Thursday, December 1, 2011

வீரமணி ஒரு விமர்சனம் புத்தகத் திறனாய்வு!


சிங்.குணசேகரன்
தலைமை செய்தியாளர்
விடுதலை.
பிரபல மூத்த எழுத்தாளர் சோலை அவர்கள் ஜனசக்தி, நவமணி, அலை ஓசை, மக்கள் செய்தி, அண்ணா என பல ஏடுகளிலும் ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட் டர், நக்கீரன் போன்ற இதழ்களிலும் எழுதிய ஆற்றலாளர்.

அவர் எழுதிய கட்டுரைகளோ பல்லாயிரம். எழுதிய நூல்களோ பலப்பல. அவர் அறிந்த நெருக்கமான தலைவர்களோ பெரியார், தோழர் ஜீவா, அண்ணா, காமராசர், கலைஞர், எம்.ஜி.ஆர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அத்துணை தலைவர்களிடமும் அன்பாகவும், நெருக்கமாகவும் பழகிய 60 ஆண்டுகால எழுத்தாளர். அவர் என்றுமே நாகரிகம் மறந்து எல்லைக்கோட்டைத் தாண்டி எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எழுதிய தில்லை.

அப்படிப்பட்ட சிறந்த எழுத் தாளர் சோலை அவர்கள் வீரமணி ஒரு விமர்சனம் என்ற நூலை எழுத வில்லை-திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களின் வாழ்க்கை வரலாற்றையே இந்த நூலில் எழுதி விட்டாரா? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு புருவத்தை உயர்த்தி அதிச யித்துப் பார்க்கும் அளவுக்கு சோலை அவர்கள் அவ்வளவு வரலாற்றுச் சுவை யான செய்திகளையும் மாலையாகத் தொடுக்கவில்லை. மலைத்துப் போகின்ற அளவுக்கு மலை, மலையாக எழுதி குவித்துத் தள்ளியிருக்கின்றார் தனது அன்பால், ஆர்வத்தால் உழைப் பால், எழுத்தாற்றலால்.

கலைஞரின் அணிந்துரையோ!
வீரமணி ஒரு விமர்சனம் நூலுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கொடுத்திருக்கின்ற அணிந்துரையே முழுநிலவின் வெளிச்சத்தை அப்படியே பிரதிபலித்திருக்கின்றார்-மிகச்சிறப் பாக!

உலகம் உருண்டை என்பது போல கலைஞர் அவர்கள் தலைவர் வீரமணி அவர்களைப் பற்றி முழு பரிமாணத் தையும் எடுத்துக்காட்டியிருக்கின்றார். தனது உன்னதமான அறிவாற்றலால்.

கடலுக்குள் மூழ்கி முத்தெடுப்பதைப் போல்
இப்பொழுது நேராக நூலுக்கு வருவோம். கடலுக்குள் மூழ்கி முத் தெடுப்பதைப் போல வீரமணி ஒரு விமர்சனம் என்ற நூல் 160 பக்கங் கள் கொண்ட புத்தகம் 22 தலைப்பு களில் தமிழர் தலைவரின் முக்கிய வரலாற்று நிகழ் வுகளை நடைபாதை நண்பருக்கு கதை சொல்வது போல் அல்ல. உலக தமிழர்களுக்கு ஒரு திராவிட இயக்க பொக்கிஷத்தையே தந்திருக்கிறார் என்று சுருங்கச் சொன்னாலே போதும். விவரிக்க இயலாது. அவ்வளவு அரிய தகவல்கள் அழகிய வடிவமைப்பில் அத்துணையும் நூலில்.
புத்தகத்தை வாங்கி அவசர அவசரமாக இடைவிடாமல் படித்தால் தான் அத்துணை சுவைகளையும் சுவைத் திட இயலும். பெரியாரின் கனவுகளை எப்படி எல்லாம் நனவாக்கினார் வீரமணி.

அண்ணா-கலைஞர்-வீரமணி

அய்யாவின் குருகுலத்தில் அண்ணா-கலைஞர்-வீரமணி ஆகியோர் எப்படி போர்ப்படைத் தளபதிகளாக உருவாக்கப் பட்டனர் என்கிற வரலாற்றை விளக்கு கிறார் நூலாசிரியர். பட்டாசு தொழிற் சாலைக்குள்ளேயே வானவேடிக்கை நடத்திக்காட்டும் கட்டுப்பாடுமிக்க பெரி யாரின் அறிவுதீரமிக்க தொண்டர்கள் எப்படிப்பட்டவர்கள் என்கின்ற செய்தி கள். ஏராளம்! ஏராளம்!!
அய்யா விரும்பி, அண்ணா தலைமை யேற்ற ஈரோடு சிறப்பு மாநாட்டு நிகழ்ச்சி களை மிகச்சிறப்பாக படம் பிடித்துக் காட்டுகின்றார். பெரியாருடன் பயணித்த பலர்
அவ்வப்போது ஆங்காங்கே தங்கி விட்டனர். பெரியாருடைய வேகத்தோடு மற்றவர்களால் இணைந்து போக முடியாத நிலை. ஆனாலும் பெரியாரின் ரதம் வேகமாக நகர்ந்துகொண்டிருந்த ஒரு சூழ்நிலை.

1944-1945 ஈரோடு திராவிடர் மாணவர் பயிற்சி முகாமில் சிறுவர் வீரமணி எப்படி பட்டை தீட்டப்பட்டார்?

அய்யா, அம்மா வியப்பு
அய்யாவும், அம்மாவும் சிறுவர் வீரமணி அவர்களின் பேச்சாற்றல், கட்டுப்பாடுகளைக் கண்டு வியந்த சம்பவங்கள், நீயும் வருகிறாயா? வீரமணி என்று அய்யா அவர்கள் பிரச்சாரத்திற் காக கூப்பிட்ட அந்த சம்பவம்.

அண்ணா அவர்களுக்கு திராவிட நாடு ஏடு நடத்திட அய்யா செய்த பேருதவி, கடலூர் திருப்பாதிரிபுலியூரில் அய்யா-அண்ணா வீற்றிருக்க வீரமணி தனது பேச்சாற்றலால் மின்னலைப் பிடித்து சவுக்காக சுழற்றிய காட்சிகள்.

1945ஆம் ஆண்டு திருச்சி பொன் மலையில் நடைபெற்ற திராவிட வாலிபர் சங்க ஆண்டு விழாவில் அண்ணா, டி.கே.சீனிவாசன், வீரமணி பங்கேற்று விட்டு ரயில்வே பிளாட்பாரத்தில் அண்ணாவுடன் வீரமணி அவர்கள் பிரியாணி பொட்டலத்தைப் பிரித்து உணவு உட்கொண்ட காட்சி. அண்ணா அவர்களை ரயிலில் அனுப்பி வைத்த காட்சிகளை தலைவர் வீரமணி அவர் களின் மூலமே விளக்கும் அரிய செய்திகள். கலைஞரின் தூக்கு மேடை நாடகத்தில் வீரமணியும், நடித்தார் என்கின்ற அந்தக் காட்சி செய்திகள்.
அய்யாவும், ராஜாஜியும் திருவண்ணா மலையில் சந்தித்து பேசிய பின் கழகத்தில் ஏற்பட்ட அதிர்வுகள். அய்யாவின் புயலைக் கிளப்பும் அறிவிப்பு. சொத்து களை இயக்க நலன்கருதி காப்பாற்றிட அய்யா மேற்கொண்ட நடவடிக்கைகள். இப்படிப்பட்ட நிலையில் அண்ணா அளந்தே அடி எடுத்து வைத்தார். பிரிந்து சென்ற அண்ணா அய்யாவை விமர்சிக் காத நிலை.

