தமிழின் மேன்மை, தமிழர்களின் பண்பாடு,
தமிழ்க் கல்வி கொடைச் சிறப்பு, வீரம், கலை, தமிழர்களின் பண்டைய உடலுக்கு
ஊறு தராத உணவு வகை போன்றவற்றை இளம் குழந்தைகளுக்கு எடுத்து சொல்லும் விதமாக
பிள்ளைத் தமிழ்க் கல்வி என்ற அமைப்பினை முருகேஷ் நடராஜன் (டொராண்டோ
-கனடா), கவிஞர் கலைச்செல்வி, புலியூர் கேசிகன் ஆகியோர் இணைந்து தொடங்கி
உள்ளனர்.
மேற்கண்ட துறை வல்லுனர்களை கொண்டு இக்
கல்வி கற்பிக்கப்பட உள்ளது. கனடாவின் பிரபல பல்மருத்துவர் டாக்டர். சந்திரா
(கே.சி. டென்டல்) உறுதுணையுடன் 'பிள்ளை தமிழ்க் கல்வி' கனடா - டொராண்டோ
நகரில் ஏப்ரல் திங்களில் தொடக்க விழாவோடு கவிஞர் கலைச் செல்வியின் சங்கத்
தமிழர்களின் உணவுவகை என்ற நூலும் வெளியிடப் படவுள்ளது.
'பிள்ளைத் தமிழ் கல்வி' குழுவினர் ஆசான்,
செல்வராஜ், தஞ்சை இளையராஜா, ஜெபின், நிறுவனர் கவிஞர் கலைச்செல்வி
ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்கின்றனர் இதன் அறிமுக விழா 22.2.2020 அன்று
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாள ரிடையே நடைபெற்றது.
'பிள்ளைத் தமிழ் கல்வி' அறிமுக விழாவில்
புலவர். நன்னன் மகள் வேண்மாள், பரத இசைப் பள்ளி முனைவர் மலர்க்கொடி ரேணுகா
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
'பிள்ளைத் தமிழ் கல்வி' வெற்றிபெற தமிழ்
வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர். கோ.விஜயராகவன், பேரா. சுப.வீ. தோழர்.
தியாகு, பழ. நெடுமாறன். இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், புலவர் நன்னன்
குடியினர், முனைவர். மா. பூங்குன்றன். டாக்டர் எஸ். சாமுண்டி சங்கரி
போன்றோர் தம் வாழ்த்துகளை காணொலி வழியாக வழங்குகின்றனர்.
No comments:
Post a Comment