கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய பணியாளர்
தேர்வாணையத்தின் (யூபிஎஸ்சி) சார்பில் மத்திய அரசுப்பணியிடங்கள் குறைவான
அளவிலேயே நிரப்பப்பட்டன என்று மத்திய பணியாளர் அமைச்சகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக பணியாளர் அமைச்சக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் நேற்று எழுத்துபூர்வமாக அளித்த பதில்:
''கடந்த 2018-2019 ஆம் ஆண்டில், மத்திய
பணியாளர் தேர்வா ணையத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை
முன்னெப்போதையும் விடக் குறைவாக உள்ளது. அதாவது 2,352 பேர் மட்டுமே கடந்த
நிதியாண்டில் யூபிஎஸ்சி பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
அய்ஏஎஸ், அய்பிஎஸ், அய்எஃப்எஸ் உள்ளிட்ட
ஏராளமான குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை யூபிஎஸ்சி ஆண்டுதோறும் நடத்தி
வருகிறது. கடந்த 2015-2016 ஆம் ஆண்டில், யூபிஎஸ்சி 3,750 தேர்வர்களைப்
பரிந்துரை செய்தது. 2016- 2017 ஆம் ஆண்டில் 3,020 பேரையும் 2017-2018 ஆம்
ஆண்டில் 3,083 பேரையும் 2018-2019 ஆம் ஆண்டில் 2,352 பேரையும்
பரிந்துரைத்தது.
அதே நேரத்தில் 2015-2016 ஆம் ஆண்டில், பணி
நியமனத்துக்காக 3,750 காலியிடங்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
2016- 2017 ஆம் ஆண்டில் 3,184 பேரையும் 2017-2018 ஆம் ஆண்டில் 2,076
பேரையும் 2018-2019 ஆம் ஆண்டில் 2,353 பேரையும் அரசு பரிந்துரைத்தது''.
இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
No comments:
Post a Comment