1950இல் வீரமணி விளம்பர அதிகாரி யான செய்தி. வீரமணி அவர்களின் படிப்பிற்காக உதவிய பிரமுகர்கள் முக்கிய சம்பவங்கள் இன்னல்கள், இடையூறு களைக் கடந்து கடலூரிலிருந்து வீரமணி அவர்கள் சென்னைக்கு வந்த சம்பவங்கள்.
வீரமணி அவர்களை அய்யா அழைத்து அரசியல் சட்டத் தில் எந்தெந்த பிரிவுகள் வர்ணாஸ் ரமத்திற்காக வாதிடுகின்றன என்பதை விளக்க துண்டு பிரசுரம் தயாரிக்கச் சொன்னது. சிறை ஏகியவர்களுக்கு வீரமணி வழிகாட்டியாக எப்படித் திகழ்ந்தார்?.

வீரமணி அம்மாவுடனேயே இருங் கள்! என்று அய்யா சிறை ஏகுவதற்கு முன் கூறிய கட்டளை. முதல்வர் காமராசரை அம்மா சந்தித்து முறையிட்ட வரலாற்றுச் சம்பவங்கள். அய்யாவின் கட்டளையை தன் உழைப்பால் தொண்டால் நிரூபித்தவரலாறுகள்.பெரியாரின் சிறை அனுபவங்களை அய்யாவே விவரிப்பது. கடலூரில் வழக்கு ரைஞர் தொழிலை நடத்துவதா? கழகப் பணியைத் தொடருவதா? வீரமணி அவர்களின் மனப்போராட்டம். வீரமணி யாருக்கு மோகனா அவர்களை அய்யாவே திருமணம் நடத்தி வைத்த செய்திகள்.

விடுதலையை நிறுத்திவிடலாம் என்று அய்யா கூறியது வீரமணி அவர்கள் பதறியது விடுதலைக்கு ஆசிரியராக அய்யா நியமித்ததை வரவேற்கிறேன் என்ற மிகச்சிறப்பான செய்திகள் கொண்ட பெரியாரின் வரலாற்றுக் குறிப்பு அறிக்கை.

அண்ணா அமர்ந்த இடத்தில் வீரமணி

அண்ணா அமர்ந்திருந்த ஆசனத்தில் வீரமணியார். விடுதலை இன்று தமிழி னத்தின் மூச்சுக்காற்றாய், கலங்கரை விளக்கமாய் நவீன வசதி பொலிவு களுடன் வளர அவரின் அயரா உழைப்பு, அய்யா விடுதலை வளர்ச்சியைப் பார்த்துப் பூரித்துப் பாராட்டியது.
அய்யா சொத்துகளை அறக்கட்டளை யாக்கி, பொதுமக்களுக்குப் பயன்படும் படியாக செய்த சம்பவங்கள் உயில் பதிவு செய்யப்பட்டது என்பதை எல்லாம் புத்தக ஆசிரியர் இதுவரை கேட்டிராத வரலாற்றுச் செய்திகளாய் சோலை மிகச்சிறப்பாக விளக்குகிறார்.

200 ரூபாய்க்காக  எம்.ஆர்.ராதாவை பெரியார் கண்டித்தது. பிறகு அவருக்குத் தெரியாமலேயே பெரியார், அண்ணா யாருக்கும் தெரியாமல் ராதா நாடகத்தை தரையில் உட்கார்ந்து பார்த்த சம்பவங்கள் என இப்படி பலப்பல சுவாரஸ்யமான உண்மைச் சம்பவங்கள்.

வீரமணியை ஆயுள் செயலாளராக சட்ட நிபுணர்களின் ஆலோசனைப்படி வங்கியில் டெபாசிட் செய்த நிகழ்வுகள், மிசாவில் தலைவர் வீரமணி, அன்றைய தி.மு.க இளைஞரணி செயல்வீரர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும் மற்றும் பல மிசா கைதி தோழர்களுக்கும், சோற் றில் சிறுநீர், கல், மண், வேப்பெண்ணெய் கொட்டிய சாப்பாடு. அடி, உதை, கொலை வெறித் தாக்குதல் பற்றிய ஒரு பெரிய வரலாற்றுக் கொடுமையான வெளி உலகத்திற்கே வெளிவராத சம்பவங்கள் ஏராளம். ஏராளம் அப்படியே படம் பிடித்துக்காட்டியுள்ளார் சோலை அவர்கள்.

வீரமணி ஏகிய சிறை பட்டியல்

வீரமணி கண்ட சிறைக்களங்களின் பட்டியல்கள் வீரமணி அவர்களது உயிருக்கு குறி வைத்த மம்சாபுரம் தாக்கு தல், கலைஞர் துடித்தது. எம்.ஜி.ஆர். விசாரித்தது. ராயபுரத்தில் வீரமணியாரை கொலை செய்யும் நோக்கத்துடன் கொலைவெறித் தாக்குதல், தம்மம் பட்டியில் வீரமணி அவர்களை காரோடு கொளுத்தி கொல்ல முயன்ற மறக்க முடியாத கொடூர சம்பவங்கள் என வீரமணி அவர்களின் உயிருக்கு எப்பொழு தெல்லாம் குறி வைக்கப்பட்டதோ அத் துணை கொலை வெறித் தாக்குதல் சம்பவங்களையும் விளக்கியிருக்கிறார். சுயமரியாதை திருமணம் அண்ணா முதல்வராக இருந்த பொழுது அய்யா-வீரமணியாரைக் கலந்து சட்டப்படி சொல்லுபடியாக்கிய முக்கிய சம்பவம். விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனின் உண்ணாவிரதத்தை தலைவர் வீரமணி அவர்கள் முடித்து வைத்தது.

இந்திய தலைவர்களுடன் வீரமணி அவர்கள் நெருக்கமாக இருந்தது. வீரமணி அவர் களின் அன்றாட உழைப்பு, எழுத்தாற்றல், நூல்கள் படைப்பு, இன எதிரிகளுக்கு அவர் சிம்ம சொப்பனமாக இருந்தது. உலக தமிழினத்தைக் காப்பாற்ற அவர் போராடி வருவது போன்ற செய்திகளை இந்தப் புத்தகத்தில் திறம்பட விளக்கு கிறார். ஜாதி ஒழிப்பு, இந்தி ஒழிப்பு, மூட நம்பிக்கைகள் ஒழிப்பு, மக்கள் சமத்து வத்திற்காக பாடுபடுவது, இடஒதுக்கீடு, சமூகநீதி தத்துவம் இவைகளுக்காக வீரமணியார் பாடுபட்டுவருவது இங் குள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல.

