5ஆம் கட்ட
அகழாய்வில் சுருள் வடிவ சுடுமண் குழாயும், அதன் கீழே பீப்பாய் வடிவிலான
குழாய்களும் கண்டறியப்பட் டன. ஆறாம் கட்ட அகழாய் வில் இந்த குழாய்களின்
தொடர்ச்சியை கண்டறிய முடியும் என தொல்லியல் துறையினர் நம்பிக்கை கொண்
டிருந்தனர். அதன்படி, இப் பகுதியைச் சேர்ந்த நீதியம் மாள் என்பவரது
நிலத்தில் குழிகள் தோண்டப்பட்டன.
12 நாள் நடந்த அகழாய் வில் கருப்பு
சிவப்பு நிறத்தி லான இரு பானைகள் மட் டுமே கிடைத்துள்ளன. இதில் ஒரு பானை
5ஆம் கட்ட அக ழாய்வின் போது கருப்பையா வின் நிலத்தில் கிடைத்த வட்
டப்பானையை ஒத்திருந்தது. மற்றொரு பானை சிறிய வடிவில் உள்ளது. தற்போது
பானையின் வாய்ப்பகுதி மட் டுமே கிடைத்துள்ளது. கூடு தலாக அகழாய்வு செய்யும்
போதுதான் முழுவடிவிலான பானையும் கிடைக்க வாய்ப் புள்ளது. தற்போது சுடுமண்
குழாயின் தொடர்ச்சியை கண்டறிய அது கிடைத்த இடத்தின் வடக்கு பகுதியில்
கூடுதல் குழி தோண்ட தொல் லியல் துறை திட்டமிட்டுள் ளது. இன்று முதல் அந்த
இடத்தில் அகழாய்வு பணி கள் தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment