Tuesday, February 11, 2020

மோடி அரசின் பொருளாதாரக் கொள்கை

இந்திய நிறுவனங்களுக்கு பன்னாட்டு அளவில் தொடரும் நெருக்கடி
 
 பொரு ளாதார சரிவு, அரசின் தெளி வற்ற பொருளாதார கொள்கை யால் இந்திய நிறுவனங்கள் பன்னாட்டளவில் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வரு கின்றன. இதன் தொடர்ச்சியாக தொழில் முதலீட்டில் ஈடு பட்ட இந்திய  தொழிலதிபர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்திய நிறுவனங் களுக்குக் கொடுத்த ரூ.50,000 கோடி கடனை மீட்க அய்க்கிய அரபு எமிரேட் வங்கிகள் சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கின்றன.
எமிரேட்ஸ் நீதிமன்ற தீர்ப் புகளின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கிட்டத்தட்ட 9 வங்கிகள் இந்த நடவடிக்கைகளில் இறங்கு கின்றன.
இந்த எமிரேட்ஸ் நீதிமன் றத்தில் பதிவான வழக்குகள் பெரும்பாலும் துபாய் அல்லது அபுதாபியைச் சேர்ந்த இந்திய நிறுவனங்களின் துணை நிறு வனங்களால் எடுக்கப்பட்ட கார்ப்பரேட் கடன்களுடன் தொடர்புடையவை.
ஆனாலும், தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள் ளனர். அய்க்கிய அரபு எமி ரேட்சைச் சேர்ந்த எமிரேட்ஸ் என்.பி.டி, மஷ்ரெக் வங்கி மற்றும் அபுதாபி கொமர்ஷல் வங்கி ஆகியவை நடவடிக்கை எடுக்க இருக்கின்றன.
துபாய் அல்லது அபு தாபியில் உள்ள கிளைகள் மூலம் இந்திய நிறுவனங்கள் அல்லது குடிமக்களுக்கு இந்த கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, தோஹா வங்கி, நேஷனல் பாங்க் ஆப் ஓமான் மற்றும் நேஷனல் பாங்க் ஆஃப் பஹ்ரைன் போன்ற இன்னும் சில கடன் வழங்குநர்களும் ஏற்கெனவே அய்க்கிய அரபு எமிரேட்ஸ் நீதிமன்றங்களை நாடி உள்ளன.
பெரும்பாலான கடன்கள் எல்லாம் கார்ப்பரேட் நிறுவ னங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களாகும். நிறுவனங்கள் கேட்ட தொகை அதிகம் என்பதால் வங்கிகள் அதிக முன்னுரிமை கொடுத்துள்ளன.  அயல்நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் இந்தி யாவில் தொழில் தொடங்க லாம் என்றும் அதற்கான அனைத்து வசதிகளும் செய்து தருவோம் என்று அயல்நாடு களுக்கு பயணம் செய்யும் மோடியின் பேச்சை நம்பி பல தொழிலதிபர்கள். வெளி நாட்டு வங்கிகளில் கடன் வாங்கி இந்தியாவில் முதலீடு செய்தனர்.
ஆனால் கடந்த 4 ஆண்டு களாக ஏற்பட்ட தொடர் பொருளாதார சரிவின் கார ணமாக முதலீடு செய்த அனைத்து நிறுவனங் களும் பொரும் பொருள் இழப்பை சந்தித்துள்ளன. இதனால் பங்குச் சந்தைகளிலும் கடுமை யான சரிவு ஏற்பட்டது,  இதன் காரணமாக வெளி நாட்டு வங்கிகளில் வாங்கிய கடனை அங்குள்ள வெளி நாட்டு வாழ் இந்திய தொழிலதிபர்களால் கட்டமுடியாமல் போகவே தற்போது சட்ட நடவடிக் கையில் சிக்கியுள்ளனர். இவர் களுக்கு ஆறுதலாக நடந்து முடிந்த நிதிநிலை அறிக்கை யிலும் எந்த ஒரு முடிவும் நிதி அமைச்சர் எடுக்காத கார ணத்தால் வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் பாதிக்கப்படவுள் ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...