Thursday, October 17, 2013

வருகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும்!

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது!
தமிழக மீனவர்கள் காக்கப்பட வேண்டும் சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்

சென்னை, அக்.15-  வருகின்ற 23 ஆம் தேதி சட்டமன்றம் கூடவிருக்கின்ற நிலையில், அக்கூட்டத்தில், ஒருமித்த கருத்தோடு,  மத்திய அரசு - இந்திய அரசு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்குச் சென்று கலந்துகொள்ளக்கூடாது என்கிற தீர்மானத்தை முதலமைச்சர் அவர்கள் கொண்டுவர வேண்டும்; அதை ஒரு மனதாக அனைவரும் நிறைவேற்ற வேண்டும் என்பதை மாநில அரசிற்கு வேண்டுகோளாக வைக்கின்றோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்கக்கூடாது என்றும், தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையாலும், இலங்கை மீனவர்களாலும் தாக்கப் படுவதையும், சிறையில் அடைக்கப் படுவதையும் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் 61 இடங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை வருமாறு:
இலங்கையில் எந்தவிதமான உரிமைகளும் இல்லாமல் செய்து, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கிற பெயராலே அவர்களு டைய விடுதலைப் போராட்டத்தை - இன அழிப்பு வேலையை செய்து அதிலே வெற்றிகரமாக ஆக்கி விட்டேன் என்று தோள் தட்டி, அந்தச் சின்னங்கள்கூட இருக்கக் கூடாது என்று அழித்துக் கொண் டிருக்கக்கூடிய ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளி என்று அய்.நா. தெளிவாகக் கூறியிருக்கிறது.
மனித உரிமை மீறல் என்பது தெளிவாக்கப்பட்டிருக்கிறது போர்க்குற்றவாளி என்று பிரகடனப்படுத்தப்பட்டு, மனித உரிமைகள் மீறல் என்பது தெளி வாக்கப்பட்டிருக்கிறது; அய்.நா. வின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை போன் றவர்கள் அங்கு சென்று திரும்பிய நேரத்தில்கூட தெளிவாக்கி இருக் கிறார்கள்.
இந்தச் சூழலில், இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறு கின்றது என்று சொன்னால், அந்த மாநாட்டிற்கு ராஜபக்சே தலைமை தாங்கக்கூடிய சூழல் ஏற்படும்.  இன்னும் இரண்டு ஆண்டுகள் அதற்குத் தலைமை தாங்கக்கூடிய ஒரு மிகப்பெரிய வேதனையான, வெட்கப்படத்தகுந்த சூழ்நிலை ஏற்படக்கூடும். இதைக் கருதித் தான், ஏற்கெனவே டெசோ அமைப்பின்மூலமாகவும், தலைவர் கலைஞர் அவர்களின் தலைமை யில், திராவிடர் கழகம் உள்பட, விடுதலைச் சிறுத்தைகள், திராவிட  இயக்கப் தமிழர் பேரவை மற்ற அனைத்து இயக்கங்களும் சேர்ந்து குரல் கொடுத்து, காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு கலந்து கொள்ளக்கூடாது; இன்னுங் கேட்டால், இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடைபெறுவதே விரும்பத்தக்கதல்ல; அந்தச் சூழ் நிலையில், இதையும் மீறி அந்த மாநாட்டை அங்கே நடத்து கின்றனர்.  இங்கிலாந்து ராணி அங்கே செல்வதே சந்தேகமாக இருக்கிறது - மனித உரிமை ஆணையம் பச்சையாகச் சொன்ன தையெல்லாம் வைத்துக்கொண்டு, அங்கே நடைபெற்ற இனப்படு கொலைக்குப் பிறகு, அந்த மாநாட் டிலே கலந்துகொள்வது, சிறிதுகூட மனிதாபிமானம் ஆகாது என்று, கனடா நாட்டினுடைய பிரதமர் முடிவு செய்து, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட் டில் கலந்துகொள்ளமாட்டேன் என்று அறிவித்துள்ளார்.
இதுபோல, பற்பலரும் யோசிக் கின்ற இந்தக் காலகட்டத்தில், நம்முடைய தமிழினத்தை அழித்து, பல லட்சக்கணக்கான தமிழர்களை - தமிழ்த் தாய்மார்களை விதவை களாக்கி, அவர்கள் இன்னமும் வாழ்வுரிமையைப் பெற முடியாத நிலைக்கு உள்ளாக்கி, ஏதோ ஒப்புக்கு ஒரு தேர்தல் நடைபெற்று, அதை ஒரு பொம்மை அரசாக ஆக்கிக் காட்டவேண்டும் என்ற முயற்சி எடுத்து, அரசியல் தீர்வுக்கு இடமில்லாமல் செய்திருக்கிறார்கள். 61 இடங்களில் போராட்டம்!
எனவேதான், எங்களுடைய முதல் வேண்டுகோள், காமன் வெல்த் மாநாட்டில், இந்திய அரசு, இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்துகின்றோம். இது திராவி டர் கழகத்தினுடைய குரல் மட்டு மல்ல; டெசோ அமைப்பின் குரல் மட்டுமல்ல; ஆங்காங்கு எங்க ளோடு இணையாதவர்களும்கூட தனித்தனியே இதனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருபக்கம் மாணவர்கள் போராட்டம்; இன் னொரு பக்கம் தியாகு போன்றவர் களின் பட்டினிப் போராட்டம்; மற்றொரு பக்கம் விவசாயி களுடைய போராட்டம்; எனவே தமிழகத்தைப் பொறுத்தவரை யிலே, எல்லோரும் ஒருமித்த குரலிலே, காமன்வெல்த் மாநாட் டில் இந்திய அரசு கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலி யுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனை அலட்சியப்படுத்தக் கூடாது; ஏனென்றால், இதனை அலட்சியப்படுத்தினால், நீதியின் குரலை, நியாயத்தின் குரலை அலட்சியப்படுத்தியிருக்கிறார்கள் - வெறும் தமிழர்களை மட்டும் அலட்சியப்படுத்தவில்லை என்றாகிவிடும். ஆகவேதான், அதனை வலியுறுத்துவதற்காகத் தான் இன்றைய இந்தப் போராட் டம்; முதல்கட்டமாக தமிழகம் முழுவதுமிருக்கின்ற முக்கிய பகுதி களில் 61 இடங்களில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சட்டமன்றத்தில் தீர்மானம் தேவை!
ஆகவே, இந்தப் போராட்டம் மட்டுமல்ல; மாணவர்கள், மற்ற வர்கள், அவரவர்களுக்குத் தோன் றிய வகையில், இதனை செய்து கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு இந்தச் சுவரெழுத்தைப் படிக்கவேண்டும்; மத்திய அரசு உடனடியாக இன்னும் காலம் தாழ்த்தாமல், தங்களுடைய நிலையை தெளிவுபடுத்தவேண்டும்.