ஈழத் தமிழர்களுக்காக, தமிழக மீனர்வக ளுக்காக போராடி வருகின்ற தொடர் போராட்டங்கள், காவிரி நீர் பிரச்சினை. இடஒதுக்கீட்டிற்கு புத்துயிர் கொடுத்தது. மண்டல் கமிஷன் அறிக்கை அமலாக்கம், எம்.ஜி.ஆரின் 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை ஒழிக்க பாடுபட்டது. சேது சமுத்திர திட்டம், தமிழ்நாடு எப்படி எல்லாம் வஞ்சிப்படுகிறது என்பதை எல்லாம் மக்களுக்குப் பிரச்சாரம் செய்து நாளும் போராடிப் போராடி தங்கம் போல் ஒளிவிடுகிறார் வீரமணி அவர்கள் என்பதை விளக்கியிருக்கிறார் சோலை அவர்கள்.

பெரியார் டிரஸ்ட்டு ஒரு திறந்த புத்தகம். அய்யா, அம்மா அவர்களுக்கு பிறகு திராவிடர் கழக தலைவர் வார்த் தெடுத்த கல்வி நிறுவனங்கள், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வரை, மற்றும் மருத்துவமனைகள் என ஏகப் பட்ட தொண்டு நிறுவனங்கள் நாளும் வளர்ந்து மக்கள் நலத்தொண்டு பணி யாற்றி வருகின்றன. அவை எல்லாம் ஒளிப்படங்களாக நூலில் மிக அழகாக நேர்த்தியாக அச்சிடப்பட்டிருக்கின்றன.

வளர்த்திருக்கிறார் வீரமணி

பெரியார் ஒப்படைத்த பணிகளுக்கு நூற்றுக்கு ஆயிரத்திற்கு மேல் பணி யாற்றி தன் ஆயுளையே தமிழக மக்க ளுக்காக அர்ப்பணித்திருக்கிறார் திருவா ளர் வீரமணி அவர்கள். எந்தவித பிரதி பலனையும் எதிர்பாராமல் இப்படி தொண்டாற்றுபவர். எவரும் இல்லை நாட்டிலே. எந்த நிறுவனமும் இப்படி இல்லை. கி.வீரமணி அவர்களின் வாழ்க்கையை பனிப் பாறையின் ஒரு முனை அளவுதான் காட்டியிருக்கிறார் சோலை.
இதை அவரே சொல்லியி ருக்கிறார். இன்னும் சொல்ல வேண்டிய செய்திகளும், வரலாற்றுச் சம்பவங்களும் ஏராள மாகப் புதைந்து கிடக்கின்றன. வீரமணி  ஒரு விமர்சனம் என்னும் புத்தகம் ஒவ்வொருவர் கையிலும், ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டியது. செய்திகளைச் சம்பவங்களை வடித் தெடுத்த சோலை அவர்கள் பாலை வனத்தில் தோன்றிய ஒரு சோலை வனமே (ஒயாசிஸ்). என்று பாராட்ட லாம். எழுத்தாளர் சோலைக்கு நமது உளம்கனிந்த நன்றி பாராட்டுகள்! திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 79ஆம் ஆண்டு (டிச.2இல்) அடி எடுத்து வைக் கின்றார்.

நூறாண்டுகளுக்கு மேல் வாழ்க...!

அவர் நூறாண்டுகளைத் தாண்டி சிறப்பாக மகிழ்ச்சியுடன் நல்ல உடல் நலத்துடன் வாழவேண்டும் என்பது தான் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஆசை.  தொடரட்டும் அவரது தொய் வில்லாப் பொதுத்தொண்டு, வாழ்த்த வார்த்தை கள் இல்லை. தலைதாழ்ந்து வணங்கு கிறோம்!

ஊதியம் பெறாத ஊழியனே; வாழ்க! வாழ்க!!


இவரன்றோ
தமிழர் தலைவர்
வேறு
எவருண்டு
சொல்வாய்; தமிழா!
பத்து
அகவையிலிருந்தே
இவர்
ஆற்றுகிற
ஒரே பணி
எது சொல்; தமிழா?
தலைவர்
வீரமணி செய்கின்ற பணியெல்லாம்
பெரியார் பணியெனப்
பகைவனும்
சொல்வானே; தமிழா!
ஆசை, ஆசை
அதிகம்
ஒரு  நூறாண்டு
வீரமணி
வாழ வேண்டும்; ஆசை!
பொன்விழா
கண்டவருக்கு
மீண்டுமொரு பவளவிழா
புரிகிறதா தமிழா
உனக்கா புரியாததா...?
அறுபத்து
ஒன்பதாண்டு
பொது வாழ்வில்
ஆசிரியராய்ப்
பணியாற்றும்,
50 ஆண்டு
பணிநிறைவு பவள விழா

ஒரு நினைவூட்டல்
விடுதலையை
நிறுத்திட
எண்ணிய பெரியாருக்கு
நினைவில்
தோன்றியவர் வீரமணி!
இது இவரால் முடியும்
இவரால்
முடியாதது
எவராலும், முடியாது
ஆம்
அய்யா
ஒரு தொலை நோக்காளர், அல்லவா!
தொழிலில்
பிரபலம்
நல்ல வருமானம்
வருகிற காலம்
வீரமணியே வருக விடுதலை
ஆசிரியராக
பொறுப்பேற்க வருவீர்
வழங்குகிறேன்; ஊதியம்
ஊதியம்
வாங்கியா
விடுதலையில்
ஊழியம் செய்வது?
தலைவருக்குக்
குழப்பம்
அம்மா
மோகனாவோடு
ஒரு கலந்தாய்வு
இன்றுவரை
ஊதியம்
பெறாத, ஊழியன்
50
ஆண்டு
ஆசிரியர் பணி
அண்ணாவுக்கு
அழுத்தமா....?
அவசரமா.....?
அண்ணா நீண்ட
காலம்
வாழ்ந்திருந்தால்
கூறியிருப்பார்
தமிழருக்கு
இதயக்கனி; வீரமணியென்றே!
வீரமணியின்
விடுதலை ஆசிரியர் பணி
கின்னஸிலும்
இடம் பெறலாம்
பத்திலிருந்து
பகுத்தறிவைப்
பரப்புகிற
அறிவி, விருந்து
நோயாளித்
தமிழனுக்கு
உயிர் காக்கும், மாமருந்து
ஆகவே தமிழர்
தலைவரின்
பிறந்தநாள் சூளுரை
தோழா நீ
ஏற்கவேண்டும் ஏற்புரை
50 ஆயிரத்துக்குப் பதிலாக
79
ஆயிரம் சந்தாக்கள்
வழங்கினால் உனக்குச்
சரித்திரம், வழங்கிடும்; பாராட்டுரை!
நாட்கள்
குறைவு மிகக்குறைவு
தமிழா
நீ
கடைசி நேரக் கதாநாயகன்
புறப்படு
தமிழா புறப்படு
இப்போதே
இன்றே நீ புறப்படு
வீடுதோறும்
சென்று வா...!
வீதியெங்கும்
விடுதலைக்குச் சந்தா கேள்
உற்றார் உறவினர்
நண்பர்கள்
யாரையும், விட்டுவிடாதே!
திருமணமா...?
காதுகுத்தா....?
கருமாதியா...?
கணக்கைத் திற!
விடுதலைக்கு
மொய் பெய்து
சந்தாக்களைக் குவித்திடு
தமிழா
நீ
செயல்படும் வேகத்தால்
அக்ரகார ஆட்சிக்கு
ஏற்படும், மூக்கறுப்பு!
இனி
பகைவர்
குலை நடுங்கும்
தமிழா
உன்
மூச்சே, விடுதலை
இருட்டுத்
தமிழனின்
இல்லத்தில்
விடுதலை, விளங்கட்டும்.
முயன்றுபார், தமிழா
நீ முறையாக
முயற்சித்தால்
ஒரு இலட்சத்தைத்
தாண்டும், விடுதலை சந்தா!
நீ
இருக்காதே இனி சும்மா
தொண்டறம் மாறாத
தலைவருக்குப்
பிறந்தநாள் காணிக்கை
இதுதான்; தமிழா!
புறப்படு, தமிழா!
புறப்படு...!

