Saturday, November 17, 2012

விளம்பர ஜாதி!


ஸ்ப்ளெண்டர் மோட்டர் சைக் கிளை விளம்பரப்படுத்திட இப்படி ஒரு முறையைக் கையாண்டுள்ளது இந்த நிறுவனம்.
ஷிவ்ராம் அய்யர் சௌம்யா அய்யர் குடும்பத்தில் இன்னொருவரும் இணைந்துள்ளார் அவர்தான் ஸ்ப்ளெண்டர் அய்யராம்.
இதே பாணியில் கேரளாவில் நாயர் என்றும், மும்பை மற்றும் புனேயில் படேல் என்றும், டில்லியல் சௌகான் என்றும் கொல்கத்தாவில் மிஸ்ரா என்றும் இப்படியாக விளம்பரம் செய்து வருகின்றனர்.
வியாபாரம் செய்வதற்கு எத் தனையோ வழிமுறைகள் உள்ளன.
ஜாதிப் பெயர்களை முன்னிறுத்தி விளம்பரங்களைச் செய்ய வேண்டுமா? இதன் பின்னணி என்ன?
இன்னொரு தகவலும் இது தொடர்பாக உண்டு. மூன்று மாதங் களுக்கு முன்பு இதே சென்னையில் தான் - தரமணி பகுதியிலே உள்ள ஓர் அமெரிக்க நிறுவனம் அதன் பெயர் பேபால் (Paypal)
அந்த நிறுவனத்தின் ஆண்டு விழா! (நடத்தட்டும்! நடத்தட்டும்! மகிழ்ச்சி தான்!)
விளையாட்டுப் போட்டிகள் எல்லாம்கூட! திறமைகளை வெளிப் படுத்த வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டாமா?
விளையாட்டுப் போட்டிகள் என் றால் குழுக்கள் (Teams) பிரிக்கப்பட வேண்டாமா?
ஆமாம்! ஆமாம்!! அதில் என்ன சந்தேகம்? நம் பள்ளிக்கூடத்திலே கூட பிரிப்பார்களே! காந்தி அவுஸ், ஜவகர் அவுஸ், நேதாஜி அவுஸ் அல்லது  வண்ணப் பெயர்கள் சிகப்பு, மஞ்சள், நீலம் என்று கூடப் பிரிப்பார்களே!
சில பள்ளிகளில் பூக்களின் பெயர் களைக்கூட சூட்டுவதுண்டு. முல்லை, ரோஜா, சாமந்தி என்று போகும்.
பேபால் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட விழாவுக்கான  விளை யாட்டுக் குழு எந்தெந்த பெயர்களில் பிரிக்கப்பட்டு இருந்தன? படேல் ஆஃப் குஜராத், பேனர்ஜீஸ் ஆஃப் பெங்கால், சிங்ஸ் ஆஃப், பஞ்சாப், டிசோசாஸ் ஆஃப் கோவா; - என்ன தமிழ்நாட்டைக் காணவில்லையே என்று அவசரப்படாதீர்கள். அய்யர்ஸ் ஆஃப் தமிழ்நாடு.
எப்படி இருக்கிறது? படித்தவர்கள் அல்லவா! அவர்களில் மூளை வித்தியாசமாகச் செயல்பட்டால்தானே பெருமை?
ஆமாம் அமெரிக்க கம்பெனி யாயிற்றே - அவர்களுக்கு இதெல்லாம்....
சொல்லப் போவது புரிகிறது! புரிகிறது!! ஆனால் ஆங்கே பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள் எல்லாம் யார்? அவர்கள் பாஷையில் சொல்ல வேண்டுமானால் “Brahmins! Brahmins”
ஓகோ! கதை அப்படிப் போகிறதா!
பிரச்சினை வெடித்ததும் வியாக்கி யானங்களை சொல்ல ஆரம்பித் தார்கள்.
அய்.பி.எல். கிரிக்கெட்டுக்குப் பெயர் வைக்கவில்லையா? இதெல்லாம் கொஞ்சம் தமாஷ்! எதையும் சீரியஸாகப் பார்த்தால் எப்படி? ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு அடையாளம் - அவ்வளவு தான்.