இந்த நேரத்தில், மத்திய அரசுக்கு அதனை வேண்டுகோளாக வைக் கின்ற நேரத்தில், மாநில அரசுக்கும் ஒரு வேண்டுகோளை வைக்க விரும் புகிறோம். அது என்னவென்று சொன்னால், இதுவரையில் இந்தப் பிரச்சினைக்காக நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, எத்தனையோ தலைவர்கள் சொன்ன பிறகும்கூட, கூட்ட வில்லை என்றாலும், பரவா யில்லை; அதேநேரத்தில், வருகின்ற 23 ஆம் தேதி சட்டமன்றம் கூடவிருக்கின்ற நிலையில், அக் கூட்டத்தில், ஒருமித்த கருத்தோடு, இதே தீர்மானத்தை, மத்திய அரசு - இந்திய அரசு இலங்கையில் நடை பெறும் காமன்வெல்த் மாநாட்டிற் குச் சென்று கலந்துகொள்ளக் கூடாது என்கிற தீர்மானத்தை முதலமைச்சர் அவர்கள் கொண்டு வர வேண்டும்; அதை ஒருமனதாக அனைவரும் நிறைவேற்றவேண்டும் என்பதை மாநில அரசிற்கு வேண்டு கோளாக வைக்கின்றோம்.
அதுபோலவே, நண்பர் தியாகு அவர்கள், இன்றைக்கு 14 நாள்களுக்கு மேலாக, உண்ணாவிரதம்  இருக் கிறார்; பொதுவாக கலைஞர் வேண்டு கோள் விடுத்தார்; எங்களைப் போன் றவர்கள் வேண்டுகோள் விடுத்தோம். அவரை மருத்துவமனைக்கு அழைத் துப் போய், மீண்டும் வெளியே வந்து, உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்; இப்பொழுது அவரை மருத்துவ மனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் வைத்திருப்பதாக நாங்கள் அறிகின் றோம்.
தோழர் தியாகு உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளவேண்டும்
எனவே, தோழர் தியாகு அவர் களுக்கு எங்களுடைய அன்பான வேண்டுகோள், இதற்காக கலைஞர் அவர்கள் முயற்சி எடுத்து, டில்லியில் பிரதமரைப் பார்த்து, கடிதத்தின் மூலமாக வலியுறுத்தி, பிரதமரும் இதைப்பற்றி நாங்கள் இணக்கமாக சிந்திக்கின்றோம் என்கிற ஒரு வாக் குறுதியை, தோழர் டி.ஆர்.பாலுவி டம் கொடுத்திருக்கின்ற காரணத் தால், அருள்கூர்ந்து, தோழர் தியாகு அவர்கள் தன்னுடைய உண்ணா விரதத்தினை நிறுத்திக் கொள்ள வேண்டும். அத்தகைய போராளி களின் உயிர் என்பது மிகமிக முக் கியம்; இந்த ஒரு கட்டத்தோடு இந்தப் போராட்டம் முடிவதல்ல; எனவே தான், போராளிகள் மிக முக்கியம். இலட்சியத் தலைவர்கள் மிக முக்கியம். எனவே, அவர்களுடைய உயிர் என்பது மிக முக்கியமானது. அது மிகப்பெரிய அளவிற்கு ஈர்த் திருக்கிறது; மத்திய அரசு வரையில் அதனைக் கொண்டு போய் கலைஞர் போன்றவர்கள் சேர்த்திருக்கிறார்கள். எதிர்பார்க்கிற விளைவுகள் நல்ல விதமாக இருக்கும். ஆகவே, தோழர் தியாகு அவர்கள் அருள்கூர்ந்து தன்னுடைய உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழக மீனவர்களுடைய உயிர் மிக முக்கியம்!
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது என்பது ஒரு அன்றாட வாடிக்கை யான நிகழ்வாக ஆகிவிட்டது. மீண்டும் மீண்டும் அவர்களைப் பிடித்து சிறையில் வைக்கிறார்கள். நேற்று குஜராத்தில் ஒரே ஒரு மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று சொன்னவுடன், குஜராத் மீனவருக் காக, பாகிஸ்தானில் இருக்கின்ற அந்தத் தூதுவரை அழைத்து, அலுவ லகத்தில் அவரை எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பியிருக்கிறார்கள் என்று சொன்னால், குஜராத் மீனவ ரின் உயிர் எவ்வளவு முக்கியமோ, அதுபோலதான், தமிழக மீனவர்களு டைய உயிரும் அதைவிட மிக முக் கியம் என்பதை நாங்கள் உணரு கிறோம்.
அதுபோலவே, ஏற்கெனவே கேர ளாவில் நடைபெற்றது எல்லோருக் கும் நன்றாக நினைவிருக்கும். அந்த வழக்கும் நன்றாக நினைவிருக்கும். ஆகவே, மற்ற மாநிலங்களில் நடை பெற்றால் ஒரு நியாயம்; தமிழகத்தில் நடைபெற்றால் வேறொரு நியாயமா? தமிழக மீனவர்களுக்கு அன்றாடம் இந்தக் கொடுமைகள் ஒரு தொடர் கதையாக இருந்தால், இதனை வேடிக்கை பார்ப்பதா? வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கைக்குச் சென்று தேநீர் அருந்திவிட்டு வந்தால் போதுமா? இதனால் என்ன விளை வுகள் ஏற்பட்டன?
ஜனநாயக அரசின் கடமை!
எனவே, தமிழக எம்.பி.,க்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத் தனைப் பேரும் உடனடியாகச் சென்று இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும்; மக்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இந்த ஆர்ப் பாட்டத்தினுடைய நோக்கம். இதனை அவர்கள் தெளிவாகச் செய்யவேண்டும். இல்லையென்றால், தமிழகமே இப்பொழுது கொதி நிலையில் இருந்துகொண்டிருக்கிறது. கொதி நிலையில் இருக்கின்ற தமிழ கத்தை மேலும் மேலும் சீண்டிப் பார்க்கக்கூடிய எண்ணம் நம்முடைய எதிரிகளுக்கு இருக்கக்கூடாது; அது போல, மத்திய - மாநில அரசுகளுக்கு இருக்கக்கூடாது. மக்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அந்த உணர்வுகளைப் பிரதிபலிப்பது தான் ஜனநாயக அரசின் கடமை யாகும்.
ஆகவே, அதற்காக ஒருவருக் கொருவர் விமரிசிக்காமல், அவரவர் களுக்கு ஏற்பட்டதை, ஈழப் பிரச் சினையில் எல்லோரும் தனித்தனியாக இருந்தாலும், எல்லோரும் ஒத்தக் குருலில், ஒரு குரலில் ஒரே கோரிக்கை வைக்கிறோம். அதுதான் இலங் கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக் கணிக்கவேண்டும் என்கிற கோரிக்கை. ஆகவே, இந்தக் கோரிக்கையி னுடைய முதல் கட்டம் இப்பொழுது நடைபெற்றிருக்கிறது. அடுத்த கட்டம் இன்னும் வேகமாக, விரை வாக இருக்கும்.
புயலுக்கு முன் இருக்கின்ற அமைதி!
அமைதியாக இருக்கின்ற கார ணத்தினால், புயல் எழாது என்று பொருளல்ல; புயலுக்கு முன் இருக்கின்ற அமைதிதான், இப்பொ ழுது தமிழகத்தில் இருக்கின்ற அமைதி என்பதையும் மத்திய அரசு புரிந்துகொள்ளவேண்டும் என்று கேட்டு முடிக்கின்றேன்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>


