இந்தியாவில் கடும் பொரு ளாதார சரிவு
ஏற்பட்டு வருவதாகப் பொருளாதார ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். பல
உற்பத்தி தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல
நிறுவனங்கள் நட் டத்தைச் சந்தித்து வருகின்றன. பலர் வேலை இழந்து
வருகின்றனர். நிறுவனங்கள் பொருள் விரயம் கார ணமாக மூடப்படலாம் என்னும்
அச்சம் எழுந்துள்ளது.
அதே வேளையில் இந்த உற்பத்தி நிறுவனங்கள்
தொழிலைத் தொடங்க சட்டப்படி மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பல
துறைகளிலும் இருந்து 1984 அனுமதிகள் பெற வேண்டி உள்ளது. இந்த அனும திகளில்
இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா
சீதாராமனிடம் நிறுவனங்கள் மனு அளித்துள்ளன. இது குறித்து வரும் நிதிநிலை
அறிக்கையில் அறிவிப்பு விடுமாறு அமைச்சரிடம் நிறுவனங்கள் கோரிக்கை
விடுத்துள்ளன.
தற்போது இந்த நிறுவனங்கள் உற்பத்தியைத்
தொடங்க உரிமம் பெற நிறுவன சட்டங்களின் கீழ் 287 அனுமதி, செபி விதியின் கீழ்
125 அனுமதி, தொழிற்சாலை விதிகளின் கீழ் 112 அனுமதி, சுற்றுச் சூழல் விதி
களின் கீழ் 91 சலுகைகள், வருமான வரியின் கீழ் 91 அனுமதி,, மற்றும்
வெளிநாட்டு வர்த்தக விதிகளின் கீழ் 59 அனுமதி, ஆகியவை தேவை யாக உள்ளன..
இது குறித்து ஹிந்த்வேர் குளிய லறை
சாதனங்கள் தயாரிப்பாளர் சந்தீப் சோமானி, ஒவ்வொரு உற்பத்தி
தொழிற்சாலைகளுக்கும் பல விதிகளின் கீழ் அனுமதி பெற வேண்டி உள்ளது.
குறிப்பாக எங்கள் பொருட்களுக்காக நாங்கள் சுற்றுச் சூழலில் தொடங்கி அனைத்து
துறைகளுக்கும் தனித்தனியே விண் ணப்பித்து அனுமதிகள் பெற வேண்டி உள்ளது,
இதைக் குறைக்க ஆவன செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கைகள் குறித்து அரசு
அதிகாரிகள் அனைத்து உற் பத்தி நிறுவனங்களுக்கும் இந்த அனுமதிகள் தேவைப்
படாது எனத் தெரிவித்துள்ளனர். உதாரணமாக பொறியியல் துறையில் கீழ் உள்ள
உற்பத்தி நிறுவனம் அனைத்துக்கும் கொதிகலன் அனுமதி மற்றும் உணவு பாதுகாப்பு
அனுமதி தேவைப்படாது என கூறி உள்ள அவர்கள் இத்தனை ஆண்டு கால கட்டத்தில்
தொழிற்சாலைகள் இவற்றுக்கான உட்கட்டமைப்பை ஏற்படுத்தி இருந்தால் தற்போது
கோரிக்கை விடுக்க தேவை இருந் திருக்காது எனத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் தொழில்
தொடங்க விருப்பம் இருந்தாலும் அரசின்
விதிமுறைகள் காரணமாக தொழில் தொடங்கமுடியாமல் காத்திருக்கும் அதே வேளையில்
அயல்நாட்டில் இருந்து தொழில் துவங்கவரும் தொழில் நிறுவ னங்களுக்கு சிறப்பு
சலுகைகள் வழங்கி வருகிறது, இதன் காரணமாக இந்திய சிறு குறு தொழில் நிறுவ
னத்தை துவங்க நினைப்பவர்களும் அயல்நாட்டு நிறுவனத்தின் வருகை யால் கடுமையாக
பாதிக்கப்படு கின்றனர்.
No comments:
Post a Comment