Tuesday, March 3, 2020

டில்லி கலவரம்: பா.ஜ.க.மீது கட்சிக்குள் கடும் அதிருப்தி

மேற்கு வங்க பா.ஜ.க.விலிருந்து  சுபத்ரா முகர்ஜி விலகல்
‘வெறுப்பு உணர்வை தூண்டும் கருத் துகளை கூறுபவர்கள் கட்சி யில், என்னால் நீடிக்க முடி யாது,’ என மேற்கு வங்க நடிகை  சுபத்ரா முகர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டதுக்கு எதிராக போராட் டம் நடந்து வருகின்றது. மற்றொரு பக்கம் ஆதரவு தெரிவித்து சிலர் விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகின் றனர். இவர்கள் இருவருக்கும் இடையே டில்லியில் கடந்த வாரம் மோதல் வெடித்தது. இதில், ஏற்பட்ட வன்முறை யில்  45 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக் கானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ‘கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் தன்னால் இருக்க முடியாது,’ என மேற்கு வங்க தொலைக்காட்சி தொடர் நடிகையும் பாஜகவை சேர்ந் தவருமான சுபத்ரா முகர்ஜி வெளிப்படையாக கூறியுள் ளார்.  இதுகுறித்து சுபத்ரா கூறியதாவது:
கடந்த 2013ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தேன். பா.ஜ.க.வின் செயல்படும் முறை மற்றும் அதன் கொள் கைகளால் ஈர்க்கப்பட்டுதான் கட்சியில் சேர்ந்தேன். ஆனால், சில காலமாக கட்சி சரியான பாதையில் செல்ல வில்லை என்பதை கவனித்து வருகிறேன். மக்களை மதத் தால் தீர்மானிப்பதும், வெறுப் புணர்வை உருவாக்குவதுமே பா.ஜ.க.வின் சித்தாந்தமாக மாறி வருவதாக உணர்கிறேன்.
தீவிரமான ஆலோசனைக் குப் பின்னரே அந்த கட்சியில் இருந்து விலக முடிவு செய் தேன். டில்லியில் என்ன நடந்தது என்று அனைவரும் பார்த்தீர்கள். நிறைய மக்கள் கொல்லப்பட்டனர். பல வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. பாஜகவில் உள்ள அனுராக் தாகூர், கபில் மிஸ்ரா ஆகி யோர் வெறுக்கத்தக்க கருத்து களை கூறியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் மீது கட்சி எந்தவித நட வடிக்கையும் எடுக்கவில்லை. கட்சியில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. மோசமாக பேசிய அந்த தலைவர்கள்மீது நடவடிக்கை எடுக்காத கட்சியில் நான் இருக்கக்கூடாது என்று முடிவு செய்துள்ளேன். அவர் கள் இருக்கும் கட்சியில் நான் இருக்க மாட்டேன். எனது விலகல் கடிதத்தை மாநில தலைவருக்கு அனுப்பி விட் டேன் என்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...