அடுத்த நிதியாண்டில் வரி வசூல் 12 சதவீதம்
அதிகரிக்கும் என மத்திய வருவாய்த்துறை செய லாளர் அஜய் பூஷண் பாண்டே
கூறினார். வரி வருவாயை அதிகரிக்கச் செய்யவேண்டும் என்பதில் மத்திய அரசு
தீவிர மாக உள்ளது. ஆனால், நடப்பு நிதியாண்டில் எதிர்பார்த்த அளவுக்கு
வருவாய் கிடைக்க வில்லை. ஜிஎஸ்டி மூலம் வசூல் செய்யப்படும் மாத சராசரி வரி
வசூல் 1 லட்சம் கோடிக்கு மேல் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்தது.
பின்னர். இந்த இலக்கு நடப்பு நிதியாண்டின்
எஞ்சிய மாதங்களுக்கு மேலும் உயர்த்தப்பட்டது. ஆனால் ஜிஎஸ்டி அறிமுகம்
செய்ததில் இருந்து இதுவரை ஒரு லட் சம் கோடி ரூபாய் இலக்கை தாண்டி 9 முறை
மட்டுமே வசூல் ஆகியுள்ளது. பொரு ளாதாரம் நடப்பு நிதியாண் டில் 5 சதவீதம்
மட்டுமே சாத்தியம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் ரிசர்வ்
வங்கி வெளியிட்ட நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கையிலும் இது மாற்றம்
செய்யப்படவில்லை. இது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பொருளாதார
சரிவாக கரு தப்படுகிறது.
இதனால் தொழில்துறை கள் முடங்கி விட்டன.
அதோடு, பெரு நிறுவனங்களுக்கு வரி குறைப்பு காரணமாகவும் மத்திய அரசுக்கு வரி
வசூல் சரிந்து விட்டது. அதாவது, பெரு நிறுவனங்களுக்கு தூய்மை இந்தியா
திட்டத்துக் கான வரி, கல்வி வரி சேர்த்து 34.94 சதவீதம் வசூலிக்கப்பட் டது.
இது 25.17 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது போல், புதிதாக தொடங்கப் பட்ட
நிறுவனங்களாக இருந் தால் 29.12 சதவீத வரி வசூ லிக்கப்பட்டது. இது 17.01 சத
வீதமாக குறைக்கப்பட்டுள் ளது. இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 1.45 லட்சம்
கோடி இழப்பு ஏற்படும். இதுபோன்ற காரணங்களால், மத்திய அரசுக்கு நிதி
பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் 3.8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட் டுள்ளது.
இது ஏற்கெனவே நிர்ணயித்த 3.3 சதவீதத்தை விட அதிகம் என்றார்.
No comments:
Post a Comment