வழக்குரைஞர் கி.மகேந்திரன்,
தலைவர்,
மாநிலச் சட்டத்துறை, திராவிடர் கழகம்.

ராஜ்-தொலைக்காட்சியில் தமிழர் தலைவர் பேட்டி


28.3.2011 அன்று இரவு 10 மணிக்கு ராஜ் தொலைக் காட்சியில் பிரபல விமர்சகர் நிஜந்தன் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களைப் பேட்டி கண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

அரை மணி நேரம் நடைபெற்ற அந்த நிகழ்ச்சி சுவையானது - சூடு பறக்கக் கூடியது.

வினாக்கள் ஒவ்வொன்றும் வெடுக்வெடுக் கென்று கூர்மையாக ஏவப்பட்டதாகும். (Devil’s Advocate)

ஆனால் அத்தனைக் கேள்விகளுக்கும் அருமையாக, பொறுமையுடன் ஆழமான கருத்து வளத்துடன் பளிச் பளிச் என்று பதில் சொன்னார் தமிழர் தலைவர்.

78 ஆண்டு அகவையில் 68 ஆண்டு களுக்கும் மேற்பட்ட பொது வாழ்வும், தந்தை பெரியார் அவர்களிடம் அவர் பெற்றிருந்த பயிற்சியும், கிடைக்கிற நேரத்தையெல்லாம் கருத்துகளைச் சேகரித்துக் கொள்ளும் அறிவுப் பசியின் நுட்பமும் இணைந்து எந்தக் கேள்விக்கும் இடைவெளி சிறிதும் இல்லாத எண்ண ஓட்டமுடைய பதில்களை விடை யாகத் தந்து கொண்டிருந்தன.

சோ ராமசாமி போன்ற அதிகப் பிரசங்கிகள்கூட ஆசிரியர் அவர்கள் பதில் சொல்லும் முறையைச் சிலாகித்ததுண்டு.

நிஜந்தன் அவர்களைப் பொறுத்தவரை அவர் துறையில் அசகாயசூரர் என்று பெயர் எடுத்தவர். இடக்கு முடக்காகக் கேள்விகளை அப்படியே அலக்காகத் தூக்கிப் போடக் கூடியவர் என்றாலும், பதில் சொல்லும் இடத்தில் அமர்ந்திருந்தவர் பகுத்தறிவுப் பகலவனால் பக்குவப்படுத்தப்பட்ட சீடரா யிற்றே! திராவிடர் கழகம் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சியா? பலரும் கேட்கக் கூடிய கேள்விதான். அந்த இடத்தில் பாமர மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வினாவாக அது இருந்தது என்று எடுத்துக் கொள்ளலாம்.

திராவிடர் கழகம் கூட்டணிக் கட்சியல்ல; தேர்தலில் எங்களுக்கு இத்தனை இடங்கள் வேண்டும் என்று கோருகின்ற அமைப்பும் அல்ல - மாறாகத் தாய்க் கழகம் - சமூகப் புரட்சி இயக்கம்!

தி.மு.க.வை திராவிடர் கழகம் ஆதரிப்பது  - ஏன்?

- இன்னொரு கேள்வி.

திராவிடர் கழகம் என்னும் சமூகப் புரட்சி இயக்கத்திலிருந்து பிரிந்த கழகம் தி.மு.க.; அது அரசியலுக்குச் சென்று இருக்கிறது என்றாலும் சமுதாயக் கொள்கையில் திராவிடர் கழகத்தின் கொள்கையை அது ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ஆட்சிக்குச் சென்று தாய்க் கழகத்தில் பல கொள்கைகளுக்குச் சட்ட வடிவம் கொடுத் திருக்கிறது. எடுத்துக்காட்டாக அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டம், தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்னும் சட்டம் போன்றவை. இந்த வகையில் ஏராளமான எடுத்துக் காட்டுகளையும் கூற முடியுமே! திராவிட என்னும் பெயரைத் தாங்கியுள்ள கட்சிகள் எல்லாம் திராவிடக் கட்சிகள்தானா? அவற் றிற்கு திராவிடர் கழகம்தான் தாய்க் கழகமா?

திராவிட என்ற சொல்லைக் கட்சியில் வைத்துக் கொண்டு இருப்பதாலேயே அந்தக் கட்சிகளெல்லாம் திராவிட இயக்கச் சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்டதாகக் கருத முடியாது.

திராவிட, பெரியார் என்னும் சொற் களைப் பயன்படுத்தினால்தான் தமிழ்நாட்டில் எடுபட முடியும் என்ற எண்ணத்தில் அந்தப் பெயர்களைத் தங்கள் கட்சியோடு ஒட்டுப் போட்டு வைத்திருக்கலாம்.

ஆனால் தி.மு.க.வைப் பொறுத்தவரை அவ்வாறு கூற முடியாது. அதன் தலைவர் இரண்டு நாள்களுக்குமுன்புகூட ஓர் அறிக்கையில் தமது திராவிட இனவுணர்வை வெளிப்படுத்திக் கொண்டி ருக்கிறார் - திராவிட வரிப் புலியே, புறப்படு! என்று எழுதியிருக் கிறார். (பல நேரங்களிலும் சமுதாயக் கொள்கைகளை உடைய அரசியல் கட்சி தி.மு.க. என்பதைப் பதிவும் செய்து இருக்கிறார் குமுதம் இதழுக்குப் (2.3.2011) பேட்டி கொடுத்தபோதுகூட மு.க. அழகிரியும், மு.க. ஸ்டாலினும் இராமன் - இலட்சுமணன் போல் அல்ல; இராவணனும் - கும்பகர்ண னும் போல இருக்க வேண்டும் என்று சொன்ன பதிலில் கலைஞரின் இனவு ணர்வுத் தீபம் எத்தகையது என்பதற்கான விளக்கமாகும்).

தி.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் என்னதான் வேறுபாடு?

