Wednesday, October 16, 2013

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ஜெ. அரசு போலீஸ் பாதுகாப்பு வழங்காதது ஏன்?

திராவிடர் கழகத் தலைவரும் விடுதலை ஆசிரியருமான கி.வீரமணி அவர்களின் மீது இப்போது நான்காவது முறையாகத் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. திருவில்லிப்புத்தூர் மம்சா புரத்திலே தாக்கினார்கள். சென்னை வண்ணாரப் பேட்டையிலே கொல்ல முயன்றார்கள். சேலம் ஆத்தூர் தம்மம்பட்டியிலே தீர்த்துக் கட்டிவிடலாம் என்று எண்ணி செயல்பட்டார்கள். இவை பழைய செய்திகள். இப்போது செப். 28ஆம் தேதி இரவு விருத்தாசலத் திலே அவர்களின் திருப்பணியை மேற்கொண்டு இருக்கிறார்கள் - கோழைகள்!
கருத்துக்கு கருத்து, எழுத்துக்கு எழுத்து, பேச்சுக்குப் பேச்சு என்று நாட்டு மக்களிடத்திலே அறிவைக் கூர்மைப் படுத்த தெரியாதவர்கள்
ஆயுதம் கொண்டு தாக்க வரு கிறார்கள் - அற்பர்கள்!
தினத்தந்தி, இண்டியன் எக்ஸ்பிரஸ், தினமலர் போன்ற ஏடுகள் வீரமணி தாக்குதலுக்கு உள்ளான அச்செய்தி யினை வெளியிட்டு இருக்கின்றன. காவலரின் அசட்டையை, மெத் தனத்தை எடுத்துக் காட்டி இருக் கின்றன.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தமது கண்டனத்தை உடனே வெளிப் படுத்தி இருக்கிறார்கள். கண்டனம் செய்து இருக்கிறார்கள்.
சுயமரியாதைஇயக்கத்தின் மறு வடிவமாக இயங்கும்  திராவிடர் கழகம் நாளும் மக்களைச் சந்திக்கிறது. கூட்டங்களை நடத்துகிறது. கருத்தரங் குகளை நிகழ்த்துகிறது. மாநாடுகளைக் கூட்டி முழக்கமிடுகிறது. சுயமரியாதைப் போராட்டத்தை நடத்தி வருகிறது. அதில் தான் சுகவாழ்வே  அடங்கி இருக்கிறது என்று பிரச்சாரம் செய்கிறது.
திராவிடர் கழகம் தேர்தலுக்கு நிற்கிற கட்சி அல்ல. கொள்கைப்  போரை நடத்தி வருகிற கட்சி; அந்த ஜூவாலையை அணையாமல் காக்கிற இயக்கம். ஆனால்அதற்கெனஅரசியல்உண்டு. நாம் பெருமிதம் கொள்கிறதனிச்சிறப்பு - அது தி.மு.க.வின் தாய்க் கழகம் என்பதே!
அத் தாய்க் கழகத்தின் தலைவரான ஆசிரியர் கி.வீரமணிஅவர்களின் மீது தான் தாக்குதல்தொடுக்கப்பட்டு இருக்கிறது.போலீசார் வேடிக் கைப் பார்க்கிறார்கள். சம்பவம் நடந்த இடத்தில் ஒரு போலீஸ்காரர்கூட இல்லை என்கிறது தினத்தந்தி.
உள்ளூர் அதிகாரி ஒரு மதவாத அமைப்பின் நிர்வாகியைப் போல் நடந்து கொண்டு இருக்கிறார்.  திராவிடர் கழக நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு சட்டப்படி தரப்பட வேண்டிய அனுமதியை அந்த அதிகாரி எப்படி மறுத்தார்? ஏன் மறுத்தார்? எந்த தைரியத்தில் மறுத்தார்?
எப்போதும் இல்லாத திருநாளாக இந்த ஆண்டு ஜன விநோதினி ஆரியமாலா ஜெயலலிதா பெரியார், அண்ணா சிலைகளுக்கு மரியாதை செய்து இருக் கிறார். தலைவர்களுக்கு அஞ்சலி செய்வதை எப் போதாவது வேடிக்கைகள் மாதிரி செய்வது அவருக்கு வாடிக்கை. இதையெல்லாம் செய்வதால் அவர் இயக்க உணர்வாளர் ஆகிவிட மாட்டார் என்பதுநமக்குத் தெரியும். இவையெல்லாம் நாடாளுமன்றத் தேர்தல் முன்னோட்டமா? அல்லது பெங்களூர் காய்ச்சலால் ஏற்பட்ட மாறுதலா? - என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் ஓர் அரசு அதிகாரி கருத்துத் சுதந்திரத்திற்கு எதிராக நடந்து கொள்ள எப்படி முடிந்தது? அவர் பின்னே இருப்பது யார்?  தலைவர் களைத் தாக்குகிற வன்முறைகளுக்கு காவல் துறையே துணைபோகும் அளவுக்கு அவர்களின் ஆதிக்கம் இருப்பதற்குக் காரணம் என்ன? இதற்கு முதல்வர் ஜெயலலிதா பதில் சொல்லியாக  வேண்டும்.