அக்டோபர் 16-31 - 2013

Wednesday, October 16, 2013

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ஜெ. அரசு போலீஸ் பாதுகாப்பு வழங்காதது ஏன்?

திராவிடர் கழகத் தலைவரும் விடுதலை ஆசிரியருமான கி.வீரமணி அவர்களின் மீது இப்போது நான்காவது முறையாகத் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. திருவில்லிப்புத்தூர் மம்சா புரத்திலே தாக்கினார்கள். சென்னை வண்ணாரப் பேட்டையிலே கொல்ல முயன்றார்கள். சேலம் ஆத்தூர் தம்மம்பட்டியிலே தீர்த்துக் கட்டிவிடலாம் என்று எண்ணி செயல்பட்டார்கள். இவை பழைய செய்திகள். இப்போது செப். 28ஆம் தேதி இரவு விருத்தாசலத் திலே அவர்களின் திருப்பணியை மேற்கொண்டு இருக்கிறார்கள் - கோழைகள்!
கருத்துக்கு கருத்து, எழுத்துக்கு எழுத்து, பேச்சுக்குப் பேச்சு என்று நாட்டு மக்களிடத்திலே அறிவைக் கூர்மைப் படுத்த தெரியாதவர்கள்
ஆயுதம் கொண்டு தாக்க வரு கிறார்கள் - அற்பர்கள்!
தினத்தந்தி, இண்டியன் எக்ஸ்பிரஸ், தினமலர் போன்ற ஏடுகள் வீரமணி தாக்குதலுக்கு உள்ளான அச்செய்தி யினை வெளியிட்டு இருக்கின்றன. காவலரின் அசட்டையை, மெத் தனத்தை எடுத்துக் காட்டி இருக் கின்றன.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தமது கண்டனத்தை உடனே வெளிப் படுத்தி இருக்கிறார்கள். கண்டனம் செய்து இருக்கிறார்கள்.
சுயமரியாதைஇயக்கத்தின் மறு வடிவமாக இயங்கும்  திராவிடர் கழகம் நாளும் மக்களைச் சந்திக்கிறது. கூட்டங்களை நடத்துகிறது. கருத்தரங் குகளை நிகழ்த்துகிறது. மாநாடுகளைக் கூட்டி முழக்கமிடுகிறது. சுயமரியாதைப் போராட்டத்தை நடத்தி வருகிறது. அதில் தான் சுகவாழ்வே  அடங்கி இருக்கிறது என்று பிரச்சாரம் செய்கிறது.
திராவிடர் கழகம் தேர்தலுக்கு நிற்கிற கட்சி அல்ல. கொள்கைப்  போரை நடத்தி வருகிற கட்சி; அந்த ஜூவாலையை அணையாமல் காக்கிற இயக்கம். ஆனால்அதற்கெனஅரசியல்உண்டு. நாம் பெருமிதம் கொள்கிறதனிச்சிறப்பு - அது தி.மு.க.வின் தாய்க் கழகம் என்பதே!
அத் தாய்க் கழகத்தின் தலைவரான ஆசிரியர் கி.வீரமணிஅவர்களின் மீது தான் தாக்குதல்தொடுக்கப்பட்டு இருக்கிறது.போலீசார் வேடிக் கைப் பார்க்கிறார்கள். சம்பவம் நடந்த இடத்தில் ஒரு போலீஸ்காரர்கூட இல்லை என்கிறது தினத்தந்தி.
உள்ளூர் அதிகாரி ஒரு மதவாத அமைப்பின் நிர்வாகியைப் போல் நடந்து கொண்டு இருக்கிறார்.  திராவிடர் கழக நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு சட்டப்படி தரப்பட வேண்டிய அனுமதியை அந்த அதிகாரி எப்படி மறுத்தார்? ஏன் மறுத்தார்? எந்த தைரியத்தில் மறுத்தார்?
எப்போதும் இல்லாத திருநாளாக இந்த ஆண்டு ஜன விநோதினி ஆரியமாலா ஜெயலலிதா பெரியார், அண்ணா சிலைகளுக்கு மரியாதை செய்து இருக் கிறார். தலைவர்களுக்கு அஞ்சலி செய்வதை எப் போதாவது வேடிக்கைகள் மாதிரி செய்வது அவருக்கு வாடிக்கை. இதையெல்லாம் செய்வதால் அவர் இயக்க உணர்வாளர் ஆகிவிட மாட்டார் என்பதுநமக்குத் தெரியும். இவையெல்லாம் நாடாளுமன்றத் தேர்தல் முன்னோட்டமா? அல்லது பெங்களூர் காய்ச்சலால் ஏற்பட்ட மாறுதலா? - என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் ஓர் அரசு அதிகாரி கருத்துத் சுதந்திரத்திற்கு எதிராக நடந்து கொள்ள எப்படி முடிந்தது? அவர் பின்னே இருப்பது யார்?  தலைவர் களைத் தாக்குகிற வன்முறைகளுக்கு காவல் துறையே துணைபோகும் அளவுக்கு அவர்களின் ஆதிக்கம் இருப்பதற்குக் காரணம் என்ன? இதற்கு முதல்வர் ஜெயலலிதா பதில் சொல்லியாக  வேண்டும்.
ஒருவர் இயக்ககொள்கை சார்ந்து தாமே தம்மை உருவாக்கிக் கொள்ளுவதும் இறுதி வரை கொள்கையை பேசுவதும், எழுதுவதும், நடப்பித்துக் காட்டுவதும் எவ்வளவுஉயர்ந்த விஷயமோ, அந்த அளவுக்கு அவை கடின சித்தம் உடையவையும் ஆகும். இலட்சியப் பயணத்தில் பாதி வழியிலேயே காணாமல் போனோர் உண்டு. பயணத்திலிருந்து விலகியோர் உண்டு.
பயணத்தில் ஏற்பட்ட அடிகளை தாங்கிக் கொள்ளமுடியாமல் இலட்சிய வாழ்க்கையை மாற்றிக் கொண்டோர் உண்டு. சிக்கலுக்கு உடனடியாக விடை காண முடியாமல் சோர்ந்து போய் விட்டவர்கள் இயக்கத்தின் மீது சாடியவர்கள் உண்டு. இயக்க வாழ்வு என்பது மலர் படுக்கை அல்ல என்பதைஉணர்ந்து பொதுவாழ்க் கையை ஏற்றுக் கொண்டவர் ஆசிரியர் வீரமணி! உண்மையானதிராவிடஇயக்கத் தலைவர்கள் மயிர்ப்பாலங் கட்டி நெருப் பாற்றைக் கடந்து கொண்டு இருப்பவர்கள் என்பதை நாம் அறிவோம்.
வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப் பார்க்கின்றோம். 1944ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதிவந்து நிற்கிறது. தென் ஆர்க்காடு மாவட்டம் திருப்பாதிரிபுலியூரில் - கடலூரில் திராவிடர் கழகமாவட்டமாநாடு, மாநாட்டை திறந்து வைக்க பெரியார் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆசிரி யரின் ஆசிரியர் அவரின் வழிகாட்டி ஆ.திராவி டமணி பி.ஏ., அவர்களின் பெரு முயற்சியால் அம்மாநாடு அங்கே கூட்டப் பட்டு இருக்கிறது.
