Friday, March 6, 2020

இந்துத்துவா மதவெறியன் கபில் மிஸ்ராவுக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு....

மோடி அரசுக்கு சம்பந்தம் இல்லையாம்
 “போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த 3 நாள்தான் அவகாசம்” என்று டில்லி காவல்துறையினருக்கு ‘கெடு’ விதித்தவரும்- வன்முறையைத் தூண்டி 47 உயிர்கள் பலியாவதற்கு காரணமானவருமான கபில் மிஸ்ராவுக்கு, டில்லி காவல்துறை ‘ஒய்பிளஸ்’  வகை பாதுகாப்பு வழங்கி, அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் கபில் மிஸ்ராவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்த காரணத்தாலும், கபில் மிஸ்ராவே தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கைவைத்ததாலும், அவருக்கு இந்தஅதிகபட்ச பாதுகாப்பை வழங்கியுள்ளதாக டில்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.‘ஒய் பிளஸ்’ வகை பாதுகாப்பு என்பது, ஆயுதமேந்திய காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பதாகும். 11 பேர் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். தேசியபாதுகாப்பு கமாண்டோ பிரிவைச் சேர்ந்தவர்களும் இதில் அடங்குவார்கள்.
டில்லி காவல்துறையின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. எப்அய்ஆர் பதிவு
செய்து, கைது செய்யப்பட வேண்டியஒருவருக்கு, காவல் துறையே நாட்டின் நான்காவது உயர்ந்த பட்ச பாதுகாப்பு வழங்கியிருப்பதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகமோ, “ ஒய்.பிளஸ் பாதுகாப்புக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறி
யுள்ளது.
டில்லி காவல்துறை தனிப்பட்ட முறையில் இந்த நடவ டிக்கையை எடுத்திருக்கலாம் என்றும் சமாளித்துள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...