ஒருவர் இயக்ககொள்கை சார்ந்து தாமே தம்மை உருவாக்கிக் கொள்ளுவதும் இறுதி வரை கொள்கையை பேசுவதும், எழுதுவதும், நடப்பித்துக் காட்டுவதும் எவ்வளவுஉயர்ந்த விஷயமோ, அந்த அளவுக்கு அவை கடின சித்தம் உடையவையும் ஆகும். இலட்சியப் பயணத்தில் பாதி வழியிலேயே காணாமல் போனோர் உண்டு. பயணத்திலிருந்து விலகியோர் உண்டு.
பயணத்தில் ஏற்பட்ட அடிகளை தாங்கிக் கொள்ளமுடியாமல் இலட்சிய வாழ்க்கையை மாற்றிக் கொண்டோர் உண்டு. சிக்கலுக்கு உடனடியாக விடை காண முடியாமல் சோர்ந்து போய் விட்டவர்கள் இயக்கத்தின் மீது சாடியவர்கள் உண்டு. இயக்க வாழ்வு என்பது மலர் படுக்கை அல்ல என்பதைஉணர்ந்து பொதுவாழ்க் கையை ஏற்றுக் கொண்டவர் ஆசிரியர் வீரமணி! உண்மையானதிராவிடஇயக்கத் தலைவர்கள் மயிர்ப்பாலங் கட்டி நெருப் பாற்றைக் கடந்து கொண்டு இருப்பவர்கள் என்பதை நாம் அறிவோம்.
வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப் பார்க்கின்றோம். 1944ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதிவந்து நிற்கிறது. தென் ஆர்க்காடு மாவட்டம் திருப்பாதிரிபுலியூரில் - கடலூரில் திராவிடர் கழகமாவட்டமாநாடு, மாநாட்டை திறந்து வைக்க பெரியார் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆசிரி யரின் ஆசிரியர் அவரின் வழிகாட்டி ஆ.திராவி டமணி பி.ஏ., அவர்களின் பெரு முயற்சியால் அம்மாநாடு அங்கே கூட்டப் பட்டு இருக்கிறது.
மாநாட்டின் தலைவர் விருதுநகர் வி.வி.இராமசாமி. திராவிட நாடு படத்தினை அறிஞர் அண்ணா திறந்து வைக்க இருக் கிறார்கள். இரவேபெரியார் வந்து விட்டார். திருப்பாதிரிப் புலியூரில் ஒரு சத்திரத்தில் தங்க வைக் கப்பட்டு இருக்கிறார்கள். உடன் மணியம்மையாரும் இருக்கிறார். மறுநாள் காலைபெரியார் தங்கியுள்ள சத்திரத்திற்கு ஒரு பையனை அழைத்துப் போகிறார் டார்பிடோ ஏ.பி.ஜனார்த் தனம் - இவர் நமது திராவிட இயக்கத் தலைவர்களுள் ஒருவர். சிறந்த மேடைப் பேச்சாளர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆற்றொழுக் காய்ப் பேசக் கூடியவர். அந்தக் காலத்துஎம்.ஏ.!
அத்தகைய சிறப்புக்குரியவர் அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு போய் பெரியார் முன் நிறுத்துகிறார். சிறுவன் முகத்தில் அச்சமும் ஆசையும் குடிகொண்டு இருக்கிறது. இருப்பினும் பையன் பெரியாருக்கு வணக்கம் தெரிவிக்கிறான். இந்தப் பையன் நம் திராவிடமணி தயாரிப்பு. மேடையில் நன்றாகப் பேசுவான் என்கிறார் ஏ.பி.ஜே! பெரியார் பார்த்தார். ஒன்றும் பேசவில்லை. பெரியாரைப் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு மீண்டும் வணக்கம் சொல்லுகிறான் அந்தச் சிறு வன்! பிறகு சத்திரத்திற்கு வெளியே வந்து விட்டான்.