மாநாட்டின் தலைவர் விருதுநகர் வி.வி.இராமசாமி. திராவிட நாடு படத்தினை அறிஞர் அண்ணா திறந்து வைக்க இருக் கிறார்கள். இரவேபெரியார் வந்து விட்டார். திருப்பாதிரிப் புலியூரில் ஒரு சத்திரத்தில் தங்க வைக் கப்பட்டு இருக்கிறார்கள். உடன் மணியம்மையாரும் இருக்கிறார். மறுநாள் காலைபெரியார் தங்கியுள்ள சத்திரத்திற்கு ஒரு பையனை அழைத்துப் போகிறார் டார்பிடோ ஏ.பி.ஜனார்த் தனம் - இவர் நமது திராவிட இயக்கத் தலைவர்களுள் ஒருவர். சிறந்த மேடைப் பேச்சாளர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆற்றொழுக் காய்ப் பேசக் கூடியவர். அந்தக் காலத்துஎம்.ஏ.!
அத்தகைய சிறப்புக்குரியவர் அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு போய் பெரியார் முன் நிறுத்துகிறார். சிறுவன் முகத்தில் அச்சமும் ஆசையும் குடிகொண்டு இருக்கிறது. இருப்பினும் பையன் பெரியாருக்கு வணக்கம் தெரிவிக்கிறான். இந்தப் பையன் நம் திராவிடமணி தயாரிப்பு. மேடையில் நன்றாகப் பேசுவான் என்கிறார் ஏ.பி.ஜே! பெரியார் பார்த்தார். ஒன்றும் பேசவில்லை. பெரியாரைப் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு மீண்டும் வணக்கம் சொல்லுகிறான் அந்தச் சிறு வன்! பிறகு சத்திரத்திற்கு வெளியே வந்து விட்டான்.
அன்று மாநாட்டைத் திறந்து வைத்து விட்டு சிங்கம் கர்ஜிப்பதைப் போல் பேசுகிறார் பெரியார். அடுத்து அறிஞர் அண்ணா திராவிட நாடு படத்தினைத் திறந்து வைத்து விட்டுப் பேசவேண்டும். ஆனால்பெரியாரைச் சந்தித்த அந்தச் சிறுவனைப் பேசுவதற்கு மாநாட்டு ஏற் பாட்டாளர்கள்விட்டார்கள். பத்துநிமிடப் பேச்சு. எழுதித் தயாரித்த, மனப்பாடம் செய்தபேச்சு. (நம் பாரம்பரியம் விட்டுப் போகாமல் முரசொலி அறக்கட்டளை யினர் பாரதிதாசன் கவிதைகளை சிறுவர்களைக் கொண்டு மனப்பாடம் செய்வித்து அவர்களை மேடையேற்றி பேசச் செய்ததைப் போல)  அந்தச் சிறுவனை ஒரு மேஜை மேல் நிற்க வைத்தார்கள். கூச்சம் சிறுதுமின்றி பயமற்று மிக அருமையாகப் பேசினான்.
அடுத்து அறிஞர் அண்ணா பேசினார். அச்சிறுவன் பேசியதிலிருந்தே அண்ணா தமதுபேச்சைத் தொடங்கினார்.
இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசி யிருந்தால், இவரை இந்தக் காலஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கி இருப்பார்கள். இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல. பெரியாரின் பகுத்தறிவுபால்தான்
இப்படிஅறிஞர் அண்ணா அவர்கள் பேசியதைக் கேட்டுப் பெரியார் பலமாகப் சிரித்தார். மாநாட்டில் மாபெரும் கரவொலி எழுந்தது. மாநாட்டு இடைவேளையின் போது மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது அந்தச் சிறுவனை அழைத்து, என்ன படிக்கிறாய்? என்று கேட்டார் - பெரியார். அச்சிறுவன், அய்ந்தாம் வகுப்புப் படிக்கிறேன் என்றான்.
அந்தச் சிறுவன்தான் இன்றைய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்கள்! அவர்தான் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார். மாநாடு நடத்துவதற்கு இந்தஅரசின் அதிகாரியால் அனுமதிமறுக்கப்பட்டு இருக்கிறார். பிறகு அனுமதிக்கப்பட்டு நிகழ்வுகள்நடைபெற்ற இடத்தில் போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட வில்லையே, அது ஏன்?
ஜெயலலிதா அரசின் மீது நமக்கு அய்யம் உண்டாகிறது. அரசே முன்னின்றுகலவரம் நடக்கட்டும்; தாக்குதல் நடைபெறட்டும் என்று ஊக்குவிக்கிறது என்றே நமக்குத் தோன்றுகிறது. ஆசிரியர் பல முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அவருக்கு ஏதாவது ஒன்று ஆகியி ருந்தால் யார் பொறுப்பு? - என்றே நாம் அச்சத்தோடு கேட்கின்றோம்.
பிள்ளைப் பிராயம் முதல் கொள்கை மேடையேறி இன்னமும் முழக்கமிட்டு வரும் அவரைதாக்கமுனைந்தால் அதற்கு என்னபொருள்?முதல்வர் ஜெய லலிதாவை ஒன்றுகேட்கின்றோம். அவரைப் போல்அறிவாண் மையில் ஆளுமையுள்ள ஒருவரை - பொதுப் பணியில் அக்கறையுள்ள ஒருவரை - கணக்கற்ற முறைசிறை சென்ற ஒருவரை - பத்திரிகை ஆசிரியரை - பன் நூல்களை யாத்த படைப்பாளியை - திராவிடர் இயக்க கொள்கைகளை இருமொழியில் எடுத்துரைக்கும் பேச் சாளியை உங்கள் கட்சியிலிருந்து ஒருவரை எங்களுக்கு அடையாளம் காட்ட உங்களால் முடியுமா? முடியாது. அப்படிப்பட்ட எவரும் உங்களிடம் இல்லை. நாங்கள்அறிவோம்.
ஜெயலலிதாவும்  அவர்  கட்சியும் ஆசிரியர் செய்யும் பணிகளுக்காக வந்தவர்கள் அல்லவே. அவர்களுக்கு ஆசிரியர் பற்றிய கவலை இருப்பதற்கு எந்தவித நியாயமுமில்லை. ஆனால் ஜெயலலிதா இந்நாட்டின் முதல்வராக இருக்கிறார். அரசாட்சியில் அதிகார முடையவராக இருக்கிறார். அதனாலே கேட்கின்றோம். காவல்துறை பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டு இருந்தால் தாக்குதல் நடந்து இருக்காது அல்லவா? பயங்கர வாதத்திற்கு அரசே துணை இருப்பதைப் போல ஆட்சி நடத்துவது சரியா?
திராவிடர் கழகத் தலைவர் - விடுதலை நாளேட்டின் ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு ஜெயலலிதாவின் அரசு பாதுகாப்புவழங்காதது ஏன்? அதற்குப் பின்னே ஒளிந்திருப்பதுஎது? -  என்றே நாம் கேட்க விரும்புகின்றோம்.
நன்றி: முரசொலி (5.10.2013)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Wednesday, October 9, 2013

