- வித்யா சுப்பிரமணியம்
அரசியலில் கலந்து கொள்ளாமல் விலகி நிற்பதே தங்கள் கொள்கை என்று ஆர்.எஸ்.எஸ்.சின் அமைப்பு விதிமுறைகள் மிகத் தெளிவாகத் தெரிவிக்கின்றன. 1949 இல் ஆர்.எஸ்.எஸ். தனது அமைப்பின் விதிமுறைகளை எழுத வேண்டிய கட்டாய நிலை சர்தார் வல்லபாய் படேலால் ஏற்படுத்தப்பட்டது. இந்திய வரலாற்றின் மிக முக்கியமான இந்தப் பகுதி 2013 ஆம் ஆண்டு நடந்தேறும் நிகழ்ச்சிகளால் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டது. பாரதிய ஜனதா கட்சியின் முழு கட்டுப்பாட் டையும் ஆர்.எஸ்.எஸ்.எடுத்துக் கொண்டு விட்டது. பிரதமர் வேட் பாளராக நரேந்திர மோடியை அறி விப்பதற்கு கட்சிக்குள் இருந்த எதிர்ப்பை அது முறியடித்துவிட்டது. இச்செயல் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் செயல்பாடேயாகும்.
முன்பு ஜனசங்கம் என்ற பெயர் கொண்ட கட்சியாக இருந்த இன் றைய பாரதிய ஜனதா கட்சி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தனது வழிகாட்டியாகவே கருதி வந்ததால், அதன் ஆணைகளை அக்கட்சியால் மீற முடியாது. இதன் காரணமே ஆர்.எஸ்.எஸ்.சின் முன்னணி பிரச் சாரகர்களே, புதிய கட்சியின் அறிவு மற்றும் அரசியல் மூலதனமாக இருந் ததுதான். தனது அமைப்பு விதிமுறை களில் ஆர்.எஸ்.எஸ். தனக்கும் அரசியலில் ஓர் பங்கு உள்ளது என்று தெரிவித்திருந்தாலும், எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் அதன் சுயம்சேவக்குகள் சேர்ந்து கொள் ளலாம் என்று அனுமதித்துள்ளது.
ஜனசங்கத்திலும், பாரதிய ஜனதா கட்சியிலும் தனது பிரதிநிதிகள் இடம் பெறச் செய்ய இந்த விதியை ஆர்.எஸ்.எஸ். தந்திரமாகப் பயன் படுத்திக் கொண்டது. அத்வானியி லிருந்து நரேந்திர மோடி வரையி லான முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு பா.ஜ.க. தலைவரும் ஆர்.எஸ்.எஸ்.சின் மடியில் இருந்து வந்தவர்களே ஆவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் டில்லி மற்றும் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு அடிக்கடி புனித யாத்திரை செல்லவேண்டும், தனது தாய் அமைப்பின் அறிவுரையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயக் கடமைகள் இருக்கின்றன.
இந்த ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. உறவில் வெளியே கூறப்படாத செய்தி என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவரான சரக்சாலக் சங் இந்த விவகாரங்களில் எல்லாம் நேரடி யாகத் தலையிடமாட்டார் என்பது தான். அவரது வேலைகள் அனைத் தும் திரைமறைவு வேலைகள்தான். இதன் காரணமே, 1949 இல் இந் துத்துவா அமைப்புக்கு எதிராக இருந்த பலமான எதிர்ப்பினை சமா ளிக்க சர்தார் வல்லபாய் படேலுக்கு அவர்கள் வாக்குறுதி ஒன்றைத் தர வேண்டி இருந்ததுதான். 1977-79 ஜனதா கட்சி ஆட்சியில் ஜனசங்கம் அங்கம் வகித்ததற்கும், 1998-2004 வாஜ்பேய் தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந் ததற்கும் முக்கிய காரணமாக விளங் கியதே, ஆர்.எஸ்.எஸ். இந்த விவகாரங் களில் தலையிடாமல் இருப்பதற்கு ஒப்புக் கொண்டதேயாகும்.
2013 ஆம் ஆண்டில் நடந்தேறிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் குறிப்பிடத் தகுந்தவை என்று கூறுவதற்குக் காரணமே, பதவிக்கு வருவதற்கு பா.ஜ.க.வுக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவையில்லை என்பதாலேயே, ஆர்.எஸ்.எஸ். திரைமறைவில் பின்னால் இருந்து இயக்குவதற்கு பதிலாக நேரடி யான செயல்பாடுகளில் இறங்கியுள்ளது என்பதுதான். முன்பு வழிகாட்டி அமைப்பு என்ற அளவில் இருந்த ஆர்.எஸ்.எஸ். முன் நின்று முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றதாக, முன் எப்போதுமே இருந்திராத அளவில், தன்னைக் வெளிக்காட்டிக் கொள்கிறது.
