Monday, February 10, 2020

எழுதுகிறது 'கல்கி' நிதர்சனத்தை உணராத நிதி நிலை அறிக்கை!

இரண்டே முக்கால் மணி நேரம் நீடித்த பட்ஜெட் உரையைப் படித்து முடிப்பதற்குள் களைத்துப் போனார் நிதி அமைச்சர்! கடைசி இரு பக்கங்கள் வாசிக்கப்பட்டு விட்டதாகக் கருதுமாறு கூறி அமர்ந்து விட்டார்! பட்ஜெட் அவ்வளவு நீளமாக இருந்தும் பொருளாதாரத்துக்கு அளிக்கப்பட்டுள்ள ஊக்கம் மிகக் குறைவு.
வருமானவரி விதிப்பில் பழைய முறையோடுகூட புதியதொரு முறையும் புகுத்தப்பட்டிருக்கிறது. சேமிப்பு மற்றும் வரிச் சலுகை களைத் துறந்தால் வரி விகிதம் குறையும்! இது மாதச் சம்பளம் பெறும் மத்தியமருக்கு உதவாது. அவர்கள் வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டி சேமிப்பு செய்யவே  எண்ணுவார்கள். ஆனால் பணக்காரர்களோ சேமிப்பும் செய்து வரியும் குறைவாகச் செலுத்துவார்கள்!
அனைத்துக்கும் மேலாக இந்த அறிக்கையில் பேசப்பட்டிருப்ப தெல்லாம் நீண்ட காலப் பயன் தரக்கூடிய திட்டங்களின் முதல் படி. இன்று நாட்டிற்குத் தேவையானது உடனடியாகப் பொருளாதார வளர்ச்சியை ஓரளவாவது அதிகரிக்கக் கூடிய அதிரடி திட்டங்கள். அது எதுவுமில்லாததோடு தொடர்ந்து பெருகிவரும் அரசின் உற்பத்திக்கு உதவாத செலவினங்களைக் கட்டுக்குள் வைக்க எந்த முன்னெடுப்பும் இல்லை. ஆக, இந்த  பட்ஜெட் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் அய்.சி.யூ.வில் இருக்கும் நோயாளிக்கு மருந்து மாத்திரைகளைக் கொடுத்துக் காப்பாற்ற முயற்சிப்பதற்கு ஒப்பானது.
- 'கல்கி' 16.2.2020 பக்கம் 4

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...