தி.மு.க. அரசியல் கட்சி என்கிற காரணத்தால் வெகு மக்களின் வாக்குகளை வாங்கும் நிலையில், திராவிடர் கழகத்தின் சமுதாயப் புரட்சிக் கொள்கையின் முழு பரிமாணத்தையும் எட்டிட முடியாது.

எடுத்துக்காட்டாக - ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்பது போன்ற சமரசக் கொள்கையாகும்; கடவுள் நம்பிக்கை உடையவர்கள் அதிகம் உள்ள ஒரு நாட்டில் தேர்தலில் வெற்றி பெற அவர்களின் வாக்குகள் தேவைப்படுகின்ற நிலையில் அவர்கள் உள்ளனர்.

ஆனாலும் இருக்கிற அரசியல் கட்சிகளில் திராவிடர் கழகத்தின் சமுதாயப் புரட்சிக் கொள்கைக்கு நெருக்கத்தில் இருப்பது தி.மு.க. என்பதில் எள்ளள வும் சந்தேகம் இல்லை.

தாய்க் கழகம் என்பதால் தி.மு.க.வின் எல்லா செயல் களையும் திராவிடர் கழகம் ஆதரிக்குமா?

அப்படிக் கூற முடியாது. வேறுபட்ட இடங்களில் திராவிடர் கழகம் சுட்டிக் காட்டியதுண்டு - கண்டித்தது உண்டு - ஏன், எதிர்த்ததும் உண்டு.

எடுத்துக்காட்டாக, தி.மு.க. பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்துக் கொண்டபோது திராவிடர் கழகம் எதிர்க்கத்தான் செய்தது.
பா.ஜ.க. என்பதுதான் திராவிடர் கழகத்தின் எதிர்ப்புக் கான அளவுகோலா?

ஆமாம் - அதில் என்ன சந்தேகம்? பா.ஜ.க., அடிப்படையில் பார்ப்பனியத்தை, மனுதர்மத்தைத் தூக்கிப் பிடிக்கும் கட்சி - வருணாசிரமத்தைப் பாதுகாக்கும் கட்சி; வெளிப்படையாக இந்துத்துவா பேசும் ஓர் அமைப்பு.

திராவிடர் கழகத்தின் கொள்கையோ இதற்கு நேர் எதிரானது - சமதர்ம - சமத்துவக் கொள்கையுடைய சமூகப் புரட்சி இயக்கம்.

எல்லார்க்கும் எல்லாம் என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை - இன்னார்க்கு இன்னதுதான் என்பது பா.ஜ.க.வின் மனுதர்மக் கொள்கை. தி.க.வும் - பா.ஜ.க.வும் இரண்டு துருவங்கள்.

காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் இடையில் தொகுதி பங்கீடுப் பிரச்சினை வந்தபோது நீங்கள் வெளியிட்ட ஓர் அறிக்கை சூட்டைக் கிளப்பிவிட்டதே!

ஆமாம் - கடந்த தேர்தலில் காங்கிரஸ் பெற்ற இடங்களைவிட அதிகமாக எண்ணிக்கையில் கேட்டதோடு அல்லாமல், நாங்கள் கேட்கும் தொகுதிகளை தி.மு.க. கட்டாயம் கொடுத்தே தீர வேண்டும் என்ற பெரியண்ணன் மனப்பான்மையோடு காங்கிரஸ் நடந்து கொண்ட நேரத்தில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய அறிக்கை அது - குட்டக் குட்டக் குனிந்துபோக வேண்டாம் - சுயமரியாதை முக்கியம் என்று அறிக்கை திராவிடர் கழகத்தின் சார்பாக கொடுக்கப் பட்டது.

இலவசங்கள் பற்றிய கருத்தென்ன? இலவசங்களைக் கொடுப்பது தேவை தானா?

அதில் என்ன தவறு? ஏழ்மை நிலைமை இருக்கும் வரை அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், கல்வி, மருத்துவ உதவி இவை ஏழைகளுக்குக் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு ஓர் அரசு இலவசமாகக் கொடுக்க முன்வந்தால் அதனைப் பாராட்டத்தானே வேண்டும்?

இலவசங்களைக் கேலி செய்த அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் - தி.மு.க.வின் அறிவிப்புகளைப் படித்தவுடன், அதற்கு மேலாக அல்லவா இலவசங்களை அள்ளித் தருவதாகக் கூறுகிறார்.

நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் திட்டம் கொண்டு வரப் பட்டது. காமராசர் காலத்திலும், எம்.ஜி.ஆர். காலத்திலும் கலைஞர் அவர்களின் காலத் திலும் அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வாரத் துக்கு 5 முட்டைகள் கொடுக்கப்படுகின்றன.

ஊட்டச் சத்து பிள்ளைகளுக்கு மிகவும் அவசியம் ஆயிற்றே! போதிய போஷாக்கு இல்லையாயின் உடல் வளர்ச்சி மட்டுமல்ல; மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படுமே! இந்தத் திட்டத்தை உலக வங்கியே பாராட்டியி ருக்கிறதே!

உணவில் மட்டுமல்ல இலவசம்; காமராசர் காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. வரை இலவசக் கல்வி, அண்ணா காலத்தில் பி.யூ.சி. வரை இலவசக் கல்வி, கலைஞர் காலத்தில் பட்டப் படிப்பு வரை இலவசம் என்பதெல்லாம் சோசலிசப் பார்வையில் மிகவும் சரியானதே! திராவிடர் கழகத்தின் கொள்கை - ஜாதி ஒழிப்பு. ஆனால் தேர்தலில் ஜாதி அடிப்படையில் தானே வேட்பாளர்கள் நிறுத்தப் படுகிறார்கள்?

இருக்கலாம். எல்லா இடங்களிலும் அப்படி நிறுத்தப்படுவதாகக் கூற முடியாது. பெரும் பாலான மக்கள் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சிறுபான்மை ஜாதியைச் சேர்ந்தவர்கள் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றதும் உண்டு (எடுத்துக்காட்டு - கடலூர்).

ஜாதி ஒழிக்கப்படாத நிலையில் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்களின் பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்கோ, நாடாளு மன்றத்துக்கோ செல்ல வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு?

பாலம் கட்டப்படும் வரை மாற்றுப் பாதை (Diversion Road)   தேவைப்படுவது போல ஜாதி ஒழிக்கப்படும் வரை ஜாதியின் பெயரால் சில வாய்ப்புகள் இருப்பதில் தவறே கிடையாது.

இதனைக் குறை சொல்பவர்கள் யார்? ஜாதி உணர்ச்சி அற்றவர்களா? தங்கள் வீட்டில் திருமண விஷயத்தில் வேறு ஜாதியைத் தேர்வு செய்கிறார்களா? திருமண விஷயத்தில் சுலபமாக அவர்களை அடையாளம் கண்டுவிட முடியுமே!

பெரியார் இன்னும் தேவைப் படுகிறாரா?

கண்டிப்பாகத் தேவைப்படுகிறார். இன்னும் ஜாதி இருக்கிறது; தீண்டமை இருக்கிறது. மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. சாமியார்கள் பெண்களைக் கற்பழிப்பது போன்ற செய்திகள் நாளும் ஏடுகளில் வெளிவந்து கொண்டுதானிருக்கின்றன.

