உலகப் புகழ்பெற்ற பிரபல ராக் இசைக்கலைஞரான
ரோஜர் வாட்டர்ஸ், டில்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக, டில்லியைச்
சேர்ந்த இளைஞர் ஒருவர் படித்த கவிதை, சமூக வலைதளங்களில் வைரலான
நிலையில், அந்த கவிதையை, மீண்டும் வாசித்து, உலக நாடுகளுக்கு டில்லி
வன்முறையை அம்பலப்படுத்தி உள்ளார்.
லண்டனை சேர்ந்த ராக் இசைக்கலைஞரான ரோஜர்
வாட்டர்ஸ், பிங்க் பிளாய்டு என்ற இசைக் குழுவை நடத்தி வருகிறார். ஆங்கில
பாடலாசிரியர், பாடகர், பேஸ் கிடாரிஸ்டு ஆவார். பிங்க் ஃபிலாய்ட் தி டார்க்
சைட் ஆஃப் தி மூன் (1973), விஷ் யூ வர் ஹியர் (1975), விலங்குகள் (1977)
மற்றும் தி வால் (1979) என்ற கருத்து ஆல்பங்களை வெளியிட்டு பன்னாட்டு
புகழ்பெற்றவர். 1970களிலேயே, எங்க ளுக்கு எந்தக் கல்வியும் தேவையில்லை,
சிந்த னைக் கட்டுப்பாடு தேவையில்லை என்று பரபரப் பாக ஆல்பம் பாடல் மூலம்
உலகுக்கு தன்னை பிரபலப்படுத்தியவர்,
வித்தியாசமாக யோசிப்பதிலும், அதை நடை
முறைப்படுத்துவதிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் வாட்டர்ஸ், தற்போது சமூக
வலைதளங்களில் பரவிய டில்லியின் வன்முறை குறித்து அமீர் அஜிஸ் என்னும்
டில்லி இளைஞர் எழுதிய “அனைத்தும் நினைவில் இருக்கும்” என்ற கவிதையைக்
கண்டு மனம் வருந்திய நிலையில், அதையே மீண்டும் வாசித்து, சமூக வலைதளத்தில்
பதிவேற்றி உள்ளார்.
தற்போது இந்த கவிதை சமூகவலைதளங்களில் பரவி வருகிறது: அந்த பாடலில் உள்ள வரிகள்:
"அனைத்தும் நினைவில் இருக்கும்
எங்களைக் கொல்லுங்கள், நாங்கள் பேய்களாக மாறி எழுதுவோம்.
உங்கள் கொலைகளை, எல்லா ஆதாரங்களுடனும்.
நீங்கள் நீதிமன்றத்தில் நகைச்சுவைகளை எழுதுகிறீர்கள்;
நாங்கள் சுவர்களில் ‘நீதி’ என்று எழுதுவோம்..
நாங்கள் மிகவும் சத்தமாக பேசுவோம், காது கேளாதவர் கள் கூட கேட்பார்கள்.
நாங்கள் தெளிவாக எழுதுவோம். பார்வையற்றவர்கள் கூட வாசிப்பார்கள்
நீங்கள் பூமியில் ‘அநீதி’ எழுதுகிறீர்கள்;
நாங்கள் வானத்தில் ‘புரட்சி’ என்று எழுதுவோம்.
அனைத்தும் நினைவில் இருக்கும்;
அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது"
இந்த வரிகளை பாடகர் ரோஜர் வாட்டர்ஸ் பாடலாக பாடி உள்ளார்.
No comments:
Post a Comment