Saturday, February 8, 2020

பிராவிடண்ட் ஃபண்ட் மற்றும் சிறுசேமிப்பிலும் கைவைப்பு

பிராவிடண்ட் ஃபண்ட் (வருங்கால வைப்புநிதி)  மற்றும் சிறு சேமிப்புக்களின் வட்டி விகிதம் குறையக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நம் நாட்டில் தற்போது சிறு சேமிப்பில் ரூ.12 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளன.  அத்துடன் வங்கி யில் ரூ.114 லட்சம் கோடிகள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.   தேசிய சிறு சேமிப்பு பத்திரங்களுக்கு பிராவிடண்ட் ஃபண்ட் போல 7.9% வட்டி வழங்கப் படுகிறது.    அதே வேளையில் வங்கிகளில் உள்ள வைப்பு நிதிகளுக்கு 6.15 வட்டி அளிக்கப்படுகிறது.
பெண் குழந்தைகள் சேமிப்பு திட்டத் துக்கு 8.4% வட்டியும் முதியார்அய்ந்து வருடச் சேமிப்பு திட்டத்துக்கு 8.6% வட்டியும் தரப்படுகிறது.  சேமிப்பு திட்டங்களில் இந்த இரு திட்டங்களுக்கு மட்டுமே அதிக வட்டி வழங்கப்படுகிறது.   ஜனவரி முதல் மார்ச் வரையிலான நடப்புக் காலாண்டுக்கு சிறு சேமிப்பு உள்ளிட்டவற்றுக்கு வட்டி விகிதத்தில் மாறுதல் இல்லை என அறிவிக்கப் பட்டுள்ளது.
ஆனால் மற்ற இனங்களுக்கான வட்டி விகிதம் தற்போது மாற்றப் பட் டுள்ளது.  இந்த மாறுதல் பிராவிடண்ட் ஃபண்ட்  (வருங்கால வைப்புநிதி)  உள் ளிட்ட அனைத்து சேமிப்பு வட்டி விகிதத்திலும் எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது.   குறிப்பாக அரசு நிறு வனங்களின் முதலீடுகளுக்கு வழங் கப் படும் வட்டி விகிதம் குறைந்து வருவதால்  அதே நிலை சேமிப்புக் களுக்கும் உண்டா கலாம் என கூறப்படு கிறது.
எனவே வரும் நிதியாண்டின் முதல் காலாண்டு முதல் பிராவிடண்ட் ஃபண்ட், மற்ற சிறு சேமிப்புக்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வருடத்துக்கான ஜிடிபி 3.3% ஆகக் குறைந்துள்ளதால் நிதிநிலையில் எதிர்பார்க்கப்பட்ட 3.8% பற்றாக்குறை யை விட அதிகம் ஆனதால் அரசு இந்த வட்டிக் குறைப்பு நடவடிக் கையை எடுக்க அதிகம் வாய்ப்புள்ள தாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...