அன்று மாநாட்டைத் திறந்து வைத்து விட்டு சிங்கம் கர்ஜிப்பதைப் போல் பேசுகிறார் பெரியார். அடுத்து அறிஞர் அண்ணா திராவிட நாடு படத்தினைத் திறந்து வைத்து விட்டுப் பேசவேண்டும். ஆனால்பெரியாரைச் சந்தித்த அந்தச் சிறுவனைப் பேசுவதற்கு மாநாட்டு ஏற் பாட்டாளர்கள்விட்டார்கள். பத்துநிமிடப் பேச்சு. எழுதித் தயாரித்த, மனப்பாடம் செய்தபேச்சு. (நம் பாரம்பரியம் விட்டுப் போகாமல் முரசொலி அறக்கட்டளை யினர் பாரதிதாசன் கவிதைகளை சிறுவர்களைக் கொண்டு மனப்பாடம் செய்வித்து அவர்களை மேடையேற்றி பேசச் செய்ததைப் போல)  அந்தச் சிறுவனை ஒரு மேஜை மேல் நிற்க வைத்தார்கள். கூச்சம் சிறுதுமின்றி பயமற்று மிக அருமையாகப் பேசினான்.
அடுத்து அறிஞர் அண்ணா பேசினார். அச்சிறுவன் பேசியதிலிருந்தே அண்ணா தமதுபேச்சைத் தொடங்கினார்.
இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசி யிருந்தால், இவரை இந்தக் காலஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கி இருப்பார்கள். இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல. பெரியாரின் பகுத்தறிவுபால்தான்
இப்படிஅறிஞர் அண்ணா அவர்கள் பேசியதைக் கேட்டுப் பெரியார் பலமாகப் சிரித்தார். மாநாட்டில் மாபெரும் கரவொலி எழுந்தது. மாநாட்டு இடைவேளையின் போது மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது அந்தச் சிறுவனை அழைத்து, என்ன படிக்கிறாய்? என்று கேட்டார் - பெரியார். அச்சிறுவன், அய்ந்தாம் வகுப்புப் படிக்கிறேன் என்றான்.
அந்தச் சிறுவன்தான் இன்றைய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்கள்! அவர்தான் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார். மாநாடு நடத்துவதற்கு இந்தஅரசின் அதிகாரியால் அனுமதிமறுக்கப்பட்டு இருக்கிறார். பிறகு அனுமதிக்கப்பட்டு நிகழ்வுகள்நடைபெற்ற இடத்தில் போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட வில்லையே, அது ஏன்?
ஜெயலலிதா அரசின் மீது நமக்கு அய்யம் உண்டாகிறது. அரசே முன்னின்றுகலவரம் நடக்கட்டும்; தாக்குதல் நடைபெறட்டும் என்று ஊக்குவிக்கிறது என்றே நமக்குத் தோன்றுகிறது. ஆசிரியர் பல முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அவருக்கு ஏதாவது ஒன்று ஆகியி ருந்தால் யார் பொறுப்பு? - என்றே நாம் அச்சத்தோடு கேட்கின்றோம்.
பிள்ளைப் பிராயம் முதல் கொள்கை மேடையேறி இன்னமும் முழக்கமிட்டு வரும் அவரைதாக்கமுனைந்தால் அதற்கு என்னபொருள்?முதல்வர் ஜெய லலிதாவை ஒன்றுகேட்கின்றோம். அவரைப் போல்அறிவாண் மையில் ஆளுமையுள்ள ஒருவரை - பொதுப் பணியில் அக்கறையுள்ள ஒருவரை - கணக்கற்ற முறைசிறை சென்ற ஒருவரை - பத்திரிகை ஆசிரியரை - பன் நூல்களை யாத்த படைப்பாளியை - திராவிடர் இயக்க கொள்கைகளை இருமொழியில் எடுத்துரைக்கும் பேச் சாளியை உங்கள் கட்சியிலிருந்து ஒருவரை எங்களுக்கு அடையாளம் காட்ட உங்களால் முடியுமா? முடியாது. அப்படிப்பட்ட எவரும் உங்களிடம் இல்லை. நாங்கள்அறிவோம்.
ஜெயலலிதாவும்  அவர்  கட்சியும் ஆசிரியர் செய்யும் பணிகளுக்காக வந்தவர்கள் அல்லவே. அவர்களுக்கு ஆசிரியர் பற்றிய கவலை இருப்பதற்கு எந்தவித நியாயமுமில்லை. ஆனால் ஜெயலலிதா இந்நாட்டின் முதல்வராக இருக்கிறார். அரசாட்சியில் அதிகார முடையவராக இருக்கிறார். அதனாலே கேட்கின்றோம். காவல்துறை பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டு இருந்தால் தாக்குதல் நடந்து இருக்காது அல்லவா? பயங்கர வாதத்திற்கு அரசே துணை இருப்பதைப் போல ஆட்சி நடத்துவது சரியா?
திராவிடர் கழகத் தலைவர் - விடுதலை நாளேட்டின் ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு ஜெயலலிதாவின் அரசு பாதுகாப்புவழங்காதது ஏன்? அதற்குப் பின்னே ஒளிந்திருப்பதுஎது? -  என்றே நாம் கேட்க விரும்புகின்றோம்.
நன்றி: முரசொலி (5.10.2013)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...