ஒண்ணும் இல்லாத விஷயத்தை எல்லாம் துருவித் துருவிப் பார்க்கக் கூடாது - என்று வெண்டைக்காய் விளக் கெண்ணெய் வியாக்கி யானங்கள்! பிரச்சினை  பெரிதாக வெடித்ததும் ஊற்றி மூடி விட்டார்கள் - காரணம் தமிழ்நாடு அல்லவா!
இப்பொழுது ஒரு முக்கியமான இடத்துக்கு நாம் வந்தாக வேண்டும்.
இப்படி எல்லாம் யாருடைய மூளை வேலை செய்கிறது?
நுட்பமான கேள்வி இது! ஏன் அவசியமான கேள்வியும்கூட!
தனியார் நிறுவனங்கள் எல்லாம் இப்பொழுது பெரும்பாலும் அக்கிர காரமாகி விட்டன. அதிலும் முக்கிய பதவிகளில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் இடத்தில் எல்லாம் பார்ப் பனர்கள் அட்டாணிக் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு விட்டார்கள்.
(இன்றைக்கு இந்தியாவில் தனியார்த் துறைகளில் இயக்குநர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கை 9052; இதில் பார்ப்பனர்கள் உள்ளிட்ட முன்னேறிய ஜாதியினர் 8367 (92.6%) பிற்படுத்தப்பட்டோர் 34.6 (3.8%) தாழ்த்தப்பட்டோர் 319 (3.5%) (Economic And Political Weekly - 11.8.2012)
இப்படிப் பார்ப்பனர்கள் தனியார் நிறுவனங்களில் படை எடுத்து, படம் எடுத்து ஆக்கிரமித்துக் கொண்டார்கள் அல்லவா!
தனியார் நிறுவனங்கள் எல்லாம் அவாளின் ஆதிக்க புரியாகி விட்டால் அதன் பின் கேட்க வேண்டுமா?
அந்த வேலைதான் மோட்டர் பைக் விளம்பரத்திலும் அய்யர், பானர்ஜி மிஸ்ரா - விளையாட்டுப் போட்டிகளிலும் குழுக்களுக்கும் ஜாதிப் பெயர்கள்.
பார்ப்பனர்களாவது வெங்காய மாவது! அதெல்லாம் பழைய காலம்.
இப்பொழுதெல்லாம் அந்தப் பேச்சுக்கே வேலையில்லை என்று நமது பார்ப்பனர்  அல்லாத மக்கள் அதிலும் கொஞ்சம் படித்தவர்கள் அடுத்தவர்களின் வாய்களையும் கடன்வாங்கி இடக்கு முடக்காகப். பேசுவதுண்டு.
அத்தகைய அதிகப் பிரசங்கிகள் இந்தத் தகவல்களையும் உண்மை களையும் கண்களை அகல விரித்தும், மூளையைக் கொஞ்சம் கசக்கிவிட்டு, வெளிச்சத்தில் குளிப்பாட்டியும் பார்த்தால் தெரியும். உண்மையான சங்கதி.
2012லும் பிராமணாள் ஓட்டல் வைக்க வந்து விட்டாளே தெரிய வில்லையா?
அதிகாரப் பலமும், நம் மக்களில் அப்பாவித்தனம் என்ற பலகீனமும் பார்ப்பனர்களுக்குக் கிடைத்த தெம்பான இரண்டு கால்கள்!
நாட்டில் எவ்வளவோ நடக் கின்றன. இந்தக் கறுப்புச் சட்டைக் காரர்களுக்கு இதுதான் பிரச் சினையா? என்று மிகப் பெரிய விசால மனசுக்குச் சொந்தக்காரர்கள் போல கதைப்பார்கள்.
நாம் திருப்பிக் கேட்க வேண்டும்; நாடு எவ்வளவோ முன்னேறி விட்டது - இன்னமும் ஏன் இந்த அய்யர் பிராமணாள் விளம்பரம்?
இதற்கு மட்டும் பதில் சொல்ல மாட்டார்கள். ஏன், பதில் சொல்ல முடியாது - அதனால்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...