1949 ஆம் ஆண்டு அளித்த உறுதிமொழியை ஆர்.எஸ்.எஸ். காற்றில் பறக்கவிட்டது

வித்யா சுப்பிரமணியம்

அரசியலில் கலந்து கொள்ளாமல் விலகி நிற்பதே தங்கள் கொள்கை என்று  ஆர்.எஸ்.எஸ்.சின்  அமைப்பு விதிமுறைகள் மிகத் தெளிவாகத் தெரிவிக்கின்றன. 1949 இல் ஆர்.எஸ்.எஸ். தனது அமைப்பின் விதிமுறைகளை எழுத வேண்டிய கட்டாய நிலை சர்தார் வல்லபாய் படேலால் ஏற்படுத்தப்பட்டது. இந்திய வரலாற்றின் மிக முக்கியமான இந்தப் பகுதி 2013 ஆம் ஆண்டு நடந்தேறும் நிகழ்ச்சிகளால் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டது. பாரதிய ஜனதா கட்சியின் முழு கட்டுப்பாட் டையும் ஆர்.எஸ்.எஸ்.எடுத்துக் கொண்டு விட்டது. பிரதமர் வேட் பாளராக நரேந்திர மோடியை அறி விப்பதற்கு கட்சிக்குள் இருந்த எதிர்ப்பை அது முறியடித்துவிட்டது. இச்செயல் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் செயல்பாடேயாகும்.
முன்பு ஜனசங்கம் என்ற பெயர் கொண்ட கட்சியாக இருந்த இன் றைய பாரதிய ஜனதா கட்சி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தனது வழிகாட்டியாகவே கருதி வந்ததால், அதன் ஆணைகளை அக்கட்சியால் மீற முடியாது. இதன் காரணமே ஆர்.எஸ்.எஸ்.சின் முன்னணி பிரச் சாரகர்களே, புதிய கட்சியின் அறிவு மற்றும் அரசியல் மூலதனமாக இருந் ததுதான். தனது அமைப்பு விதிமுறை களில் ஆர்.எஸ்.எஸ். தனக்கும் அரசியலில் ஓர் பங்கு உள்ளது என்று தெரிவித்திருந்தாலும்,  எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் அதன் சுயம்சேவக்குகள் சேர்ந்து கொள் ளலாம் என்று அனுமதித்துள்ளது.
ஜனசங்கத்திலும், பாரதிய ஜனதா கட்சியிலும் தனது பிரதிநிதிகள் இடம் பெறச் செய்ய இந்த விதியை ஆர்.எஸ்.எஸ். தந்திரமாகப் பயன் படுத்திக் கொண்டது.  அத்வானியி லிருந்து நரேந்திர மோடி வரையி லான முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு பா.ஜ.க. தலைவரும் ஆர்.எஸ்.எஸ்.சின் மடியில் இருந்து வந்தவர்களே ஆவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் டில்லி மற்றும் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு அடிக்கடி புனித யாத்திரை செல்லவேண்டும், தனது தாய் அமைப்பின் அறிவுரையை ஏற்றுக் கொள்ள வேண்டும்  என்ற கட்டாயக் கடமைகள் இருக்கின்றன.
இந்த ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. உறவில் வெளியே கூறப்படாத செய்தி என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவரான சரக்சாலக் சங் இந்த விவகாரங்களில் எல்லாம் நேரடி யாகத் தலையிடமாட்டார் என்பது தான். அவரது வேலைகள் அனைத் தும் திரைமறைவு வேலைகள்தான். இதன் காரணமே,  1949 இல் இந் துத்துவா அமைப்புக்கு எதிராக இருந்த பலமான எதிர்ப்பினை சமா ளிக்க சர்தார் வல்லபாய் படேலுக்கு அவர்கள் வாக்குறுதி ஒன்றைத் தர வேண்டி இருந்ததுதான். 1977-79 ஜனதா கட்சி ஆட்சியில் ஜனசங்கம் அங்கம் வகித்ததற்கும், 1998-2004 வாஜ்பேய் தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந் ததற்கும் முக்கிய காரணமாக விளங் கியதே, ஆர்.எஸ்.எஸ். இந்த விவகாரங் களில் தலையிடாமல் இருப்பதற்கு ஒப்புக் கொண்டதேயாகும்.
2013 ஆம் ஆண்டில் நடந்தேறிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் குறிப்பிடத் தகுந்தவை என்று கூறுவதற்குக் காரணமே, பதவிக்கு வருவதற்கு பா.ஜ.க.வுக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவையில்லை என்பதாலேயே, ஆர்.எஸ்.எஸ். திரைமறைவில் பின்னால் இருந்து இயக்குவதற்கு பதிலாக நேரடி யான செயல்பாடுகளில் இறங்கியுள்ளது என்பதுதான்.  முன்பு வழிகாட்டி அமைப்பு என்ற அளவில் இருந்த ஆர்.எஸ்.எஸ். முன் நின்று முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றதாக, முன் எப்போதுமே இருந்திராத அளவில், தன்னைக் வெளிக்காட்டிக் கொள்கிறது.
