Wednesday, February 5, 2020

இந்தி பேசாதோர் மீது காட்டப்பட்டுவரும் சகிப்புத்தன்மையற்ற கடந்த கால எதிர்ப்பு

தி இந்து' ஆங்கில நாளேட்டில் 'அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னர்' எனும் தலைப்பில் 3.2.2020 அன்று ஒரு செய்தி வெளியாகி இருந்தது. 3.2.1970 அன்று அதே 'தி இந்து' ஏட்டில் வெளிவந்த செய்தியினை மீண்டும் பிரசுரித்திருந்தார்கள். அந்த செய்தியின் சுருக்கம் இது:
"பிப்ரவரி 2, 1970 அன்று மத்தியபிரதேச மாநிலத்தில் இந்தூர் பல்கலைக்கழகத்தில் இளைஞர் மேளா நிகழ்ச்சியினை நடத்தினார்கள். அதற்கு சிறப்பு விருந்தினராக (அந்நாளைய) குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சியில் வி.வி.கிரி தமது உரையினை ஆங்கிலத்தில் தொடங்கியதும், கூட்டத்தில் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து, குடியரசுத் தலைவர் இந்தி மொழியில்தான் உரையாற்ற வேண்டும் என கடுமையாகக் குரல் கொடுத்தனர். இதை சற்றும் எதிர்பாராத வி.வி.கிரி சற்று அமைதிகாத்துவிட்டு கூறினாராம்.
"இதுதான் இந்திய குடியரசுத் தலைவரை நீங்கள் மதிக்கும் முறையா? எம்மை விரும்பவில்லையென்றால், ஏன் நிகழ்ச்சிக்கு அழைத்தீர்கள்? இந்த நிகழ்ச்சிக்கு நானாக வரவில்லை. நீங்கள் அழைத்துதான் வந்துள்ளேன்" என்றாராம்.
இந்தி பேசாத மக்களிடமும், மாநிலங்களுடனும் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ள 'இந்தி வெறியர்களை' கேட்டுக் கொண்டாராம். மொழி வெறி தொடர்ந்தால் நாடு ஒன்றாக இருக்காது; சிதைந்து போய்விடும். ஆங்கிலத்தில் பேசுபவர்கள் மீது காட்டப்படும் சகிப்பற்ற தன்மை, நாட்டின் தற்கொலைக்கு சமமாகும். ஒரு நாடு இருக்கும் இடத்தில் 17 இறையாண்மை கொண்ட நாடுகள் உருவாகும். மொழி என்பது மக்களை இணைக்கும் வழிமுறை; தடையல்ல. ஆங்கில எதிர்ப்பு என்பது கூடாது. இருப்பினும் இறுதியாக இந்தி மொழி பேசிடும் மாநிலத்தவருக்கு, இந்தியாவின் மொழி என்பது இந்தி மட்டுமே' என்று கூறும் நிலைமையும் ஏற்பட்டது."
நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவருக்கு அன்றும் அதே நிலை; இன்றுள்ள குடியரசுத் தலைவர் இந்தி பேசிடும் மாநிலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர் என்பதால் கோயிலில் நுழைய தடை விதிக்கப்பட்டதும், இந்த நாட்டில் மதவாதமும், மொழிவெறியுமே ஜனநாயக வடிவத்தில் ஆட்சி செய்கிறது என்பதை புலப்படுத்தி வருகிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...