Tuesday, March 3, 2020

மோடி - அமித்ஷா மோதல் வெளியில் வந்தது


டில்லியில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பணியில் அமர்த்தப் பட்டு இருந்தார். பாதுகாப்பு மேற்கொள்ள இரண் டாவது முறை இவரை மோடி பயன் படுத்திக் கொண்டார்.
டில்லி கலவரத்திற்குப் பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள மத்திய உள்துறை அமைச் சர் அமித் ஷாவிடம் கலந்தாலோ சனை செய்யாமலேயே தேசிய பாது காப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து இருந்தார்.
டில்லியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு முதல் புதன் கிழமை வரை குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே கலவரம் வெடித்தது. இது வரை கலவரத்திற்கு 45 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை உயரக் கூடும் என்று கூறப்படுகிறது.
டில்லியின் பாதுகாப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரு கிறது. இத்துறைக்கு அமைச்ச ரான அமித்ஷா பாதுகாப்பு நட வடிக்கை களை சிறப்பாக மேற் கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. டில்லி அரசு மீதும் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், டில்லியின் பாதுகாப்பு முழுக்க முழுக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் கையில் உள்ளது. அமித் ஷாவால் கலவரத்தை கட்டுப் படுத்த முடியவில்லை என்ற கருத்தும் வேகமாக பரவியது. மத்திய அரசுக்கும் தகவல் சென்றது.
இதனால், அமித் ஷா பதவி விலக செய்ய வேண்டும் என்ற குரல் எதிரொ லித்தது. இதற்கிடையே இந்தியாவில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாடு திரும்பிய பின்னர் மோடி தலைமை யில் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடந்தது.அதில், டில்லியில் அமைதியை காவல் துறையால் மேற் கொள்ள முடியாது என்ற முடிவுக்கு பிரதமர் அலுவலகம் வந்தது. இதை யடுத்தே அஜித் தோவலை களத்தில் இறக்க பிரதமர் அலுவலகம் முடிவு செய்தது. இதையடுத்தே டில்லியின் வட கிழக்குப் பகுதிகளில் அஜித் தோவல் களத்தில் இறங்கினார்.இதற்கு முன் னதாக ஜம்மு காஷ்மீர் விஷயத் திலும், அமைதியை ஏற்படுத்தவும், ஜம்மு காஷ்மீர் அமைதியாக இருக் கிறது என்பதை உறுதிப்படுத்தவும் அஜித் தோவல் அனுப்பப்பட்டார். அவ ரும் ஜம்மு காஷ்மீரில் முக்கிய இடங் களுக்குச் சென்று பாதுகாப்பு மேற் கொண்டு இருந்தார்.இதேபோல், டில்லியின் வடகிழக்குப் பகுதியில் முக்கிய சாலைகளில் சென்று மக் களை சந்தித்துப் பேசினார். உத விக்கு எந்த நேரமும் அழைக்கலாம் என்று நம்பிக்கை அளித்தார்.
டில்லியில் போதிய அளவு காவல்துறை இருந்தும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வராததுதான் அஜித் தோவலை அனுப்ப காரண மாக அமைந்துள்ளது. மேலும், டில்லி தேர்தலின்போது, அமித் ஷாவின் பேச்சு முஸ்லிம்கள் இடையே அச் சத்தை ஏற்படுத்து வதைப் போல இருந்தது. இந்த நிலையில், டில்லியில் முஸ்லிம்கள் நிறைந்த பகுதியில் அஜித் தோவ லைப் போல இறங்கி நடக்க முடி யாது என்பதும் மற்றொரு காரணம்.
டில்லியின் ஆணையராக இருந்த அமுல்யா பட்நாயக் ஓய்வு பெற்றும், அவரது பதவிக் காலம் ஒரு மாதம் காலம் நீடிக்கப்பட்டது. வலுவான காவல்துறை தலைமை இல்லை என்று உணர்ந்த பிரதமர் அஜித் தோவலை அனுப்ப முடிவு செய்தார் என்று கூறப்படுகிறது. மோடிக்கு நெருக்க மானவராக கருதப்படுபவர் அஜித் தோவல். டில்லிக்கு வலுவான காவல் துறை  இல்லாதது, அமித்ஷாவும் செல்ல முடியாத நிலையில், தனக்கு நெருக் கமான அஜித் தோவலை பிரதமர் தேர்வு செய்தார். மேலும், அரசின் சார்பில் அனைவருக்கும் தெரிந்த ஒரு முகமாக இருக்க வேண்டும் என்ப தாலும் அஜித் தோவலை பிரதமர் தேர்வு செய்தார். ஆனால், அமித் ஷாவை ஓரம் கட்டுவதற்கு மோடி இந்த முடிவை எடுத்தார் என்ற செய்தி வெளியானது. இதற்கு மத்திய அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து இருந்தனர்.
தேவை மூன்றாம் முகம்
கலவரத்தின்போது அமைதியை நிலைநாட்ட உள்துறை அமைச் சரின் முகம் தேவை என்பதைத் தாண்டி, மூன்றாம் முகம் அரசுக்கு தேவைப் படுகிறது. கேரளாவின், தலச்சேரியில் 1972ஆம் ஆண்டில் நடந்த மதக் கலவரத்தை திறமையாக கையாண்டு அடக்கியவர் அஜித் தோவல். 1971இல் துவங்கிய மதக் கலவரத்தை சாதுர்ய மாக கையாண் டார். 1971, டிசம்பர் 20ஆம் தேதியன்று, மத ஊர்வலம் நடந்து கொண்டு இருந்தபோது, செருப்பு வீசப்பட்டது. இதையடுத்து, ஆர்எஸ்எஸ், முஸ்லிம்கள் இடையே கலவரம் வெடித்தது. முஸ்லிம் களுக்கு ஆதரவாக சிபிஅய்(எம்) களத்தில் இறங்கினர். தோவல் கட்டுப்படுத்தி னார். இன்றும் நாட்டில் நடந்த மிகப் பெரிய மதக் கலவரங்களில் தலச்சேரி கலவரம் முக்கியமான  ஒன்றாக கருதப் படுகிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...