இவ்வாறு காவிக்கட்சியின் அரசியல் அதிகாரத்தைத் தனது கைகளில் எடுத்துக் கொள்வது என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முயற்சி, பாகிஸ்தான் சென் றிருந்த அத்வானி முகமது அலி ஜின் னாவை அவரது நினைவிடத்தில் நின்று  புகழ்ந்து பேசிய 2005 ஆம் ஆண்டின் போதே தொடங்கிவிட்டது என்று கூறலாம். இதைக் கடுமையாகக் கண்டித்த ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.தலைவர் பதவியில் இருந்து அத்வானியை விலக்கி வைத்து ஆணையிடச் செய்தது. அதன் பின்பு, 2009 இல் அத்வானி பிரதமர் வேட்பாளராக ஆனபோதிலும் கூட,  சங் அமைப்பில் தனக்கு முன்பு இருந்த ஈடுஇணையற்ற இடத்தை திரும்பப் பெற முடியாதபடி அத்வானி இழந்துவிட்டார். அப்போது தொடங்கிய கொள்கைப் பற்றுள்ள அத்வானியை ஓரங்கட்டும் வேலை இன்று முழுமையடைந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டார்.
2005 ஆம் ஆண்டில் அத்வானிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இடையே நடை பெற்ற வரலாற்றுப் புகழ் மிக்க மோதலின்போது,  தன்னைப் பதவி நீக்கம் செய்ததால் ஏற்பட்ட கோபத்தை அத் வானியால் அவ்வளவு எளிதாகக் கட்டுப் பத்திக் கொள்ள முடியாமல் வெளிப் பட்டதை அவரது சொற்களிலேயே பார்க் கலாம். 2005 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற தேசிய செயல்குழுக் கூட்டத் தின் முடிவில் பேசும்போது, ஆர்.எஸ்.எஸ். சின் அனுமதி இல்லாமல் தனது கட்சி யினால் எந்த ஒரு முடிவும் மேற்கொள்ள முடியாது என்ற எண்ணத்தை இந் நிகழ்ச்சி வலுப்படுத்திவிட்டது என்று கூறினார். நாம் கொண்டிருக்கும் இந்தக் கண்ணோட்டத்தினால், பா.ஜ.கட்சிக்கோ அல்லது ஆர்.எஸ். எஸ்.சுக்கோ எந்த நன்மையும் ஏற்படாது. ஓர் நாட்டை மறுகட்ட மைப்பு செய்ய இயன்ற ஒரு தலை வரை உருவாக்குவதற்கு பதிலாக இத்தகைய கண்ணோட்டம் அவரது நற்தோற்றத்தைக் குறைத்துவிடும்  என்பது பற்றி ஆர்.எஸ்.எஸ். கவலைப்படவேண்டும். மக்களிடையே நிலவும் இந்த எண்ணத்தைச் சிறிது சிறிதாகப் போக்குவதற்கு  ஆர்.எஸ். எஸ்.சும்,  பா.ஜ.க.வும் உண்மையாகப் பாடுபடவேண்டும் என்று அத்வானி பேசினார்.
அதற்கு முன்பும், அத்வானியைப் போல் அதிக முக்கியத்துவம் அற்ற சில பா.ஜ.க.வினரும் ஆர்.எஸ். எஸ்.சுடன் மோதி உள்ளனர்; அதற் கான விலையையும் அவர்கள் கொடுத்துள்ளனர். ஆனால் சங்கத் தின் அபிமானத்தைப் பெற்ற அத் வானி  ஜனசங்கத்துக்கு முதன் முதலாக அனுப்பப்பட்ட பிரசாரகர் களில் முக்கியமானவர் ஆவார். மற்றவர் விவகாரங்களில் தேவை யின்றி தலையிடும் மோசமான அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்று மிகவும் பச்சையாகவே அத்வானி துணிவுடன் கூறிவிட்டார். உண்மையும் அதுதான். இந்த மாதிரி வேலைகளைத்தான் ஆர்.எஸ்.எஸ். எப்போதுமே செய்து வந்துள்ளது. ஆனால் அதற்கு முன் நடைபெறாமல் இப்போது மட்டும்  புதியதாக நடைபெற்றுள்ளது என்ன வென்றால், அத்வானி போன்ற ஓர் உயர்ந்த தலைவரின் அதிகாரத்தைப் பறித்து அவரைத் தலைவர் பொறுப் பில் இருந்து நீக்கச் செய்ததுதான்.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். மற்றுமோர் ஆணை பிறப்பித்தது. ஒரு தலைவருக்கு இரண்டு நிலைகளில் இரண்டு பதவி உயர்வுகளை அளித்ததுதான் அந்த ஆணை. 2013 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் பா.ஜ.க.வின் பிரச்சாரக் குழுவின் தலைவராக மோடி நியமிக் கப்பட்டார்; அவர் இப்போது அந்தப் பதவியை கைவிட்டுவிட்டார். 2013 செப்டம்பர் மாதத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறி விக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கங்கள் பற்றிய ஊகத்துக்கான ஆதாரங்கள் அத்வானியிடமிருந்து வந்தன; 2013 ஆம் ஆண்டில்  அத்வானி தனித்த தீவில் விடப்பட்டுவிட்டார்.
The forgotten promise of 1949 The RSS wrote a non-political role for itself as part of an undertaking it gave Sardar Patel. The overt political role it has assumed in 2013 is a breach of that agreement and its own constitution

நன்றி: தி இந்து, 8.10.2013
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)

