தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
நாட்டி லுள்ள பெண்கள், குழந்தை களின்
பாதுகாப்பை உறுதிப் படுத்தும் விதமாக நிர்பயா நிதியம் என்ற நிதியை மத்திய
அரசு உருவாக்கியது. முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கியது. இந்த
நிதியை தமிழக அரசு முறை யாக செலவு செய்யவில்லை என்று கூறி சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஏ.பி.சூரியபிரகாசம் என்பவர் பொதுநல வழக்கு
தொடர்ந் தார். அதில், ‘கடந்த 4 ஆண்டு களில் தமிழக அரசுக்கு ஒதுக் கப்பட்ட
ரூ. 190 கோடியில் தமிழக அரசு வெறும் ரூ. 6 கோடியை மட்டுமே செலவ
ழித்துள்ளது. மீதித் தொகையை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பி விட்டது'
என்று மனுதாரர் குற்றம் சாட் டினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
மத்திய அரசிடம் நிர்பயா நிதி எவ்வளவு பெறப் பட்டது? எவ்வளவு செலவு
செய்யப்பட்டது? உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தமிழக அரசு தாக்கல் செய்ய
வேண்டும் என்று கடந்த மாதம் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள்
சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகி யோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழக அர
சுக்கு நிர்பயா நிதியில் இருந்து ரூ.1672.64 கோடி வழங்கப்பட் டது. அதில்
வெறும் ரூ.45.88 கோடி மட்டும் தமிழக அரசு பயன்படுத்தியுள்ளது என்று
கூறப்பட்டு இருந்தது. இதை சுட்டிக்காட்டி மனுதாரர் சூரியபிரகாசம்
வாதிட்டார். தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கேட்
கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், விசாரணையை 2 வாரத்துக்கு
தள்ளிவைத்தனர். மேலும் மத்திய அரசின் நிதியை ஏன் முறையாக
பயன்படுத்தவில்லை? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப் பினர். இதற்கு விரி
வான பதிலை அளிக்கவும் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment