Tuesday, February 4, 2020

ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு துவக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லுரில் மீண்டும் தொல்லியல் அகழாய்வு பணிகள் துவங்கியது.
திருநெல்வேலி - -திருச்செந்துர் சாலையில் 24 கி.மீ.,துரத்தில் தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ளது ஆதிச்சநல்லுர்.
இங்கு 1876இல் ஜெர்மன் நாட்டின் ஜாகோர், 1904இல் இங்கிலாந்தின் தொல் லியல் ஆய்வாளர் அலெக்சாண்டர் ரே ஆய்வு செய்தனர். 2004இல் இந்திய தொல்லியல் துறை அதிகாரி சத்தியமூர்த்தி ஆய்வு செய்தார். அங்கு முதுமக்கள் தாழிகளில் இருந்து கிடைத்த பொருட்கள் கி.மு.., ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என தெரியவந்தது.2004க்கு பிறகு அகழாய்வு செய்ய மத்திய, மாநில அரசகள் ஆர்வம் காட்டவில்லை. சிவகங்கை மாவட்டம் கீழடியில் அண்மையில் நடந்த ஆய்வுகள் தமிழரின் தொன்மையை பறைசாற்றுவதாக அமைந்ததால் மீண்டும் தாமிரபரணிக் கரையில் ஆய்வு செய்யப்படும், என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் ஆதிச்சநல்லுரில் களஆய்வினை துவக்கினர்.இதுகுறித்து துணை இயக்குநர் சிவானந்தம் கூறுகையில்,
இந்த ஆய்வில் தொல்லியல் துறையுடன் இணைந்து பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழக பேராசிரியர் அன்பழகன் தலைமையில் 5 பேரும், புதுச்சேரி மத்திய பல்கலை வரலாற்றுத்துறை பேராசிரியர் ராஜன், தொல்லியல் அலுவலர்கள் பாஸ்கர், பிரபாகரன், தங்கதுரை, பாக்கியலட்சுமி உள்ளிட்டோர் 114 ஏக்கர் நிலப்பரப்பிலும் ஆய்வு செய்ய உள்ளனர்.நான்கு நாட்கள் ஆதிச்சநல்லுரிலும், சிவகளையிலும் பூமிக் கடியில் உள்ள நிலப்பரப்பை ரேடார் கருவிகளை கொண்டு ஆய்வு செய்கிறோம்.
அதில் கிடைக்கும் தரவுகளை கொண்டு தொடர் ஆய்வுகள் நடத்தப்படும். தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணிஆற்றின் முழுமையான பகுதியும் ஆய்வு செய்து தேவைப்படும்இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும்., என்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...