Monday, October 7, 2013

சுப்பிரமணிய சுவாமிக்குப் போட்டியாக புறப்பட்டிருக்கும் தமிழருவி மணியன்

- ப.கவிதாகுமார்

காந்தீய மக்கள் இயக்கத்தின் 4 ஆம் ஆண்டு துவக்கவிழா பொதுக் கூட்டம் மதுரையில் காந்தி பிறந்த நாளான அக்டோபர்-2ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தை விளக்கி திராவிட கட்சிகளுக்கு இணையாக காந்திய மக்கள் இயக்கம் பிளக்ஸ் போர்டு வைத்து இருந்தது. திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே திராவிடக் கருத்தாக்கத்திற்கு எதிராக எழுதி வரும் தமிழருவி மணியனோடு, தந்தை பெரியாரின் பாசறையில் பயின்ற வைகோவும் முழங்குவார் என்ற முழக்கங்களோடு இருந்த போர்டுகள் ஒரு தினுசாகவே இருந்தது. மகாத்மா காந்தியை பெயரில் மட்டுமின்றி தனது இயக்கக் கொடியிலும், வலை தளத்திலும் பயன்படுத்தி வரும் தமிழருவி மணியன் பெயர், நரேந்திர மோடி நாமாவளியைத் தொடர்ந்து பாடுவதால் என்னவோ பாஜக கலரில் சுவரொட்டிகளில் எக்குத்தப்பாக காட்சி தந்தது. காந்தி பிறந்த நாள் அன்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழருவி மணியன் தங்கு தடை யின்றி பேசிய பேச்சு மாற்று அரசி யலைப் பற்றித்தான். அந்த மாற்று என்னவென்றால் மகாத்மா காந் தியைச் சுட்டுக்கொன்ற ஆர்எஸ்எஸ் என்ற நச்சுப் பாம்பின் குட்டியான பாஜக மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான்.
நீங்கள் காண விரும்பும் மாற்றம் உங்களிடம் இருந்து தொடங்கட்டும் என்றார் மகாத்மா காந்தி. தமிழருவி மணியனிடம் துவங்கிய மாற்றம் 1966 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் துவங்கி காற்றில் அலையும் காகிதம் போல, 40 ஆண்டு காலமாக காங்கிரஸ், பின் ஜனதா, அதன் பின் ஜனதாதளம், அதன் பின் தமாகா, மீண்டும் காங்கிரஸ் என தான் விரும் பிய மாற்றத்தை அவரிடம் இருந்தே துவக்கினார். இதன் பின் காந்திய அறிவியல் இயக்கமாகத் துவங்கி தற்போது 4 ஆம் ஆண்டு கொண் டாடும் காந்தீய மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளார். மாவீரன் நெப்போலி யனின் நான் மற்றவர்களைப் போல மனிதன் இல்லை என்ற முழக்கத்தை தனது வலைத்தளத்தில் எழுதி வைத்த தில் இருந்து தமிழருவியை புரிந்து கொள்ள முடியும் அவர் ஒரு வித்தி யாசமானவர் என்பதை.ஊருக்கு நல்லது சொல்வேன் என்று இலக்கிய மேடைகளில் முழங்கிய தமிழருவி மணியன் அக்டோபர்-2ஆம் தேதி மதுரையில் என்ன பேசினார்? அவரது இயக்கத்தின் கொள்கையான இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக, அகண்ட பாரதம் பற்றி கனவு காணும் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்று பேசினார். காந்திய மக்கள் இயக்கம் எந்த அரசியல் கட்சியின் நலனுக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ இயங்காது என்று கூறி விட்டு மோடிக்கு ஆள் பிடிக்கும் வேலை யில் ஏன் தமிழருவி இறங்கினார்? மனித குலத்திற்கு அமைதியையும், நல்வழியை யும் கொண்டு சேர்ப்பதே அனைத்து மதங்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது என்ற சமய நல்லிணக்கத்தை தனது இயக்கத்தின் கொள்கையாய் வரிந்து வைத்துள்ள இவர் மதச்சார்ப்பற்ற கொள் கைக்கு வேட்டு வைக்கும் பாஜகவுக்கு எப்படி ஜால்ரா தட்டிப் பேசினார்? வர்ணாச்சிரம மதத்தின் கேடுகெட்ட சாதியபடிநிலை, மனிதர்களை சாதிகளின் கூறுகளாகப் பிரித்துப்போட்டுள்ளது. பிராமணீய மேலாதிக்க இந்துத்துவா கொள்கைகளைத் தனது கொள்கை யாகக் கொண்ட பாஜகவின் மோடியை ஆதரிக்கும் தமிழருவி, அவரது இயக்கத் தின் கொள்கையான இரட்டைக்குவளை போன்ற தீண்டாமை அடையாளங்களை மோடிக்காக அடகு வைத்து விடுவாரா? பாஜகவின் ஞானகுருவான சங்கரச்சாரி யின் சொல்லில் சொல்வதென்றால், வீட்டை விட்டு வெளியே போகும் பொம் பளைங்க கெட்டவங்க என்ற இந்துத்துவா வின் கருத்தாடலை ஆண்- பெண் சமத்துவம் பேசும் தமிழருவி, இனி மேடை மேடையாய் எப்படி தனது குரலில் பேசு வார்? தமிழ் நீச பாஷை, சமஸ்கிருதமோ சிறந்த பாஷை எனக்கூறி பாஜக மத்திய ஆட்சியில் இருந்த போது சமஸ்கிருத ஆண்டு கொள்கைவாதிகளை தற்போது தாங்கிப் பிடித்திருக்கும் தமிழருவி, தாய்மொழிக்கல்வியின் அவசியத்தை பேச முடியுமா?தமிழகத்தில் மாற்று அரசியல் அணி அமைவதற்கு பாஜக, தேமுதிக, மதிமுக ஆகிய மூன்று கட்சிகளும் முதலில் நெருங்கி வரவேண்டும் என்று ஜோசியக்காரன் குருவும், கேதுவும் கொஞ்சம் நெருங்கனும் என்பது போல பேச துவங்கியுள்ள தமிழருவி, 15 விழுக்காடு வாக்காளர்கள் தமிழகத்தில் மோடியை பிரதமராக்க விரும்புகின்றனர் என்று கருத்துக்கணிப்பை வெளியிட் டுள்ளார்.
