Wednesday, February 5, 2020

‘என்ஆர்சி அமல் பற்றி முடிவு செய்யவில்லையாம்!’

மக்களவையில் மத்திய அரசு தகவல்
 ‘தேசிய குடிமக்கள் பதி வேடு (என்ஆர்சி) தயாரிப்பது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவு செய்ய வில்லை,’ என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தும் அரசின் முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இத்திட்டத்தை அமல் படுத்துவது தொடர்பாக மக்களவையில் உறுப்பினர் கேட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தி யானந்த் ராய் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், ‘தேசிய அளவில் குடிமக்கள் பதிவேடுவை தயாரிப்பது குறித்து தற்போது வரை மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை,’ என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...