பெண்களுக்கு சட்டமன்றத்திலும், நாடாளு மன்றத்திலும் 33 சதவிகித இடங்கள் என்றால் அதற்கு ஏகப்பட்ட முட்டுக் கட்டைகள். இந்த நிலையில் தந்தை பெரியார் கண்டிப்பாகத் தேவைப்படுகிறார். பேதங்கள் இருக்கும் வரை, அவை முற்றாக ஒழிக்கப்படும் வரை தந்தை பெரியார் அவசியம் தேவைப்படுகிறார்.

என்னை இளமையாக்கும் தோழர்களுக்கு நன்றி! நன்றி!!


இவ்வாண்டு (2011) டிசம்பர் 2 ஆம் தேதி எனது 79 ஆம் ஆண்டு பிறந்த நாள்.

பிறந்த ஆண்டைக் கணக்கிடும்போது முதல் பிறந்த நாளை விட்டு, அதன் 2 ஆவது பிறந்த நாளைத் தொடக்கமாகக் கருதி, முதல் பிறந்த நாளைக் கொண்டாடும் வழமையைக் கணக்கிட்டால் உங்களது வயது 78 ஆம் ஆண்டு நிறைவுதான், 79 அல்ல என்கிறார்கள் சில நண்பர்களும், பிள்ளைகளும்!

முதுமையை நோக்கிப் பயணம்!

நாங்கள் 79 ஆம் ஆண்டு பிறக்கிறது என்றுதான் கணக்கிட்டுக் கொள்வோமே தவிர, 79 ஆண்டு ஆகிவிட்டது என்று கூறவில்லையே என்று பதில் தரவும் மற்ற சில நண்பர்கள் - ஏன் பல நண்பர்கள் உளர்!

எப்படியானாலும் வயது அதிகமாகிறது; முதுமையை நோக்கிய பயணம் துவங்கி, காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்ற பழமொழிக்கேற்ப, வயது ஏறிக் கொண்டே செல்வது குறித்து கொண்டாடுகிறவர்கள் மகிழ்ந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் (எங்களைப் போன்ற வர்கள்) சற்று கவலைப்படவே செய்வது இயல்புதானே!

அறிஞர்கள் கணக்குப்படி, மனிதர்களின் வயது குறித்து சில முக்கிய கருத்துகள் உண்டு. பிறப்பு கால கணக்குப்படி  (Biological Age  என்றபடி) உதாரணத்திற்கு என்னையே எடுத்துக் கொள்ளுங்கள் - 79 ஆம் ஆண்டு பிறந்த நாள் துவக்கம்.

சிலருக்கு உடற்கூற்று அவயப்படி, சீரிளமையான உடலின் உறுப்புகளின் பலமும் உண்டு; 25 வயதில் 50 வயது போன்ற உடல் தளர்ச்சியும், உடல் உறுப்புகளின் நிலையும் உண்டு. இதற்கு அவர்களது (Physiological)   உடல் அவயவங்களைப் பொறுத்த வயது என்றும் சில வல்லுநர்கள் கூறுவர்.

இளமையாக்கும் தொண்டு


இதையெல்லாம் தாண்டி, பிறந்த கணக்கின்படியும், மனித உடல் உறுப்புகளின் நிலையின்படியும் உள்ள யதார்த்தம் எப்படி இருந்த போதிலும், அவர்களது உற்சாகம், பணியில் அவர்களுக்குள்ள ஆர்வம் குறை யாத- தன்னம்பிக்கையான வாழ்க்கை - பிறவி போராட்ட குணம் - இவைகளைக் கொண்டு மதிப்பிட்டுப் பார்த்தால் சிலர் 85 ஆனாலும், 25 அல்லது 35 வயதுக்குரிய மனோ நிலை - மனோபலத்துடன் வாழ்வை எதிர்கொள்ளும் பக்குவம் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

கடவுள் மறுப்பாளர்கள், கடவுள் நம்பிக்கையாளர்களை விட அதிக நாள் - அதிக காலம் வாழ்கின்றனர் என்று  சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து நாட்டில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் கண்டறிந்துள்ளனர் என்ற ஒரு செய்தி வெளியாகியது. ஆம். அவர்களது தளராத தன்னம்பிக்கையே இதற்கு முக்கிய காரணம்.

தந்தை பெரியாரே எடுத்துக்காட்டு!

தந்தை பெரியார் அவர்களை விட இதற்கு நல்ல எடுத்துக்காட்டு (Roll Model) வேறு எவரையும் சொல்ல முடியாது. 95 ஆண்டுகள் (சில நாட்கள் குறைவாக)  வாழ்ந்து காட்டிய பகுத்தறிவாளர் தந்தை பெரியார். அன்னை மணியம்மையாருக்கு இதில் - மருத்துவர்கள் போலவே பெரும் பங்கு உண்டு. அறிஞர் அண்ணா அவர்களே 1968 இல் முதல்வரான பின்பு நண்பர் சம்பந்தமும், நானும் அண்ணாவை நேரில் சந்தித்தபோது அய்யா உடல் நலம் பற்றிய விசாரிப்பில் இதனைப் பெருமிதத்துடன் கூறினார்.

94 ஆண்டுகள் வாழ்ந்த மைசூர் பொறியாளர் - கன்னட விசுவேசுர அய்யா அவர்களிடம் ஒரு செய்தி யாளர் கேட்டபோது, மிகுந்த கட்டுப்பாடுகளை எல்லாவற்றிலும் - உணவு, பழக்க வழக்கங்கள் உட்பட கடைப்பிடிப்பவன் என்பதுதான் காரணம் என்கிறார்!

அதைப் படித்துவிட்டு அன்றைய மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் டாக்டர் எஸ்.சந்திரசேகர் அவர்கள் நேரில் தந்தை பெரியாரைச் சந்தித்துக் கேட்ட போது, அய்யா அவர்கள் சிரித்துக் கொண்டே, மிகச் சாவதானமாக, அவருக்கு நேர்மாறாக எந்தக் கட்டுப் பாட்டையும் கடைப் பிடிக்காதவன் நான் என்றார்!

அடுத்த நாள், அது பற்றியே ஓர் விளக்க அறிக்கையும் தந்தார்கள்; மூக்கும் நாக்கும் ஒதுக்கும் எதனையும் தவிர மற்ற அனைத்தையும் உண்பேன். கட்டுப்பாடு எதுவும் கிடையாது என்றார்.

அன்னை மணியம்மையாரின் கண்டிப்பு

அன்னை மணியம்மையாரால் பற்பல நேரங்களில் காட்டப்பட்ட கண்டிப்புகளுக்கு - உணவை அய்யா அவர்கள் விரும்பி எடுத்துக் கொள்ளும்போது - மட்டும் இசைவது போல் அவர்கள் - அதுவும் மனமில்லாமலேயே - நடந்து கொள்ளுவது தவிர, வேறு கட்டுப்பாடே கிடையாது. புலவர் இமயவரம்பனும் அப்படி அய்யா உண்ணுகிறபோது, மிகவும் வாதாடி அய்யாவை இணங்க வைத்த காட்சிகளும் உண்டு.