சன் தொலைக்காட்சியும், ஏ.சி. நீல்சன் குழுவையும் கொண்டு ஏதாவது கருத்துக்கணிப்பை தமிழருவி மணியன் நடத்தினாரா என்று தெரியவில்லை! மோடி இந்தியாவின் பிரதமர், வைகோவை தமிழகத்தின் முதல்வராக்காமல் ஓய மாட்டேன் என சண்டமாருதம் செய்யும் தமிழருவி மணியன், மதிமுகவும், தேமுதிக வும் ஒரே அணியில் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். தமிழகத்தின் எதிர்க் கட்சித் தலைவராக இருக்கும் விஜய காந்த், முதலமைச்சராக ஆகமாட்டேன் என்று பாலில் அடித்து தமிழருவி மணி யனிடம் சத்தியம் செய்து கொடுத்தாரா என்று தெரியவில்லை. இரண்டு பேரிடமும் பேசிவிட்டேன் என்று பேசும் தமிழருவி, என்ன பேசினார் என்று தெரிவிக்கத் தயாராக இருக்கிறாரா? மாற்று அணியை உருவாக்க கம்யூனிஸ்டுகளை அணுகி னேன். ஆனால், அவர்கள் அதற்கு ஆதரவு தரவில்லை என்று பேசிய தமிழருவி, ஆறு சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு கம்யூனிஸ்டுகள் மாற்று அரசியலை உருவாக்க முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். நரம்பில்லாத நாக்கு எதையும் பேசும் என்பதற்கு இதைவிட வேறு சான்று சொல்ல முடியுமா? தேசிய அளவில் ஒரு மாற்றை உருவாக்க தமிழருவி மணியன் என்ன ராஜ தந்திரியா? காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவது தான் தன்னுடைய ஒரேவேலை என்று மதுரை மேடையில் முழங்கிய தமிழருவி மணியன், மதுரையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரின் விடுதியில் தான் வசதியாகத் தங்கியிருந்தார் என்பதை பகிரங்கமாக சொல்லத்தயாரா? இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றிலும், இந்திய அரசியலிலும் பல தியாகங்களைச் செய்த கம்யூனிஸ்டுகள் மத்தியில் ஆட்சியை உருவாக்கிய வரலாற்றை மறந்து விட்டு, வானுலகத்தில் இருந்து குதித்து வந்த தேவமகனைப் போல, தமிழருவி மணியன் சொன்னவுடன், இந்தியாவில் மோடியை பிரதமராக்கி விட்டு தான் மக்கள் அடுத்த வேலை பார்க்கப்போவார்கள் என்பது போல பேசுகிறார்.யாருக்கும் புரோக்கர் வேலை செய்யவில்லை என்று கூறும் தமிழருவி, தமிழகம் வந்த பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங்கை பார்த்து பேசிவிட்டு தனது மோடிபுராண ஊர்வ லத்தை ஆரம்பித்ததற்கு என்ன பெயர்? காமராசரின் காலடியில் பாடம் படித்தவன் என்று கூறிய தமிழருவி, காமராசரை கொல்ல முயன்ற இந்துத்துவாக் கூட் டத்தை ஆதரித்து என்ன பேசினார் தெரியுமா? இந்திரா காந்தியிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற இந்துமதவாதி களுடன் காமராசர் கூட்டணி அமைத் தார். அவர் என்ன மதவாதியா ? எனக் கேள்வி எழுப்பிய தமிழருவி, மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே நீதிமன் றத்தில் கொடுத்த வாக்குமூலத்தை ஒப்பித்து விட்டு காந்தியை உயர்சாதி யினரும் ஏற்கவில்லை.
தலித்துகளும் ஏற்கவில்லை என்று ஒரே போடாக போட்டார். அவர் பெயரில் இயக்கத்தை வைத்துக்கொண்டு கோட் சேக்கு ஆதரவாக எப்படி பேச முடிந்தது தமிழருவி மணியனால்? கடைசியாக பேசிய அவரின் பேச்சுகள் தான் ஆபத்தின் உச்சமாக இருந்தது. பாஜக, மாற்று அரசியலை முன்வைத்து பிரச்சாரம் செய்வதுடன், காங்கிரஸ் ஊழல்களை வெளிப்படுத்த வேண்டும். சிறுபான்மை உணர்வை எப்படி காயப்படுத்தக் கூடாதோ, அதே போல இந்துத்துவா உணர்வையும் காயப்படுத்தக்கூடாது. என்னை வகுப்புவாதி என்றோ, மத வாதி என்றோ சொன்னால் எனக்கு கவலையில்லை. ஆயிரம் பழிகளை சுமக்கத் தயாராக இருக்கிறேன் என்று வியாக்கியானம் பேசினார். ஆயிரக்கணக்கான அப்பாவி மக் களையும், இஸ்லாமிய மக்களையும் கொன்றுகுவித்த நரமோடியின் நவீன தூதர் ஆயிரம் பழிகளை என்ன, இலட் சம் பழிகளையும் சுமக்கத்தயாராகத் தான் இருப்பார்.இத்தோடு விட்டாரா என்றால் இல்லை.மோடி மீது இளை ஞர்களுக்கு ஆர்வம் அதிகமாகியுள் ளது. படித்த நடுத்தரவர்க்கத்திற்கு கோத்ரா ரயில் எரிப்புக்குப் பின் நடந்த கலவரம் தெரியாது என்று தமிழருவி மணியன் பேசியுள்ளார்.படித்த இளை ஞர்களை இவரை விட யாரும் இவ் வளவு கேவலப்படுத்த முடியாது. உலகமே கிராமமாய் சுருங்கியுள்ள நிலையில், அடுத்த நாட்டில் நடை பெறுவதை அடுத்த நொடியில் கையில் உள்ள அய்போனில் பார்த்துக் கொண் டிருக்கும் இளைஞர்களை எதுவும் தெரியாதவர்களாக நினைக்கும் தமிழருவி மணியன், மறதியை வைத்து அரசியல் நடத்தலாம் என நினைக் கிறார். தமிழருவி மணியனுக்கு என்ன அரசியல் நேர்மை இருக்கிறது? பாஜகவின் மோடிக்காக பிரச்சா ரத்தை துவக்கியுள்ள தமிழருவி கொள்கையற்றவர். என்பதற்கு, அவ ரின் எழுத்தே சான்றாக இருக்கிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் நட்புக்கு முதலிடமளித்து மோடி ஒரு மூன்று தொகுதிகளுக்காக பாஜகவை போயஸ் தோட்டத்தில் அடகுவைக்கப் போகலாம். விஜயகாந்த் ஏதோவொரு கணக்குப் போட்டு திமுக - காங்கிரஸ் வலையில் விழலாம். ஒன்றும் சரிப்பட்டு வராத நிலையில் வைகோ தனிவழி நடக்கலாம். அவர்கள் முடிவில் தலை யிட நான் யார்? பாழ்பட்ட அரசியலில் எதுவும் நடக்கலாம். அரசியல் திசை வழியறியாமல் நடுத்தெருவில் நின்று கொண்டு பேசிக்கொண்டிருக்கும் தமிழருவி மணியன் தமிழகத்தில் சுப்பிரமணியசாமியின் இடத்தைப் பிடிக்காமல் விடமாட்டார் போலிருக் கிறது!
- நன்றி: தீக்கதிர் 7.10.2013


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>


அக்டோபர் 16-31 - 2013

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...