட்டப்படுவர்: மேற்கு வங்க பா.ஜ.க. தலைவரின் வெறிப் பேச்சு!

50 லட்சம் இஸ்லாமியர்கள் இந்தியாவில் இருந்து விரட்டியடிக் கப்படுவார்கள் என்று மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் தெரி வித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அந்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநில, பா.ஜ.க. தலைவரான திலீப் கோஷ், பா.ஜ.க. பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய மொத்த மாக சுமார் 10 லட்சம் முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஊடுருவியுள்ளனர்.
தேவைப் பட்டால் அவர்கள் நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்படுவார்கள். முதல் கட்டமாக வாக்காளர் அடையாள அட்டையில் இருந்து அவர்கள் பெயர் நீக்கப்படும். அதன்பிறகு மம்தா பானர்ஜி யாருக்கும் ஆதரவு செய்து கொண்டு இருக்க முடியாது.
இவ்வாறு திலீப் கோஷ் பேசியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பாக திலீப் கோஷ், பேசிய மற்றொரு பேச்சும், இதேபோல சர்ச்சைக்குள்ளானது.
அவர் கூறுகையில், பொதுமக்களின் சொத்துக்களை போராட்டம் என்ற பெயரில் எதற்காக சேதம் விளைவிக் கிறார்கள்? இது அவர்கள் அப்பன் வீட்டு சொத்து கிடையாது என்று பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ ஒரு கோட்சே!

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான மாணவர்களை துப்பாக்கியால் சுட்ட ராம பக்த கோபால்

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர் களின் குடியுரிமை சட்ட எதிர்ப்புப் பேரணியில் ராம்பக்த கோபால் சர்மா என்ற பார்ப்பனர் மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாண வர்கள்  குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள்  பதிவேடு உள்ளிட் டவைகளுக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று (30.1.2020) அந்த பல்கலைக்கழக மாணவர்கள் ராஜ்காட் வரை பேரணி நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
அப்போது திடீரென ஒருவர் பேரணி யின் முன் துப்பாக்கியுடன் வந்துள்ளார்.  அவர் மாணவர்களைப் பார்த்து இதோ உங்கள் சுதந்திரம்,  நான் உங்களுக்குச் சுதந்திரம் தருகிறேன்,  பாரத்மாதாகி ஜே, ஜெய்சிறீராம் எனக் குரல் எழுப்பியபடி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  இந்த சம்பவம் மக்களிடையே கடும் பீதியை உண்டாக்கி உள்ளது.
இந்த சம்பவம் காணொலி படமாக்கப் பட்டு பல இணைய தள பக்கங்களில் உலவி வருகிறது.   கருப்பு ஜாக்கெட் அணிந்த ஒரு மனிதர் ஒற்றைக் குழல் துப்பாக்கியால் சுடும் காட்சி அந்த காணொலியில் பதிவாகி உள்ளது.  துப்பாக்கியால் சுட்டவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பல்கலைக் கழகத்தின் மாஸ் கம்யூனிகேஷன் பிரிவு மாணவர் காஷ்மீரைச் சேர்ந்த ஷதாப் நஜார் காயமடைந்துள்ளார்.   அவர் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய, ராம்பக்த கோபால் என்று அடையாளம் காணப் பட்ட, அந்த நபர், பெரிய அளவிலான ஒரு படுகொலையை நடத்துவதற்காகத் தயாராக ஜாமியா பகுதிக்கு வந்ததாகத் தெரிகிறது. அவர் தனது முகநூலில், எனது பெயர் ராம்பக்த கோபால். பயோவுக்கு இது போதும். மற்றவை, நான் சரியான நேரத்தில் வெளிப்படுத்துவேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வியாழக்கிழமை பிற்பகலில் அவரது முகநூல் இடுகைகளில் ஒன்று, ஷாஹீன் பாக். உன் விளையாட்டு முடிந்து விட்டது, என்று தெரிவித்தது.
இதற்கு முந்தைய மற்றொரு இடு கையில், அவர் ஒத்த கருத்துடைய இந்துத் துவ வெறியருக்கு இவ்வாறு சவால் விடுத்திருந்தார்:
உங்கள் முகநூலை பின்தொடர்பவர் களில் பாதி எண்ணிக்கை எனக்கிருந்தால் கூட, நான் எப்போதோ ஷாஹீன் பாக் அய் ஜாலியன் வாலாபாக் ஆக மாற்றியிருப்பேன்.
ராம்பக்த  கோபாலை கைது செய்ததாக டில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. ஜாமியா பகுதியில் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, இதோ உங்கள் சுதந்திரம், என்ற கூச்சலுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய அதே வேளை, டில்லி போலீஸ் ஜிந்தாபாத், இந்துஸ்தான் ஜிந்தாபாத், ஆகிய முழக்கங்களையும் அந்நபர் முழங்கியதாகத் தெரிகிறது.
இத்தகைய துணிச்சலான பயங்கர வாதச் செயல் கண்முன்னே நடந்தேறியும் துளியும் பதட்டப்படாமல் காவல்துறையினர் அதைப் பார்த்துக் கொண்டிருந்தது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
தேசப்பிதா மகாத்மா காந்தி, 1948 ஆம் ஆண்டில் இதே தேதியில் ஒரு இந்துத்துவ பயங்கரவாதியான நாதுராம் கோட்சே வால் படுகொலை செய்யப்பட்ட அதே நாளில் இச்சம்பவமும் நடந்தேறியுள்ளது.
நாடு முழுவதும்  காந்தியாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் இச்சம்பவமும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...