விரும்பிய பணியை வேட்கையுடன் செய்வதில் அவருக்கு ஏற்பட்ட மனநிறைவும், தன் இயக்கம் வெற்றிப் பாதையில் வீறுநடை போடத் துவங்கிவிட்டது என்ற நம்பிக்கையும் அய்யாவை, ஓர் இளைஞனைப் போல் இறுதி வரை வாழும்படிச் செய்தது!

அய்யா அவர்களின் தொண்டர்களுக்குத் தொண் டனான எனக்கும், அய்யாவின் தலைமையேற்று, சமுதாயப் பணியை ஏற்று அவர்தம் கொள்கை பிரச்சாரக் கருவி யாகவும், அந்த இராணுவத்தில் ஒரு கட்டுப்பாடு மாறாத போர்வீரனாகவும் ஆனதில்தான் எத்துணை எத்துணை இன்பம்!

இன்னும் 30, 40 ஆண்டுகள் குறையக்கூடாதா?

அறைகூவல்கள் ஒரு புறம்; அகிலம் தனது வழிக்கு வேகமாக வருகிறது என்ற மகிழ்ச்சி மறுபுறம் என்ற நிலையில் அய்யா மறைவதற்குச் சில வாரங்கள் முன்பு உரையாடலின்போது, இப்போது எனக்கு ஆசையாக இருக்கிறது; நமக்கு இன்னும் 30,40 ஆண்டு குறைவான வயதாக இருக்கக்கூடாதா என்று நினைக்கிறேன்; காரணம் உலகம் நம் வழியில் அவ்வளவு வேகமாக வருகிறது. அதனைப் பார்த்து மகிழ்வதோடு, தோன்றும் எதிர்ப்புகளை ஒரு கை பார்த்து விடலாமே! என்றார். வேனில் அதைக் கேட்ட நாங்கள் மகிழ்ந்து, நெகிழ்ந்தோம்.

அதே மனநிலைதான் அவரது தொண்டனும் மாணவனுமான எனக்கும் கூட இப்போது ஏற்படுகிறது! 21 ஆம் நூற்றாண்டும் இனி வரும் நூற்றாண்டுகளும் தொலை நோக்காளரான தந்தை பெரியார்தம் சிந்தனைகளின் செயல் வடிவமாக புத்துலகம் மலர்ந்து கொண்டே இருக்கும் என்பது உறுதி.

பன்மொழிகளில் பெரியார்!

பெரியாரை உலக மயமாக்குதல் காலத்தின் கட்டாயம், ஞாலத்தின் தேவை. அதற்கான திட்டங்களில் முதன்மையானது, பன்மொழி களில் பெரியார் என்ற திட்டம். ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பேனிஷ் ஆகிய மொழிகளிலும், இந்திய மொழிகளில் முக்கியமாக ஹிந்தி, மராத்தியம், (ஏற்கெனவே மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வந்துள்ளன.) ஆகிய மொழிகளில் வெளியிடும் திட்டம்.  அந்தப் பணி - பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் பெரியார் சிந்தனைப் புலம் வாயிலாகவும், திராவிடர் கழக இயக்கத்தாலும் தொய்வின்றித் தொடர வேண்டும். விரைந்து செயல்படுத்தப் படும்.

பெரியார் பற்றிய மதிப்பீடுகளை - அய்யாவின் தத்துவங்களையும் உள்ளடக்கியவைகளாகக் கொண்டு எழுத வைக்கும் திட்டம் - கருக் கொண்டுள்ளது. விரைவில் உருக்கொண்டு உலா வரும்.

விடுதலை - ஓர் ஆவணம்!

விடுதலை ஏடு என்பது இன்றுள்ள செய்திகளைத் தரும் வெறும் நாளேடு மட்டுமல்ல; இனி வரும் காலங் களுக்கும், தலைமுறைகளுக்குமான ஆய்வுக்குரிய ஆவணப் பெட்டகம் - அறிவாயுதம்! அதனால் மட்டுமே பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து பகுத்தறிவுப் போர் நடத்த முடியும் என்பதால் 50 ஆயிரம் சந்தாக்களை உற்சாகத்துடன் தோழர்களும், தோழியர்களும் திரட்டித் தருவது, விடுதலையை வாழ வைப்பதைவிட இந்த இனத்தின் இழந்த உரிமைகளை மீட்டுருவாக்கிடச் செய்யும் மிகத் தேவையான ஒன்றாகும்.

50 ஆண்டுகள் விடுதலை ஏட்டின் வரலாற்றில் எனது பங்களிப்பு உண்டு என்பதை விட, தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும், கழகக் குடும்பத்தவரும் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றி வருகிறேன் என்ற மனநிறைவுடன், பணி தொடர ஊக்க மாத்திரையாக 50 ஆயிரம் சந்தாக்கள் அளிப்பு விழா என்னுள் மேலும் பலமாகச் செலுத்துவதாக அமையும் என்பது உறுதி!
கொள்கை உறவுகளும், ரத்த உறவுகளும் கொடுக்கும் ஒத்துழைப்பு!

இந்த நாளில் எத்தனையோ உடல் உபாதைகளி லிருந்தும், மனச் சங்கடங்களிலிருந்தும் எனக்கு நிம்மதி கிட்டும் வகையில்தான் எனது இரத்த உறவுகளும், கொள்கை உறவுகளும் ஒத்துழைப்பு தந்து நடந்து வருகி றார்கள். அது ஒரு அரிய வாய்ப்பு என்றே கருதுகிறேன்.

என்னைக் கண்டிக்கும் உரிமையுடன் காத்து வரும் (53 ஆண்டு காலமாக) எனது வாழ்விணையர் திருமதி மோகனா அவர்களுக்கும், என்னை காப்பாற்றி வரும் மருத்துவ நண்பர்களுக்கும், எனது நினைப்பைப் புரிந்து செயல் மறவர்களாகி செயல்பட்டு, இயக்கப் பணிகளுக்கு ஏற்றம் தரும் என்னருந் தோழர்கள் - அலுவலகமானாலும் - கல்வி நிலையங்களானாலும் அத்தனையும் உள்ளடக்கியே கூறுகிறேன்.

எனது ஓட்டுநர்களிலிருந்து, என்னுடன் பணி புரியும் சக தோழர்கள் அத்துணைப் பேரும் எள் என்றால் எண் ணெயாக நிற்கும் ஆற்றல் படைத்தவர்கள் என்றாலும், என்னைக் கேட்காமல் எண்ணெயாக மாட்டார்கள் என்ற கட்டுப்பாடு காக்கும் கடமை வீரர்கள் அத்துணைப் பேருக்கும் எனது இதயத்தின் அடித் தளத்திலிருந்த நன்றியை கை கோர்த்துத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இளமையாக்கும் தோழர்களுக்கு நன்றி!