இவ்வாறு காவிக்கட்சியின் அரசியல் அதிகாரத்தைத் தனது கைகளில் எடுத்துக் கொள்வது என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முயற்சி, பாகிஸ்தான் சென் றிருந்த அத்வானி முகமது அலி ஜின் னாவை அவரது நினைவிடத்தில் நின்று புகழ்ந்து பேசிய 2005 ஆம் ஆண்டின் போதே தொடங்கிவிட்டது என்று கூறலாம். இதைக் கடுமையாகக் கண்டித்த ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.தலைவர் பதவியில் இருந்து அத்வானியை விலக்கி வைத்து ஆணையிடச் செய்தது. அதன் பின்பு, 2009 இல் அத்வானி பிரதமர் வேட்பாளராக ஆனபோதிலும் கூட, சங் அமைப்பில் தனக்கு முன்பு இருந்த ஈடுஇணையற்ற இடத்தை திரும்பப் பெற முடியாதபடி அத்வானி இழந்துவிட்டார். அப்போது தொடங்கிய கொள்கைப் பற்றுள்ள அத்வானியை ஓரங்கட்டும் வேலை இன்று முழுமையடைந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டார்.
2005 ஆம் ஆண்டில் அத்வானிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இடையே நடை பெற்ற வரலாற்றுப் புகழ் மிக்க மோதலின்போது, தன்னைப் பதவி நீக்கம் செய்ததால் ஏற்பட்ட கோபத்தை அத் வானியால் அவ்வளவு எளிதாகக் கட்டுப் பத்திக் கொள்ள முடியாமல் வெளிப் பட்டதை அவரது சொற்களிலேயே பார்க் கலாம். 2005 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற தேசிய செயல்குழுக் கூட்டத் தின் முடிவில் பேசும்போது, ஆர்.எஸ்.எஸ். சின் அனுமதி இல்லாமல் தனது கட்சி யினால் எந்த ஒரு முடிவும் மேற்கொள்ள முடியாது என்ற எண்ணத்தை இந் நிகழ்ச்சி வலுப்படுத்திவிட்டது என்று கூறினார். நாம் கொண்டிருக்கும் இந்தக் கண்ணோட்டத்தினால், பா.ஜ.கட்சிக்கோ அல்லது ஆர்.எஸ். எஸ்.சுக்கோ எந்த நன்மையும் ஏற்படாது. ஓர் நாட்டை மறுகட்ட மைப்பு செய்ய இயன்ற ஒரு தலை வரை உருவாக்குவதற்கு பதிலாக இத்தகைய கண்ணோட்டம் அவரது நற்தோற்றத்தைக் குறைத்துவிடும் என்பது பற்றி ஆர்.எஸ்.எஸ். கவலைப்படவேண்டும். மக்களிடையே நிலவும் இந்த எண்ணத்தைச் சிறிது சிறிதாகப் போக்குவதற்கு ஆர்.எஸ். எஸ்.சும், பா.ஜ.க.வும் உண்மையாகப் பாடுபடவேண்டும் என்று அத்வானி பேசினார்.
அதற்கு முன்பும், அத்வானியைப் போல் அதிக முக்கியத்துவம் அற்ற சில பா.ஜ.க.வினரும் ஆர்.எஸ். எஸ்.சுடன் மோதி உள்ளனர்; அதற் கான விலையையும் அவர்கள் கொடுத்துள்ளனர். ஆனால் சங்கத் தின் அபிமானத்தைப் பெற்ற அத் வானி ஜனசங்கத்துக்கு முதன் முதலாக அனுப்பப்பட்ட பிரசாரகர் களில் முக்கியமானவர் ஆவார். மற்றவர் விவகாரங்களில் தேவை யின்றி தலையிடும் மோசமான அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்று மிகவும் பச்சையாகவே அத்வானி துணிவுடன் கூறிவிட்டார். உண்மையும் அதுதான். இந்த மாதிரி வேலைகளைத்தான் ஆர்.எஸ்.எஸ். எப்போதுமே செய்து வந்துள்ளது. ஆனால் அதற்கு முன் நடைபெறாமல் இப்போது மட்டும் புதியதாக நடைபெற்றுள்ளது என்ன வென்றால், அத்வானி போன்ற ஓர் உயர்ந்த தலைவரின் அதிகாரத்தைப் பறித்து அவரைத் தலைவர் பொறுப் பில் இருந்து நீக்கச் செய்ததுதான்.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். மற்றுமோர் ஆணை பிறப்பித்தது. ஒரு தலைவருக்கு இரண்டு நிலைகளில் இரண்டு பதவி உயர்வுகளை அளித்ததுதான் அந்த ஆணை. 2013 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் பா.ஜ.க.வின் பிரச்சாரக் குழுவின் தலைவராக மோடி நியமிக் கப்பட்டார்; அவர் இப்போது அந்தப் பதவியை கைவிட்டுவிட்டார். 2013 செப்டம்பர் மாதத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறி விக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கங்கள் பற்றிய ஊகத்துக்கான ஆதாரங்கள் அத்வானியிடமிருந்து வந்தன; 2013 ஆம் ஆண்டில் அத்வானி தனித்த தீவில் விடப்பட்டுவிட்டார்.
The forgotten promise of 1949 The RSS wrote a non-political role for itself as part of an undertaking it gave Sardar Patel. The overt political role it has assumed in 2013 is a breach of that agreement and its own constitution
நன்றி: தி இந்து, 8.10.2013
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)
No comments:
Post a Comment