நான் ஒருவரை வாலிபர் என்று சொல்வது அன்னாருடைய வயதைப் பொறுத்தது அல்ல. என்னைப் பொறுத்தவரை, எனக்கு இயக்கப் பொறுப்பைத் தவிர வேறு பொறுப்பு இல்லை எனவேதான் என்னை நான் வாலிபன் என்று கருதிக் கொண்டிருக்கிறேன். இறுதி வரை வாலிபனாகவே இருந்து தொண்டாற்ற எனக்கு இயற்கை  வசதி அளித்திருக்கிறது.

- தந்தை பெரியார் குடிஅரசு 18-3-1944

என்னை இளமையாக்கும் என் தோழர்களுக்கும், இன உணர்வாளர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து,  பாதையில்லா ஊருக்கெல்லாம்  பெரியார் பாதை அமைப்போம்  என்று சூளுரைத்து, எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கி. வீரமணி
சிங்கப்பூர்                                                                                                                                                                                 தலைவர்
1-12-2011                                                                                                                                                                     திராவிடர் கழகம்

பார்ப்பனர்களையா - பார்ப்பனீயத்தையா?


கேள்வி: நீங்கள் பார்ப்பனர்களை எதிர்க்கிறீர்களா? பார்ப்பனீயத்தை எதிர்க்கின்றீர்களா?

பதில்: பார்ப்பனீயம் என்றால் என்ன என்பதற்கு டாக்டர் அம்பேத்கர் கூறியதை எடுத்துக்காட்டாகக் கூறவேண்டி இருக்கிறது.

1. பல்வேறு வகுப்பினரிடையே ஏற்றத்தாழ்வு களை நிலை நிறுத்துவது.

2. சூத்திரர்களையும், தீண்டத்தகாதவர் களையும் முற்றிலுமாகப் புறக்கணிப்பது.

3. சூத்திரர்களுக்கும், தீண்டத்தகாதவர் களுக்கும் முற்றிலுமாகக் கல்வியை மறுப்பது.

4. சூத்திரர்களையும், தீண்டத்தகாதவர் களையும் அதிகாரங்களுக்குச் செல்லவிடாமல் தடுப்பது.

5. சூத்திரர்களும், தீண்டத்தகாதவர்களும் சொத்து சேர்க்கத் தடை விதிப்பது.

6. பெண்களை முழுமையாக அடிமைப்படுத்தி ஒதுக்குவது.

இதுதான் அம்பேத்கர் எடுத்துக் காட்டிய பார்ப்பனீய குணங்கள். இவைகளை நிலைநிறுத்துவது பார்ப்பனர்கள்தான். எனவே, பார்ப்பனர்களை எதிர்க்காமல் எப்படி பார்ப்பனீயத்தை எதிர்க்க முடியும்? ஆளை விட்டு விட்டு நிழலை மட்டும் எப்படிப் பிரிக்க முடியும்?

- அலைவ் ஆங்கில இதழுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து 

ஆசிரியர் வாழ்வில்...




ஒரு மிளகாயின் காரம் மிகுந்த பகுதி எது?


தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:

ஒரு மிளகாயின் காரம் மிகுந்த பகுதி எது?
காரம் மிகுந்த மிளகாயின் பகுதி அதன் விதைகள்தான் என்று தொலைக்காட்சி சமையல்  நிகழ்ச்சிகளில் பங்கு கொள்பவர்கள் நம்மை நம்பவைத்து வந்துள்ளனர். ஆனால் அது உண்மையல்ல. உண்மையில் மிளகாய் விதைகள் ஒட்டியிருக்கும் அதன் மத்திய நரம்புப் பகுதிதான் அதிக காரம் மிகுந்ததாகும். அதன் மத்திய நரம்புப் பகுதியில்தான் மிளகாய்க்கு அதிக காரம் அளிக்கும் வண்ணமற்ற, சுவையற்ற கலவையான கேப்சைசின் (Capsaicin) அதிக அளவில் இருக்கிறது.
அமெரிக்க மருந்தியலாளர் வில்பர் எல். ஸ்கோவில்லி என்பவர் 1912 இல்  உருவாக்கிய ஸ்கோவில்லி அளவுகோல்தான் மிளகாயின் காரத்தன்மையை அளக்கப் பயன்படுத்தப்படுகிறது. தனது தொடக்க கால சோதனைகளில் அவர் மிளகாய் சாற்றை சாராயத்தில் கரைத்து, சர்க்கரை நீரில் சேர்த்தார். பல்வேறுபட்ட மிளகாய்களின் சாற்றை, அவற்றின் காரச்சுவையே தெரியாமல் போகும் வரை,  குடித்துப்பார்க்கும்படி சோதனையாளர்கள் பலரை அவர் கேட்டுக் கொண்டார். அதன்பின் மிளகாய்களின் காரத்தன்மையை அளவிட ஒரு அளவுகோல் கண்டுபிடிக்கப்பட்டது.
எடுத்துக்காட்டாக ஒரு ஜலாபினோ மிளகு ஸ்கோவில்லி கார அளவுகோளில் 4,500 அளவு காரம் கொண்டதாகும். அதன் காரத்தன்மை தெரியாமல் செய்வதற்கு அதனை 4,500 வரை நீர்த்துப் போகச் செய்ய வேண்டியிருக்கும்.
உலகிலேயே அதிக காரத்தன்மை கொண்ட மிளகாய் இங்கிலாந்து நாட்டின் தென்மேற்குக் கடற்கரையில் இருக்கும் டோர்செட் என்ற இடத்தில் விளையும் மிளகாய்தான். மைக்கேல் மற்றும் ஜாய்மைசூடின் ஆகியோர் டோர்சர்செட் நாகா (சமஸ்கிருதத்தில் பாம்பு என்று பொருள்) என்ற, வங்காள தேசத்திலிருந்து வந்த ஒரு தாவரத்தை வளர்த்தனர்.
2005 ஆம் ஆண்டில் அது இரண்டு அமெரிக்க சோதனைச் சாலைகளில் சோதனை செய்யப்பட்டது. அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதன் காரத்தன்மையின் அளவு 9,23,000  ஸ்கோவில்லி அளவு கோலில் இருந்தது தெரிய வந்தது. அதன் ஒரு சிறுபகுதியை சேர்த்தாலும் கூட அந்த உணவை உண்ணவே முடியாது. அவ்வாறு உண்டாலும், உண்பவர் மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டியிருக்கும். என்றாலும் கடந்த ஆண்டு 2,50,000 நாகாக்கள் விற்பனை ஆயின.
சரியான கண்ணோட்டத்தில் கூறவேண்டுமானால்,  தூய்மையான கேப்சைசின் பொடி 150-160 லட்சம் ஸ்கோவில்லி அளவு கோல் காரத்தன்மை கொண்டதாக இருக்கும். அதன் காரத் தன்மையின் அதிக அளவின் காரணமாக, அதனைச் சோதனை செய்யும் மருந்தியலாளர்கள் நன்கு பாதுகாக்கப்பட்ட ஒரு தனி அறையில், அந்தக் காரத்தை முகர்ந்துவிடாமல் இருப்பதற்கு,  உடலை முழுமையாக மூடும் பாதுகாப்பான உடை அணிந்துதான் சோதனை செய்யவேண்டும்.
மிளகாய்களில் 3,510 வகை மிளகாய் ரகங்கள் உள்ளன.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...